தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதற்கும், கந்நாடகத்திற்கும் தொடர்பு ஏன்?
தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதற்கும், கந்நாடகத்திற்கும் தொடர்பு ஏன்?
கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மாறி-மாறி அரசாளும் நிலையில், எதையாவது திசைதிருப்ப வேண்டும், கவனத்தை மாற்ற வேண்டும் என்றால், கோயில்களைத் தாகுவது, சிலைகளை உடைப்பது, உண்டியல்களை உடைத்து பணம் திருடுவது, இந்துக்களை இழிவாகப் பேசுவது, இந்துக்களைத் தாக்குவது என்று சிலர் ஆரம்பித்து விடுகின்றனர். அதாவது, நாத்திகப் போர்வையில், பகுத்தறிவு வேடத்தில், இந்துவிரோதிகள் அத்தகைய முகமூடிகளை அணிந்து கொண்டு செய்து வந்தார்கள், வருகிறார்கள். ஆனால், இப்பொழுது தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதில் ஒரு முறை, அமைப்பு, திட்டம் காணப்படுகிறது எனலாம்.
கோயம்புத்தூர் ஜிஹாதி தலமாக மாறி வருவது: கோவைக் குண்டுவெடிப்புக்குப் பின்னர், கோயம்புத்தூரில் சில பகுதிகள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் ஜிஹாதிகளின் புகலிடமாக மாறி விட்டுள்ளன. கேரள தொடர்புகளும் இதில் தென்படுகின்றன. இந்து பெண்கள் முஸ்லீம் பையன்களைக் காதலித்து சென்று விடுவது, குடும்பங்களை பாதிட்துள்ளன. இதைத்தான், முஸ்லீம்களின் திட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில், பாரம்பரிய ரீதியில் இந்துக்களின் சமய அமைப்புகளும் அங்கு இயங்கி வருகின்றன. இவை, இந்த மாற்றத்திற்கு முன்பிலிருந்தே இருந்து வந்துள்ளவை. ஆனால், கோவை குண்டுவெடிப்பிற்குப் பிறகு, அல்-உம்மா, சிமி மற்றும் அவற்றின் மாற்று உருவங்கள், அமைப்புகள் முதலியவை, வெளிப்படையாக இந்து எதிர்ப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளன.
இந்து இயக்கங்களில் ஒற்றுமை இல்லாமை: திராவிடக் கட்சிகளின் ஆளுமை, அதிகாரம், தாக்கம் முதலிய காரணங்களினால், இந்து இயக்கங்களும்…
View original post 300 more words
குறிச்சொற்கள்: கிச்சான், கிச்சான் புகாரி, ஜிஹாதி, ஜிஹாத், தீவிரவாதம், பக்ருதீன், பஷீர், பீர் முகமது, புகாரி, பெஙளூரு, மேலப்பாளையம்
You can comment below, or link to this permanent URL from your own site.
ஓகஸ்ட் 14, 2013 இல் 1:42 முப
பிரபல ரவுடிக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு? : சேலம் நீதிமன்றத்தில் எஸ்.ஐ.டி., போலீசார் மனு
தினமலர், பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2013,00:51 IST
http://www.dinamalar.com/news_detail.asp?id=780634
சேலம்: சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஷாஜகானுக்கு, தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பதை விசாரிப்பதற்காக, ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கோரி, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் (எஸ்.ஐ.டி.,) சேலம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
எஸ்.ஐ.டி., போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சேலம் மாஜிஸ்திரேட் எண் 4 நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், 2ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, அஸ்தம்பட்டி, மக்கான் தெருவில் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது, மூட்டையுடன், அந்த வழியாக வந்தவர், போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். போலீசார் துரத்திச் சென்று, அவரை பிடித்து விசாரித்ததில், அவரது பெயர் ஷாஜகான் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், அரசியலிலும், மக்கான் காலனி துணை முத்தவல்லியாகவும் இருப்பதால், தனக்கு எதிரிகள் அதிகம் உண்டு; தன்னை கொல்ல முயற்சி நடக்கிறது; தன்னுடைய பாதுகாப்புக்காகவும், கொலை செய்ய நினைத்தவர்களை, கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும், கத்தி, வாள், வீச்சரிவாள் ஆகியவற்றை வாங்கி வந்து, வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாகவும் கூறினார்.
சில நாட்களுக்கு முன், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசார், மக்கான் தெருவில் சந்தேகப்படுபவர்களை, விசாரணை செய்து கொண்டிருப்பது தெரிந்து, வீட்டில் பதுக்கி வைத்திருந்த பயங்கர ஆயுதங்களை, மூட்டையில் கட்டி, வேறு இடத்தில் மறைத்து வைப்பதற்காக, எடுத்துச் சென்ற போது, போலீசாரிடம் பிடிபட்டதாகவும் கூறினார்.
இதையடுத்து, ஷாஜகானை, அன்று மதியம், 12:30 மணிக்கு கைது செய்து, ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுள்ளோம். பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தோம்.
ஷாஜகானிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், எதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தன; ஷாஜகானின் கூட்டாளிகள் யார்; இது போன்ற ஆயுதங்கள் வேறு எங்கேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா, அவருக்கு, வேறு, தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பது பற்றி விசாரிக்க வேண்டியுள்ளது.
விசாரணையில், சாகுல் ஹமீது என்ற, “பறவை’ பாதுஷா என்பவரை பற்றி தெரியும் பட்சத்தில், எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ள, குற்றச்செயல்களை தடுத்து நிறுத்த முடியும் என, உறுதியாக கருதுகிறேன்.
எனவே, ஷாஜகானை, ஐந்து நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.
ஓகஸ்ட் 14, 2013 இல் 1:44 முப
ஆடிட்டர் ரமேஷ் கொலை: பிரபல ரவுடியை காவலில் எடுத்து விசாரணை
மாலைமலர், பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 13, 4:45 PM IST
http://www.maalaimalar.com/2013/08/13164547/auditor-ramesh-murder-famous-r.html
ஆடிட்டர் ரமேஷ் கொலை: பிரபல ரவுடியை காவலில் எடுத்து விசாரணை
சேலம், ஆக. 13, 2013 –பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி பிரமுகர் வேலூர் வெள்ளையப்பன் ஆகியோரின் படுகொலைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்குகளை விசாரித்து வரும் எஸ்.ஐ.டி. போலீசார் கொலையில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டுவிட்டனர்.
வெள்ளையப்பன் கொலைக்கு உதவிய உள்ளூர் பிரமுகர்கள் அடையாளம் காணப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் உதவிய உள்ளூர் பிரமுகர்களை அடையாளம் காணும் வகையில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த வழக்கில் கடந்த வாரம் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட முள்ளுவாடி கேட் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஷாஜகானை எஸ்.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.
எஸ்.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பாபு, ஷாஜகானுக்கு 5 நாள் போலீஸ் காவல் கேட்டு சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 4–ல் மனு தாக்கல் செய்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தினால் இந்த கொலையில் ஈடுபட்டவர்களுக்கு உதவிய உள்ளூர் பிரமுகர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கொலை கும்பல் நடத்திய சட்ட விரோத செயல் அனைத்தும் வெளியாகும் எனத்தெரிகிறது. இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நடக்கிறது.
இதற்கிடையே போலீசார் சமீபத்தில் மதுரை, கோவை, சேலம், நெல்லை ஆகிய சிறைகளில் இருந்து வெளியேறிய கைதிகளின் விபரம் சேகரிக்கப்பட்டு அவர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:–
சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி ஷாஜகான், கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த தடா கைதி அஸ்லாம் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். மேலும் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த 7 பேரிடம் நடத்திய விசாரணையில் வெளியான தகவலின் படி பெங்களூர் சிறையில் உள்ள கிச்சான் புகாரியே, அனைத்து திட்டங்களுக்கும் மூலகாரணம் என்பதை உறுதி செய்துள்ளனர்.
அவரிடம் விசாரணை மேற்கொண்டால் மட்டுமே தலைமறைவாக உள்ள மற்ற 4 பேரை கைது செய்ய முடியும் என்பதால் கிச்சான் புகாரியை விரைவில் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இதன் மூலம் பெங்களூர் குண்டுவெடிப்பு, மதுரையில் அத்வானி வருகையின் போது பைப் குண்டு கண்டெடுப்பு, வேலூர் வெள்ளையப்பன், சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை, சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள், உதவியர்கள் விபரம் அனைத்தும் வெளியாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஒக்ரோபர் 5, 2013 இல் 3:53 முப
[…] [13] https://islamindia.wordpress.com/2013/07/29/the-connection-between-the-bangalore-blast-and-tamilnadu/ […]
ஒக்ரோபர் 5, 2013 இல் 6:12 முப
[…] [13] https://islamindia.wordpress.com/2013/07/29/the-connection-between-the-bangalore-blast-and-tamilnadu/ […]