ஒசாமா பின் லேடன் சி.ஐ.ஏ.வினால் கொல்லப்பட்டு விட்டான்!
ஒசாமா பின் லேடன் சி.ஐ.ஏ.வினால் கொல்லப்பட்டு விட்டான்!
ஒசாமா பின் லேடன் சி.ஐ.ஏ.வினால் கொல்லப்பட்டு விட்டான்! ஒசாமா பின் லேடன் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வினால் அபபோதாபாதில் உள்ள ஒரு மாளிகையில் / மான்சனில் நடந்த சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டான் என்று, 02-05-2011 அன்று காலையிலிருந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ இந்த நடவடிக்கைக்கு உதவியது என்று சொல்லப் படுகிறது. ஆனால், அதே நேரத்தில் பின் விளைவுகளுக்கு பயந்து, பாகிஸ்தான் தனக்கு ஒன்றும் தெரியாதது போலக் காட்டிக் கொள்ள முடிவெடுத்துள்ளது[1]. அமெரிக்கர்கள் ஒசாமா இறந்தது கேட்டு மகிழ்ச்சியடைந்து கொண்டாடுகின்றனர்[2]. ஒசாமா கொல்லப்பட்டதினால், பின்விளைவுகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப் பட்டுள்ளது[3].
அல்-ஜஸீரா வழக்கம் போல மறுத்துள்ளது[4]: அல்-ஜஸீரா தொலைக்காட்சி செனல் (Al Jazeera.), ஆரம்பித்திலிருந்து, ஒசாமா பின் லேடனுடைய பதிவு செய்யப் பட்ட நாடாக்களை ஒலிபரப்பி வருகின்றது. இன்று காலை வரை அச்செனல், ஒசாமா கொல்லப்பட்டதைக் குறித்து மறுத்துள்ளது. ஒசாமா லேடனைப் போல பலர் உள்ளதாகவும், அமெரிக்கா அத்தகைய நபர்களுல் ஒருவனைக் கொன்று, ஒசாமா லேடனைக் கொன்றுவிட்டதாக செய்தியைப் பரப்புகிறது என்று கூறியுள்ளது.
ஒசாமா பின் லேடனின் உடல் கடலுக்கு அடியில் புதைக்கப் பட்டு விட்டது[5]:அமெரிக்க அரசு ஒசாமா லேடன் முஸ்லீம் மரபுப் படி அடக்கம் செய்யப் படுவான் என்று கூறியுள்ளது. அதே நேரத்தில், சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனின் உடல் கடலுக்கு அடியில் புதைக்கப் பட்டு விட்டது என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன[6]. ஆனால், எங்கே எவ்வாறு என்ற தகவல்களை அவ்வாறு சொன்ன அமெரிக்க அதிகாரி கூறவில்லையாம்! அமெரிக்கப் பத்திரிக்கைகளில் சில, இதை மறுத்துள்ளன[7].
மனைவி-மகன்கள் கொல்லப்பட்டதைப் பற்றி அதிகாரபூர்மற்ற செய்திகள்: அதுமட்டுமல்லாது, அமெரிக்க ஊடகங்கள், பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பின்லேடனுடன் சேர்த்து அவரது இரண்டு மகன்கள், 2 மனைவிகளும் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அந்த மாளிகையைத் தாக்க நான்கு அமெரிக்க ஹெலிகாப்டர்கள் பங்கு கொண்டன. ஒசாமா பின் லேடன் நேரிடையாக சண்டையிட்டான் என்று அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.அமெரிக்கப் படைகளுடன் நேரடியாக பின்லேடனே சண்டை போட்டதாக அமெரிக்க உளவுத்தகவல்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் மகன்கள் கொல்லப்பட் தகவல் மட்டும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதேசமயம், மனைவியர் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படவில்லை. அப்போத்தாபாத் என்ற இடத்தில் தங்கியிருந்த பின்லேடனை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வளைத்த அமெரிக்க விசேஷப் படையினர் சரமாரியாக சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவத்தில் பின்லேடன் கொல்லப்பட்டதை மட்டும் இதுவரை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் லேடனின் இரு மகன்கள், 2 மனைவிகளும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒசாமாவின் மனைவிகள்-மகன்கள் கைது: ஒசாமாவிற்கு நான்கு மனைவிகள் 23 மகன்கள் இருப்பதாக சொல்லப் படுகிறது[8]. இருப்பினும் இரண்டு மனைகள் மற்றும் ஆறு மகன்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க / பாகிஸ்தானிய உருது[9] செய்திகள் கூறுகின்றன[10]. நடந்த சண்டையில், ஒரு மகன் மட்டும் கொல்லப் பட்டிருக்கலாம். மற்றவரை பத்திரமாக கைது செய்யப்பட்டு, அமெரிக்கர்கள் தங்கள் பாதுகாப்பில் வைத்துள்ளனர்.
வேதபிரகாஷ்
02-05-2011
[2] http://timesofindia.indiatimes.com/world/us/Americans-erupt-in-joy-at-Bin-Laden-death/articleshow/8140563.cms
[3] http://timesofindia.indiatimes.com/world/us/US-warns-of-al-Qaida-reprisals-over-bin-Laden/articleshow/8140416.cms
[5] http://www.latimes.com/news/nationworld/nation/la-naw-bin-laden-buried-20110501,0,7069834.story?track=rss
குறிச்சொற்கள்: அபபோதாபாத், அமெரிக்க உளவு நிறுவனம், அல்-ஜஸீரா, உடல், உடல் அடக்கம், ஒசாமா பின் லேடன், சி.ஐ.ஏ
You can comment below, or link to this permanent URL from your own site.
மே 19, 2011 இல் 5:21 முப
பாகிஸ்தானில், இத்தனை ஆண்டுகளாக எப்படி யாருக்கும் தெரியாமல் இருந்தான் என்பது, மிகப்பெரிய நம்பமுடியாத அதிசயம். அதுவும், இத்தனை ஜிஹாதிகள் வேலை செய்து வரும் இஸ்லாமிய நாட்டில் அவன் சந்தோஷமாக, குடும்பம் சகிதம் இருந்து வந்தது, அரசின் ஆதரவு இல்லாமல் இருந்திருக்க முடியாது. ஆகையால், இதன் மூலம் பாகிஸ்தானின் சுயரூபம் வெளிப்பட்டு விட்டது.
ஜூலை 6, 2011 இல் 10:55 முப
no one can kill the lion of islam.u people are blind and i think the cia basterds are blaming and lying to people. but no one could go to sun. if any one means show us. king osama is the sun. and the king to protect islam from american devils. i oppose them who says islam is a terrorism religion. i can show terrorist in even christianity, and in hindus. we people are not terrorist. we people fight for our justice and royality and for truth with out any weapons.
sarfaraz………………………….
ஜூலை 6, 2011 இல் 10:58 முப
no one can kill the lion of islam.u people are blind and i think the cia basterds are blaming and lying to people. but no one could go to sun. if any one means show us. king osama is the sun. and the king to protect islam from american devils. i oppose them who says islam is a terrorism religion. i can show terrorist in even christianity, and in hindus. we people are not terrorist. we people fight for our justice and royality and for truth with out any weapons.
we obey and belive in only allah and his nabi muhammed (sal)
and we are the slave to allah. and i am the soldier of my nabi(sal)
we agree in LAILAHALLAHUMUHAMADURRASULLULAH.
SARFARAZ. ……………….SLAVE OF ALLAH..