பாகிஸ்தானில் இருந்த இந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜிஹாதி / இஸ்லாமிய அச்சுறுத்தலுக்கு பயந்து இந்தியாவிற்கு ஓடிவந்து விட்டாராம்!

பாகிஸ்தானில் இருந்த இந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜிஹாதி / இஸ்லாமிய அச்சுறுத்தலுக்கு பயந்து இந்தியாவிற்கு ஓடிவந்து விட்டாராம்!

உயிருக்குப் பயந்து பாகிஸ்தானிலிருந்து ஓடி வந்த பாராளுமன்ற உறுப்பினர்: பாகிஸ்தானில் இருந்த ஒரு இந்து பாராளுமன்ற உறுப்பினர், ஜிஹாதி / இஸ்லாமிய அச்சுறுத்தலுக்கு பயந்து இந்தியாவிற்கு ஓடிவந்து விட்டாராம்! ஏனெனில், தொடர்ந்து ஜிஹாதி / இஸ்லாமிய தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் அவரை “கொன்றுவிடுவோம்”, என்று மிரட்டிக் கொண்டே இருந்தார்களாம். குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை. தினமும் நரகம் தான்! வீட்டைவிட்டு வெளியிலேயே வரமுடியாத நிலை. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்றாலும், அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப் படவில்லை என்று நன்றாகத் தெரிகிறது[1]. அந்நாட்டு போலீஸாரோ, மனித உரிமைப் போராளிகளோ, மற்றவர்களோ கண்டுக் கொள்ளவில்லை. இல்லை நாளைக்கு, இருக்கும் ஒருசில பாதுகாப்பு காவலாளிகளுக்கு, அந்த ஜிஹாதி / இஸ்லாமிய தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், “அவரைக் கொன்று விடு”, என்று அல்லாவின் பெயரா ஆணையிட்டால், அவ்வாறே செய்தாலும் செய்துவிடுவர் போலும்! இதனால், “விட்டால் போதுமடா சாமி”, என்று இந்தியாவிற்கு எப்படியோ ஓடிவந்துவிட்டாராம். ஆனால், ஒருவேளை, இந்திய அரசாங்கம், அவரைப் பிடித்து பாகிஸ்தானிற்கே அனுப்பி வைத்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை! இல்லை பாகிஸ்தான் அவ்வாறு கேட்டுக் கொண்டால், சொல்லவே வேண்டாம், அடுத்த விமமனத்திலேயே ஏற்றி அனுப்பி வைத்து விடுவார்கள்., நம் நாட்டு வீரதீர பராக்கிரமசாலிகள்!

பாகிஸ்தானில் கொல்லப் படுகின்ற இந்துக்களை மறந்துவிட்டு, எகிப்திலிருந்து வரும் இந்தியர்களைப் பற்றி கவலைப் படுகிறார்களாம்: ஆனால் இதைப் பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. மாறாக எகிப்திலிருக்கும் இந்தியர்களைப் பற்றி ஊடகங்களில் மணிக்கணக்கில் அளந்து கொண்டிருக்கிறார்கள்! அந்த என்.டி.டி.வி, டைம்ஸ்-நௌ, ஹெட்-லைன்ஸ் டுடே …………முதலிய செனல்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், லைவ்வாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்! அப்படியென்ன அதில் முக்கியத்துவம்?

பாகிஸ்தானில் இந்துக்கள் படும் பாடு[2]: பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்கும்படி, அந்நாட்டு பார்லிமென்ட்டில் எம்.பி.,க்கள் கோரியுள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், 82 வயதான லக்மி சந்த் என்ற இந்து ஆன்மிக தலைவரை, கடத்தல்காரர்கள் கடத்திச் சென்று கணிசமான பணம் வசூலித்தனர். 66 வயதான பாகிஸ்தானிய இந்து எம்.எல்.ஏ., ராம்சிங் சோதோ என்பவர் அங்குள்ள சமூக விரோதிகளின் மிரட்டலுக்கு பயந்து சமீபத்தில் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்[3]. அதுமட்டுமல்லாது பலுசிஸ்தானில் உள்ள 27 இந்து குடும்பங்கள், அங்குள்ள அச்சுறுத்தல்களை சமாளிக்க முடியாமல், இந்தியாவில் அரசியல் தஞ்சம் புகுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளன. இந்த சம்பவங்கள் குறித்து, பாகிஸ்தான் பார்லிமென்ட்டில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் விவாதித்தனர்.”பாகிஸ்தானில் வசிக்கும் மைனாரிட்டி மக்களுக்கு சமத்துவம் அளிக்கப்படும், என்ற 73ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம் ஒழுங்காக பின்பற்றப்படுவதில்லை. பணத்துக்காக இந்துக்கள் கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும்’ என, ஆளும் கட்சி எம்.பி.,க்கள் பல்வாஷா கான், நவாஸ் யூசூப் உள்ளிட்டோர் வற்புறுத்தினர்.

பாகிஸ்தானின் இந்து-விரோத கொடுமையான சட்டங்கள், கொடுமைகள், குரூரங்கள் முதலியன: ராம்சிங் சோதோ 2008ல் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கின் [Pakistan Muslim League-Functional (PML-F)] சிறுபான்மையினரின் இடஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னுடைய உயிக்கான அச்சுறுத்தல் கண்டு பயந்து, சிந்து மாகாண சட்டமன்றத்தின் சபாநாயகரான, நிஸார் அஹமது கோரோ என்பவரிடன் ராஜினாமா கொடுத்தனுப்பியுள்ளார். கேட்க வேண்டுமா, அவருடைய ரரஜினாம, உடனடியாக ஏற்க்கப்பட்டுவிட்டது என்று கராச்சி டைம்ஸ் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது[4]. சிந்து மற்றும் பலூச்சிஸ்தான் மாவட்டங்களில் கணிசமான, இந்துக்கள், பிரிவினைக்குப் பிறகும் தங்கிவிட்டனர். ஆனால், இஸ்லாமிய தீவிரவாதம் ஓங்க-ஓங்க அவர்கள் அங்கு வாழ்வதே கடினமாகி விட்டது.

2007ல் நடந்த லால் மஸ்ஜித் நிகழ்விற்குப் பிறகு, இந்துக்கள் மீதான கொடுமைகள் அதிகமாகி விட்டன. தினமும் இந்துக்களின் மீது மிகவும் குரூரமான அடக்குமுறை, தாக்குதல்கள் முதலியன நடத்தப் படுகின்றன. குழந்தைகளைக் கடத்திச் சென்று பணம் பறிப்பதில் அலாதியான இன்பம் அவர்களுக்கு[5]; இந்துக்களை அடிப்பது-உதைப்பது அவர்களுக்கு வேடிக்கையான செயல்[6]. மாதம் 25 இந்து பெண்கள் கற்பழிக்கப் படுகிறர்கள் என்ற செய்தி வேறு[7]. பெண்களைக் கடத்திச் சென்று, வலுக்கட்டாயமாக மதம் மாற்றி கல்யாணம் செய்து கொள்வதும் உண்டு[8]. 400-500 இந்து குடும்பங்கள், ஏற்கெனெவே, இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்க முயன்று வருகின்றன.

அடிப்படைவாத சுன்னி முஸ்லீம்கள் ஷியா, அஹ்மதியா, கிருத்துவர் மற்றும் இந்துக்களை விட்டுவைப்பதில்லை. பாகிஸ்தான் மக்கள் கட்சி [Pakistan People’s Party (PPP)], தாங்கள் சிறுபான்மையினரின் நண்பன் என்று எப்பொழுதாவது கூறிக்கொண்டாலும், அது அப்படியொன்றும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. உண்மையில் அரசாங்கத்தால் 1970 மற்றும் 1980களில் சிறுபான்மையினருக்கு எதிராக எடுத்துவரப்பட்டச் சட்டங்களே, இத்தகைய அடக்குமுறைக்குக் காரணம்[9]. அதாவது, இந்துக்களின் சொத்துக்களை, முஸ்லீம்கள் வேண்டும் என்றால் விற்றே ஆகவேண்டும், இல்லையென்றால், மிரட்டியாவது விற்க்க வைத்து விடுவர். அது தவிர, எப்பஒழுதும், மிரட்டி-மிரட்டியே பண கறப்பதும் கொடூர முஸ்லீம்களுக்கு வாடிக்கையான விஷயமாக இருந்து வந்துள்ளது[10].

சிதம்பரமும், பாகிஸ்தானும்: சிந்து மற்றும் பலுச்சிஸ்தானில் இந்துக்களுக்கு என்ன நேர்கிறது என்பதைப் பற்றிக் கவலைப் படவில்லை, ஆனால், சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பைப் பற்றிய விவரங்களை[11] பகிர்ந்து கொள்ளலாம் என்கிறார்[12], இந்திய உள்துறை அமைச்சரான சிதம்பரம்! அதற்கு, பாகிஸ்தான் அமோக ஆதரவு தெரிவிக்கிறது[13], மகிழ்ச்சியுடன்! பேசாமல், சிதம்பரத்திற்கு சுன்னத் செய்து, பாகிஸ்தானிற்கே அனுப்பி வைத்து விடலாம் போலிருக்கிறது. ஹிந்து என்று பெயரை வைத்துக் கொண்டுள்ள நாளிதழைக் கேட்கவேண்டுமா, “Malik hails Chidambaram’s remarks on Samjhauta” என்று செய்தியை முதல் பக்கத்தில் வெளியிடுகின்றது! அத்தகைய பிரம்மிப்பான செய்தியைக் கொடுத்த பெண்மணி “Anita Joshua” அனிதா ஜோஸுவா!

© வேதபிரகாஷ்

02-02-2011


[1] An editorial in the Daily Times Wednesday (02-02-2011) said: “On Saturday (30-01-2011) the resignation of a Hindu member of the Sindh Assembly, Ram Singh Sodho, after reportedly receiving threats is alarming.”

[2] தினமலர், மைனாரிட்டி இந்துக்களுக்கு பாதுகாப்பு தர வலியுறுத்தல், பிப்ரவரி 01, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=178509

[4] Karachi Times, Hindu member of Pak Sindh Assembly flees to India for safety after getting life threats, Karachi News.Net, Sunday 30th January, 2011 (ANI)

http://www.karachinews.net/story/737908

[5] 3-year-old Hindu kidnapped in Pak’s Sindh, Press Trust of India, Updated: November 26, 2010 15:21 IST; http://www.ndtv.com/article/world/3-year-old-hindu-kidnapped-in-paks-sindh-68751

[9] New Indian Express, Hindu MP’s resignation alarming: Pakistan daily, dated 02-02-2011,

http://expressbuzz.com/topnews/hindu-mps-resignation-alarming-pakistan-daily/244459.html

[10] Incidents of kidnapping for ransom have seen an alarming rise during the last few months, forcing many families to abandon their homes and shift to India or other countries. (ANI)

 

Explore posts in the same categories: சிந்து, சுன்னி-ஷியா, பலுச்சிஸ்தானம், பலுச்சிஸ்தான், போரா, ஷியா-சுன்னி

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: