ஒரு உயிர் இழப்பு: காஷ்மீரில் கலாட்டா – தீவிரவாதிகளால் பல லட்ச மக்கள் கொல்லப்பட்டனர், ஆனால் கவலைப்படவில்லை!

ஒரு உயிர் இழப்பு: காஷ்மீரில் கலாட்டா – தீவிரவாதிகளால் பல லட்ச மக்கள் கொல்லப்பட்டனர், ஆனால் கவலைப்படவில்லை!

காஷ்மீரில் மக்கள் கொல்லப்படுவது: காஷ்மீரில் மக்களுக்கு உயிர் போவது, அப்பாவி மக்கள் கொல்லப்படுவது, குண்டுகள் வெடிப்பது முதலியவை ஒன்றும் புதியதான நிகழ்ச்சிகளோ, செய்திகளோ இல்லை. இருப்பினும், இப்பொழுது ஒருவர் மர்மமான முறையில் இறந்திருப்பதைப் பற்றி அதிகமாகவே அரசியல் கட்சிகள் கலாட்டா செய்து வருகின்றன. ஊடகங்களுக்கோ தேவையில்ல, வெறும் வாயிற்கு அவல் கிடைத்தக் கதை தான். தேசிய மாநாட்டுக்கட்சி தொண்டர் ஒருவர் போலீஸ் காவலில் இறந்த சம்பவத்தில் புதிய திருப்பமாக, தன் தந்தை மரணம் குறித்து முதல்வர் ஓமர் பொய் சொல்வதாக, இறந்தவரின் மகன் தெரிவித்துள்ளார்[1]. இவரைத் தவிர, மற்றொரு கண்ணால் பார்த்ததாக அப்துல் சலாம் ரேஷி[2] என்பவர் சைது முஹம்மது யூசுப், ஒமரின் வீட்டிற்குள் செல்லும் போது நன்றாகத்தான் இருந்தார். வெளியே வரும்போது, பேசமுடியாமல் வாந்தி எடுக்கும் நிலையில் இருந்தார்[3]. அந்நிலயில் தான் போலீஸார் அவரைப் பிடித்துச் சென்றதாகக் கூறுகிறார்.

காஷ்மீர் சட்டமேலவை பதவிக்கு லஞ்சம்: தேசிய மாநாட்டு கட்சித்தொண்டர் சையது யூசுப் (61). அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், சட்டமேலவை உறுப்பினர் பதவி வாங்கித்தருவதாக கூறி, இரண்டு பேரிடம் ரூ. 1 கோடியே 18 லட்சம் பெற்றுள்ளார். இவர் லஞ்ச வழக்கில் போலீஸார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி போலீஸ் காவலில் யூசுப் மர்மமான முறையில் இறந்தார். இச்சம்பவம் காஷ்மீர் சட்டசபையில் கடும் அமளியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஓமர் அப்துல்லா, கட்சித்தொண்டர் மரணத்திற்கு தான் பொறுப்பாக முடியாது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், யூசுப் மகன் தலிப் உசேன் கூறுகையில், தனது தந்தையை போலீஸ் காவலில் வைத்து அடித்து உதைத்ததாகவும், ஓமருக்கு தெரிந்தே இது நடந்துள்ளதாகவும், இதுகுறித்து அவர் பொய் சொல்வதாகவும் தெரிவித்தார்.

மகனுடைய ஆட்சியைக் கவிழ்க்க சதி – கூறுவது அப்பா!: காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியின் ஆட்சியைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக அக்கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான ஃபருக் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்[4]. இந்த விஷயத்தில் பெரிய சதி இருப்பதாக எதிர்க்கட்சிகளான மக்கள் ஜனநாயகக் கட்சி, பாஜக ஆகியவை குற்றம்சாட்டின. ஓமர் அப்துல்லா பதவி விலக வேண்டுமெனவும் அக்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.  இந்நிலையில் ஸ்ரீநகரில் வியாழக்கிழமை தேசிய மாநாட்டுக் கட்சி எம்.எல்.ஏ.க்கள், மாநில அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டபின் ஃபரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறியது: எங்கள் கட்சி எதையுமே மறைக்கவில்லை. யூசுப் இறந்தது தொடர்பாக நீதி விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் உண்மை வெளியே வரும்.

தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நீடிப்பது எதிர்க்கட்சிகள் விரும்பவில்லையாம்: காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நீடிப்பதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. அரசியல் ஆதாயத்துக்காகவும், எப்படியாவது மாநிலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர். எந்த விஷயத்தை வைத்தாவது எங்களை குற்றம்சாட்ட வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் முக்கிய நோக்கம். மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோதும், காங்கிரûஸ தவிர்த்து விட்டு எங்கள் கட்சியை மட்டும் குறிவைத்து மக்கள் ஜனநாயகக் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. எங்கள் கட்சியில் நேர்மையான முறையில்தான் பதவிகளுக்கும், தேர்தலில் போட்டியிடவும் நபர்களைத் தேர்வு செய்கிறோம். இங்கு வந்திருக்கும் எம்.எல்.ஏ., அமைச்சர்களைக் கேட்டு இதனை நீங்கள் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

ராஜினாமா செய்ய முடியாது: காஷ்மீரில், தேசிய மாநாட்டுக் கட்சித் தொண்டர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தனது பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்[5].காஷ்மீர் மாநிலத்தில், தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த சயித் முகமது யூசுப், 61, போலீஸ் காவலில் உயிரிழந்தார். இது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, முதல்வர் ஒமர் அப்துல்லா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களிடம் ஒமர் அப்துல்லா கூறுகையில், இந்த விவகாரத்தில் நான் தவறு ஏதும் செய்யவில்லை. எனவே, பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை, நீதி விசாரணையில் உண்மைகள் விரைவில் வெளிவரும், என தெரிவித்தார்.

ஒமர் பதவி கொடுக்க பணம் வாங்கினாரா? அப்துல் சலாம் ரேஷி[6], “யூசுப் என்னை ஒமருக்கு அறிமுகப்படுத்தினார்[7]. பணம் வாங்கிக் கொண்டு பதவி கொடுப்பதாகக் கூறினர். ஆனால், கொடுக்காததால் பணத்தைத் திரும்பக் கேட்டேன். முழுப்பணத்தைக் கொடுக்காததால் விடாமல் கேட்டேன்”. ஒருவேளை, ஒமருக்குண்டான தொடர்பு தெரிந்து விட்டது என்று, யூசுப் கொல்லப்பட்டாரா என்ற கேள்வியும் எழுகிறது. இதேப்போலத்தான், அமர்சிங் காங்கிரஸ்காரர்களுடன் சேர்ந்து கொண்டு, பீஜேபி எம்.பிக்களுக்கு பணம் கொடுத்து, கட்சி மாற முயன்றுள்ளனர், ஆக காங்கிரஸ் இப்படி ஒரு வழியைக் கடைபிடித்து, எல்லா மாநிலங்களிலும் கோடிகளை அள்ளுகிறது போலும்!


[2] Abdul Salam Reshi, a key witness in the alleged killing of National Conference activist Syed Mohammad Yousuf, has broken his silence claiming that the latter was hale and hearty when he was taken to another room in the chief minister’s residence but was vomiting and unable to speak when he was being taken to the crime branch headquarters in a police vehicle.

[6] “I was introduced to Farooq Abdullah and Omar Abdullah by Yusuf. He came to my residence with the chief minister in a chopper. He also took me to meet Farooq Abdullah at his Jammu residence,” Reshi said in Srinagar. Reshi said his relations with Yusuf turned sour, after he demanded return of his money.  “When I went to meet Omar sahib in July, he made sure I will get back some money. I was given Rs 10 lakh after a month and another Rs 10 lakh later. It was only after Mohammed Bhat of Ganderbal complained that he paid .`85 lakh to Yusuf for a ministerial berth did the Chief Minister decide to confront Yusuf,” he added.


Explore posts in the same categories: இந்தியா, இஸ்லாம், உறவினர், கல்லெரிந்து கலவரம், கல்வீச்சு, குண்டு வெடிப்பது, கூட்டணி சித்தாந்தம், கூட்டணி தர்மம், கொலை, கொலை வழக்கு, ஜம்மு-காஷ்மீர், ஜிஹாத், தன்னாட்சி, முன்னாள் தலைவர், முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு வங்கி, ருபையா சையத், வன்முறை, விமர்சனம்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

2 பின்னூட்டங்கள் மேல் “ஒரு உயிர் இழப்பு: காஷ்மீரில் கலாட்டா – தீவிரவாதிகளால் பல லட்ச மக்கள் கொல்லப்பட்டனர், ஆனால் கவலைப்படவில்லை!”

  1. vignaani Says:

    Omar continues in power with congress alliance. So much in the Assembly and on the streets; but congress is not saying anything. Centre is mum as usual. MMS will not lose sleep for such trivial things. That is India.

  2. F. W. Victor Daniel Says:

    மதத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டே, தீவிரவாதத்தை ஜிஹாதி என்ற பெயரில் உபயோகித்து, மக்களைக் கொன்று வரும் இவர்களுக்கு, மற்ற காரியங்களைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை. ஜிஹாதி கண்களைக் கட்டிய பிறகு, எப்படி அவர்களிடம் மற்ற விஷயங்களைப் பேச முடியும்? தாங்கள் செய்வது தான் சரி, அல்லா பார்த்துக் கொள்வார் என்ற நிலையில் உள்ள அவர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது. ஒமர் அப்துல்லா வெறும் முழுக்க மழிக்கப் பட்டு மென்மையான முஸ்லீம் போன்று தோற்றமளிக்கப்படும் முஸ்லீம். மெஹ்பூபா, முழுக்க-முழுக்க ஊறிப்போன ஜிஹாதி மற்றும் இந்திய-விரோதி. அவர்கள் பேசுவதிலிருந்தே, அவர்கள் ஏதோ இந்தியாவிலேயே இல்லாதது போல பேசுவதிலிருந்தே அவர்களது மனப்பாங்கைக் கண்டு பிடிக்கலாம். இவர்களிடம் அமைதி பேச்சு பேசுவது அவர்களுடன் சேர்ந்து செயல்படுவதற்குச் சமம்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: