முஸ்லிம்கள் எல்லோரும் சமம் என்றால் தமிழக முஸ்லிம்களில் மோதல் ஏற்படுவது ஏன்?

முஸ்லிம்கள் எல்லோரும் சமம் என்றால் தமிழக முஸ்லிம்களில் மோதல் ஏற்படுவது ஏன்?

Clash between Muslim groups in constructing mosque

முஸ்லிம்கள் எல்லோரும் சமம்: பொதுவாக முஸ்லிம்கள் எல்லோரும் சமம், எல்லோரும் ஒன்று, ஒரு வித்தியாசமும் இல்லை, தோளோடு தோள் இணைந்து, தொட்டுக் கொண்டு, இடித்துக் கொண்டு தொழுகை செய்வோம், ஒன்றாக இருப்போம், சாப்பிடுவோம் என்றெல்லாம் பெருமை பேசிக் கொண்டு வருவர். ஆனால், அச்சமத்துவ, சகோதரத்துவ, ஏகத்துவ, ஒருத்துவ நிலையில் எப்படி முஸ்லீம்கள் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள் என்பது கூர்மையாக ஆய்வதற்குரியது[1]. சன்னி-ஷியா மோதல்கள், கொலைகள், குண்டுவெடிப்புகள் முதலியவை உலகம் முழுவதும் பிரசித்திப் பெற்றவை[2]. ஆனால், “அமைதிப் பூங்கா”, “வந்தாரை வாழவைக்கும்” என்றெல்லாம் போற்றப்படுகின்ற தமிழகத்தில் எப்படி அத்தகைய மோதல்கள் நடக்கலாம்.

Fight among the Muslims - Kadaiyanallur, Tit

இஸ்லாமியர்களுக்குள்சண்டைஏன்?: சைவம் தழைத்தோங்கிய திருநெல்வேலியில், கடையநல்லூரில் இப்பொழுது முஸ்லிம்கள் ஜனத்தொகைப் பெருகியுள்ளது. இப்பிரச்சினை மீனாட்சிபுரம் மதமாற்றத்திலிருந்தே ஆரம்பிக்கிறது[3]. அதற்கேற்றார்போல, அவர்களது தமிழ்நாடு ஜமாத், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தமுமுக, எஸ்.டி.பி.ஐ, என்று பல அமைப்புகள் உள்ளன. வெளிநாட்டிலிருந்து பணம் வருவதனால்[4], மசூதி, மதரஸா, முதலிய கட்டிடங்கள் கட்டுவது, தொழுகை நடத்துவது, விழாக்கள் நடத்துவது என்ற உள்விஷயங்களில் பெரிய புரச்சினைகள் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள்[5]. கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஜமாஅத்தார் முதலியோருக்கு மோதல், அடிதடி முதலியவை எப்பொழுதும் உள்ளது போலிருக்கிறது, ஏனெனில் அதனை அவர்களே ஒப்புக் கொள்கின்றனர்[6].

Kadayanallur clash between Muslim groups.3

TNTJ மற்றும் TMMK மோதல்கள்: தமிழ்நாட்டு தவ்ஹீத் ஜமாத மற்றும் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் இப்பிரச்சினைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால், TNTJ மற்றும் TMMK இடையில் பலமுறை மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

 • 2006ல் மஸ்ஜித்-உர்-ரஹ்மான் என்ற மசூதியை யார் நிர்வகிப்பது என்ற விஷயத்தில் TNTJ மற்றும் TMMK இடையில் சண்டையிட்டுக் கொண்டனர்[7]. இதை அனைத்துலக ரீதியில் பெரிதுபடுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன[8].
 • ஜனவரி 2008ல் அல்-முபாரக் மஸ்ஜிதை நிர்வகிப்பதில் ஜாக் அமைப்பினருக்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது[9].
 • 2009ல் தேர்தல் பிரச்சரத்தின்போது மோதல் ஏற்பட்டது[10].
 • செபடம்பர் 2010ல் ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டனர், 10 பேர் காயமடைந்தனர்[11].
 • கடந்த மார்ச்சில் கூட மசூதியில் பிரச்சினை ஏற்பட்டது, ஒருவர் தாக்கப்பட்டார்[12].

இதோ அரேபிய, ஆப்பிரிக்க மற்றும் மத்திய ஆசிய முஸ்லீம் அல்லது இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் நிகழ்சியாக, சண்டையாக, சச்சரவாக நினைக்க வேண்டாம். செக்யூலரிஸத்தில் ஊறிப்போயிருக்கும் இந்தியாவில், பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மாநிலத்தில், நுண்ணறிவு, பிரித்தறிவு, செம்மறிவு, என்றெல்லாம் கொண்டுள்ள அறிவிஜீவிகள் கொண்ட தமிழகத்தில் தான் இவ்வாறு முஸ்லீம்கள், முஸ்லிம்கள், இஸ்லாமியர்கள், முகமதியர்கள், துலுக்கர்கள் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றவர்கள்[13] அடித்துக் கொள்கின்றனர்.

Kadayanallur clash between Muslim groups.4

மசூதி, அரபுப்பள்ளிக்கூடம், மர்கஸ், மதரஸாஎதுகட்டுவதால்பிரச்சினை: தமிழ் ஊடகங்கள் பிரச்சினை ஏற்பட்டது ஒரு மசூதி, பள்ளிவாசல், அரபுப் பள்ளிக்கூடம் கட்டுவதால் ஏற்பட்டது என்கின்றன. TNTJ “மர்கஸ்” ஒன்று நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் உள்ள பேட்டை பகுதியில் அமைய உள்ளது[14] என்று குறிப்பிடுகின்றது. மர்கஸாவா, மதரஸாவா என்று மற்றவர்களுக்கு புரியவில்லை. அதே மாதிரி எதிர்ப்புத் தெரிவித்த முஸ்லீம்கள் கூறுவதும் வித்தியாசமாக உள்ளது.

தினமலர்சொல்வது: கடையநல்லூர் பேட்டை புளியமுக்கு தெருப்பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறுவர், சிறுமியர் அரபி பாடசாலை[15] பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது[16].

TNTJ சொல்வது: “மர்கஸ்” ஒன்று நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் உள்ள பேட்டை பகுதியில் அமைய உள்ளது[17].

மாலைமலர்கூறுவது: கடையநல்லூர் பேட்டை புளியமுக்கு தெருவின் மேற்கு பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் புதிய பள்ளிவாசல் கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது[18].

தினமணி கூறுவது: கடையநல்லூரில், பேட்டை ஜமாத்துக்கு சொந்தமான பள்ளிவாசல் ஒன்று உள்ளது. இதற்கு அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறுவர் சிறுமியர் அரபி பாடசாலை என்ற பெயரில் துவக்கப் போவதாகச் சொல்லி, பள்ளிவாசல் ஒன்று கட்டும் முனைப்பில் இருந்தார்களாம்[19].

ஏற்கனவே பள்ளிவாசல் உள்ள நிலையில் புதிய பள்ளிவாசல் அமைக்க வேண்டாம் என்றனர்.

தினத்தந்திகூறுவது: கடையநல்லூரில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 9 பேர் காயம் அடைந்தனர்[20].  இங்கு “இரு தரப்பினர்” என்று குறிப்பிட்டு, பிரச்சினைப் பற்றி ஒன்றும் குறிப்பிடப்படவில்லை.

நெல்லை-ஆன்-லைன் கூறுவது: தவ்ஹீத் ஜமாத் சார்பில் புதிய அலுவலகம் கட்டும் வேலைகள் நடக்கின்றன. இதற்கு பேட்டை ஜமாத் எதிர்ப்புத் தெரிவித்தனர்[21].

இங்கு அரபிப் பள்ளி என்பது “மதரஸா” ஆகுமா, ஒருவேளை அதைத்தான் எதிர்க்கிறார்களா என்று தெரியவில்லை. மதரஸாக்களில் நடப்பவைப் பற்றி பற்பல விஷயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன[22]. தலிபானின் மதரஸாக்கள் பற்றி சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

செக்யூலரிஸஊடகங்கள்உண்மையைச்சொல்கின்றனவா?: மேற்குறிப்பிட்டபடி, தமிழக நாளிதழ்கள் நிகழ்வுகளின் உண்மையினை திருத்தியோ, மாற்றியோ, மறைத்தோ வெளியிடுகின்றன. “இரு பிரிவினர்களுக்கு” என்றால் எப்படி படிக்க வேண்டும் என்று இவர்களிடம் தான் கற்றுக் கொள்ளவேண்டும்.

 • இந்து-முஸ்லீம்கள்
 • சன்னி-ஷியா / சுன்னி-ஷியா
 • சையது-லெப்பை
 • முஸ்லிம்-எஸ்.சி
 • முஸ்லிம்-தலித்துகள்
 • TNTJ – TMMK

இப்படி எந்த இரு பிரிவினரை எடுத்துக் கொள்வது. இதை எழுதும் நேரத்திலே, பள்ளக்கால் பொதுக்குடியில் முஸ்லீம்களுக்கும், தலித்துகளுக்கும் இடையே டேற்படவிருந்த மோதல் தடுக்கப்பட்டது என்று செய்தி வருகிறது[23]. எனவே, “செக்யூலரிஸம்” என்ற போர்வையிலேயோ, வேறு எந்த பாரபடசம் அல்லது ஆதரவு, விருப்பு-வெறுப்பு ரீதிகளில் செய்திகளை வெளியிடுவதால், படிப்பவர்களுக்கோ மற்றவர்களுக்கோ எந்த பயனும் இல்லை. இதனால், முஸ்லீம்கள் தங்கள் பிரச்சினையைப் பொதுப் பிரச்சினையாக்கி விடுவர். பந்த, கடையடைப்பு, போராட்டம், ஆர்பாட்டம் என்று எல்லோரையும் படுத்திவிடுவர்.

வேதபிரகாஷ்

27-04-2013


[4] அயல்நாட்டு பணமாற்றத்தில் கடையநல்லூர் முக்கிய ஊராக இருக்கிறது. அனைத்துலக அளவில் தெரியப்பட்டும் உள்ளது. மசூதி, மதரஸா, முதலிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நன்கொடைகளும் வருகின்றன.

[6] கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅத்தார் மோதல்: எஸ்ஐ உள்பட 10 பேர் காயம் – Thursday, April 18, 2013.

[9] கடையநல்லூர்: கடையநல்லூரில் பள்ளிவாசலை நிர்வாகிப்பதில் இரு அமைப்பினரிடையே இருந்து வரும் தொடர் மோதலால் இன்று தொழுகை நடத்துபவரை தாக்கி பள்ளிவாசலின் பூட்டை உடைத்து 6 பேர் கொண்ட கும்பல் நுழைய முயன்றது. இதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடையநல்லூர் மெயின் பஜாரில் அல் முபராக் மஸ்ஜீத் பள்ளிவாசல் 1985ம் ஆண்டு துவக்கப்பட்டது. இப்பள்ளி வாசலை நிர்வாகிப்பதில் ஜாக் அமைப்பினருக்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை 4 மணிக்கு பள்ளி வாசலில் தொழுகையை நடத்துபவரும், ஜாக் அமைப்பை சேர்ந்தவருமான முகமது இஸ்மாயில் பள்ளிவாசலுக்கு வந்துக் கொண்டிருந்தார். அவர் பள்ளிவாசலை நெருங்கியதும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த சேகனா உள்பட 6 பேர் கொண்ட கும்பல் முகமது இஸ்மாயிலை சராமரியாக தாக்கியது. அவர் சுதாரிப்பதற்குள் பூட்டை உடைத்து பள்ளி வாசலுக்குள் நுழைய முயன்றது. அவர் சத்தம் போடவே கும்பல் தப்பியோடி விட்டது. இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். Read more at: http://tamil.oneindia.in/news/2008/01/03/tn-clash-in-masjid-at-kadayanallur.html

http://tamil.oneindia.in/news/2008/01/03/tn-clash-in-masjid-at-kadayanallur.html

[10] பொள்ளாச்சி அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் தமுமுகவைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் 11 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன் பட்டியில் திமுக வேட்பாளர் சண்முக சுந்திரத்திற்கு ஆதரவாக தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அதே பகுதியில் மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவாக தமுமுகவினர் பிரசாரம் செய்து வந்தனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கும், தமுமுகவினருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த 11 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகின்றது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Read more at: http://tamil.oneindia.in/news/2009/05/08/tn-tntj-tmmk-cadres-clash-near-pollachi.html

[11] Two persons were shot dead and 10 injured in a shootout following a clash between two groups over observing a fast at Thiruvidaicherry in this district last last night.Police said, misunderstanding between a section of Muslims belonging to Tamil Nadu Thowheed Jamad (TNTJ)and another belonging to Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK) often led to clashes. Since last evening, the two groups were quarrelling and when they assembled in the mosque late last night, they clashed and exchanged fire with country made revolvers.– (UNI) –  http://news.webindia123.com/news/articles/India/20100906/1581449.html

[12] கடையநல்லூர்,: கடையநல்லூரில் பள்ளிவாச லில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர் பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் ரஹ்மானியாபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் சுலைமான் (79). கடையநல்லூர் வடக்கு அய்யாபுரத்தில் உள்ள செய்யது அப்துல்லா கலிபா சாகிப் பள்ளிவாசலில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் பள்ளிவாசலை பூட்டும் போது அதே தெருவை சேர்ந்த கபீத்ரஹ்மான், ஷேக் மைதீன் ஆகியோர், ‘‘நாங்கள் உள்ளே இருக்கும்போது எப்படி பள்ளிவாசலை பூட்டலாம்?’’ என்று கூறி அவரை தாக்கினர். இதில் அவர் காயம் அடைந்தார். இதுகுறித்து அவர் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் கபீத்ரஹ்மான் போலீசில் அளித்த புகாரில்,  நானும், ஷேக்மைதீனும் பள்ளிவாசலில் இருக்கும்போது வடக்கு அய்யாபுரத்தை சேர்ந்த சுலைமான், இலியாஸ், காதர்மைதீன், செய்யது அப்துல்லா ஆகிய 4 பேரும் தாக்கியதில் காயம் அடைந்ததாக குறிப்பிட்டிருந்தார்.இது தொடர்பாக கபீத்ரஹ்மான், ஷேக்மைதீன், சுலைமான், இலியாஸ், காதர்மைதீன், செய்யது அப்துல்லா ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=181750&cat=504

[13] சரித்திரரீதியில் காலக்கட்டங்களில் அவ்வாறுதான் அழைக்கப்பட்டனர். இன்று குறிப்பிட்ட வார்த்தைகள் இப்படித்தான் சொல்லப்பட வேண்டும், எழுதப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் வற்புறுத்துகின்றனர்.

[23] The timely initiative taken by the Communist Party of India (Marxist) and the Tamil Nadu Muslim Munnetra Kazhagam averted a clash between Muslims and Dalits of Pallakkaalpothukkudi near Ambasamudram in the district recently. – TIRUNELVELI, April 26, 2013

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/communal-clash-averted/article4656034.ece

Explore posts in the same categories: கடையநல்லூர், ஜமாஅத், ஜமாஅத்தார், மர்கஸ், மஸ்ஜித்-உர்-ரஹ்மான், மீனாட்சிபுரம்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

5 பின்னூட்டங்கள் மேல் “முஸ்லிம்கள் எல்லோரும் சமம் என்றால் தமிழக முஸ்லிம்களில் மோதல் ஏற்படுவது ஏன்?”

 1. vedaprakash Says:

  கடையநல்லூர் அருகே பள்ளிவாசல் பிரச்சினையில் இரு தரப்பினர் மோதல்
  பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, ஏப்ரல் 18, 11:03 PM IST 0கருத்துக்கள்0 இமெயில் பிரதி
  http://www.maalaimalar.com/2013/04/18230328/Two-gang-fight-for-Mosque-issu.html

  கடையநல்லூர், ஏப். 18-

  கடையநல்லூர் பேட்டை புளியமுக்கு தெருவின் மேற்கு பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் புதிய பள்ளிவாசல் கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே பள்ளிவாசல் உள்ள நிலையில் புதிய பள்ளிவாசல் அமைக்க வேண்டாம் என்றனர்.

  இது தொடர்பாக தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக இரு தரப்பினரிடமும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

  இந்நிலையில் நேற்று நள்ளிரவு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவர்கள் புதிய பள்ளி வாசல் கட்டுவதற்கான கட்டிட பொருட்களை புளியமுக்கு தெருவில் கொண்டு வந்து போட்டனர். இன்று காலை அதனை பார்த்த அப்பகுதிபொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

  இதையடுத்து பேட்டை முஸ்லிம் சமுதாய ஜமாத் தலைவர் கோதரி (வயது 65), நாட்டாமைகள் அஸ்லம், அப்துல்காதர் ஆகியோர் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து பேசினர். அப்போது பள்ளிவாசல் கட்டக்கூடாது, இங்குள்ள பொருட்களை அப்புறப்படுத்துங்கள் என்றனர்.

  இது தொடர்பாக இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த சிலர் கோதரி, அஸ்லம், அப்துல்காதர் ஆகிய 3பேரை உருட்டு கட்டையால் சரமாரி தாக்கினர். இந்த தாக்குதலின் போது அந்த பகுதியை சேர்ந்த இப்ராகிம் மகன் முகமது மைதீன் (13) என்ற சிறுவனுக்கும் அடி விழுந்தது. இந்த தாக்குதலில் 4 பேரும் பலத்த காயமடைந்தனர்.

  இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கடையநல்லூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் போலீசார் விரைந்து சென்று இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

  அப்போது எஸ்.ஐ.இசக்கியையும் சிலர் உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த 5 பேரும் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 5 பேரையும் தாக்கியவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

  இந்த மோதல் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு அதிரடி போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தென்காசி ஆர்.டி.ஓ. ராஜகிருபாகரன் தலைமையில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

 2. vedaprakash Says:

  கடையநல்லூரில் இருதரப்பினர் இடையே மோதல்; கல்வீச்சு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 9 பேர் காயம்
  http://www.dailythanthi.com/node/243974

  பதிவு செய்த நாள் : Apr 18 | 07:42 pm
  நெல்லை

  கடையநல்லூரில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 9 பேர் காயம் அடைந்தனர்.

  இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

  கல் வீசி தாக்குதல்

  கடையநல்லூரில் இரு தரப்பினர் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. அப்போது 2 தரப்பினரும் ஒருவரை ஒருவர் கல்லால் தாக்கிக் கொண்டனர்.

  இதுகுறித்து உடனடியாக கடையநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் இசக்கி தலைமையில் போலீசார் அங்கு சென்றனர்.

  இந்த கல்வீச்சு தாக்குதலில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் இசக்கி தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

  போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

  இந்த மோதலில் ஒரு தரப்பைச் சேர்ந்த முகம்மது மைதீன் (வயது 15), கோதரி (65), அஸ்லம் (45), அப்துல் காதர் (48) ஆகிய 4 பேரும், இன்னொரு தரப்பைச் சேர்ந்த ஜாபர், சேக்அலி, இப்ராகிம், அப்துல்காதர் ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக தென்காசி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

  தகவல் அறிந்ததும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

  போலீஸ் பாதுகாப்பு

  இந்த சம்பவத்தை தொடர்ந்து புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வானுமாமலை தலைமையில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்–இன்ஸ்பெக்டர் சிவன் மற்றும் அதிரடிப் படையினர் கடையநல்லூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

 3. vedaprakash Says:

  இருபிரிவினருக்கு இடையே மோதல்
  பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2013,07:27 IST
  http://www.dinamalar.com/news_detail.asp?id=694200

  கடையநல்லூர்:கடையநல்லூரில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கல்வீச்சு சம்பவத்தால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.கடையநல்லூர் பேட்டை புளியமுக்கு தெருப்பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறுவர், சிறுமியர் அரபி பாடசாலை பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இப்பகுதியை சேர்ந்த ஜமாத்துக்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கும் இடையே தொடர்ந்து பிரச்னை இருந்து வருகிறது. குறிப்பிட்ட பகுதியில் சிறுவர், சிறுமியர் அரபி ஆரம்ப பாடசலை விலை கொடுத்து வாங்கித்தான் அப்பகுதியில் நடத்தி வருவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இதனிடையில் இப்பிரச்னை தொடர்பாக திடீரென இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டு தொடர்ந்து கல்வீச்சு சம்பவமும் நடந்தது. தகவலறிந்த கடையநல்லூர் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். இருதரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்ட போது அங்கு வந்த கடையநல்லூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி நெற்றி பகுதியில் கல் தாக்கியது.இவர் பலத்த காயமடைந்தார். மேலும் ஜமாத் அமைப்பை சேர்ந்த முகம்மது மைதீன் (15), கோதரி (65), அஸ்லாம் (45), அப்துல்காதர் (42) ஆகியோரும் படுகாயமடைந்து கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை பாளை., ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த ஜாபர், சேக்அலி, இப்ராகிம், அப்துல்காதர் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து புளிங்குடி டிஎஸ்பி வானுமாமலை மற்றும் இன்ஸ் பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் பேட்டை பகுதியில் குவிக்கப்பபட்டனர்.தொடர்ந்து இருதரப்பினரும் போலீசாருடன் சிலமணிநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். டிஎஸ்பி வானுமாமலை இருதரப்பினருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்பி விஜயேந்திர பிதரி, தென்காசி ஆர்டிஓ ராஜகிருபாகரன், தாசில்தார் தேவபிரான், மண்டல துணை தாசில்தார் ஆதிநாராயணன், வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், விசாரணை மேற்கொண்டனர்.போலீசார் கேட்டுக் கொண்டதையடுத்து சிறுவர், சிறுமியர் அரபி பாடசாலையில் இருந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவர்களும் பேட்டை ஜமாத்தை சேர்ந்த பொதுமக்களும் அப்பகுதியிலிருந்து கலைந்து சென்றனர். அப்பகுதியில் பதட்டம் நிலவி வரும் நிலையில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் சிவன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 4. vedaprakash Says:

  Communal clash averted
  The Hindu dated TIRUNELVELI, April 26, 2013
  SPECIAL CORRESPONDENT
  http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/communal-clash-averted/article4656034.ece

  The timely initiative taken by the Communist Party of India (Marxist) and the Tamil Nadu Muslim Munnetra Kazhagam averted a clash between Muslims and Dalits of Pallakkaalpothukkudi near Ambasamudram in the district recently.

  Following an altercation between a Dalit and a Muslim family of Pallakkaalpothukkudi over a trivial issue, the situation spiralled out of control and members of both the communities were gearing up for a showdown. A couple of Dalits and Muslims sustained minor injuries during a scuffle that broke out. Adding fuel to the fire, a religious outfit also entered the scene in support of the Dalits.

  The police filed cases against those who undermined tranquillity in the hamlet and arrested a few of them.

  Against this backdrop, office-bearers of the Communist Party of India (Marxist) and the Tamil Nadu Muslim Munnetra Kazhagam visited the village and held talks with the representatives of both the communities. When they facilitated direct talks between local leaders of the two communities, the problems were solved.“Both Dalits and Muslims have assured that they would ensure peace in the village and any altercation or clash would be resolved only through dialogue,” K.G. Bhaskaran, district secretary, CPI(M), who participated in the reconciliation talks along with former MLA R. Krishnan and TMMK’s Maideen Farook, said.

  The meeting also decided to resolve the cases filed against a few Dalits and Muslims in an amicable manner with the support of the police and other officials.

 5. vedaprakash Says:

  கடையநல்லூரில் பள்ளிவாசல் கட்டுவது தொடர்பான தகராறு: இரு தரப்பு மோதலில் காவல் அதிகாரி படுகாயம்
  By குமாரமுருகன், கடையநல்லூர்
  First Published : 18 April 2013 03:39 PM IST
  http://dinamani.com/latest_news/2013/04/18/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/article1550895.ece

  கடையநல்லூரில் பள்ளிவாசல் ஒன்று கட்டுவது தொடர்பான பிரச்னையில் இரு தரப்புக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் படுகாயம் அடைந்தார்.

  கடையநல்லூரில், பேட்டை ஜமாத்துக்கு சொந்தமான பள்ளிவாசல் ஒன்று உள்ளது. இதற்கு அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறுவர் சிறுமியர் அரபி பாடசாலை என்ற பெயரில் துவக்கப் போவதாகச் சொல்லி, பள்ளிவாசல் ஒன்று கட்டும் முனைப்பில் இருந்தார்களாம். இது தொடர்பாக இரு பிரிவினருக்கும் இடையே வாக்குவாதம் இருந்துவந்தது. இன்று இரு தரப்பையும் சேர்ந்த நூற்றுக் கணக்கானவர்கள் கம்பு, கற்களால் தங்களுக்குள் தாக்கிக் கொண்டனர்.

  இதில் பாதுகாப்புக்காகச் சென்ற போலீஸார் மீதும் கற்கள் விழுந்தன. இந்தத் தாக்குதலில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இசக்கி என்பவர் காயம் அடைந்தார். அவர் உடனடியாக கடையநல்லூர் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், இரு தரப்பிலும் சேர்ந்த 8 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

  இதை அடுத்து, திருநெல்வேலி மாவட்ட எஸ்பி விஜயேந்திர பிதரி உள்ளிட்ட காவல் உயரதிகாரிகள் அந்த இடத்தில் முகாம் இட்டனர். இது தொடர்பாக, இருபதுக்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: