பாகிஸ்தானைத்தான் ஆதரிப்போம் என்று சொல்லும் ஆப்கானிஸ்தானிற்கு இந்தியா கோடிகளைக் கொட்டி அழுவதேன்?

பாகிஸ்தானைத்தான் ஆதரிப்போம் என்று சொல்லும் ஆப்கானிஸ்தானிற்கு இந்தியா கோடிகளைக் கொட்டி அழுவதேன்?

முஸ்லீம் முஸ்லீமைத்தான் ஆதரிப்பேன் என்றால்,  அவர்கள் தனியாக இருந்து விடலாமே: உண்மையைச் சொன்னால் முஸ்லீமுக்கு பொத்துக் கொண்டு கோபம் வரும், ஆனால் முஸ்லீம் என்றாலும், அடிப்படைவாதி என்றாலும், ஏன் தீவிரவாதி என்றே குறிப்பிட்டாலும், முஸ்லீம் என்றால், முஸ்லீமுக்குத்தான் ஆதரவு கொடுப்போம் என்று சொல்வது, முன்னர் அலி சகோதரர்கள், “ஒரு மிகவும் கேடுகெட்ட மோசனான ஆள் முஸ்லீமாக இருந்தால், அவனுக்கு மரியாதை செய்வோமே தவிர, காந்தியை மகாத்மா என்று மதிக்க மாட்டோம், ஏனென்றால், அவர் ஒரு காஃபிர்”,  என்று பொருள்பட சொன்னதை இங்கு நினைவு கூர்தல் வேண்டும்[1]. அதை நன்றாக அறிந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர், அலி சகோதரர்களை தனது வீட்டில் விருந்தினர்களாகத் தங்க வைத்துக் கொண்டபோது, “இந்தியா வேண்டுமானால், காந்தியை பெருமையாக மதிக்கலாம், ஆனால் இந்த காந்தி இவர்களது ஜேபிக்குள் அடக்கம்”, என்றார். முஹமது அலியின் பேச்சைக் கேட்டு அம்பேத்கரே வியந்து அதனைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்[2].

காஃபிர்-மோமின், “தூய்மையானவன்” – “தூய்மையில்லாதவன்” என்ற எண்ணம் இருக்கும் வரையில் முஸ்லீம் முஸ்லீமாகத்தான் இருப்பான்: அலி சகோதரர்களை காந்தி தனது சகோதரர்களைப் போல பாவித்தார். ஆனால், முஸ்லீம் அடிப்படைவாத சிந்தனைகளால், அலி சகோதரர்கள் அதனை ஏற்றுக் கொள்ளா முடியவில்லை. “காந்தியின் குணாதியம் (நடத்தை, பண்பு) எந்த அளவிற்கு தூய்மையாக இருந்தாலும், எனது மதத்தின் (இஸ்லாம்) பார்வையில் ஒரு குணாதியமே இல்லாத ஒரு முசல்மானை விட தாழ்ந்தவராகத்தான் தோன்றுகிறார்”. அதாவது இந்து “தூய்மையில்லாதவன்” ஆனால் முஸ்லீம் “தூய்மையானவன்” என்று சொல்வது “காஃபிர்” மற்றும் “மோமின்” என்று பிரித்து பாகுபாடு காட்டிப் பேசுவதுதான். அமினாபாத், லக்னௌவில் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, முஹம்மது அலியை, என்ன காந்தியைப் பற்றி இப்படி சொல்லியிருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, அவர் அளித்த பதில் இதோ[3] – “ஆமாம், என்னுடைய மதம் மற்றும் நம்பிக்கையின்படி, ஒரு விபச்சாரத்தனமுடைய மற்றும் வீழ்ந்த (மிக மோசமான / கேடுகெட்ட) முசல்மான்தான் காந்தியைவிட உயர்ந்தவன்”! அதுமட்டமல்ல தாங்கள் உயர்ந்த முஸ்லீம்கள் என்பதனால், காந்தியுடன் செரமாட்டோம், மேடையில் சமமாக உட்காரமாட்டோம் என்றெல்லாம் கூட வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள், நடந்து காட்டியிருக்கிறார்கள். காந்தி தன்னுடைய எழுத்துகளில் அதனை தக்கேயுரிய பாணியில் பதிவு செய்துள்ளார்[4].

முஸ்லீம் மனதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்: அம்மாதிரித்தான் தேவையில்லாமல் இந்தியா ஆப்கானிஸ்தானிற்கு பலவழிகளில் கோடிகளில் பணம், மற்ற உதவிகளை செய்து வருகிறது. ஆனால், அங்கு வேலை செய்து உதவும் இந்தியர்களைக் கொன்று வருவதுதான் முஸ்லீம்களாகிய ஆப்கானிஸ்தானியர் செய்து வருகின்றனர். தாலிபான்கள் இருந்து மற்ற உலக மகா பிரத்தி பெற்ற ஜிஹாதிகள், இஸ்லாமிய தீவிரவாதிகள் முதலியோர் உண்மையில் ஆப்கானிஸ்தானை தங்களது கட்டுக்குள் வைத்திருக்கின்றனர். இந்நிலையில் தான் அந்த நன்றி கெட்ட பொம்மை பிரதம மந்திரி கூறுகிறார், “போர் என்று வந்து விட்டால், நாங்கள் பாகிஸ்தானிற்குத்தான் ஆதரவு அளிப்போம்”, வீராப்பாக சொல்லியிருக்கிறார். இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ அல்லது வேறு எந்த நாடுமோ, பாகிஸ்தானை தாக்கினால், போர் தொடுத்தால், நாங்கள் எங்கள் சகோதரன் பாகிஸ்தானைத்தான் ஆதரிப்போம் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்ஸாய் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஸின்ஹுவா செய்தி நிறுவனம் கர்ஸாயின் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. சீனாவின் துரோகத்தனத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

பாக்.மீது படையெடுத்தால்: இந்தியா-அமெரிக்காவிற்கு கர்சாய் எச்சரிக்கை[5]: தலிபான்களிடம் சிக்கி சீரழிந்த ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்த அமெரிக்கப் படையினர், ஆப்கானிஸ்தானை மையமாக வைத்து தலிபான்களை வேட்டையாடி வருகின்றனர். கூடவே பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்தபடி ஆப்கானிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்தி வரும் அல் கொய்தா உள்ளிட்ட தீவிரவாதிகளுடனும் மோதி வருகின்றன. சீரழிந்து போய் விட்ட ஆப்கானிஸ்தானை கட்டி எழுப்பும் முக்கியப் பணியில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தானை தத்தெடுத்துக் கொண்டது போல பல ஆயிரம் கோடி பணத்தை இறைத்து ஆப்கானிஸ்தானில் பல வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது இந்தியா[6]. இந்த நிலையில் இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ அல்லது வேறு நாடோ பாகிஸ்தானை தாக்கினால், போர் தொடுத்தால் நாங்கள் பாகிஸ்தானுக்கு முழு ஆதரவாக இருப்போம் என ஆப்கன் அதிபர் ஹமீத் கர்ஸாய் அதிரடியாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அல்லது வேறு நாடுகளுடன் சண்டை மூளக் கூடாது என்றே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் ஒரு வேளை நாளையே பாகிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்தால் நாங்கள் பாகிஸ்தானுக்குத்தான் ஆதரவாக இருப்போம். காரணம், பாகிஸ்தான் எங்களது சகோதரன்.

பாகிஸ்தானை தாக்கினால் பதிலடி கொடுபோம் : ஹமித் கர்சாய்[7] ! பாகிஸ்தான் மீது யாராவது போர் தொடுத்தால் பாகிஸ்தான் மக்கள் ஆப்கானிஸ்தானின் உதவியைத்தான் நாடுவார்கள். அப்போது பாகிஸ்தானியர்களுக்கு உதவ, கை கொடுக்க நாங்கள் தயாராக இருப்போம். பாகிஸ்தானின் சகோதரர்கள் நாங்கள். 1979-80ல் ரஷ்யா எங்களை ஆக்கிரமித்தபோது பாகிஸ்தானியர்கள்தான் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். எங்களை சகோதரர்களாக கருதி எங்களுக்கு உதவினர் பாகிஸ்தானியர். தங்களது உள்ளங்களை மட்டுமல்லாமல் இல்லங்களையும் கொடுத்தவர்கள் அவர்கள். எங்களுக்கு உதவிய அவர்களுக்கு நாங்கள் துரோகம் இழைக்க முடியாது, ஏமாற்ற முடியாது. எனவே அமெரிக்காவோ, இந்தியாவோ அல்லது வேறு எந்த நாடோ பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால் எங்களது முழு ஆதரவும் பாகிஸ்தானுக்குத்தான் இருக்கும்[8].

பாகிஸ்தான் எங்களுக்கு துயரத்தை அளித்தாலும் அவர்கள் தாம் எங்களுக்கு சகோதரர்கள்: எங்களுக்கு பாகிஸ்தான் அரசு நிர்வாகம் பல துயரங்களை இழைத்துள்ளது. நான் அதை மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் எங்களது சகோதரர்கள். அதை நாங்கள் மறக்க மாட்டோம். இந்த நேரத்தில் ஆப்கானிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்தும் நான் விளக்க விரும்புகிறேன். இதுதிடீரென நடந்த ஒப்பந்தம் அல்ல, பல காலமாகவே பேசப்பட்டு வந்த ஒன்றுதான். இதற்கும், பாகிஸ்தானுடனான எங்களது உறவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார் கர்ஸாய். கர்ஸாயின் இந்தக் கருத்து அமெரிக்காவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹக்கானி தீவிரவாதக் குழு மீது அமெரிக்கா கடும் ஆத்திரத்தில் உள்ளது. ஆனால் அந்த குழு மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் மறுத்து விட்டது. இதற்காக அமெரிக்காவுடன் நேரடி மோதலிலும் ஈடுபட அது தயாராக உள்ளது. இதையடுத்து ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தான் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் அமெரிக்கா படைகளைக் குவித்துள்ளது. அதேபோல பாகிஸ்தானும் தனது பகுதியில் படைகளைக் குவித்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள பதட்டமான நிலையில் கர்ஸாயின் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.

பாம்புகளை தோட்டத்தில் வைத்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது[9]:  பாம்புகள் என்றால் அவற்றின் தன்மை என்ன என்பது தெரிந்துதான் இருக்கும், அதிலும் கடிக்கும் பாம்புகள் எனும்போது, விளையாட்டாக இருக்கும் பாம்புகள் இல்லை. “பின் தோட்டத்தில் நச்சுப் பாம்புகளை வைத்துக் கொண்டு, அதிலும் அவை உங்களது அடுத்த வீட்டுக் காரர்களை கடிக்கும் நிலையில் இருக்கும்போது, நாம் சும்மா இருக்க முடியாது”, என்று ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தானிற்கு விஜயம் செய்தபோது வெளிப்படையாகக் குறிப்பிட்டார்[10]. இருப்பினு பாம்புகளை அவர்கள் வைத்துள்\னர்[11]. பாம்புகள் என்று குறிப்பிட்டது ஜிஹாதிகள் தாம், தீவுரவாதிகள் தாம், பயங்கரவாதிகள் தாம். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லையில், ஹக்கானி குழுவினர் மீது அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன[12]. கடந்த சில நாட்களுக்குமுன் பாகிஸ்தான் வந்திருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், ஹக்கானி குழுவினரை ஒழிக்க, பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என கூறியிருந்தார்[13]. நட்பு எனும்போது, நல்ல உறவு எனும்போது, அதில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும், நீ முட்டாள் மாதிரி எங்கலுக்கு உதவி செய்து கொண்டேயிரு, அவர்கள் விமானங்களைக் கடத்தினாலும் சரி, நமது எஞ்சினியர்களைக் கொன்றாலும் சரி, எல்லைகள் கடந்த தீவிரவாதத்திற்கு ஆட்களை அனுப்பினாலும் சரி, இந்தியா உதவி செய்து கொண்டியிருக்கிறது என்றால், அதில் முட்டாள்தனம் இல்லை, ஏதோ சதி இருக்கிறது எனலாம்.

வேதபிரகாஷ்

26-10-2011


[1] “However pure Mr. Gandhi’s character may be, he must appear to me from the point of religion inferior to any Mussalman he be without character”

“Yes, according to my religion and creed, I do hold an adulterous and a fallen Mussalman to be better than Mr Gandhi”

[2] B. R. Ambedkar, Thoughts on Pakistan, Thacker & Co., Bombay, 1941, p.302.

[3] Mahathama Gandhi, Collected works, Volume.XXIII, Appendix, 13, p.569.

[4] Mahathama Gandhi, Collected works, Volume XXVI, p.214.

[8] மேலே விளக்கியபடி, மோமின், மோமின் கூட சேர்ந்து காஃபிருக்கு எதிராகத்தான் ஜிஹாத்-போரை நடத்துவோம் என்று வெளிப்படையாக பேசும் முஸ்லீம்களுடம், ஏன் இன்னும் தாஜா செய்து கொண்டிருக்கிறார்கள்?

[10] US secretary of state Hillary Clinton on Friday warned Pakistan that it cannot keep “snakes in your backyard and expect them to only bite your neighbours”, a not so veiled reference to terror havens in its tribal areas. Then she pressed Islamabad to crackdown on Afghan insurgent Haqqani network holed up there.

Explore posts in the same categories: அலி, அலி சகோதரர்கள், அழுக்கு, கிலாபத், கிலாபத் இயக்கம், சுத்தம், தீட்டு, தீண்டாமை, தூய்மை

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

2 பின்னூட்டங்கள் மேல் “பாகிஸ்தானைத்தான் ஆதரிப்போம் என்று சொல்லும் ஆப்கானிஸ்தானிற்கு இந்தியா கோடிகளைக் கொட்டி அழுவதேன்?”

  1. S. Ezhilan Says:

    இந்தியர்களது பணத்தை கோடிகளில் காந்தி அள்ளிக் கொடுத்தாரம் பாகிஸ்தானுக்கு முன்பு. அதனால் “காந்தி கணக்கில்” என்று கிண்டலாக பேசப் பட்டு வருகிறது. அதேப் போலத்தான் வெட்கங்கெட்ட “செக்யூலார்” அரசு, நம்மை கொல்லும் ஆப்கானிஸ்தானுக்கு பணம் கொடுக்கிறது. தலிபான்கள் கோடிகளில் / மில்லியன்களில் சம்பாதித்து வருவதால், இந்தியா அவர்களுக்கு பணத்தைக் கொடுப்பது நிறுத்தப் பட வேண்டும். ஆப்கானிஸ்தானுக்கு இந்தொயர்களை அனுப்புவதும் நிறுத்தப் பட வேண்டும். காந்தஹார் விமானக் கடத்தலை, ஒரு புது மணமகனைக் கழுத்தறுத்துக் கொன்ற பாவிகளை எப்படி இந்தியர்கள் மறந்து விட்டனர் என்று தெரியவில்லை.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: