நைஜீரியாவில் முஸ்லீம்-கிருத்துவ மதகலவரங்கள்-சண்டைகள் ஏன்?

நைஜீரியாவில் முஸ்லீம்-கிருத்துவ மதகலவரங்கள்-சண்டைகள் ஏன்?

ஆப்பிரிக்கக் கண்டத்தை மதரீதியில் மாற்றியது: “இருண்ட கண்டம்” என்று அழைத்த ஆப்பிரிக்காவில் ஐரோப்பிய நாடுகள் கனிம வளங்களுக்காக, அக்கண்டத்தின் மக்களை அடிமையாக்கி தோட்டங்களில் மற்றும் தொழிற்சாலைகளில் வேலை செய்ய வைத்து கொள்ளை லாபம் அடித்து வந்ததனர். போட்டிக்கு வந்த முஸ்லீம்களும் விட்டுவைக்கவில்லை. பிறகு இரு பிரிவினரும் ஆப்பிரிக்க மக்களை மதமாற்ற ஆரம்பித்தனர். ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகீசியர் இவ்வேலைகளில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். பிறகு ஜிஹாதி இயக்கத்தினரும் தங்கள் பங்கைத் தொடர்ந்தனர். இதனால், ஆப்பிரிக்கக் கண்டம், பல நாட்களாக உடைந்தது. ஆப்பிரிக்க மக்களிடையே இனம், மொழி, ஜாதி போன்ற பிரிவுகளின் தன்மைகளை ஐரோப்பியர்கள் மற்றும் அரேபியர்கள் ஊட்ட ஊட்ட அவர்கள் அவ்வாறே பிரிவுண்டனர். 20ம் நூற்றாண்டில் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற ஆரம்பித்தன. ஆனால், மதங்களில் கட்டுண்டன. 1960ல் நைஜீரியா இங்கிலாந்திலிருந்து விடுதலைப் பெற்றது. 1999 வரை ராணுவ புரட்சிகள்-ஆட்சிகள் என்றிருந்து, ஒருவழியாக ஜனநாயகத்திற்கு வந்தது.

முஸ்லீம்கள்-கிருத்துவர்கள் கலவரங்கள்-சண்டைகள்: ஆப்பிரிக்காவில் கிருத்துவர்கள் மற்றும் முஸ்லீம்கள் மாறி-மாறி அந்த கண்டத்தின் மக்களை மதமாற்றி, ஒவ்வொரு நாட்டின் ஜனத்தொகையில் மதம் ரீதியாக மக்களை பிரித்து, அந்நாட்டு மக்களுக்குள்ளேயே சமூகங்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தி, அவ்வப்போது தூண்டிவிட்டுக் கொண்டு, கலவரங்களை உண்டாக்கி மக்களைக் கொன்று குவிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள். ஜனத்தொகை அதிகம் உள்ள நைஜீரியாவில் 160 மில்லியன் மக்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் தெற்கில் கிருத்துவர்கள் மற்றும் வடக்கில் முஸ்லீம்கள் என்று பிளவுபட்டுள்ளனர். 50.4% முஸ்லீம்கள், 50.8% கிருத்துவர்கள் (15% Protestant, 13.7% Catholic and 19.6% other Christian), மற்ற மதத்தினர் 1.4% உள்ளனர்.

போகோ ஹராம் – இஸ்லாமிய இயக்கமா-சேனையா? கடந்த ஐந்தாண்டுகளாக மதகலவரங்கள் நடப்பது சாதாரணமான விஷயமாகி விட்டது. இத்தகைய மத கலவரங்கள், கிருத்துவர்கள் மீதான தாக்குதல்கள், சர்ச்சுகளின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துவது போன்ற தீவிரவாத காரியங்களுக்கு இஸ்லாமிய போகோ ஹராம் என்ற இயக்கம் (The Islamist Boko Haram group) பொதுவாகக் குற்றம் சாட்டப்படுகிறது[1]. இது இஸ்லாம் பெயரால் கிருத்துவர்களை மட்டுமல்ல, முஸ்லீம்களையே கொன்று வருகிறது என்று எடுத்துக் காட்டுகின்றனர்[2]. ஜிஹாதி சித்தாந்தத்தில் உருவான இவ்வியக்கம் முஸ்லீம்கள் அல்லாதவர்களின் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றது. 2012ல் மட்டும் சுமார் 380 பேர் மதகலவரங்களில் கொல்லப்பட்டுள்ளனர்[3]. நைஜொஈரிய மக்களுக்கிடையே இதைப் பற்றிய கருத்து மாறுபட்டதாக இருக்கிறது[4]. கென்யாவிலிருந்து கடத்தி வரப்படும் தந்தவியாபாரத்தில் ஈடுப்பட்டிப்பதாகவும் குற்றஞ்சாட்டப் படுகிறது. கடந்த ஆண்டுகளில் இந்த இயக்கதினரால் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத-ஜிஹாதி தாக்குதல்கள் கீழ்கண்டவாறுள்ளது[5].

6 June 2011 Bombing attack on a beer garden in Maiduguri, leaving 25 dead and 12 injured
10 July 2011 Bombing at the All Christian Fellowship Church in Suleja, Niger State
11 July 2011 The University of Maiduguri temperory closes down its campus citing security concerns
12 August 2011 Prominent Muslim Cleric Liman Bana is shot dead by Boko Haram
26 August 2011 2011 Abuja bombing
4 November 2011 2011 Damaturu attacks
25 December 2011 December 2011 Nigeria bombings
5–6 January 2012 January 2012 Nigeria attacks[
20 January 2012 January 2012 Kano bombings
28 January 2012 Nigerian army says it killed 11 Boko Haram insurgents[54]
8 February 2012 Boko Haram claims responsibility for a suicide bombing at the army headquarters in Kaduna.[55]
16 February 2012 Another prison break staged in central Nigeria; 119 prisoners are released, one warder killed.
8 March 2012 During a British hostage rescue attempt to free Italian engineer Franco Lamolinara and Briton Christopher McManus, abducted in 2011 by a splinter group Boko Haram, both hostages were killed.
31 May 2012 During a Joint Task Force raid on a Boko Haram den, it was reported that 5 sect members and a German hostage were killed.
3 June 2012 15 church-goers were killed and several injured in a church bombing in Bauchi state. Boku Haram claimed responsibility through spokesperson Abu Qaqa.

 

31, ஜூலை 2009 வெள்ளிக்கிழமை,: ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அரசுக்கு எதிராக `பகோஹரம்’ என்ற தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக முகமது யூசுப் என்பவர் செயல்பட்டு வந்தார்.  அங்கு அரசு படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தீவிரவாதிகள் அரசு ஆதரவாளர்களை கொன்று குவித்தனர். 4 நாட்களாக அங்கு கடும் சண்டை நீடித்து வந்தது. இதில் 300 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் தரப்பில் மட்டும் 100 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். ஏராளமான பொது மக்கள் ராணுவ வீரர்களும் பலியாகி இருக்கின்றனர். ஆனால் சாவு எண்ணிக்கை 600-ஐ தாண்டி இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே தீவிர வாதிகள் தலைவர் முகமது யூசுப் ராணுவத்திடம் சிக்கினார். அவரையும் சுட்டுக் கொன்றனர். அவர் ராணுவத்தினர் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்ற போது சுட்டு கொல்லப்பட்டதாக அரசு அறிவித்து உள்ளது.

ஜனவரி 24, 2010: நைஜீரியாவில் வடக்கு பகுதியில் உள்ள ஜோஷ் நகரில் கிருத்துவர்கள்-முஸ்லீம்களுக்கு இடையே பயங்கர கலவர‌த்‌தி‌ல் 400 பே‌ர் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர். ஏ‌ற்ப‌ட்ட கலவர‌த்‌தி‌ல் கிருத்துவர்கள்-முஸ்லீம்களுகள் ஒருவரையொருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இந்த கலவரத்தை அந்நாட்டு காவ‌ல்துறை‌யினரு‌ம், ராணுவத்தினரும் அடக்கி கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடக்கத்தில் கலவரத்தில் இறந்தவர்கள் 150 என கணக்கிடப்பட்டது. தற்போது சாவு எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது. கலவரம் நடந்த ஜோஷ் நகரிலும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் ஆங்காங்கே பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன. ஜோஷ் நகரில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து மட்டும் 150 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 18 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை செஞ்சிலுவை சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

மே 30, 2012: நைஜீரியா நாட்டில் தென்கிழக்கு பகுதியில் இருக்கும் கிராமத்தில் கிருத்துவர்கள்-முஸ்லீம்களுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அதில் அங்குள்ள வீடுகள், கிறிஸ்தவ ஆலயம் போன்றவை தீ வைத்து எரிக்கப்பட்டன. கத்தி, பயங்கர ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கினர். இந்த மோதல்-கலவரத்தில் கிராம தலைவர், 4 போலீசார் மற்றும் பெண்கள், குழந்தைகள் உள்பட 45 பேர் பலியானார்கள். வீடுகளை இழந்த சுமார் 2 ஆயிரம் பேர் பக்கத்து கிராமங்களுக்கு ஓடி தஞ்சம் அடைந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்க அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

ஜூன் 17, 2012: நைஜீரியாவின் கடுனா மாகாணத்தில் தெற்குப்பகுதியிலுள்ள நஸார்வா மற்றும் பர்னவா நகரங்கள் மற்றும் ஜாரியாவில் ஐந்து சர்ச்சுகள் வெடிகுண்டுகள் வீசி தர்க்கப்பட்டுள்ளன[6]. இதனால் நைஜீரியா தலைநகர் எல்லைப்பகுதியில் நடந்த கலவரத்தில் 20 பேர் பலியானதாகவும் மற்றும் 50 பேர் காயமடைந்ததாகவும் செஞ்சிலுவை சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இப்பொழுது நிலவரம் 98 வாவு, 150 காயம்[7], தலைநகர் அபுஜா எல்லைப்பகுதியில் நசரவா மாகாணத்தில் 17-06-2012 (ஞாயிற்று ஈஸ்டர் கொண்டாட்டம்) அன்று ஆரம்பித்து நடந்து வரும் கலவரத்தில் 6,000 பேர் வீட்டை வி‌ட்டு வெளியேறியதாகவும் தெரியவந்துள்ளது. ஒரு தற்கொலைப்படை மதவாதி சர்ச்சுக்குள் குண்டை வெடித்ததிலிருந்து கலவரம் ஆரம்பித்தது[8]. கலவரம் நடந்த பகுதியில் பாதுகாப்பு போதுமானதாக இல்லை என செஞ்சிலுவை சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமூலில் இருந்தாலும், கலவரம் தொடர்கிறது[9]. இஸ்லாமியவாதிகள், பாதுபாப்பு வீரர்களுக்கிடையே கடுமையான சண்டை நடக்கிறது[10]. இப்படி 2009லிருந்து ஆரம்பித்த மதகலவரங்கள்-சண்டைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சாதாரண மக்கள் அமைதியாகவே வாழ விரும்புகிறார்கள்: பொகோ ஹரம் இயக்கத்தை முஸ்லீம்கள் ஆதரித்தும், எதிர்த்தும் எழுதினாலும், கருத்துகளைத் தெரிவித்தாலும், அவர்களின் தீவிரவாதத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று படித்த முஸ்லீம்கள் கூறியுள்ளார்கள். அமெரிக்கா பொகோ ஹராம் இயக்கத்தலைவர்களை தீவிரவாதிகள் என்று அறிவித்துள்ளது[11]. ஐ.நா கிருத்துவர்களின் மீதான தாக்குதல்கள், மனித இனத்திற்கு எதிரான தாக்குதல் என்று அறிவித்துள்ளது[12]. முஸ்லீம் தலைவர்கள் கிருத்துவர்களின் வலியைப் புரிந்து கொள்கிறோம் என்கிறார்கள்[13]. ஆக மொத்தத்தில், மாரிவரும் உலகத்தில், மக்கள் அமைதியாகவே வாழ விரும்புகின்றனர்.

வேதபிரகாஷ்

23-06-2012


Explore posts in the same categories: 786, அடி உதை, அடிப்படைவாதம், அடிமை, அடையாளம், அரேபியா, அல் அர்பி, அல்லா, இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய சாதி, இஸ்லாமிய ஜாதி, இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய வங்கி, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமியர்களை கொல்லும் முறை, இஸ்லாம், குண்டு வெடிப்பது, குரூரம், கொலை, கொலை வழக்கு, சவுதி, சவூ‌தி அரே‌பியா, நீக்ரோ, நைஜீரியா

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: