பெண் ஜிஹாதிகள் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பா சிறப்பு முகாம்களில் பயிற்சி!
பெண் ஜிஹாதிகள் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பா சிறப்பு முகாம்களில் பயிற்சி!
இந்தியாவில் தாக்குதல் நடத்த பெண்கள் பயங்கரவாதப் படை[1]: இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக 21 பெண்களைக் கொண்ட புதிய குழுவை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு உருவாக்கி வருவதாக இந்தியா ராணுவ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை (03-01-2012) தெரிவித்தன[2]. ஐந்தாண்டுகள் முந்தைய சமாச்சாரம் என்றாலும், மறுபடியும் இப்பொழுது ஏதோ புதிய செய்தி போல இப்பொழுது வருவது வியப்பே!
லஷ்கர்-இ-தொய்பா சிறப்பு முகாம்களில் பயிற்சி! இந்தக் குழுவுக்கு துக்தரீன்-இ-தொய்பா (இந்தியாவிற்கு துக்கத்தைத் தரப்போகிறார்கள் போல) எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் காஷ்மீரில், திவாலியா என்ற இடத்தில் (முசபராபாதிற்கு அருகில்) இந்தக் குழு இயங்கி வருவதாகவும் அதனை லஷ்கர் அமைப்பு பயிற்சி கொடுப்பதாகவும் தெரிய வருகிறது[3]. இங்கு பெண்களுக்காக பிரத்யேகமான தீவிரவாத பயிற்சிப் பள்ளி இருக்கிறது[4]. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கிவரும் 42 பயங்கரவாத பயிற்சி முகாம்களில் பெண்கள் பயிற்சி பெற்று வருவதாக ஏற்கெனவே கூறப்பட்டு வந்தது[5].
தற்கொலைப் படையில் பெண் ஜிஹாதிகள்: ஐந்தாண்டுகளுக்கு முன்பே, பாதுபாப்பு அதிகாரிகளுடன் போரிட்டு தாக்குதலில் இடுபட்டவர்களின் சடலங்களை பார்த்தபோது, இளம்பெண் இருப்பதைப் பார்த்து இந்த உண்மை தெரிய வந்தது. இங்கு பயங்கரவாதப் பயிற்சி பெறும் பெண்கள் வேறு நாடுகளின் வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவத் திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக யூரி என்ற எல்லைப் பகுதிக் சவழியாக இந்தியாவில் நுழைந்து தாக்குதல் நடத்தப் போவதாக தெரிய வந்துள்ளது[6]. பெண்களைக் கொண்ட பயங்கரவாதக் குழுவை உருவாக்க வேண்டும் என்பது லஷ்கர் அமைப்பின் உயர்நிலைத் தலைவர்கள் மற்றும் மும்பை பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய ஷகியூர் ரெஹ்மான லக்வியின் நீண்டகாலத் திட்டமாகும். பல முக்கியத் தளபதிகள் கொல்லப்பட்டுவிட்டதால், காஷ்மீர் பகுதியில் அந்த அமைப்புக்கு இப்போது போதிய வலிமை இல்லை என்றும் கூறப்படுகிறது. காஷ்மீரை இந்தியாவிலிருந்து விடுதலை செய்து பாகிஸ்தானுடன் இணைப்பது இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். இதைத் தவிர புல்வாமா முதலிய பகுதிகளில் உஸ்மான் பாய் அல்லது சோடா ரஹ்மான் என்பவனின் கீழ் இளைஞர்கள் தீவிரவாதத்திற்கு சேர்க்கப்பட்டு வருவதாக தெரிகிறது[7].
வேதபிரகாஷ்
04-01-2012
[3] தினமலர், லஷ்கர் -இ-தொய்பாவில் 21 பெண் தீவிராவதிகள், 04-01-2012, சென்னை,
குறிச்சொற்கள்: ஃபத்வா, அழகிய இளம் பெண்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீரம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், லவ் ஜிஹாத், ஹிஜாப்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்