கஞ்சி குடிக்க ஐந்து நட்சத்திர ஓட்டல் – செக்யூலரிஸ அரசு, காபிர்கள் அழைப்பு, மோமின்களின் கூட்டம், எப்படி முடியும்?
கஞ்சி குடிக்க ஐந்து நட்சத்திர ஓட்டல் – செக்யூலரிஸ அரசு, காபிர்கள் அழைப்பு, மோமின்களின் கூட்டம், எப்படி முடியும்? காபிர்கள் அதிலும் நாத்திகர்கள் அதிலும் இந்துவிரோதிகள் நடத்தும் இப்தார் பார்ட்டிகள்: அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது[1]:– “இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலராக விளங்கி வரும் அனைத் திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், முதல்– அமைச்சர் ஜெயலலிதா, இஸ்லாமியப் பெருமக்களை கெளரவிக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார்[2]. அதே போல் இந்த ஆண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழகப் பொதுச் செயலாளர், முதல்–அமைச்சர் ஜெயலலிதா, வருகிற 5–ந்தேதி (திங்கட்கிழமை) மாலை சென்னை, லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் இப்தார் விருந்து அளிக்க ஏற்பாடு செய்து உள்ளார். இந்த நிகழ்ச்சியில், இஸ்லாமியப் பெருமக்கள் [அறிஞர்கள்[3]], தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், அ.தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்கள், வாரியத் தலைவர்கள் உள்ளிட்ட கழகத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்”, இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது[4]. இது ஜூலை 27ம் தேதி நடப்பதாக இருந்து ஏற்காடு எம்.எல்.ஏ பெருமாள் இறந்ததால் தள்ளிவைக்கப்பட்டது[5].
முஸ்லிம்களே மாறி-மாறி போட்டிப் போட்டுக் கொண்டு நடத்தும் பார்ட்டிகள்: ஓட்டல் இம்பீரியல் (எழும்பூர்) ஹாலில் திமுகவிற்கு மற்றும் அதிமுகவிற்கு என்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தனித்தனியாக பார்டி நடத்தியது. போதாகுறைக்கு பிரிந்த கோஷ்டிகள் ஓன்றுக்கொன்று வசைமாறி பொழிந்து கொண்டன. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் [the Indian Union Muslim League] சென்ற வாரம் திமுகவினருக்கு பார்ட்டி நடத்தியது. இப்பொழுது (ஆகஸ்ட் 2), பாத்திமா முஸாபர் அதிமுகவினருக்கு நடத்தியுள்ளார். வளர்மதி, எஸ். அப்துல் ரஹீம் முதலியோர் கலந்து கொண்டனர். ஒரே இடத்தில் தான் இரண்டு பார்ட்டிகளும் நடந்துள்ளன. “அவர்கள் வந்தார்கள், உட்கார்ந்தார்கள், முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பேசினார்கள். ஆனால், அவர்கள் தாம் கட்சி உடைய காரணமாக இருந்தார்கள்”, என்று பாத்திமா முஸாபர் திமுகவை விமர்சித்தார்[6]. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பாரதத்தை இரண்டாகப் பிரித்த மதவாத கட்சி, ஆனால், திராவிட கட்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டு தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்கின்றன. ரம்ஜான் வரும் போது, குல்லாப் போட்டுக் கொண்டு கஞ்சி குடிக்கின்றன. இருநிலைகளிலும், முஸ்லிம்கள் நாத்திக திராவிட கட்சிகள் இந்துக்களை ஏமாற்றி வருகின்றன.
மூன்றுபேரிச்சம்பழங்களும், முன்னூறுதின்பண்டங்களும்: “இப்தார்” என்றால் ரமதான் / ரம்ஜான் மாதத்தில் உபவாசத்தை, உண்ணாநோன்பை முடித்துக் கொள்வது, அதாவது சூரியன் உதிக்கும் முதல் மாலை வரை உண்ணாமல் இருக்கும் முஸ்லிம்கள் பிறகு உண்பார்கள். பொதுவாக “மக்ரிப்” நேரத்திற்குப் பிறகு, முஸ்லிம்கள் மொத்தமாக அல்லது குழுக்களாக சேர்ந்துண்டு அவ்வாறு உபவாசத்தை முடித்துக் கொள்வார்கள். முஹம்மது நபி மூன்று பேரிச்சம் பழங்களை உண்டு தனதுஅவ்வாறு உபவாசத்தை முடித்துக் கொண்டார். ஆனால், இன்று பல நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் பலவிதமாக உண்டு விழா நடத்துகிறார்கள். போதாகுறைக்கு இந்தியாவில், கட்சிக்கு ஒரு பார்ட்டி நடத்துகிறார்கள். “நன்றாக / விதவிதமாக சாப்பிடலாம்” என்று இதற்காக ஒரு கூட்டமே வருகிறது.
தீவிரவாதத்திற்கு எதிராக போரை நடத்தி வரும் ஒபாமாவே இத்தகைய பார்ட்டிகளில் கலந்து கொள்கிறார்.
முஸ்லிம்களின் விரோதி என்று சொல்லப்படும் பிஜேபியே இப்தார் பார்டி நடத்தி வருகிறது, அதில் முஸ்லிம்கள் கலந்து கொண்டு வருகிறார்கள்.
இப்தார் பார்ட்டிகள் பெரிய வியாபாரமாகி விட்டது: ரோஸா இப்தார், ரமதான் இப்தார், இப்தார் கரீம், இப்தார் பார்டி என்று குறிப்பிடும் இதற்கு அழைப்பிதழ்களும் கொடுக்கப்படுகின்றன. பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன.
இந்தியா முழுவதிலும், அரசு சார்பில் நடத்தப் படும் இப்தார் பார்ட்டிகளுக்கு கோடிகள் செலவழிக்கப்படுக்கின்றன. தவிர கட்சிகள் சார்பில், முஸ்லிம் இயக்கங்கள் சார்பில் நடத்தப் படும் இப்தார் பார்ட்டிகளுக்கும் கோடிகள் செலவழிக்கப்படுக்கின்றன.
இதற்காக “ஸ்பான்சர்சிப்” அதாவது ஏற்படும் செலவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டியும் அழைப்பிதழ்கள் அனுப்பப் படுகின்றன. இவ்வாறு, இது ஒரு பெரிய வியாபாரமாகி விட்டது. ஓட்டல்களில் “இப்தார் மெனு” என்று போட்டு வியாபாரம் செய்கின்றனர்.
2013-2014 ஆண்டுகளில்இம்மாதிரியானதமாஷாக்கள்அதிகமாகவேஇருக்கும்: தமிழகத்தில் மட்டுமில்லை இந்தியா முழுவதும் கட்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டு இப்தார் பார்ட்டிகள் நடத்துகின்றன[7]. அடுத்த வருடம் தேர்தல் என்றால், இப்பார்டிகள் அதிகமாகவே இருக்கும் என்று தெரிகிறது. காபிர்-மோமின் கூட்டணிகள் ஜோராகத்தான் வேலை செய்து கொண்டிருக்கும். இதில் திராவிடப் போராளிகளான கருணாநிதி, அன்பழகன் போன்றோர் குல்லாபோட்டும், கழற்றி வைத்தும் கஞ்சி குடிப்பர். “உள்ளம் கவர் திருடர்கள்” தாமே, குல்லாப் போட்டவர்கள், போடுகிறவர்கள் பொறுத்துத்தான் போவார்கள். வேதபிரகாஷ் © 04-08-2013
குறிச்சொற்கள்: அழைப்பிதழ், உபவாசம், கஞ்சி, கஞ்சி குல்லா, காபிர், குரான், குல்லா, குல்லா கஞ்சி, குல்லா போட்ட கருணாநிதி, கூட்டணி, கூட்டு, ஜிம்மி, தேர்தல், நோன்பு, பேரம், போட்டி, மோமின், ரமதான், ரம்ஜான், வசூல், வாசிப்பு, வியாபாரம், விளம்பரம், வேட்டை, ஹதீஸ்
You can comment below, or link to this permanent URL from your own site.
ஓகஸ்ட் 10, 2013 இல் 3:40 முப
[…] [1] https://islamindia.wordpress.com/2013/08/04/five-star-hotel-secular-government-kafirs-invitation-momi… […]
ஒக்ரோபர் 4, 2013 இல் 12:55 பிப
When USA itself has been carrying out war against terror like this, our India politicians simply surrender to them for votes.
Why then the eating festivals would not be celebrated in five-star hotels?