பாகிஸ்தானில் 12 கல்லூரி மாணவிகள் கொல்லப்பட்டனர், ஜின்னா வாழ்ந்த வீடு இடிக்கப்பட்டது!
பாகிஸ்தானில் 12 கல்லூரி மாணவிகள் கொல்லப்பட்டனர், ஜின்னா வாழ்ந்த வீடு இடிக்கப்பட்டது!
இந்தியாவில் ஜின்னா வீடு பத்திரமாக உள்ளது: முன்பு மும்பையில் இருந்த ஜின்னாவின் வீட்டை பராமரிக்கும் விஷயத்தில் பிரச்சினைய உண்டாக்கியது பாகிஸ்தான் அரசு. எங்களுக்கே தந்துவிட வேண்டும் என்ற ரீதியில் வாதிட்டது. தீனா வாடியா என்ற ஜின்னாவின் மகள் சட்டரீதியாக அணுகினார். ஜின்னா ஒரு கோஜா ஷியா என்பதால், இந்து சட்டம் செல்லுபடியாகும்[1]. என்றுக்கூட வாதிட்டார்[2]. இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள ஜின்னா தங்கியிருந்த விடுதியை, ஜிஹாதிகள் குண்டு வைத்து தகர்த்து விட்டனர் என்று வருத்தப் பட்டுக் கொள்வது போல செய்திகளை வெளியிடுவது வேடிக்கையாக இருக்கிறது. பாகிஸ்தனியர்களுக் பெரும்பாலோர் ஜின்னாவை ஒரு துரோகி என்று தான் நினைக்கின்றனர்[3]. 2003ல் இந்த வீடு ஐ.சி.சி.எஸ்.ஆர் என்ற நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது[4]. லட்சங்கள் செலவு செய்யப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
ஜின்னா தங்கியிருந்த விடுதி பாகிஸ்தானில் தகர்க்கப்பட்டதாம்: “பாகிஸ்தானின் தந்தை” எனப் போற்றப்படும் முகம்மது அலி ஜின்னாவின் வீட்டை பயங்கரவாதிகள் சனிக்கிழமை 15-06-2013 அன்று வெடிகுண்டு வைத்து தகர்த்தனர்[5]. பாகிஸ்தானின் தென் மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜின்னாவின் வீடு 121 ஆண்டு கால பழமை வாய்ந்தது. தலைநகர் குவெட்டாவிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த வீட்டை – ஷியாரத் ரெசிடென்ஸி என்னும் தங்கும் விடுதி – பயங்கரவாதிகள் சனிக்கிழமை அதிகாலை முற்றுகையிட்டனர். சக்தி வாய்ந்த நான்கு குண்டுகளை வெடிக்க வைத்து வீட்டின் முகப்புப் பகுதியைத் தகர்த்த பயங்கரவாதிகள் அதையடுத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். தொடர்ந்து வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியதில் ஜின்னாவின் வீடு முற்றிலுமாக சேதமடைந்தது.
தேசிய சின்னம் அழிந்து விட்டதாம்: வீட்டின் பெரும்பாலான பகுதிகளில் தீ பரவியது. தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் கடுமையாக போராடினர். ஆனாலும் வீட்டிலுள்ள அரிய நினைவுச் சின்னங்கள், ஆவணங்கள், கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட மரச்சாமான்கள் உள்ளிட்ட பல பொருள்கள் தீக்கிரையாகின. காச நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜின்னா, தனது வாழ்நாளின் இறுதிப் பகுதியை இந்த வீட்டில்தான் கழித்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு இந்த வீடு தேசியச் சின்னமாக [Quaid-e-Azam residency] அறிவிக்கப்பட்டது[6]. மூத்த அரச அதிகாரி ஒருவர் இதில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கல்லூரி மாணவிகள் குண்டு வைத்து கொலை: பாகிஸ்தானின் குவெட்டா நகரில் சர்தார் பகதூர் கான் பெண்கள் பல்கலைக்கழகம் உள்ளது. நேற்று மாலையில் ஏராளமான மாணவிகளும், ஆசிரியர்களும் வீட்டுக்கு செல்ல கல்லூரி வளாகத்தில் இருந்த பஸ்ஸில் காத்திருந்தனர். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த குண்டு திடீரென வெடித்து, தீப்பற்றி எரிந்தது[7]. இந்த சம்பவங்களில் 12 கல்லூரி மாணவிகள் கொல்லப்பட்டனர்; 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்[8]. இச்சம்பவத்தில் ஏராளமான பெண்களுக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டது. பின்னர் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள போலன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது மருத்துவமனைக்குள்ளே சில தீவிரவாதிகள் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டனர். துப்பாக்கிச்சூடு நடந்தபோது, பலுசிஸ்தான் தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அங்கு இருந்தனர். தீவிரவாதிகள் சுட்டதில் குவெட்டா துணை கமிஷனர் அப்துல் மன்சூர் காகர் இறந்தார். மக்கள் அச்சத்தில் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். சில தீவிரவாதிகள் மருத்துவமனையின் மாடியில் நின்று கொண்டு மருத்துவமனைக்கு வருபவர்களை நோக்கி சுட்டனர். இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை[9].
ஜிஹாதிகளின் தாக்குதலில் கல்லூரி மாணவிகளும், ஜின்னா வீடும் ஏன்?: தலிபன்களைப் பொறுத்தவரைக்கும் பெண்கள் படிக்கக்கூடாது, பர்தாவில் கட்டுண்டுக் கிடக்க வேண்ண்ட்டும். அதே போல சின்னங்கள், அடையாளங்கள், உருவங்கள் என்று இஸ்லாத்தில் எதுவும் இருக்கக் கூடாது. எனவே, ஜின்னா வீட்டை இடித்ததில் ஒன்றும் வியப்பில்லை. முஹமது நபியின் மசூதியே இடிக்கப்பட்டது. அவரது கல்லறையும் அழிக்கப்பட்டது. இதெல்லாம் அடிப்படைவாத இஸ்லாத்தின் தீவிரவாத வெளிப்பாடுகளே. இரட்டைவேட்டம் போடுவதில் முஸ்லிம்கள் கெட்டிக்காரர்கள் தாம். ஓருபக்கம் போட்டோ எடுக்கக்கூடாது என்பர், மறுபக்கம் போட்டோக்கள் எடுப்பர்; நாய்களை வைத்துக் கொள்ளக்கூடாது ஏன்பர், ஆனால் மறுபக்கம் வைத்துக் கொண்டிருப்பர். குட்டிக்கக்கூடாது என்பர், குடிப்பர். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்[10].
வேதபிரகாஷ்
© 16-06-2013
[1] Recently Dina Wadia has been involved in litigation regarding Jinnah House claiming that Hindu Law is applicable to Jinnah as he was a Khoja Shia
[4] The house of Mohammad Ali Jinnah, the founder of Pakistan, at Malabar Hill in Mumbai has been handed over to the Indian Council for Cultural Relations and part of it will be used for cultural activities, the Rajya Sabha was informed on Thursday. “The property has since been renamed ICCR Mumbai branch office,” Minister of State for External Affairs Digvijay Singh told the House in a written reply. He said the proposal was to have a small auditorium, library, reading room, seminar room and an arts gallery in the house, which successive Pakistani governments over the years have been asking for the purpose of a consulate in the metropolis.
[5]http://dinamani.com/world/2013/06/16/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80/article1636771.ece
[6] http://timesofindia.indiatimes.com/world/pakistan/Jinnah-house-destroyed-in-rocket-grenade-attack/articleshow/20610739.cms
[10] Katherine Pratt Ewing (Ed.), Shariat and ambiguity in South Asian Islam, University of California Press, USA,1988.
குறிச்சொற்கள்: கோஜா, ஜின்னா, டீனா, தீனா, வாடியா, ஷியா
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்