முன்னாள் தமிழக சிமி தலைவர் அயல்நாட்டிலிருந்து பணம் பெற்றது, கைது, சிறை, பின்னணி!

முன்னாள் தமிழக சிமி தலைவர் அயல்நாட்டிலிருந்து பணம் பெற்றது, கைது, சிறை, பின்னணி!

 

முன்னாள் தமிழக சிமி தலைவர் கைது: கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி பிணையில்லாத கைது வாரண்ட் பிறப்பித்தபோது[1], வெளிநாட்டிலிருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாக, மனிதநேய மக்கள் கட்சித்தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான ஜவாஹிருல்லா வரவில்லை. பிறகு அடுத்த நாள் சென்னை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மேஜிஸ்திரேட் கோர்ட் முன்னிலையில் ஆஜர் படுத்தப் பட்டார்[2]. ஏற்கெனவே குற்றாப்[ பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது[3]. வெ‌ளிநா‌ட்டி‌‌ல் இரு‌ந்து பண‌ம் பெ‌ற்றது தொட‌ர்பாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவுக்கு ஓரா‌ண்டு ‌சிறை‌த் ‌த‌ண்டனையு‌ம், 10 ஆ‌யிர‌ம் ரூபா‌ய் அபராதமு‌ம் ‌‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. சி.பி.ஐ. காவ‌ல்துறை‌யி‌ன் லஞ்ச ஒழிப்பு பிரிவு சார்பில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில தலைவர் எம்.எஸ்.ஜவாஹிருல்லா, மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர் அலி மற்றும் எச்.சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோர் மீது சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்ட‌ன் ‌நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு தொடரப்பட்டது. பிறகு இந்த ஆணை ரத்து செய்யப்பட்டது[4].

அல்-உம்மா, சிமி தலைவர்கள் உருமாறிய விதம்[5]: இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் அவ்வப்பொழுது, பெயர்களை மாற்றிக் கொண்டு, புதிய அவதாரங்களுடன் செயல்பட்டு வருகின்றன. சிமி தடை செய்யப்பட்டப் பிறகு, அதனுடைய தலைவர்கள், உறுப்பினர்களை தங்களுடைய அடையாளங்களை, அத்தகைய புதிய இயக்கங்கள், நிறுவனங்களுடன் சேர்த்து மாற்றிக் கொண்டனர். மனித நீதி பாசறை என்ற நிருவனத்தை முன்னாள் சிமி தலைவர் எம். குலாம் அஹ்மது ஆரம்பித்தார். அவர் அதிலிருந்து நீக்கப்பட்டபோது, தாஹ்ருல் இஸ்லாமிக் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.  இன்னொரு சிமித் தலைவர் எம்.எஸ். ஜவாஹிருல்லா முஸ்லீம் முன்னேற்றாக் கழகம் என்பதின் தலைவரானார். மற்றோருவர் எஸ்.எம்.பாக்கர் தௌஹீத் ஜமாத்தின் தலைவராக உருமாறினார். வங்கிக் கணக்குகள் முடக்கப் பர்டுவதால், கண்காணிக்கப் படுவதால், அவைகளும் மாற்றப் படுகின்றன. பணம் கொடுப்பவர்களும் வேறு வடிவத்தில், உருவத்தில் கொடுக்கிறார்கள். ஆனால், அததகைய பணம், நிதியுதவி தீவிரவாதத்திற்கு உபயோகப் படுத்தப்படும் போதுதான், மனித நேயம் என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டாலும், உண்மை வெளிப்படத்தான் செய்கிறது.

 

அனுமதியின்றி அயல்நாடுகளிலிருந்து கோடிகள் பெற்றது: கடந்த 15.12.1997 முதல் 20.6.2000 வரை இவர்கள் செய்த குற்றம் தொடர்பாக இந்த வழக்கு தொடரப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து ரூ.1 கோடியே 54 லட்சத்து 88 ஆயிரத்து 508 வசூலித்ததாகவும், இதற்கு முறையாக மத்திய அரசிடமோ, ரிசர்வ் வங்கியிடமோ அனுமதி பெறவில்லை என்றும் மேற்கண்ட 5 பேர் மீதும் வெளிநாட்டு பணம் முதலீட்டு ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் குற்றம்சா‌ற்‌றி வழக்கு போடப்பட்டது[6]. “கோயம்புத்தூர் முஸ்லிம் நிவாரண நிதி” என்ற பெயரில், சட்டத்திற்குப் புறம்பாக, திட்டமிட்டு பணம் பெற்று “பேங்க் ஆப் இந்தியா” சென்னை கிளையில் பணத்தைப் போட்டு வைத்ததை கண்டுபிடித்தது[7]. இந்த வழக்கில் சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் ‌நீ‌திப‌தி பி.மோகன்தாஸ் தீர்ப்பு வழங்கினார்[8]. அந்த தீர்ப்பில் ஜவாஹிருல்லாவுக்கும், ஹைதர் அலிக்கும் தலா ஓரா‌ண்டு ‌சிறை‌த் தண்டனையும், சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் ‌சிறை‌த் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்[9].

வழக்குகள் நிலுவையில் உள்ளபோது வெற்றிப் பெற்று எம்.எல்.,ஏ ஆனது: மற்ற கட்சிக்காரர்கள் என்றால், உடனே அவர் அந்த சவழக்கில் சிக்கியுள்ளார் என்றெல்லாம் பட்டியல் இல்ல்டுக்ல் காட்டும். ஆனால், இவர்கள் விஷயத்தில் அவர்களது பின்னணி கொடுக்கப்படவில்லை. மேலும் இவர்கள் அனைவருக்கும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் அபராதமும், ஜவாஹிருல்லா, ஹைதர் அலி ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரமும், சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோருக்கு தலா ரூ.40 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது) விதித்து தீர்ப்பு வழங்கினார். தண்டனை பெற்றவர்களில் எம்.எச்.ஜவாஹிருல்லா மனிதநேய மக்கள் கட்சியின் ராமநாதபுரம் தொகுதி ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் எ‌ன்பது ‌நினை‌வி‌ல்‌ கொ‌ள்ள‌த்த‌க்கது. தண்டனை பெற்றவர்கள் 30 நாட்களுக்குள் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய கோர்ட்டில் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் தண்டனை பெற்றவர்கள் அனைவரும் தலா இரு நபர் ஜாமீனில் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர்.


[2] June 14 (PTI) Rameswaram MLA MH Jawahirullah and four others appeared in a court today, a day after non-bailable warrant (NBW) was issued against them in connection with a case relating to alleged violation of Foreign Contributions Regulation Act. Additional Chief Metropolitan Magistrate, Egmore, R Killivalavan had issued the warrants against MMK President Jawahirullah and four others yesterday in a case in which they allegedly collected Rs two crore in foreign contributions in the name of ”Coimbatore Muslim Relief Fund,” in violation of laws.

[7] CBI had registered a case against Jawahirullah, representing Ramanathapuram Assembly Constituency, S Hyder Ali, H Sayed Nizar Ahmed, G M Shiek and Nalla Mohmed Kalanjim, all authorised signatories of ‘Coimbatore Muslim Relief Fund’, alleging that they entered into a criminal conspiracy to form an association to accept foreign contributions without prior permission and registration with the central government between 1997 and 2000.

Explore posts in the same categories: அதிமுக, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், இஸ்லாமிய வங்கி, கலவரம், கல்லடி ஜிஹாத், காஃபிர், குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, சிமி, சிறுபான்மையினர், ஜமாத், ஜமாயத்-உல்-உலமா

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

3 பின்னூட்டங்கள் மேல் “முன்னாள் தமிழக சிமி தலைவர் அயல்நாட்டிலிருந்து பணம் பெற்றது, கைது, சிறை, பின்னணி!”

  1. tmmk thondan Says:

    கோவையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வழங்கிய விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பு குறித்து தமுமுக(மனிதநேய மக்கள் கட்சி) தலைமையின் விளக்கம்

    கோவையில் 1997 நவம்பர்-டிசம்பரில் வரலாறு காணாத கலவரம் நடைபெற்றது. 19 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் சூறையாடப்பட்டன. மக்கள் இவ்வாறு பரிதவித்து நின்ற நிலையில் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சைய்யது நிஸார் அஹ்மது, நல்லமுஹம்மது களஞ்சியம் மற்றும் தற்போது ததஜ அபிமானியாக இருக்கும் ஜி.எம். ஷேக் ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து கோயம்புத்தூர் நிவாரண நிதியைத் தொடங்கினார்கள்.

    இந்த நிவாரண நிதிக்கு தமிழகத்தில் உள்ள பொது மக்களிடமிருந்தும் வெளி நாட்டில் பணியாற்றும் இந்தியர்களிடமிருந்தும் மட்டுமே நிதிப் பெறப்பட்டது. இந்த நிதிகள் அனைத்தும் சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் கோயம்புத்தூர் நிவாரண நிதி என்ற வங்கிக் கணக்கில் போடப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு காசோலை யாக வழங்கப்பட்டது.

    இந்த சூழலில் மத்தியில் வாஜ்பேயி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் உள்நோக்கத்துடன் சி.பி.ஐ. மற்றும் வருமான வரித் துறை மூலமாக தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர் அலி மற்றும் கோயம்புத்தூர் முஸ்லிம் நிவாரண நிதியின் நிர்வாகிகளான சைய்யது நிஸார் அஹ்மது, நல்லமுஹம்மது களஞ்சியம் மற்றும் ஜி.எம். ஷேக் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    முதலில் வருமான வரித் துறை மிக விரிவாக விசாரணைகளை மேற்கொண்டது. கோவையில் வருமான வரித்துறை அதிகாரிகள் பல நாட்கள் முகாமிட்டு நிவாரண நிதியைப் பெற்றுக் கொண்டவர்கள் அனைவரையும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்கள். கோவை முஸ்லிம் நிவாரண நிதியிலிருந்து தொகையைப் பெற்றவர்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதற்கான சான்றுகள் (எப்.ஐ.ஆர். புகைப்படங்கள் முதலியவை), கோகுலகிருஷ்ணன் ஆணையம் பரிந்துரையின் அடிப்படையில் அரசு நிவாரணம் அவர்களுக்கு கிடைத்ததா? கோவை முஸ்லிம் நிவாரண நிதி வழங்கிய காசோலை பாதிக்கப்பட்டவர்களின் வங்கியில் போடப்பட்டதற்கான அத்தாட்சி என்று விலாவாரியாக விசாரணை நடத்தினார்கள். இறுதியில் கோவை முஸ்லிம் நிவாரண நிதி மிக நேர்மையாகவும் நாணயமாகவும் இயங்கி உள்ளது என்றும், இதன் நிதி சரியான முறையில் வினியோகிக்கப்பட்டுள்ளது என்றும் வருமான வரித் துறை ஆணையாளர் தனது முடிவை அறிவித்தார்.

    இதே நேரத்தில் வெளிநாட்டி லிருந்து எப்.சி.ஆர்.ஏ. என்னும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்றுச் சட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசின் முன் அனுமதி பெறாமல் வெளிநாட்டு நிதியைப் பெற்றோம் என்று சி.பி.ஐ. என்னும் மத்திய புலனாய்வுத் துறை, தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி, சைய்யது நிஸார் அஹ்மது, நல்லமுஹம்மது களஞ்சியம் மற்றும் ஜி.எம். ஷேக் ஆகியோர் மீது சென்னை எழும்பூர் கூடுதல் மெட்ரோபோலிடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக் கப்பட்டது. இந்த வழக்கில் சிபிஐ குற்றப் பத்திரிகையில், பண மோசடி செய்ததாக எவ்விதக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வழக்கில் தான் சென்ற செப்டம்பர் 30 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    கோவையில் 1997 நவம்பர் டிசம்பரில் நடைபெற்ற வரலாறு காணாத கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சைய்யது நிஸார் அஹ்மது, நல்ல முஹம்மது களஞ்சியம் மற்றும் ஜி.எம். ஷேக் ஆகியோர் கோவை முஸ்லிம் நிவாரண நிதி என்னும் அறக்கட்டளையைத் தொடங்கினார்கள். இந்த அறக்கட்டளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமையகத்தின் மேற்பார்வை முகவரியில் இயங்கியது. இதனையே குற்றமாகக் கருதி பேராசிரியர்.எம்.ஹெச்.ஜவாஹிருல்லா அவர்களுக்கும், சகோதரர் ஹைதர் அலி அவர்களுக்கும் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோவை முஸ்லிம் நிதியை நடத்திய மூவரும் மத்திய அரசின் முன் அனுமதி பெறாமல் வெளிநாட்டு நிதியைப் பெற்றார்கள் என்ற ஒரே குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்களுக்கு இரண்டாண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    கோவை முஸ்லிம் நிவாரண நிதி திரட்டிய பணம் தனிப்பட்ட பெயரில் எந்தவொரு வங்கியிலும் முதலீடு செய்யப்படவில்லை. கோவை முஸ்லிம் நிவாரண நிதி சார்பாக திரட்டப்பட்ட தொகை அனைத்தும் அந்த நிதியின் பெயரிலேயே வங்கியில் போடப்பட்டு அதே வங்கியின் காசோலை மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத வேறுபாடின்றி அனைவருக்கும் வினியோகிக்கப்பட்டது. வருமான வரி தீர்பாணையம் இது குறித்த தனது தீர்ப்பில் (In the Income-Tax Appellate Tribunal Bench B Chennai I.T.A. No.4(Mds) இந்த நிதி மிக சரியான முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினி யோகிக்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. வசூலிக்கப்பட்ட மொத்த தொகையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக வினியோகிக்கப்பட்டது.

    மிகப்பெரும் அளவில் கலவரத் தால் பாதிக்கப்பட்டு மக்கள் பரிதவித்து நின்ற நிலையில் சைய்யது நிஸார் அஹ்மது, நல்ல முஹம்மது களஞ்சியம் மற்றும் ஜி.எம். ஷேக் ஆகியோர் கோவை முஸ்லிம் நிவாரண நிதி என்னும் அறக்கட்டளையைத் தொடங்கினார்கள். பரிதவித்து நிற்கும் மக்களுக்கு உதவி செய்வதில் முழு அக்கறை செலுத்தியதால் கவனக்குறைவாக மத்திய அரசின் முன்அனுமதியை அவர்கள் பெறவில்லை. எந்தவொரு வெளிநாட்டு அரசிடமிருந்தோ நபர்களிடமிருந்தோ நேரடியாக எந்தவொரு வெளிநாட்டு நிதியும் கோயம்புத்தூர் முஸ்லிம் நிதி பெறவில்லை என்றும் வெளிநாட்டில் பணியாற்றும் தமிழ்நாட்டவர் மட்டுமே நிதிகளை அனுப்பினார்கள் என்றும் இதனை வெளிநாட்டு நிதி என்று சொல்வது தவறு என்றும் இவ்வழக்கில் அவர்கள் தரப்பு வழக்குறைஞர் தெளிவாக வாதாடினார் என்பது கவனிக்கத்தக்கது.

    எழும்பூர் கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை நீதிபதி, மேல்முறையீடு செய்வதற்காக நிறுத்தி வைத்தார். அடுத்து செசன்ஸ் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும். மக்களுக்கு நன்மை செய்ததைத் தவிர வேறு எதுவும் இதில் இல்லை. விரைவில் அனைவரும் வெற்றி பெற இறைவனை பிரார்த்திப்போம்.

    இந்த உண்மைகளுக்கு மாறாக யாராவது அவதூறு பரப்பினால், மறுமையில் வல்ல ரஹ்மானின் முன்பு வழக்கு தொடுப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    http://www.tmmk.in/index.php?option=com_content&view=article&id=1454:2011-10-04-19-26-16&catid=43:tmmk-annoncement&Itemid=161

  2. F. W. Victor Daniel Says:

    மதத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டே, தீவிரவாதத்தை ஜிஹாதி என்ற பெயரில் உபயோகித்து, மக்களைக் கொன்று வரும் இவர்களுக்கு, மற்ற காரியங்களைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை. ஜிஹாதி கண்களைக் கட்டிய பிறகு, எப்படி அவர்களிடம் மற்ற விஷயங்களைப் பேச முடியும்? தாங்கள் செய்வது தான் சரி, அல்லா பார்த்துக் கொள்வார் என்ற நிலையில் உள்ள அவர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது. முழுக்க மழிக்கப் பட்டு மென்மையான முஸ்லீம் போன்று தோற்றமளிக்கப்படும் முஸ்லீம் மற்றும் முழுக்க-முழுக்க ஊறிப்போன ஜிஹாதி போன்று தாடி-குல்லா வைத்துக் கொண்டு “அமைதி” பேசும் முஸ்லீம் இருவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று அவர்கள் தாம் சொல்ல வேண்டும். தீவிரவாதம் மூலம் மக்களைக் கொல்ல வேண்டும், அதற்கு ஜிஹாத் உபயோகிக்கப் படவேண்டும், ஜிஹாதில் மக்களை அதாவது “காபிர்கள்” என்று அடையாளங்காணப்பட்டுக் கொன்றால், அல்லா நிச்சயமாக சொர்க்கத்தை அளிப்பார் என்று சொல்லி மூளைசலவை செய்தது, அதற்கேற்றபடி ஜிஹாத்களை உருவாக்கியது, குண்டுகளை வைத்து காபிர்களைக் கொல்லலாம் என்று முடிவு செய்தது, அதற்கேற்றார் போல ஏற்பாடுகளை செய்தது, பணத்தைத் திரட்டியது, கொடுத்தது, குண்டுகள் தயாரிக்கத் தேவையானப் பொருட்களை வாங்கியது, குண்டுகள் தயாரிக்கப்பட்டது, குண்டுகள் வெடிக்கப்பட்டது, மக்கள் / காபிர்கள் கொல்லப்பட்டது, அதை நியாயப் படுத்த அச்சடிக்கப் பட்ட குறும்புத்தகங்கள், நோட்டீசுகள் விநியோகம் செய்தது……………….முதலியன உண்மையில்லையா? அப்படியென்றால் உண்மை-பொய் என்பதற்குக் கூட இஸ்லாத்தில் முஸ்லீம்களுக்கு தனியான உண்மை காபிர்களுக்கு தனியான உண்மை என்ரு விளக்கம் அளிப்பார்களா? இந்தியர்களைப் போல வாழ வேண்டும், அமைதி வேண்டும் என்றிருந்தால், ஏன் ஜிஹாதி பெயரில் மறுபடி-மறுபடி குண்டுகள் வெடிக்கின்றன?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: