கோழிக்கோடில் இரு முஸ்லீம் அமைப்புகள் மோதல்: குண்டு வெடிப்பு!
கோழிக்கோடில் இரு முஸ்லீம் அமைப்புகள் மோதல்: குண்டு வெடிப்பு:
கோழிக்கோடு குண்டு வெடிப்பு[1] கலவரத்தை தூண்ட காங்கிரஸ் போட்ட சதி அச்சுதானந்தன்: கேரள சட்டமன்ற தேர்தலுக்கு முன் கலவரத்தை தூண்ட காங்கிரஸ் கூட்டணி போட்ட சதி திட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக கோழிக்கோடு குண்டு வெடிப்பு குறி்த்து முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார். கேரளாவைப் பொறுத்த வரையில் செக்யூலரிஸம் எல்லாம் பேசினாலும், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸக் கட்சிகள் என்றுமே முஸ்லீம் மற்றும் கிருத்துவ அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்தே தேர்தலில் வெற்றிப் பெற்று வருகின்றன. அத்ற்கேற்றாற் போல அந்த மதவாதிகளுக்கு சலுகைகலையும் செய்து வருகின்றன. முஸ்லீம்களுக்கு தனி மலப்புரம் என்ற மாவட்டத்தை உருவாக்கிக் கொடுத்ததே ஆரம்பம் எனலாம்.
இரு முஸ்லீம் அமைப்புகள் மோதல்: குண்டு வெடிப்பு: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் நாதாபுரத்தை அடுத்த நரிக்காட்டேரி பகுதியில் கடந்த சில தினங்களாக முஸ்லீம் அமைப்பை சேர்ந்த இரு
இந்திய தேசிய முஸ்லீம் லீக்கைச் சேர்ந்த 5 பேர் குண்டு வெடித்ததில் இறந்தனர், மூவர் காயமடைந்தனர். இரு முஸ்லீம் அமைப்புகளுக்குள் நடந்த பூசலில் குண்டு வெடிப்பு நடந்ததாக சொல்லப் படுகிறது. |
பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு வந்தது. இதில் அப்பகுதியில் உள்ள வீடுகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் நரிக்காட்டேரி பகுதியில் தனியாக உள்ள ஒரு வீட்டில் பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. பயங்கர சத்தத்தால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கு வந்து பார்த்தனர். அப்போது அந்த வீ்ட்டுக்கு வெளியே 3 பேர் உடல் சிதறி பிணமாகி கிடந்தனர். 9 பேர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர். உடனே அவர்களை கோழிக்கோட்டில் உள்ள பல்வேறுதனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களில் 2 பேர் நேற்று காலை இறந்தனர். ரபீக், சமீர், ரியாஸ், ஷபீர், சபீர் ஆகியோரே இறந்தவர்கள். மேலும் 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் 3 பேர் நிலைமை கவலைகிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இங்கு முஸ்லீம்களுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுவது சகஜமாக இருந்து வருகிறது[2].
இந்திய தேசிய முஸ்லீம் லீக்கைச் சேர்ந்தவர்கள்: குண்டு வெடிப்பு குறித்து தகவல் அறிந்ததும் கோழிக்கோடு எஸ்பி நீலேஷ்குமார் மற்றும் நாதாபுரம் போலீசார்
Another theory was that bombs might have gone off while being taken out to a safe location. The blast had occurred near the house of a local IUML leader. Several bombs and bomb-making ingredients were recovered in extensive raids in the region on Sunday (27-02-2011). |
சென்று விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர்கள் அனைவரும் முஸ்லீம் லீக் கட்சியை சேர்நதவர்கள் என்பதும், வீட்டில் வெடிகுண்டு தயாரித்து வெளியே கொண்டு செல்ல முயன்றபோது குண்டுகள் வெடித்ததும் தெரிய வந்தது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து 500 ரூபாய் கட்டு ஒன்றையும், ரூ. 9 லட்சத்துகான காசோலையும், ஏராளமான சி்ம் கார்டுகளையும் போலீசார் கைப்பற்றினர். மேலும், அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வெடிப்பொருட்களையும் கைப்பற்றினர்.
கலவரத்தை தூண்ட காங்கிரஸ் போட்ட சதி அச்சுதானந்தன்: குண்டு வெடிப்பு நடந்த நரிக்காட்டேரியில் பதற்றம் நிலவுவதால் அப்பகுதியில் ஏராளமான போலீசார்
Police said the victims were IUML activists and the blast was suspected to have occurred while crude steel bombs were being made in an uninhabited area at Nadapuram, which has been tense due to violence between the CPM and IUML, a Congress ally in Kerala[3]. |
குவிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு குறித்து கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறுகையில், சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக கேரளாவில் கலவரத்தை தூண்ட காங்கிரஸ் கூட்டணி போட்ட சதி திட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.[4] இதற்காக எதிர்கட்சி தலைவர் உம்மன்சாண்டி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். அதற்குள் இந்திய தேசிய முஸ்லீம் லீக், குண்டு வெடுப்பு மற்றும் இறப்பு முதலியவற்றிற்கும்,
Meanwhile, the IUML leadership denied the involvement of party men in the incident. District secretary M.C. Mayin Haji said those killed and injured in the incident were not members of the party and had hardly any relation with party members. He affirmed that the party would initiate strong action if the police found any solid evidence proving the involvement of League workers[5]. |
தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லியுள்ளது. அவ்வாறு தம்மாட்கள் ஈடுபட்டிருந்தால், அதற்கு தகுந்தா ஆதாரங்களும் கிடைத்தால், கடுமையான போலீஸ் நடவடிக்கை எடுக்கப் படும் என்று மாவட்ட காரியதரிசி மயின் ஹாஜி என்பவர் சொல்லியிருக்கிறார். இவ்வாறு சொல்வதே வேடிக்கையாக இருக்கிறது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் போலீஸாரே நடவடிக்கை எடுப்பார்களே, இவர் சொல்லித்தானா, போலீஸார் வேலை செய்வர்? இல்லை, ஒருவேளை, கேரளத்தில் அப்படித்தான் இருக்காறார்களோ என்னமோ?
ஓட்டு வங்கி அரசியல் நடத்தும் கட்சிகளும், மத அடிப்படைவாத குழுக்களும்: தேர்தல் நேரத்தில் ஓட்டுவங்கி அரசில் செய்து ஆதாயம் தேடுவதற்காக இவ்வாறு நேர்ந்துள்ளது என்று பரஸ்பரக் குற்றாச்சாட்டுகளும் எழுப்பப் பட்டுள்ளன. எது எப்படியாகிலும், அரசியல் கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் எதற்கும் துணிந்து விட்டார்கள் என்றே தெரிகிறது. இதனால், வட இந்தியாவில் எப்படி இக்கட்சிகள் வன்முறையாளர்களுடன் தொடர்ப்பு வைத்துக் கொண்டு, அரசியல் செய்து வருகின்றனரோ, அதே முறையை, இங்கும் கடைப்பிடிக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆகவே, இரண்டு-மூன்று குண்டு வெடிப்புகள், கலவரம் என்று ஏற்பட்டால், இக்கட்சிகளுக்கு ஆதாயம் போல! வாழ்க ஜனநாயகம், இந்திய செக்யூலரிஸம்!!
வேதபிரகாஷ்
28-02-2011
[2] http://timesofindia.indiatimes.com/india/Five-making-bomb-killed-in-explosion/articleshow/7590599.cms
குறிச்சொற்கள்: அச்சுதானந்தன், இஸ்லாமிய தீவிரவாதம், குண்டு வெடிப்பு, கோழிக்கோடி, செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், முஸ்லீம் அமைப்புகள், மோதல்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்