சல்மான் ரஷ்டியை தொடர்ந்து தஸ்லிமா நஸ்ரின் – இருப்பினும் புத்தகம் வெளியிடப்பட்டது!
சல்மான் ரஷ்டியை தொடர்ந்து தஸ்லிமா நஸ்ரின் – இருப்பினும் புத்தகம் வெளியிடப்பட்டது!
தேர்தல் ஜுரத்தில் காங்கிரஸ் இவ்வாறு செய்கிறதா? காங்கிரஸ் முஸ்லீம்களை தாஜாவ் செய்ய வேண்டும் என்று பலவேலைகளை செய்து வருகிறது. ராஹுல் காந்தி குல்லா போட்டுக் கொண்டு, தாடி வைத்துக் கொண்டு, பிரச்சாரம் செய்தாகி விட்டது. சோனியாவும் பைஜாமா குர்தா போட்டுக் கொண்டு, பிரச்சாரம் செய்து சென்று விட்டார். முல்லாயம் சிங் யாதவோ, தில்லி இமாமை கொண்டு வந்து ஆதரவைக் காட்டி விட்டார். சும்மா இருக்குமா, காங்கிரஸ், சல்மான் ருஷ்டியை அடுத்து தஸ்லிமா நஸ்ரினைப் பிடித்துக் கொண்டு விட்டது. அவரது புத்தகத்திற்கு தடை என்று ஆரம்பித்து விட்டது. புரிந்து கொண்ட முஸ்லீம்கள், புத்தக கண்காட்சி திடலுக்கு வந்து எதிர்ப்புத் தெரிவித்தனர். நல்ல வேளை, காங்கிரஸ் ஆட்சி நடக்காதத்தால், அவர்கள் உள்ளே அனுமதிக்கப் படவில்லை.
புத்தகங்கள் எழுதிய எழுத்தாளர்களையும், புத்தகங்களையும் தடை செய்வதேன்? ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் சல்மான் ரஷ்டி கலந்துகொள்ள முடியாமல் போனதுபோன்றே, கொல்கத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரபல வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் புத்தக வெளியீட்டு விழா, சில அடிப்படைவாத முஸ்லீம்கள் மிரட்டலால் ரத்து செய்யப்பட்டுள்ளது[1]. “தி சாட்டானிக் வெர்சஸ்” (சாத்தானின் கவிதைகள்) என்ற புத்தகத்தை எழுதி ஆண்டுகள் பல ஆகிவிட்டபோதிலும், அதில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதாக கூறி, எழுத்தாளர் சல்மான் ரஷ்டியை இன்னமும் துரத்திக் கொண்டிருக்கிறார்கள் இஸ்லாமிய அமைப்பினர். அவர்களது எதிர்ப்பு காரணமாக அண்மையில் ஜெப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்துகொள்ள முடியாமல் தனது நிகழ்ச்சியையே ரத்து செய்தார் சல்மான்.
புத்தக வெளியீட்டு விழாவிற்கு மறுப்பு / தடை: இந்நிலையில், அவரைப்போன்றே இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்புக்கு ஆளானவர் பிரபல வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின். வங்கதேசத்திலிருந்து தப்பிவந்து இந்தியாவில் அடைக்கலமான தஸ்லிமா, இன்னமும் பகிரங்கமாக நடமாட முடியாமல் தலைமறைவு வாழ்க்கைதான் வாழ்ந்து வருகிறார். அவரது விசாவை புதுப்பிக்கக் கூட இந்திய அரசாங்கம் தயங்கியது. அதாவது, தேர்தல் ஜுரம் வந்து விட்டதால், கங்கிரஸுக்கு ஒனறும் புரியவில்லை. இந்நிலையில் அவர் எழுதிய “நிர்பஸான்” (தலைமறைவு வாழ்க்கை) என்ற அவரது 7 ஆவது அத்தியாய சுயசரிதை புத்தகத்தின் வெளியீட்டு விழா, கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 36வது புத்தக கண்காட்சியில் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து வந்த மிரட்டல்கள் மற்றும் கோரிக்கைகள் காரணமாக புத்தக வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது.
பிறகு எதிர்ப்புகளை மீறி, புத்தகம் வெளியிடப்பட்டது: “முதலில் அரங்கத்தில் நாற்காலிகள் இல்லை என்றார்கள், பிறகு வசதி இல்லை என்றார்கள்; பிறகு அடிப்படைவாதிகள் வெளியே எதிர்ப்பைத் தெரிவித்து நிற்கிறார்கள் என்றார்கள், கடைசியாக புத்தகம் அங்கு வெளியிட அனுமதி இல்லை என்றார்கள்”, என்று சிபானி முகர்ஜி என்ற புத்தக வெளியீட்டார் கூறினார்[2]. இத்தகவலை தஸ்லிமா, தனது ட்விட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இருந்தாலும், புத்தகம் வெளியீட்டாளர்களின் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்[3]. அதாவது, விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, மேடை / மண்டபத்திற்குவெளியே, அப்புத்தகம் வெளியிடப் பட்டது, அதனால், விற்பனைக்கும் வைக்கப் பட்டது[4]. நபரூன் பட்டாச்சார்யா என்ற எழுத்தாளர் மூலம், ஒரு புத்தக விற்பனைக் கூடத்தில் தஸ்லிமா நஸ்.ரீன் மற்றும் மனித உரிமைகள் ஆதரவாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது[5].
[2] “We had booked the auditorium but the organisers told us that it will not be available. Initially they told us that there are no chairs in the auditorium. On probing further they told us that that minority groups were protesting and had approached the city police over the release of the book. To prevent any disturbance in law and order we were asked to cancel the programme” said Shibani Mukherji, publisher, People’s Book Society, the publishers of the book series.
http://www.thehindu.com/news/states/other-states/article2850625.ece?homepage=true
[3] தினமலர், தஸ்லீமாநஸ்ரின்புத்தகம்வெளியிடஎதிர்ப்பு,, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=397272
[4] Earlier, the Guild asked the publisher not to release the book after protests were reported from fundamentalists. Taslima’s publisher, People’s Book Society (PBS), thereafter released the autobiography outside the auditorium as a mark of protest.
[5] The book was launched by author Nabarun Bhattacharya in the presence of Taslima’s supporters and human rights activists.
http://ibnlive.in.com/news/taslimas-book-launched-despite-protests/226224-40-100.html
குறிச்சொற்கள்: கொல்கொத்தா, சல்மான் ரஷ்டி, சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின், புத்தக கண்காட்சி, புத்தகம்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்