மேல்சீவாரத்தைச் சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் மர்மமான நிலையில் இறப்பு: கொலையா என்ற சந்தேகம்
மேல்சீவாரத்தைச் சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் மர்மமான நிலையில் இறப்பு: கொலையா என்ற சந்தேகம்
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மாயமானது: ஆற்காட்டை அடுத்துள்ள மேல்விஷாரம் ஜமிலாபாத் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. இவர் சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் ஸ்டோர் கீப்பராக வேலை பார்த்து வருகிறார்[1]. இவரது மனைவி ஆஜிரா பேகம். இவர்களுக்கு தானியா தாஷிபா (3), காஜியா நாஷிகா (2) என்ற 2 பெண் குழந்தைகளும், 3 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். நேற்று அவரது மகள்கள் 2 பேரும் வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது[2] திடீர் என்று மாயமானார்கள் என்று சொல்லப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் 2 சிறுமிகளையும் அழைத்துச் சென்றாரா? சிறுமிகள் திடீரென்று காணவில்லை என்றதும் அக்கம்பக்கத்தில் விசாரித்தனர். பல இடங்களில் தேடியும் பார்த்தனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. பெற்றோர்கள் பதரிவிட்டனர். இந்த நிலையில் வீட்டின் எதிரே புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த ஊழியர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள், மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் 2 சிறுமிகளையும் அழைத்துச் சென்றதாக தெரிவித்தனர். ஆனால் அதற்கு மேல் விவரங்களை அவர்களால் சொல்லமுடியவில்லை.
பாழடைந்த கிணற்றில் 2 குழந்தைகளின் பிணம் மிதந்தது: குழந்தைகளைத் தேடி வந்த நிலையில் நேற்று (11-01-2011) மாலை மேல்விஷாரத்தில் தனியார் மருத்துவமனை அருகே கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள், பாழடைந்த கிணற்றில் 2 குழந்தைகளின் பிணம் மிதப்பதைப் பார்த்து அப்பகுதியில் வசிப்போரிடம் தெரிவித்தனர். தகவல் கிடைத்து போலீஸார் விரைந்து வந்து இரு குழந்தைகளையும் மீட்டபோதுதான் அது காணாமல் போன சிறுமிகள் என்று தெரிய வந்தது. பெற்றோர்களும் உறுதி செய்தனர். குழந்தைகளின் வீட்டிற்கும், இறந்து கிடந்த கிணற்றிற்கும் சுமார் 2 கி.மீட்டர் தூரம் ஆகும்[3]. எனவே அப்பகுதியில் வசிக்கும் யாராவது குழந்தையை கடத்தி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். பிஞ்சு குழந்தைகள் பிணமாகக் கிடப்பதைப் பார்க்க மிக-மிக பரிதாபமாக இருந்தது. கொலையென்றால், அந்த கொலைகாரன், மிகவும் குரூர மிருகமாக இருந்திருக்க வேண்டும். இரு சிறுமிகளையும் கடத்திச் சென்ற நபர், குழந்தைகள் அழுதிருக்கும், அதைப் பார்த்து பயந்து போய் கிணற்றில் வீசியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
போலீஸாரின் தேடுதல் விசாரணை, வேட்டை, சில முரணான செய்திகள்[4]: இதையடுத்து அந்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். போலீஸார் மூன்று தனிப்படை அமைத்து விசாரித்து வருவதாக ஆற்காடு போலீஸ் இன்ச்பெக்டர் கூறியுள்ளார். போலீஸாரின் நாய் பிணங்கள் கிடந்த இடத்திலிருந்து கிளம்பி பிறகு அவர்களது வீட்டிற்கே வந்து சேர்ந்ததாகவும், அங்கேயே சுற்றி-சுற்றி வந்ததாகவும் போலீஸார் கூறுகின்றனர். காரில் குழந்தைகளின் தந்தையாரின் கைரேகை இருப்பதனால், அவரே இந்த கொலையை செய்தாரா என்று சந்தேகம் இருப்பதாக போலீஸார் கூறுவதாக சன்டிவி தொலைக்காட்சி 12-01-2010 அன்று விடியற்காலையிலிருந்து செய்திகளில் தெரிவித்து வருகிறது. குழந்தைகளின் வயதும் 2 / 3 என்றும், 2½ / 3½ மாறி-மாறி கூறுகின்றனர்.
12-01-2011
[1] தட் ஈஸ் டமிள், பாழடைந்த கிணற்றில் மிதந்த 2 சிறுமிகளின் உடல்கள்-கடத்திக் கொலை என சந்தேகம், புதன்கிழமை, ஜனவரி 12, 2011, http://thatstamil.oneindia.in/news/2011/01/12/2-girl-children-kidnapped-murdered-aid0091.html
[2] தினமலர், வேலூரில் மர்மமுறையில் பெண் குழந்தைகள் மரணம், ஜனவரி 11,2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=164239
[3] http://chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=7fd3cc37-b088-4791-adc6-157ac34c6265&CATEGORYNAME=TTN
[4] சன்டிவி தொலைக்காட்சி 12-01-2010 அன்று விடியற்காலையிலிருந்து செய்திகளில் தெரிவித்து வருகிறது. அதில் இருவர் கூறும் விவரம் இவ்வாறாக உள்ளது.
குறிச்சொற்கள்: ஆஜிரா பேகம், ஆற்காடு, காஜியா நாஷிகா, கொலை, ஜமிலாபாத், தானியா தாஷிபா, நரபலி, பலி, பிஞ்சு குழந்தைகள், முகமது அலி, மேல்விஷாரம், வேலூர்
You can comment below, or link to this permanent URL from your own site.
ஜனவரி 13, 2011 இல் 7:51 முப
வேலூர் அருகே இரண்டு மகள்களை கொன்ற தந்தை கைது
பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2011,09:26 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=165403
வேலூர்: இரண்டு மகள்களை கிணற்றில் போட்டு கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். வேலூர் அருகே உள்ள மேல்விகாரம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது அலி. இவர் சென்னையில் பணியாற்றினார்.
இதற்கிடையில் இவரது மனைவி மும்தாஜூக்கும் கொழுந்தன் பாபுஅகம்மதுவுக்கும் இடையில் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. மும்தாஜூக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் கள்ளத்தொடர்பு மூலம் பிறந்தததாக முகம்மது அலிக்கு சந்தேகம் வந்தது. கள்ளத்தொடர்பும் ஊர் முழுவதும் பரவலாக பேசப்பட்டது.
இதனால் 2 குழந்தைகளையும் கொல்ல திட்டமிட்டான். இதனையடுத்து குழந்தைகள் 2 பேரையும் கிணற்றில் போட்டு கொன்றான். முதலில் குழந்தையை யாரோ கடத்தி கொன்று விட்டதாக போலீசார் விசாரித்தனர். ஆனால் முகம்மது அலியிடம் விசாரித்தபோது அவனே கொன்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் முகம்மது அலியை கைது செய்தனர்.
ஜனவரி 13, 2011 இல் 9:13 முப
Man held for murder
Thursday, Jan 13, 2011
Special Correspondent
http://www.hindu.com/2011/01/13/stories/2011011351110300.htm
VELLORE: M. Mohammed Ali (30), an employee of a private leather company in Chennai, was arrested by the Arcot town police on Wednesday in connection with the murder of his two girl children. Ali is a native of Melvisharam and father of Dhaniya Thasipa (3) and Ghazia Naziga (2), whose bodies were found in a well on Arcot Bypass Road in Melvisharam on Tuesday.
Venkatachalapathy, DSP, Ranipet, told The Hindu on Wednesday that during interrogation, Ali confessed to having thrown the children into the well and killed them, owing to a family problem.
ஜனவரி 13, 2011 இல் 11:59 முப
[…] [1] வேதபிரகாஷ், மேல்சீவாரத்தைச் சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் மர்மமான நிலையில் இறப்பு: கொலையா என்ற சந்தேகம், https://islamindia.wordpress.com/2011/01/12/two-kids-killed-under-mysterious-conditio/#comment-879 […]
ஜனவரி 13, 2011 இல் 12:05 பிப
[…] [1] வேதபிரகாஷ், மேல்சீவாரத்தைச் சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் மர்மமான நிலையில் இறப்பு: கொலையா என்ற சந்தேகம், https://islamindia.wordpress.com/2011/01/12/two-kids-killed-under-mysterious-conditio/#comment-879 […]
ஓகஸ்ட் 4, 2012 இல் 1:46 முப
[…] [5] https://islamindia.wordpress.com/2011/01/12/two-kids-killed-under-mysterious-conditio/ […]