பாகிஸ்தான் முஸ்லீம்கள் கோரிக்கை: பக்ரீத் அன்று மிருகவதை செய்யாதீர்கள்; இந்திய முஸ்லீம்கள் என்ன சொல்வார்கள்!

பாகிஸ்தான் முஸ்லீம்கள் கோரிக்கை: பக்ரீத் அன்று மிருகவதை செய்யாதீர்கள்; இந்திய முஸ்லீம்கள் என்ன சொல்வார்கள்!

பாகிஸ்தானில் பக்ரீத் மிருகவதை எதிர்த்துப் பிரச்சாரம்: பக்ரீத் பண்டிகை நெருங்குவதை ஒட்டி, பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் சிலர் மிருக வதையை எதிர்த்து தங்கள் பிரசாரத்தை துவக்கியுள்ளனர்[1]. பக்ரீத் பண்டிகையின் போது, ஒட்டகம், ஆடு, மாடு போன்ற மிருகங்களை அறுக்கும், “குர்பானி’ என்ற சடங்கு நிறைவேற்றப்படுவது வழக்கம். பாகிஸ்தானில் இது அதிக எண்ணிக்கையில் நடக்கும். கடந்தாண்டு, மிருக வதை தடுப்பு அமைப்பு ஒன்று, பாகிஸ்தானில் மிருக வதையைத் தடுக்க ஒரு பிரசாரத்தை மேற்கொண்டது.

மிதவாதி முஸ்லீம்களின் கோரிக்கை: முஸ்லீம்களில் தாராள மனப்பாங்குடன், திறந்த மனத்துடன், மிதவாதிகளாக் இருக்கும் முஸ்லீம்கள்  அத்தகைய கோரிக்கையை வைத்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் சிலர், மிருகங்களை அறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் கருத்துக்களை பிரசாரம் செய்து வருகின்றனர். பினா அகமது மற்றும் பரா கான்[2] இருவரும் இதுகுறித்து தங்கள் வலைப்பூவில்[3] எழுதியிருப்பதாவது: குர்பானியின் தத்துவம் நாம் அறிந்தது தான். நமது மதச் சடங்குகளை பண்பாடு, மத ரீதியில் அறிவியலோடு சேர்த்து நடத்த வேண்டும்.

கடவுளின் படைப்புகளான மிருகங்கள் கொல்லப்படுவதில் கொடூரம் இருக்கிறது, சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுகிறது: கடவுளின் படைப்புகளான இந்த மிருகங்கள் கொல்லப்படுவதில் கொடூரம் இருப்பதையும், சுற்றுச்சூழலுக்கு இதனால் எவ்வளவு கேடு ஏற்படுகிறது என்பதையும், மனித உடலுக்கு அசைவ உணவு எவ்வளவு கேடுகளைத் தருகிறது என்பதையும், அசைவ உணவு குறித்து இஸ்லாம் என்ன சொல்லியிருக்கிறது என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்; பரிசீலிக்க வேண்டும்[4].

வெள்ளம் போது செய்யப்பட்ட பிரச்சாரம் (2010): இந்தாண்டு 2010 ஒரு ஆடு வாங்குங்கள். அதை, “குர்பானி’ கொடுப்பதற்குப் பதிலாக, வெள்ளத்தில் தங்கள் கால்நடைகளை இழந்த கிராமத்தவருக்கு அதை தானமாகக் கொடுங்கள்.இவ்வாறு அவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்[5].

மாமிச உணவு கிடைக்கும் விதம், அதனால் வரும் உபாதைகள்: மாமிசத்தைத் தின்பதமனால் யயிற்றுகப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்பட்டு, ஈத் நாட்களில், மருத்துவ மனைகளில் முஸ்லீம்கள் அனுமதிக்கப் படுவதும் அதிகமாகிறது[6] அதுமட்டுமல்லாமல், பொதுவாக “ஹலால்” மாமிசம் முறையாக மிருக்லங்களைக் கொன்று எடுத்தாலும், பலமுறை, அம்மிருகங்கள் எப்படி கிடைக்கின்றன, எவ்வாறு உள்ளன என்று முஸ்லீம்களுக்குத் தெரிவதில்லை[7]. அதிகமாக மாமிசம் சாப்பிடுவதும் ஆரோக்யத்திற்கு நல்லதில்லை. அதனால் இருதயநோய்கள் வருவதற்கு அதிகமான சாத்தியக் கூறுகள் உள்ளன[8].

இந்திய முஸ்லீம்கள் மௌனம் சாதிப்பது ஏன்? பாகிஸ்தான் முஸ்லீம்கள் இப்படி பிரச்சாரம் முன்றாண்டுகளாக செய்து வருகின்ற நிலையில், இந்திய முஸ்லீம்கள் அமைதியாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. வலைப்பூக்களில் / இணைத்தளங்களில் தமது சக்தியைத் திரட்டி, இரவு-பகலாக மற்ற விஷயங்களுக்கு பிரச்சாரம் செய்து வரும் முஸ்லீம்கள் இதைப் பற்றி மூச்சுக்கூட விடவில்லை!

வேதபிரகாஷ்

04-11-2011


[1]தினமலர், மிருகவதையைஎதிர்த்துபாகிஸ்தானில்பிரசாரம்,  அக்டோபர் 31,2011,02:59 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=340779

[2] அவர்களது முழு கட்டுரையை ஆங்கிலத்தில் இங்கே படிக்கலாம்: http://goatmilkblog.com/2010/11/15/muslims-please-spare-the-animals-this-eid/

[3] www.goatmilkblog.com;  அதுமட்டுமல்லாது ஆதரித்து-எதிர்த்து கொடுக்கப்படுள்ள கருத்துகளையும் படித்தறியலாம்.

[4] “Muslims have a duty both religiously and culturally to evolve with scientific and moral progress. The meaning behind Eid-ul-Azha will always stand, but in today’s world, we must look at things practically,” wrote Bina Ahmed and Farah Khan on goatmilkblog.com, a virtual hangout for Asian Muslims settled in the West.

http://zeenews.india.com/news/south-asia/pak-liberals-oppose-sacrifice-of-animals-on-eid_738929.html

[5] Last year, an animal activist organisation, which is now almost defunct, had run a campaign asking people to “save” an animal instead of “sacrificing it” after the devastating floods that left over a million animals dead in Pakistan. “Buy a goat – and this year, instead of sacrificing it, send it back to a village to replace what was lost and help people back onto their feet. Goats can provide an ongoing income for families through the sale of milk, ghee, meat and kids, as well as supplement their own diet and agriculture,” was the appeal from the Karachi-based organisation.  www.pakistaniat.com

[6] In many parts of the world, the festivities of Eid-ul-Azha bring along with it an increase in illness.  For example, according to the Daily Star newspaper in Bangladesh, the number of individuals being admitted to hospitals increases by about 10 percent during this time of year brought on by a gluttonous consumption of meat.  http://newshopper.sulekha.com/meat-intake-during-eid-makes-dhaka-medicos-see-red_news_1127916.htm

[7] While it is true that some halal slaughterhouses try their best to ensure that the animals they slaughter are raised according to Islamic teachings, many are unaware of the origins of the animals that they sell to consumers, focusing instead only on the manner in which the animal is killed.  

(http://www.islamonline.net/servlet/Satellite?c=Article_C&pagename=Zone-English-News/NWELayout&cid=1178724246679)

[8] Eating too much eat is not good for your health either.  Studies upon studies have revealed to us that eating red meat in excess increases our risks of developing cardiovascular diseases and developing cancer. We are only about five percent of the world’s population yet we grow and kill an astonishing 10 billion animals a year – more than 15 percent of the world’s total. http://www.nytimes.com/2008/01/27/weekinreview/27bittman.html.

Advertisements
Explore posts in the same categories: ஈத், ஒட்டக பால், கசாப்புக்காரத்தனம், காஃபிர், குரான், குரூரம், கொலை, சித்திரவதை, சுத்தம், சுன்னி, சூஃபி, ஜிஹாத், தியாகப் பலி, தியாகம், தூய்மை, பக்ரீத், பலி, பலிக்கடா, பாகிஸ்தான், ரத்தம், வங்காள தேசம், வதை, ஷியா, ஹராம், ஹலால்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

9 பின்னூட்டங்கள் மேல் “பாகிஸ்தான் முஸ்லீம்கள் கோரிக்கை: பக்ரீத் அன்று மிருகவதை செய்யாதீர்கள்; இந்திய முஸ்லீம்கள் என்ன சொல்வார்கள்!”

  1. S. Ezhilan Says:

    இதியாவில் உள்ள முஸ்லீம்கள், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ளவர்கள், ஏன் தமிழ் தெரிந்தவர்கள் கூட ஆதரிக்க மாட்டார்கள். இன்றைய செய்திகளை இன்னும் படிக்கவில்லை போலும்:பக்ரீத் பண்டிகை: உளுந்தூர்பேட்டை சந்தையில் ஒரே நாளில் ரூ.5 …
    Oneindia Tamil – ‎௨ நவ., ௨௦௧௧‎
    உளுந்தூர்பேட்டை: பக்ரீத் பண்டிகை கொண்டாட ஆடு வாங்க வந்தவர்களால் உளுந்தூர்பேட்டை சந்தை களைகட்டியது. ஒரே நாளில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனையானது. …

    பக்ரீத் பண்டிகையையொட்டி ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
    ௯டல் – ‎௨ நவ., ௨௦௧௧‎
    பக்ரீத் பண்டிகையையொட்டி உளுந்தூர்பேட்டையில் ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை காய்கறி, …
    உளுந்தூர்பேட்டை சந்தைக்கு ஆடுகள் வந்து குவிந்தன பக்ரீத் …
    தினத் தந்தி – ‎௨ நவ., ௨௦௧௧‎
    பக்ரீத் பண்டிகையையொட்டி உளுந்தூர்பேட்டையில் ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை காய்கறி, …

  2. vedaprakash Says:

    பக்ரீத் பண்டிகை: குர்பானிக்கு நெல்லை,தூத்துக்குடி, குமரிக்கு ஒட்டகங்கள் வந்தன
    ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 6, 2011, 10:44 [IST]

    http://tamil.oneindia.in/art-culture/essays/2011/nine-camels-arrive-from-andhra-bakrid-qurbani-aid0175.html

    நெல்லை: பக்ரீத் பண்டிகையன்று குர்பானி வழங்குவதற்காக ஆந்திராவில் இருந்து நெல்லை, தூத்துக்குடி,குமரி மாவட்ட பகுதிகளுக்கு 9 ஒட்டகங்கள் வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டன

    இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகையும் ஒன்றாகும். தியாகத் திருநாளான பக்ரிக் பண்டிகையன்று அவர்கள் சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம்.அதன் பின் அவரவர் வசதிக்கு ஏற்ப ஆடு, மாடு, ஓட்டகம் போன்றவற்றை பலியிட்டு, அந்த இறைச்சியை 3 பங்குகளாக பிரித்து ஒன்றை வீட்டிற்கும், 2வது பங்கை குடும்பத்தார், உறவினர்களுக்கும், 3வது பங்கை ஏழைகளுக்கும் வழங்குவது வழக்கம்.

    இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை வரும் 7ம்தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்காக நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட இஸ்லாமியர்கள் குர்பானி வழங்க ஆந்திரா மாநிலம், கடப்பா ஓட்டக சந்தையில் 9 ஒட்டகங்களை வாங்கியுள்ளனர். சுமார் 150 முதல் 200கிலோ வரை எடை கொண்ட இந்த ஒட்டகங்கள் ஒவ்வொன்றும் தலா 40 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாயாகும். அந்த 9 ஒட்டங்களும் வாகனம் மூலம் தென் மாவட்டங்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த ஒட்டகங்கள் நெல்லைமாவட்டம், மேலப்பாளையம் -3 ஏர்வாடி – 2, களக்காடு -1, செங்கோட்டை -1, குமரிமாவட்டம் திங்கள்சந்தை – 1, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்ணம்-1என தனித்தனியா பிரித்து அந்தந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

    • S. Ezhilan Says:

      மூன்று பங்காகப் பிரித்துக் கொடுப்பார்கள் என்றால், முஸ்லீம்களுக்கு மட்டும் கொடுப்பார்களா அல்லது முஸ்லீம் அல்லாதவர்களுக்கும் கொடுப்பாகளா? அப்படி முஸ்லீம் அல்லாதவர்களுக்குக் கொடுத்தால் அல்லா ஏற்றுக் கொள்வாரா? குரானில் அனுமதிக்கப் பட்டுள்ளதா?

  3. vedaprakash Says:

    பக்ரீத் பண்டிகை: உளுந்தூர்பேட்டை சந்தையில் ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
    வியாழக்கிழமை, நவம்பர் 3, 2011, 11:44 [IST]

    http://tamil.oneindia.in/news/2011/11/03/goat-sales-increased-ulundurpet-weekly-market-aid0180.html

    உளுந்தூர்பேட்டை: பக்ரீத் பண்டிகை கொண்டாட ஆடு வாங்க வந்தவர்களால் உளுந்தூர்பேட்டை சந்தை களைகட்டியது. ஒரே நாளில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனையானது.

    உலகமெங்கும் பக்ரீத் பண்டிகை முகமதியர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையன்று ஏழைகள், உறவினர், நண்பர்களுக்கு ஆகியோருடன் சேர்ந்து குர்பானி வெட்டப்படுகிறது. இதற்காக வெளிநாடுகளில் ஓட்டகங்கள் வெட்டப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் ஆடுகளை வெட்டுகின்றனர். அதனால் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையின் போது ஆடுகளின் விற்பனை அதிகரிக்கும்.

    இந்த நிலையில் உளுந்தூர்பேட்டையி்ல் வாரந்தோறும் புதன்கிழமைகளில் கூடும் ஆட்டு சந்தையில் நேற்று ஆடு விற்பனை சுறுசுறுப்பாக நடந்தது. உளுந்தூர்பேட்டை சந்தைக்கு விழுப்புரம் மாவட்ட பகுதியில் இருந்து மட்டுமின்றி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரி வேலூர், திருச்சி என தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஆடுகள் கொண்டு வரப்படுகிறது.

    வரும் 7ம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால் இந்த வாரம் ஆடு விற்பனையாளர்கள் மற்றும் வாங்குவோர் அதிகளவில் சந்தைக்கு வந்திருந்தனர். ஆடுகளின் வளர்ச்சி மற்றும் கறியை பொறுத்து 7,000 முதல் 12,000 ரூபாய் வரை விற்பனையாகியது.

    காலை 7 மணியில் இருந்து மாலை வரை நடந்த சந்தையில் 30,000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது. சுமார் 5 கோடி ரூபாய் வியாபாரம் நடந்ததாக ஆடு விற்பனையாளர்கள் தெரிவித்தனர். ஆடுகளை மக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றதால் ஆட்டு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்குறிப்பு: கலைஞர் / சன் டிவி-செனல்களிலும் இதைப் பற்றி அதிகமாகவே வர்ணிக்கப்பட்டது.

  4. S. Ezhilan Says:

    ஒரு நாளைக்கு மாமிச உணவை தவிர்க்கவும் என்று சாது வாஸ்வானி என்பவர் விளம்பரம் செய்வார், அறிவுரை கூறுவார். இந்திய அரசாங்கம் மஹாவீர் ஜெயந்தி, புத்த பூர்ணிமா என்று கூட விடுமுறை விருகிறார்கள். ஆனால், அவர்களின் போதனைகள் படி உயிர்க்கொலை, பலி, கொலை, மாமிசத்தை அறுத்தல், ரத்தத்தைப் பிடித்தல், பாகங்களகப் பிரித்தல், கழிவுகளைக் கொட்டுதல் போன்ற செயல்கள் நடக்கத்தானே செய்கின்றன? இப்படி முரண்பட்ட கொண்டாட்டங்களுக்கு எப்படி செக்யூலரிஸ அரசாங்கள் விடுமுறை அளிக்கிறது? ஒருவேளை இப்பண்டிககள் ஒரே நாளில் வந்தால் என்னாகும்? அல்லது ஜெயின்கள், பௌத்தர்கள் எப்படி இதைப் பொறுத்துக் கொள்வார்கள்?

    • S. Devadoss Says:

      மிருக நேயம் அல்லது மிருகங்களிடத்தில் நேயம் இல்லாதவர்கள் தாம், மனித நேயம் என்றெல்லாம் பேசி, ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

      அப்படி மனித நேயம் இருந்தால், ஜிஹாத் பெயரில் அப்பாவி மக்களை கொண்டு வைத்துக் கொல்வார்களா?

      பிறகு மிருகங்களை கொல்லாதே என்றல் சும்மாவா இருப்பார்கள்?

  5. Grace Says:

    quite beneficial material, all in all I imagine this is worthy of a book mark, thanks a lot


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: