மொஹம்மது அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு ஒமர் அப்துல்லா கண்டனம், யாஸின் மாலிக் உண்ணாவிரதம், ஹாவிஸ் சையீத் எச்சரிக்கை
மொஹம்மது அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு ஒமர் அப்துல்லா கண்டனம், யாஸின் மாலிக் உண்ணாவிரதம், ஹாவிஸ் சையீத் எச்சரிக்கை
ஒமர் அப்துல்லாவின் அரசியல்: மெஹபூபா முப்தி மற்றும் ஒமர் அப்துல்லா எப்பொழுதும் அரசியல் செய்து, இந்தியாவை ஏமாற்றி பதவிக்கு வந்து, வாழ்க்கையை அனுபவித்து வரும் மறைமுக ஜிஹாதிகள். பயங்கரவாதி முகமது அப்சல் குருவைத் தூக்கிலிட்டதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்[1]. உச்ச நீதிமன்றம், குடியரசுத் தலைவர், மத்திய அரசு ஆகியவற்றின் உத்தரவின்படி நிறைவேற்றுப்பட்டுள்ள தண்டனைக்கு மாநில முதல்வர் ஒருவர் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது அரசியல்ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழக நாளிதழ்கள் செய்தி வெளியிடுவதிலிருந்து, எப்படி இங்குள்ளவர்களும் மறைமுகமாக ஆதரிக்கின்றனர் என்று தெரிகிறது. அதற்கேற்றாற்போல சென்னையிலேயே, தூக்கிலிட்டதை எதிர்த்து சுவரொட்டிகளும் காணப்படுகின்றன.
(இந்திய) விரோத மனப்பான்மை உருவாகும்: இது தொடர்பாக ஒமர் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பது: “நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இது போன்ற நடவடிக்கைகள் காஷ்மீர் பகுதி இளைஞர்கள் தங்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளவும், (இந்திய) விரோத மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளவும் வாய்ப்பு அளித்துவிடும். அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவே அவர்களால் கருதப்படுகிறது. இதனால் பெரும்பான்மையான காஷ்மீர் இளைஞர்கள் தவறான வழியில் சென்று விடவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. எப்போதுமே நாம்தான் பாதிக்கப்படும் மக்கள் என்ற எண்ணமும், தங்களுக்கு நீதி கிடைக்காது என்ற அவநம்பிக்கையும் காஷ்மீர் மக்களிடம் உருவாக அனுமதித்து விடக் கூடாது என்பதற்காகவே நான் இப்போது சில கருத்துகளைக் கூறுகிறேன்”, என்றார். இவர்கள் ஏதோ இந்தியாவிற்காக வேலை செய்வது போலவும், நல்லவர்கள் போலவும் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
சாவிலும் பிழைப்பைத்தேடும் ஜிஹாதி மனப்பாங்குள்ளவர்கள்: அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அவர், “அப்சல் குருவை தூக்கிலிடும் முன்பு அவரது குடும்பத்தினரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்காதது துரதிருஷ்டவசமானது. இந்த விஷயத்தில் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட வேண்டியுள்ளது’ என்றார். தான் மரண தண்டனைக்கு எதிரானவன் என்று உறுதிபடப் பேசிய ஒமர், “எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை’ என்றார். ஆனால், அரசாங்கத்தின் தரப்பில் உரிய முறைகளைப் பின்பற்றித்தான் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்ற விஷயங்கள் தமிழக நாளிதழ்கள் வெளியிடவில்லை. ஜிஹாதிகளைப் பொறுத்த வரைக்கும் சாவு “ஷஹீதுத்துவம்” என்றுதான் ஏற்றுக் கொண்டு சாகின்றனர். மனிதகுண்டுகளே அவ்வாறுதான் உருவாகி வெடித்துக் கொண்டிருக்கின்றன.
“எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை’ என்றார் ஒமர்: ஜிஹாத் என்ற மதவெறியில் குண்டுகளை வெடித்து அப்பாவி மக்களை வயது கூட பார்க்காமல் குழந்தைகள், முதியவர், பெண்கள் என்று அனைவரையும் கை-கால்கள் சிதற, தலைகள் சிதற, ரத்தம் பீரீட்டு கொட்ட, சதைகள் சிதற குரூரக் கொலைப்பலிகள் செய்து வருவதை நினைந்து, உள்ளம் உருத்தத்தான் இப்படி கூறுகிறார் போலும் ஒமர், “எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை’ என்றார். அப்படியென்றால், யாருக்கு ரத்தவெறி இருக்கிறது?
காஷ்மீர் மக்களின் (முஸ்லீம்களின்) கருத்து: மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பலரில் அப்சல் குருவை மட்டும் தேர்வு செய்து மத்திய அரசு தண்டனை வழங்கியுள்ளதாகக் கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு, “இது தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்ட தண்டனை அல்ல என்பதை காஷ்மீர் மக்களுக்கும் உலகுக்கும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அவருக்கு சீக்கிரமாகவே தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதுதான் எனது கருத்து. இந்த தலைமுறை காஷ்மீர் மக்கள் தங்களை அப்சல் குருவின் அங்கமாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அவர் மீதான விசாரணை சரியாக நடத்தப்படவில்லை என்பதே காஷ்மீர் மக்களின் கருத்தாக உள்ளது. இதே கருத்துதான் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எழுந்துள்ளது[2].
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள்? இந்திய ஜனநாயகத்தின் அடையாளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று அப்சல் குரு தொடர்புடைய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு கருதப்படுகிறது. முன்னாள் பிரதமர் என்பவர் ஜனநாயகத்தின் அடையாளம் இல்லையா? பஞ்சாப் முதல்வர் தனது அலுவலகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். அவர் ஜனநாயகத்தின் அடையாளம் இல்லையா? என்று ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் குற்றவாளிகளுக்கும், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பேயந்த் சிங் கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது குறித்து அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். “நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் வார்த்தைகளை விளக்குவது மிகவும் கடினம். ஒருமித்த அளவில் மக்களின் மனவோட்டத்தில் திருப்தி அடைவதன் மூலம் ஒருவரைத் தூக்கிலிட்டு விட முடியாது. சட்டப்படியும், நீதிப்படியும் அத்தண்டனை வழங்குவதற்கான காரணங்கள் அனைத்தும் வலுவாக இருக்க வேண்டும்.
நிறைவேற்றி இருக்கக் கூடாது: மரண தண்டனைக்காக காத்திருப்பவர்கள் குறித்தும், இதுவரை மரண தண்டனை பெற்றவர்கள் குறித்தும் வேறுவிதமான கேள்விகளை எழுப்ப நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தண்டனை அரசியல் நோக்கம் கொண்டது என்ற குற்றச்சாட்டில் இருந்து மத்திய அரசு தன்னை காத்துக் கொள்ள வேண்டும். இது சட்டப்படியே எல்லாம் நடந்துள்ள என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த தண்டனை நிறைவேற்றப்படாமல் இருத்திருக்க வேண்டுமென்பதுதான் எங்கள் கட்சியின் கருத்து என்றார். இந்த விவகாரத்தை முன்வைத்து மத்திய அரசில் இருந்து விலகுவீர்களா என்ற கேள்விக்கு, “நாங்கள் விலகினால் அப்சல் குருவை மீண்டும் கொண்டு வர முடியும் என்றால் அரசில் இருந்து வெளியேறுவோம்’ என்று ஒமர் அப்துல்லா பதிலளித்தார். இவரும் இவரது உறவினரான மெஹ்பூபா முப்தியும் இப்படி மாறி-மாறி பேசியதும், எதிர்பார்த்தபடி, கலவரங்கள் ஆரம்பித்துள்ளன.
காஷ்மீரில் 2ஆவது நாளாக ஊரடங்கு: ஸ்ரீநகர், பிப். 10:÷நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதி அப்சல் குருவுக்கு சனிக்கிழமை (09-02-2013) தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் கட்டுப்பாடில் உள்ள காஷ்மீரில்[3] பதற்றமான சூழ்நிலை நிலவுவதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. சனிக்கிழமை ஊரடங்கு உத்தரவையும் மீறி காஷ்மீரில் பல இடங்களில் சில அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதிலிருந்தே அவர்களுக்கு முன்னமே விஷயம் தெரிந்துள்ளது என்றாகிறது. அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் 36 போராட்டக்காரர்களுக்கும், 23 போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போராட்டம் பரவுவதைத் தடுக்க மாநிலம் முழுவதும் செல்போன், இன்டர்நெட் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. செய்தி தொலைக்காட்சி சேனல்களை ஒளிபரப்புவதை கேபிள் ஆபரேட்டர்கள் தவிர்த்து விட்டனர்.
மோதலில் ஒருவர் சாவு: 6 பேர் படுகாயம்: ஸ்ரீநகர், பிப். 10: அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பாதுகாப்புப்படை மேற்கொண்ட நடவடிக்கையில் ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் காயம் அடைந்தனர். இது பற்றி அதிகாரவட்டாரங்கள் தெரிவித்ததாவது: மத்திய காஷ்மீர் பகுதியில் உள்ள கந்தர்பால் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை பாதுகாப்புப்படையினர் விரட்டியபோது தாரிக் அகமது பட் மற்றும் மேலும் 2 பேர் ஆற்றில் குதித்தனர். இதில் பட் உயிரிழந்தார் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால் போலீஸார் இந்த தகவலை மறுத்தனர். படகில் சென்றபோது அது கவிழ்ந்ததில் ஒருவர் நீந்தி கரைசேர்ந்தார். மற்றொருவரை சிலர் காப்பாற்றினர். தாரிக் அகமது பட்டை காப்பாற்ற இயலவில்லை. அவரது சடலம் மீட்கப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே, அவரது சாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிதாக அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில் பாரமுல்லா மாவட்டம் வாட்டர்காம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இளைஞர்கள் சிலர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். அப்போது அவர்களை கலைந்துபோகச் செய்த பாதுகாப்புப் படையினருடன் இளைஞர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.
வீட்டுக் காவலில் கிலானி?: அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஜாகீர் ஹுசேன் கல்லூரியில் பேராசிரியராக உள்ள எஸ்.ஏ.ஆர். கிலானியை போலீஸார் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கிலானியை அதே ஆண்டு டிசம்பரில் தில்லி போலீஸார் கைது செய்தனர். எனினும், கிலானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகவில்லை என்று 2003-ல் உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை காலையில் விசாரணைக்காக நியூ பிரெண்ட்ஸ் காலனியில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு கிலானியை போலீஸார் அழைத்துச் சென்றனர். அன்றைய தினம் இரவு 10 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் கிலானியின் வீட்டைச் சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்து வெளியே செல்லவும் அவரை போலீஸார் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தில்லியில் வசித்து வரும் ஹுரியத் தலைவர்கள் சையத் அலி கிலானி, மிர்வைஸ் உமர் ஃபரூக், பத்திரிகையாளர் இஃப்திகர் கிலானி ஆகியோரின் வீட்டு வாயிலில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் 2வது நாளாக தொடருகிறது ஊரடங்கு[4]: அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீர் முழுவதும், இரண்டாவது நாளாக, நேற்றும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவையும் மீறி, ஒரு சில இடங்களில், நேற்று முன்தினம், வன்முறை ஏற்பட்டது. இதில், 23 போலீசார் உட்பட, 36 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், காஷ்மீரில், நேற்றும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தது. பதற்றமான இடங்களில், போலீசாருடன், துணை ராணுவப் படையினரும், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். செய்தி சேனல்கள், மொபைல் போன், இணையதள சேவைகள், இரண்டாவது நாளாக, நேற்றும் முடக்கி வைக்கப்பட்டிருந்தன; பத்திரிகைகளும், வெளிவரவில்லை. அப்சல் தூக்குக்கு எதிர்ப்பு காஷ்மீரில் போராட்டம் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்[5].
இந்தியவிரோதி மற்றும் தீவிரவாதி-பயங்கரவாதி கைகோர்த்துக் கொண்டு போராட்டம்: இஸ்லாமாபாதில் இந்தியவிரோதி யாஸின் மாலிக் மற்றும் பயங்கரவாதி ஹாபிஸ் சையீது தண்டனையை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். மொஹம்மது அப்சலின் உடலை ஒப்புவிக்கும் படி ஆர்பாட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது, இந்தியவிரோதி மற்றும் தீவிரவாதி-பயங்கரவாதி இருவரும் மேடையில் அருகருகில் உட்கார்ந்து கொண்டது, பேசிக்கொண்டது பற்றி செய்திகள் வந்துள்ளன[6]. இறுதிமரியாதை சடங்கும் நடத்தப் பட்டது. ஹாவித் சையதே செய்து வைப்பான் என்று அறிவிக்கப்பட்டாலும், ஜமத்-இ-இஸ்லாமி தலைவர் செய்து வைத்தார்[7].
காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம்: யாஸின் மாலிக் தான் காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம் என்று வேறு கூறியிருக்கிறான். கடைசியாக தான் ஹாவித் சையீதை சந்திக்கவே இல்லை என்றும் சொல்லிவிட்டான்[8]. இனி நோபல் அமைதி பரிசிற்காக அவன் பெயர் பரிந்துரைக்கப் பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏற்கெனவே நேரு குடும்பம் இத்தாலிக்கு அடிமையாகி விட்டது. காந்தி குடும்பம் மறைந்து விட்டது. உள்ள பெயரும் சோனியாவுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால், இப்படி இந்திய-விரோதிகள், அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் எல்லோரும், காந்தி-நேரு பெர்களைச் சொல்லி, அவர்களைப் போன்று நாங்கள் அஹிம்சாவழி நடக்கிறோம் என்பதில் ஒன்றும் வியப்பில்லை. காங்கிரஸ்காரர்கள் இவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடி, இன்னும் பத்தாண்டுகளில், பிரதம மந்திரி, ஜனாதிபதி ஆக்கினாலும் வியப்பில்லை.
மனைவியுடன் இருக்க வருடா-வருடம் பாஸ்போர்ட் கொடுக்கும் சோனியா அரசு[9]: யாஸின் மாலிக்கின் மனைவி பாகிஸ்தானில் இருக்கிறாள். இவளுடன் சேர்ந்து இருக்க வருடா-வருடம் சோனியா அரசு பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொடுத்து வருகிறது. இவனோ மனைவியுடனும் இருந்து, ஜிஹாதிகளுடனும் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகிறான். ஆனால், காங்கிரஸ்காரர்கள் இதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. அம்மா சொன்னால் அப்படியே தலையாட்டி வருகிறார்கள், காலில் விழவும் தயாராக இருக்கிறர்கள். அம்மையார் தலைவி என்றால்தான், அவர்களுக்கு பதவி, பட்டம், சொத்து, பணம் எல்லாம். ஆகவே, இத்தகைய அடிமை வாழ்வு தொடர்ந்தே வருகிறது. இடைக்காலத்தில் இதைப் போன்ற இந்திடயர்கள் முஸ்லீகம்களுடன் துணைபோனதால் தான் முஹம்மது கோரி, முஹம்மது கஜினி, மாலிக்காபூர், பாபர், ஹுமாயூன் முதலியோர் இந்துக்களைக் கொன்று, சூறையாடினார்கள். இப்பொழுது இப்படி கூட்டணியில் குண்டு போட்டு கொன்று வருகிறார்கள், ஊழலில் கோடிகளை கொள்ளையடித்து வருகிறார்கள் இதுதான் வித்தியாசம்!
ஊடகங்களின் விஷமத்தனம்: இந்திய அரசு தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதைப் பொறுத்த வரைக்கும் உள்ள முறையை சரியாகப் பின்பற்றப்பட்டுள்ளது என்று எடுத்துக் காட்டினாலும், ஏதோ அரசு அவசரப்பட்டுவிட்டது, குடும்பத்தாருக்குத் தெரிவிக்கப் படவில்லை, மனித உரிமை மீறல் என்றெல்லாம் கதைகளை அவிஅத்துவிட ஆரம்பித்துள்ளனர். ஜிஹாதி-பயங்கரவாதிகளால், ஜிஹாதி-தீவிரவாதிகளால் மக்கள் கொள்ளப்பட்டபோது, இவர்கள் இவ்வாறு பேசவில்லையே, ஏன்? அப்படியென்றால் அவர்களுக்கு குடும்பங்கள், உரிமைகள் இல்லையா? இல்லை, அவர்கள் இவர்களை விட எந்த விதத்தில் உயர்ந்தவர்கள் அல்லது வேற்றுமையானவர்கள்? இப்படி கேள்விகள் கேட்டால், விடை என்னவென்று மக்களுக்குப் புரிய ஆரம்பித்து விடுகிறது. அகவே, ஊடகங்களின் விஷமத்தனம் நன்றாகவே தெரிகிறது. அதனால்தான், ஒரு ஊடகம் இப்படி – இந்தியர்களில் சிலர் எதிர்த்து போராட்டம் நடத்தினாலும், சிலர் கொண்டாடுகிறார்கள் என்று போலித்தனமான-விஷமத்தனமான படத்தை வெளியிட்டுள்ளார்கள்[10]. சிறுவனை உயிர்தியாகியாக்கிய இந்திய ராணுவம் என்று பாகிஸ்தான் நாளிதழ்[11] கூறுகிறது!
பாகிஸ்தானின் விரோதத்தனம்: நட்பு என்று சொல்லிக் கொண்டு, தலைகளைத் துண்டாடி, துரோகச் செயல்களில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய பாகிஸ்தான், கேடு கெட்ட செக்யூலார் இந்தியாவை இந்த சமயத்திலும் நன்றாகவே சாடியுள்ளது[12]. இந்தியா எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் பாடம் சொல்லிக் கொடுக்கிறது[13]. அதை வெட்கம்-மானம்-சூடு-சொரணை இல்லாத உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் கேட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
வேதபிரகாஷ்
11-02-2013
[2] இதற்கேற்றார்போல, அருந்ததிராய் போன்ற கூட்டத்தார் பேசி வருகிறார்கள்.
Sujato Bhadra, a Kolkata-based member of the Association for Protection of Democratic Rights, said that the higher courts had not addressed Guru’s claims that his trial had been faulty. “The government carried out the execution without allowing him to exhaust a judicial recourse after the president rejected his mercy petition,” Bhadra said.”This is a blatant miscarriage of justice.”
[3] “Indian administered Kashmir”, “India Occupied Kashmir”, Indian Held Kashmir (IHK) என்றுதான் பாகிஸ்தானிய மற்றும் காஷ்மீர முஸ்லீம்கள், ஊடகவாதிகள் கூறி-எழுதி வருகின்றனர்.
http://dawn.com/2013/02/11/at-least-two-dead-in-indian-administered-kashmir/
[6] On Sunday afternoon, Mr. Saeed reached the venue of Mr. Malik’s hunger strike and the two met briefly.
[7] Though JuD activists had claimed that Mr. Saeed would lead the ‘ghayabana namaz-e-janaza’ (funeral prayers in absentia) for Afzal at the protest site, the prayers were led by a Jamat-e-Islami leader.
[8] http://timesofindia.indiatimes.com/india/Yasin-Malik-on-the-defensive-denies-any-meeting-with-Hafiz-Saeed/articleshow/18473025.cms
[12] Commenting on the execution of Kashmiri leader Afzal Guru by India, Pakistan on Monday reaffirmed its solidarity with the people of Jammu and Kashmir and expressed serious concern on high-handedness of the Indian government with Kashmiris.
http://paktribune.com/news/Pakistan-voices-concern-on-Indias-treatment-of-Kashmiris-257326.html
குறிச்சொற்கள்: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், இந்தியா, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், காஷ்மீர், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், சையது, ஜிலானி, ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், தியாகி, தீவிரவாதம், துரோகம், துரோகம் ஜின்னா, பயங்கரவாதம், பயங்கரவாதிகள், பாகிஸ்தான், மாலிக், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், லவ் ஜிஹாத், வஞ்சம், ஹாவிஸ், ஹாவிஸ் சையீத்
You can comment below, or link to this permanent URL from your own site.
பிப்ரவரி 13, 2013 இல் 9:22 முப
தீவிரவாதி ஹபீஸ் சையதுடன் யாசின் மாலிக்: பாஸ்போர்ட்டை முடக்க பாஜக வலியுறுத்தல்
Posted by: Mathi Updated: Tuesday, February 12, 2013, 11:13 [IST]
டெல்லி: பாகிஸ்தானில் மும்பை தாக்குதல் வழக்கின் குற்றவாளி ஹபீஸ் சையதுடன் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் சேர்ந்து அப்சல் குருவுக்கு அஞ்சலி செலுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கின் குற்றவாளி அப்சல்குருவை தூக்கிலிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கக் கோரியும் பாகிஸ்தான் சென்றுள்ள ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக், இஸ்லாமாபாத்தில் உண்ணாவிரதம் இருந்தார். அவரது உண்ணாவிரதத்தில் மும்பை தாக்குதல் வழக்கின் மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பாவின் தலைவர் ஹபீஸ் சையதும் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி, எல்லையில் நமது ராணுவ வீரர்களை கோரமாக படுகொலை செய்த ஹபீஸ் சையதை எப்படி யாசின் மாலிக் சந்திக்கலாம்? இதற்கு மத்திய அரசும் உள்துறை அமைச்சரும் பதில் சொல்ல வேண்டும். இது போன்ற தேசவிரோத பிரிவினைவாத தலைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கங்களோடு பகிரங்கமாக செயல்படுகிற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம் என்றார்.
இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி, மும்பை தாக்குதல் வழக்கில் பிரதான குற்றவாளி ஹபீஸ் சையத். ஹபீஸ் சையதுடன் யாசின் மாலிக் இணைந்து உண்ணாவிரதம் இருந்தது வருத்தத்துக்குரியது. கவலையளிக்கிறது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, ஹபீஸ் சையதை சந்தித்த யாசின் மாலிக் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார். இதேபோல் கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தான் சென்ற ஜம்மு காஷ்மீரின் ஹூரியத் இயக்க தலைவர் மிர்வாஸ் உமரும் ஹபீஸ் சையதை சந்தித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/12/india-bjp-targets-centre-shinde-as-jklf-leader-yasin-169607.html
பிப்ரவரி 13, 2013 இல் 9:23 முப
தீவிரவாதி ஹபீஸ் சயீத்-காஷ்மீர் யாசின் மாலிக் சந்திப்பு: ஷியா முஸ்லிம் அமைப்பு கடும் கண்டனம்
புதன்கிழமை, பெப்ரவரி 13, 1:26 AM IST
http://www.maalaimalar.com/2013/02/13012604/Muslim-body-condemns-Yasins-sh.html
லக்னோ, பிப். 13-
பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் காஷ்மீரை சேர்ந்த அப்சல் குரு, திகார் சிறையில் ரகசியமாக தூக்கிலிடப்பட்டான். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவர் யாசின் மாலிக், பாகிஸ்தானில் உண்ணாவிரதம் இருந்தார்.
அவரை, 2008 மும்பை தாக்குதலில், 166 பேரை கொல்ல மூலகாரணமாக இருந்த லஷ்கர் இ தொய்பா தலைவன் ஹபீஸ் சயீத் சந்தித்து பேசியிருக்கிறான். இவர்களின் சந்திப்பு இந்தியாவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் அனைத்து இந்திய ஷியா முஸ்லிம் சட்ட வாரியக் கூட்டம் நேற்று உத்திரப்பிரதேசம் லக்னோவில் நடைபெற்றது.
அந்த அமைப்பினர் யாசின் மாலிக் பற்றி கூறியதாவது;-
பாகிஸ்தானில் உண்ணாவிரதம் இருந்த ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹூரியத் தலைவர் யாசின் மாலிக் தனது மேடையில் லஷ்கர் இ தொய்பா தலைவன் ஹபீஸ் சயீத்தை சந்தித்து பேசியிருக்கிறார். இதை அனைத்து இந்திய ஷியா முஸ்லிம் சட்ட வாரியம் வன்மையாக கண்டிக்கிறது.
இந்தியாவிற்கு சவால் விடும் விதமாக, ஹபீஸ் சயீத்துடன் பகிரங்கமாக மேடையில் இருந்த யாசின் மாலிக்கின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யவேண்டும். என்ன நோக்கத்திற்காக அவர் ஹபீசுடன் மேடையில் இருந்தார் என்று விசாரணை நடத்தப்படவேண்டும்.
அரசியல் காரணங்களுக்காக அவர் மீது நடவடிக்கை அரசு தயங்கினால், இது ஒரு தவறான செய்தியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும்.
இவ்வாறு அந்த வாரியம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 13, 2013 இல் 9:25 முப
யாசின் மாலிக் மீது விசாரணை: உள்துறை அமைச்சகம் தகவல்
பார்லிமென்ட் தாக்குதல் தீவிரவாதி, அப்சல் குரு ..
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2013,01:49 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 13,2013,01:54 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=647083
புதுடில்லி: அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் மும்பை பயங்கரவாத சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையதுடன் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டார். இதையடு்த்து யாசின் மாலிக்கின் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் என்று பா.ஜ. கோரியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங், மத்திய அரசு முழுமையான விசாரணையை தொடங்கியுள்ளது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் யாசின் மாலிக் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஆர்.பி.என்.சிங் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 13, 2013 இல் 9:26 முப
யாசின் மாலிக்கின் பாஸ்போர்ட் ரத்தாகிறது?
By dn, புது தில்லி
First Published : 13 February 2013 02:57 AM IST
http://dinamani.com/india/article1461321.ece
ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக்கின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய இந்தியா முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் சென்றுள்ள யாசின் மாலிக், அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் நிகழ்ச்சியில், மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துடன் ஒரே மேடையில் பங்கேற்றார்.
இது குறித்து விசாரணை நடத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அவரின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.
இந்தியாவுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளில் மாலிக் ஈடுபட்டுள்ளார். ஹபீஸ் சயீத் மற்றும் இந்தியாவின் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் தலைவர்களை அவர் சந்தித்துள்ளார். அவர் இந்தியா திரும்பியதும் அவரிடம் பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தவுள்ளனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மத்திய உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என். சிங் இது குறித்து செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
முழு விசாரணை நடத்தப்படுகிறது. அதன் அறிக்கை வந்ததும், மாலிக் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியது: பாதுகாப்பு அமைப்புகள் கொடுத்த தடையின்மைச் சான்றிதழின் அடிப்படையில்தான் அவருக்கு பாஸ்போர்ட் அளிக்கப்பட்டது. அந்த பாஸ்போர்ட்டை திரும்பப் பெறும்படியோ, பறிமுதல் செய்யும்படியோ அறிக்கை அளிக்கப்பட்டால், அதன் மீது கவனத்துடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பாஜக வலியுறுத்தல்: பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் இது குறித்துக் கூறியதாவது: அரசு இது குறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாத வகையில், பாகிஸ்தானுடன் பேச வேண்டும். இது போன்றவர்களின் நடவடிக்கைகள் தொடர் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட வேண்டும் என்றார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியது: அவர்களைக் கைது, அவர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய வேண்டும். மாலிக் பாகிஸ்தான் செல்ல இந்தியா ஏன் அனுமதித்தது? அரசு இதற்கு விளக்கம் சொல்ல வேண்டும் என்றார்.
பிப்ரவரி 13, 2013 இல் 9:29 முப
கோழையான இந்தியர்கல் ஒன்றும் செய்யமுடியாது.
இப்படியே கத்திக் கொண்டே இடருக்க வேண்டியது தான்.
அல்லாவிடம் சரணடையுங்கள்.
அப்பொழுதுதான் பிழைக்க முடியும்.
மார்ச் 10, 2013 இல் 11:55 முப
[…] [6] https://islamindia.wordpress.com/2013/02/13/terrorists-anti-nationals-joined-together/ […]
மார்ச் 11, 2013 இல் 1:06 முப
[…] [28] https://islamindia.wordpress.com/2013/02/13/terrorists-anti-nationals-joined-together/ […]
மே 19, 2013 இல் 1:24 முப
[…] [8] https://islamindia.wordpress.com/2013/02/13/terrorists-anti-nationals-joined-together/ […]
மே 21, 2013 இல் 6:09 முப
[…] [20] https://islamindia.wordpress.com/2013/02/13/terrorists-anti-nationals-joined-together/ […]