மனைவியின் கள்ளத் தொடர்பு சந்தேகித்து குழ்ந்தைகளைக் கொன்ற முகம்மது அலி
மனைவியின் கள்ளத் தொடர்பு சந்தேகித்து குழ்ந்தைகளைக் கொன்ற முகம்மது அலி
ஊடகங்கள் இவ்விவகாரத்தில், மிகவும் அமுக்கி வாசித்தது தெரிகிறது. சன்டிவி தொலைக்காட்சி தான் 12-01-2010 அன்று விடியற்காலையிலிருந்து செய்திகளில் தெரிவித்து வருகிறது. பிறகு கலைஞர் டிவியும் அதே செய்தியை வெளியிட ஆரம்பித்தது. இதில் முன்னுக்குமுரணான விஷயங்கள் உள்ளன என்று நேற்றே எடுத்துக் காட்டப்பட்டது[1].
- 11-01-2011 அன்று காலை மகள்கள் 2 பேரும் வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது[2] திடீர் என்று மாயமானார்கள் என்று சொல்லப்படுகிறது.
- வீட்டின் எதிரே புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த ஊழியர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள், மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் 2 சிறுமிகளையும் அழைத்துச் சென்றதாக தெரிவித்தனர்.
- குழந்தைகளின் வீட்டிற்கும், இறந்து கிடந்த கிணற்றிற்கும் சுமார் 2 கி.மீட்டர் தூரம் ஆகும்[3]. எனவே அப்பகுதியில் வசிக்கும் யாராவது குழந்தையை கடத்தி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
- போலீஸாரின் நாய் பிணங்கள் கிடந்த இடத்திலிருந்து கிளம்பி பிறகு அவர்களது வீட்டிற்கே வந்து சேர்ந்ததாகவும், அங்கேயே சுற்றி-சுற்றி வந்ததாகவும் போலீஸார் கூறுகின்றனர்.
- காரில் குழந்தைகளின் தந்தையாரின் கைரேகை இருப்பதனால், அவரே இந்த கொலையை செய்தாரா என்று சந்தேகம் இருப்பதாக போலீஸார் கூறுவதாக சன்டிவி தொலைக்காட்சி 12-01-2010 அன்று விடியற்காலையிலிருந்து செய்திகளில் தெரிவித்து வருகிறது.
- குழந்தைகளின் வயதும் 2 / 3 என்றும், 2½ / 3½ மாறி-மாறி கூறுகின்றனர்.
வேலூர் அருகே இரண்டு மகள்களை கொன்ற தந்தை கைது[4] – என்று இப்பொழுது செய்தி வருகின்றது.
மனைவியின் கள்ளத் தொடர்பு சந்தேகித்து குழ்ந்தைகளைக் கொன்ற முகம்மது அலி: இரண்டு மகள்களை கிணற்றில் போட்டு கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். வேலூர் அருகே உள்ள மேல்விகாரம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது அலி. இவர் சென்னையில் பணியாற்றினார். இதற்கிடையில் இவரது மனைவி மும்தாஜூக்கும் கொழுந்தன் பாபுஅகம்மதுவுக்கும் இடையில் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. மும்தாஜூக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் கள்ளத்தொடர்பு மூலம் பிறந்தததாக முகம்மது அலிக்கு சந்தேகம் வந்தது. அதைத் தவிர, கள்ளத்தொடர்பும் ஊர் முழுவதும் பரவலாக பேசப்பட்டது. இதனால் 2 குழந்தைகளையும் கொல்ல திட்டமிட்டான். இதனையடுத்து குழந்தைகள் 2 பேரையும் கிணற்றில் போட்டு கொன்றான். முதலில் குழந்தையை யாரோ கடத்தி கொன்று விட்டதாக போலீசார் விசாரித்தனர். ஆனால் முகம்மது அலியிடம் விசாரித்தபோது அவனே கொன்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் முகம்மது அலியை கைது செய்தனர்.
ஆண் குழந்தை பிறந்ததும் இரண்டு பெண் குழந்தைகளைக் கொன்ற தந்தை: இதே செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ், இவ்வாறு வெளியிட்டுள்ளது[5]. போலீஸார் குழந்தைகள் காணாத போது, விசாரிக்கத் தொடங்கினர். இப்பொழுது, முகம்மது அலியே தன் வீட்டிற்கு எதிரே கட்டுமான வேலை செய்யும் குமரி என்ற பெண்ணை போலீஸாரிடம் அழைத்துச் சென்றான். அவள் “யாரோ ஒரு மர்மமான பெண் மோட்டார் சைக்கிளில் குழந்தைகளை அழைந்துச் சென்றதை” தான் கண்டதாகக் கூறினாள். பிறகு, போலீஸார், அவள் கூறியதை விசாரித்த போது, “நான்கு பேர் அந்த கதையை ஒப்புக் கொண்டார்களாம்”. உறவினர்களிடம் விசாரித்தபோது, வேறுவிதமாக கூறியுள்ளதை போலீஸார் கண்டு பிடித்தனர். சமீபத்தில், தான் வேலை இழந்ததினால், எப்படி குழந்தைகளை வளர்ப்பது என்று பயந்து கொன்றதாகவும் கூறியிருக்கிறான். உண்மையில், அவனை போலீஸ் நிலையத்திற்கு விசாரிக்க அழைத்துச் சென்றபோது, அந்த இடத்தில் உள்ள முஸ்லீம்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். கைது செய்தபோது, விஷாரம் பகுதியில் பெரும் பரபாப்பு ஏற்பட்டது.
குழந்தைகள் உரிமைகள் காக்கப் படவேண்டும்: சமீபத்தில் குழந்தைகள் காணாமல் போவது என்பது பல நிலைகளில், கோணங்களில் யோசிக்க வேண்டியுள்ளது. ஏனெனில், இது சமூதாயத்தை பெருமாவில் பாதிக்கக் கூடிய விஷயமாகிறது. மேலும் அப்படி காணாமல் போகும் குழந்தைகள் கொலை செய்யப்படும்போது, காமத்திற்கு உட்படுத்தும்போது, கொடுமைப் படுத்தும் போது அது எல்லோரையுஇம் பாதிக்கக் கூடிய விஷயமாகிறது. கோயம்புத்தூரில் இரு இளம் குழந்தைகளைக் கடத்திச் சென்று கொன்றுள்ளனர். இன்னொரு விஷயத்தில், குழந்தையை பலியிட்டுள்ளானர்[6]. இன்னும் ஒரு நிகழ்ச்சியில், குழந்தையை அறுத்து, வறுத்து …………தாக[7] வேறு கொடூரம் நடந்துள்ளது[8]. இப்படி குழந்தைகள் காணாமல் போவதில் செக்ஸ்-டூரிஸம் போன்ற கொடுமைகளிலும் ஈடுபடுத்துவது தெரியவதுள்ளது[9]. நாகரிகம் அடைந்துள்ள சமூகம் என்று ஒருபக்கத்தில் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் வேலையில், இப்படி கொடூர நிகழ்சிகள் நடகும் போது, சமூக ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், மனோதத்துவ நிபுணர்கள் அமைதியாக இருக்க முடியாது. உச்சநீதிமன்றம் சமீபத்தில்[10], “நாடு உலகமயமாக்கம் மற்றும் தாராளமயமாக்கம் சகாப்தத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில் செக்ஸ் நோக்கங்களுக்கு சிறிய குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது சரியல்ல. இந்த அபாயகரமான பிரச்னையை தீர்ப்பதில், அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்”. அதுமாதிரியே, பேற்றோர் அல்லது மற்றோர் குழந்தைகளை தமது விருப்பு-விருப்புகளுக்குட்படுத்தி துன்புறுத்தக் கூடாது.
வேதபிரகாஷ்
13-01-2011
[1] வேதபிரகாஷ், மேல்சீவாரத்தைச் சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் மர்மமான நிலையில் இறப்பு: கொலையா என்ற சந்தேகம், https://islamindia.wordpress.com/2011/01/12/two-kids-killed-under-mysterious-conditio/#comment-879
[2] தினமலர், வேலூரில் மர்மமுறையில் பெண் குழந்தைகள் மரணம், ஜனவரி 11,2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=164239
[3] http://chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=7fd3cc37-b088-4791-adc6-157ac34c6265&CATEGORYNAME=TTN
[4] தினமலர், வேலூர் அருகே இரண்டு மகள்களை கொன்ற தந்தை கைது,
பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2011,09:26 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=165403
[5] Indian Express, TN man kills toddler daughters on birth of son,
http://expressbuzz.com/states/tamilnadu/tn-man-kills-toddler-daughters-on-birth-of-son/239241.html
[8] http://womanissues.wordpress.com/2010/07/29/mother-of-human-sacrifice-victim-face-more-problems/
குறிச்சொற்கள்: ஆராய்ச்சியாளர்கள், கலைஞர் டிவி, கள்ளத்தொடர்பு, சன்டிவி, சமூக ஆர்வலர்கள், பாபுஅகம்மது, மனோதத்துவ நிபுணர்கள், முகம்மது அலி, மும்தாஜ், விஷாரம்
You can comment below, or link to this permanent URL from your own site.
ஓகஸ்ட் 4, 2012 இல் 1:46 முப
[…] [4] https://islamindia.wordpress.com/2011/01/13/1293-father-kills-children-on-suspicion/ […]