பெண்கள் உள்ளாடைகள் விற்கும் கடைகளில் இனிமேல் ஆண்கள் வேலை செய்யக் கூடாது – சவுதியில் ஆணை அமூலுக்கு வந்துள்ளது!

பெண்கள் உள்ளாடைகள் விற்கும் கடைகளில் இனிமேல் ஆண்கள் வேலை செய்யக் கூடாது – சவுதியில் ஆணை அமூலுக்கு வந்துள்ளது!

பெண்கள் உள்ளாடைகள் விற்கும் கடைகளில் இனிமேல் ஆண்கள் வேலை செய்யக் கூடாது: அரேபியாவில் உள்ள பெண்களுக்கான உள்ளாடைக் கடைகளில் இனி பெண்கள் மட்டும் தான் வேலை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அரசு

“I and many other women like me were always embarrassed to walk into lingerie shops because men were selling the goods,” said Saudi shopper Samar Mohammed. She said that in the past she often bought the wrong underwear “because I was sensitive about explaining what I wanted to a man”.

 உத்தரவிட்டுள்ளது[1]. இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால் பெண்கள் இனிமேல் வெட்கப்படாமல், கூச்சப்படாமல், தங்களுக்கு வேண்டிய உள்ளாடைகளை, தாங்கள் விரும்பிடயபடி, தேந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம்[2]. “நான் பலமுறை தவறுதலான அளவுள்ள கீழுள்ளாடைகளை / ஜட்டிகளை வாங்கி வந்துள்ளேன். ஏனெனில், எனக்கு எந்த அளவில் வேண்டும் என்று ஆண்-விற்பனையாளரிடம் விவரிக்கக் கூச்சமாக இருந்தது”, என்று ஒரு பெண்மணி கூறினார். அப்பெண்மணி சொலவது மிகவும் நியாயமாகப் படுகிறது.

சவூதி அரேபியாவில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன: அங்குள்ள பெண்கள் பர்தா அணியாமல் வெளியே செல்ல முடியாது; ஆண்கள்: துணையுடன் தான் கடைக்குப் போக வேண்டும்; கார்களை ஓட்டக் கூடாது; சூப்பர் மார்க்கெட்டுகள் / மால்களில் கேஷியராக பணி செய்யக் கூடாது[3]. இப்படி பற்பல தடைகள் உள்ளன. (இத்தடைகள் / கட்டுப்பாடுகள் மற்ற முஸ்லீம் அல்லாத பெண்களுக்கும் உண்டு). இந்நிலையில் பெண்களுக்கான உள்ளாடைகள் விற்பனை செய்யும் கடைகளில் இனி பெண்கள் மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது ஆண்கள் வேலை செய்ய முடியாது. இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

2006-2012: மத மற்றும் சட்டப் பிரச்சினைகள்: ஏற்கனவே கடந்த 2006ம் ஆண்டு இதுபோன்ற உத்தரவு பிறக்கப்பட்டும் அது அமலுக்கு வரவில்லை. ஏனெனில் அப்பொழுது பிரச்சினை, பெண்களை வேலைக்கு அனுப்பலாமா, கூடாதா

Saudi’s Arabia’s most senior cleric, Sheik Abdul-Aziz Al Sheikh, spoke out against the Labour Ministry’s decision in a recent sermon, saying it contradicts Islamic law. ‘The employment of women in stores that sell female apparel and a woman standing face to face with a man selling to him without modesty or shame can lead to wrongdoing, of which the burden of this will fall on the owners of the stores,’ he said. He also urged store owners to fear God and not compromise on taboo matters[4].

என்றிருந்தது. குறிப்பாக, மதத்தலைவர்கள், பெண்கள் இம்மாதிரியான கடைகளில் வேலை செய்யக் கூடாது என்று எச்சரித்ததுடன், பத்வாவும் கொடுத்திருந்தனர்[5]. அதுவும், இத்தகைய அலங்கார மற்றும் பெண்களின் உள்ளாடை கடைகளில், பெரிய மால்களில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து பொருட்களை வாங்க வரும் போது, பெண்கள் அவ்வாறு கடைகளில் பொருட்களை, ஆண்களுக்கு முன்பாக விற்பது  இஸ்லாமிற்கு எதிரானதாகக் கருதப் பட்டது. ஆனால் இந்த முறை அந்நாட்டு மன்னர் அப்துல்லா பிறப்பித்துள்ள உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது[6]. இதையடுத்து உள்ளாடைக் கடைகளில் பணிபுரிய சுமார் 28,000 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று அந்நாட்டு தொழிலாளர் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இப்பொழுது பெண்கள் 30% தான் வெளியில் வந்து வேலை செய்கின்றனர். இனிமேல் அவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இதனால், சவுதி பெண்கள் சிறிதளவு வெற்றிப் பெற்றுள்ளார்கள், அவர்கள் உரிமைகள் கேட்டு போராடும் நிலையில் வெற்றிப் பெற்றுள்ளார்கள்[7] என்றும் கருத்து உருவாகிறது[8].

விவேக் போன்றவர்கள் இனிமேல் சவுதியில் அனுமதிக்கப் படுவார்களா? விவேக் பெண்கள் உள்ளாடைகள் வைத்து ஜோக் அடிப்பது சகஜனமான “சப்ஜெக்டாக” உள்ளது. அதில் அவர் பி.எச்டியே செய்துள்ளார் எனலாம். அந்நிலையில், அத்தகைய நடிகர்கள் சவுதியில் அனுமதிக்கப் படுவார்களா? அங்கு அத்தகைய ஜோக்குகள் அனுமதிக்கப் படுமா? உள்ளாடை விளம்பரங்கள் செய்யப் படுமா? இந்தியாவில் மட்டும் எப்படி அத்தகைய அசிங்கமான, ஆபாசமான ஜோக்குகளை அனுமதிக்கிறார்கள்? வீட்டில் தொலைகாட்சியில், குடும்பத்துடன் பார்க்கும் போது, சங்கோஜம் இல்லாமல் ரசிக்கவா முடிகிறது?

வேதபிரகாஷ்

04-01-2012


Explore posts in the same categories: அச்சம், அழகிய இளம் பெண்கள், இமாம், இஸ்லாம், உலமாக்கள், உள்ளாடை, கற்பு, கீழுள்ளாடை, குவைத், சம்பளம், சரீயத், சரீயத் சட்டம், சவுதி, ஜட்டி, துபாய், நாணம், நிகாப், பயிர்ப்பு, பர்கா, பர்தா, பர்தா அணிவது, பள்ளிவாசல், பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், பாடி, பேன்டி, மடம், மத-அடிப்படைவாதம், முஸ்லீம் சட்டம், முஸ்லீம் பெண்கள் வேலை, முஸ்லீம் பெண்கள் வேலை செய்வது, முஸ்லீம்கள், மேல் உள்ளாடை, Uncategorized

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: