அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு மற்றும் குழந்தைகளின் பிணங்கள் கிடந்தன: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா – தொடரும் மர்மங்கள் (2)

அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு மற்றும் குழந்தைகளின் பிணங்கள் கிடந்தன: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா – தொடரும் மர்மங்கள் (2)

பெண் கொலை வழக்கு குற்றவாளிகள் மலேசியாவுக்கு தப்பி ஓட்டம்[1]: ராமநாதபுரத்தில் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான தனிப்படை விசாரணையில், ஆதிலாபானுவை கொலை செய்ததற்கான நோக்கம் குறித்து உறுதிபடுத்த முடியாத நிலையில், வழக்கில் “சந்தேகமான முக்கிய நபர்கள்” மலேசியாவிற்கு தப்பி ஓடிவிட்டது தெரியவந்துள்ளது. [அப்படி அவர்கள் சென்றிருந்தால், நிச்சயமாக அவர்கள் யார் என்பதனை அறியலாமே]. மேலும் ஆதிலாபானுவின் தாயாரிடம் நடத்திய விசாரணையில், கிடைத்த தகவல்களை உறுதி செய்வதற்கான சாட்சிகளோ, ஆதாரங்களோ இல்லாததால், குற்றவாளிகளின் கொலை நோக்கத்தை உறுதிபடுத்த முடியாமல் போலீசார் திணறுகின்றனர். இந்நிலையில், மலேசியாவிற்கு தப்பி சென்ற நபர்களை வரவழைப்பதற்கான முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். “கொலை குற்றவாளிகளை ஓரிரு தினங்களில் பிடித்து, உண்மையான காரணங்களை கண்டுபிடித்துவிடுவோம்’ என, தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் யார்[2]? விசாரணையில், “ஆதிலா பானு, டூரிஸ்ட் விசாவில் அடிக்கடி மலேசியா சென்று வந்ததும், அவருக்கு பலரிடம் இருந்து மொபைல் போனில் அதிக அழைப்புகள் வந்துள்ளதும், அதை தொடர்ந்து மதுரை போன்ற வெளியூர்களுக்கும் செல்வதுமாக இருந்துள்ளார். ஆக இது ஹம்சத்நிஷாவிற்கு தெரிந்துதான் உள்ளது. இதுபோல் திருச்சி, மதுரையிலிருந்து இரண்டு நபர்கள் அடிக்கடி போனில் பேசியுள்ளதும்’ தெரிய வந்துள்ளது. மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டவர்கள் பட்டியலை, போலீசார் தயாரித்துள்ளனர். அதில், ராமநாதபுரத்தில் உள்ள “பல முக்கிய நபர்களின்” எண்களும் உள்ளன. ஆதிலா பானுவுக்கு, வணிக வளாகத்துடன் கூடிய வீடு உள்ளிட்ட சொத்துகள் இருப்பதால், சொத்துக்காக கொலை நடந்ததா, கள்ளத் தொடர்பால் நடந்ததா என போலீசார் விசாரிக்கின்றனர். அடையாளங்கள் இல்லாத வகையில் கொலை நடந்துள்ளதால், கூலிப் படையினர் மூலம் நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவர் எனவும் தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

விசாரணை, கைது; சம்பவ தினத்தன்று (08-10-2010) மத்தியான பொழுதில் பக்கத்து வீட்டுக்காரரான சுந்தரி என்பவருடன் சமையல் சாமான்களும் சமையல் எரிவாயு உருளையும் வாங்குவதற்கு கடைக்கு போயிருக்கிறார்கள்[3]. ஆனால் வீட்டுக்கு திரும்பவில்லை. அவர்களின் நிலை என்ன ஆனது என்பதும் தெரியவில்லை. யார் அந்த சுந்தரி, சுந்தரி திரும்பி வந்ததளா, போன்ற விஷயங்களைப் பற்றியும் “கப்சிப்” தான். இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு நான்கு பேரிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். இறந்தவரின் குடும்ப நண்பரான ஜெயக்குமாரிடம் விசாரணை நடந்து வருகிறது. இரு விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்[4]. ஆனால், அவர்கள் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இப்படி பலவிதமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. “செல்போனில் ராமநாதபுரத்தில் உள்ள “பல முக்கிய நபர்களின்” எண்களும் உள்ளன” எனும்போது, அவர்களை ஏன் விசாரிக்கவில்லை என்று தெரியவில்லை[5].

இறந்த பெண்ணின் மொபைலில் நிரம்பி வழிந்த எஸ்.எம்.எஸ்.,கள் : “க்ளூகிடைப்பதில் பின்னடைவு[6]: இதற்கிடையில், இறந்த பெண்ணின் மொபைல் போனை சோதனை செய்தபோது, அவருக்கு பலர் எஸ்.எம்.எஸ்., அனுப்பியது தெரியவந்தது. குறிப்பிட்ட நபர் ஒருவர் மட்டும் சில நாட்களில் 100 எஸ்.எம்.எஸ்.,களுக்கு மேல் அனுப்பி உள்ளார். இதனால், அந்த மொபைலின் “இன் பாக்ஸ்’ நிரம்பிவழிந்தது. போலீசார் பெரிதும் எதிர்பார்த்த மொபைல் போனில், உரிய “க்ளூ’ கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். இருந்த போதும், ஆதிலாபானுவுக்கு வந்த மொபைல் அழைப்புகள் குறித்த விசாரணையில் நம்பிக்கை கிடைத்திருப்பதாக தெரிகிறது. “செல்போனில் ராமநாதபுரத்தில் உள்ள “பல முக்கிய நபர்களின்” எண்களும் உள்ளன” என்றுவேறு உள்ளது. இவர்களுக்குள் உள்ள தொடர்பு என்ன?

ஆதிலா பானு பணக்காரி, நாகரிக பெண்மணி என்று தெரிகிறது; “மலேசிய நாட்டில் வேலை பார்த்து வந்த முத்துச்சாமி திருமணத்திற்கு பிறகு மனைவி மற்றும் குழந்தைகளையும் மலேசியாவுக்கு அழைத்து சென்றார்”, அப்படியென்றால், முத்துசாமி சாதாரண இந்தியன் போல, தனது குடும்பத்தை, மலேசியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளான்[7]. ஆனால், ஆதிலா பானு மலேசிய பெண்ணாக இருப்பதினால், அவள்தான், முத்துசாமியை அங்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். “அங்கு காஜிரா பானு மலேசிய நாட்டின் குடியுரிமையும் பெற்றார்”, அதாவது 5 வயது மகளுக்கு மட்டுமா குடியுரிமை வாங்கினார்கள்? மலேசிய பெண்மணிக்கு வணிக வளாகத்துடன் கூடிய வீடு உள்ளிட்ட சொத்துகள் உள்ளன, அவள் வட்டிக்காக கடன் கொடுத்திருக்கிறாள் போன்ற செய்திகளும் வித்தியாசமாக இருக்கின்றன. இஸ்லாத்தில் வட்டிக்காக கடன் கொடுக்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள்.

மலேசியாவிற்கு சென்ற பிறகு கருத்து வேறுபாடு ஏன் ஏற்படவேண்டும்? “இந்த நிலையில் திடீரென கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது”, இது புரியவில்லை – அதாவது என்ன காரணம் என்பது தெரியவில்லை.  முத்துசாமிக்கு அங்கு வேலை கிடைத்திருப்பதனல், அவன் தன் மனைவியுடன், வரும் வருமானத்தை வைத்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கலாம், மற்ற வேலைகள் – குறிப்பாக வட்டிக்கு பணம் கொடுப்பது[8] போன்ற காரியங்கள் – எல்லாம் வேண்டாம் என்று சொல்லியிருப்பான். “இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆதிலாபானு தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு மலேசியாவில் இருந்து சொந்த ஊரான ராமநாதபுரத்திற்கு வந்தார்”, அதாவது கணவனைவிட்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்துள்ளார். அதே நேரத்தில் “ஆதிலா பானு, டூரிஸ்ட் விசாவில் அடிக்கடி மலேசியா சென்று வந்ததும், அவருக்கு பலரிடம் இருந்து மொபைல் போனில் அதிக அழைப்புகள் வந்துள்ளதும், அதை தொடர்ந்து மதுரை போன்ற வெளியூர்களுக்கும் செல்வதுமாக இருந்துள்ளார்”, என்று வந்துள்ள செய்திகளும் முரண்படாக உள்ளன.

மலேசியன் தூதரகத்திற்கே ஒத்துழைக்காத ஆதிலா பானுவின் குடும்பம்[9]: சென்னையிலுள்ள மலேசியன் தூதரகத்து அன்வர் கஸ்மன், கவுன்சிலர்-ஜெனரல் (Consul-General Anuar Kasman) என்பவர், தான் மலேசிய அதிகாரிகளை மதுரைக்கு அனுப்பி இந்த கொலைகளைப் பற்றி மேலும் விவரங்களை சேகரித்து வரும்படி அனுப்புயுள்ளாராம். அவர்கள் ஆதிலா பானுவின் குடும்பத்தினரை சந்தித்து உரையாடி விவரங்களைக் கேட்டபோது, அவர்கள் ஒத்துழைப்புதருவதாக இல்லை என்று குறிப்பிட்டனர். “இது வழக்கு மிகவும் சிக்கலான வழக்காக இருப்பதினாலும், நமது வரம்புகளுக்கு வெளியே செல்வதினாலும், அதை போலீஸாருக்கே விட்டு விடுகிறோம்”, என்றார்கள்.

இந்த கேள்விகளுக்கு என்ன பதில்?

*         மலேசியாவிற்கு தப்பி ஓடிய “சந்தேகமான முக்கிய நபர்கள்” யார்?

*         அடிக்கடி போனில் பேசியுள்ள திருச்சி, மதுரையிலிருந்து இரண்டு நபர்கள் யார்?

*         போலீசார் தயாரித்துள்ள மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டவர்கள் பட்டியலில் உல்லவர்கள் யார்?

*         ராமநாதபுரத்தில் உள்ள “பல முக்கிய நபர்களின்” எண்கள், என்ரால், யார் அவர்கள்?

*         அவருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பிய பலர் யார்?

*         சில நாட்களில் 100 எஸ்.எம்.எஸ்.,களுக்கு மேல் அனுப்பிய  குறிப்பிட்ட நபர் யார்?

*         வணிக வளாகத்துடன் கூடிய வீடு உள்ளிட்ட சொத்துகள் யார் பெயரில் உள்ளன?

*         அவற்றை யார் வாடகைக்கு எடுத்துள்ளனர்?

*         அவள் வட்டிக்காக கடன் கொடுத்திருக்கிறாள் என்றால், யார்-யார் கடன் வாங்கியுள்ளனர்?

*         விசாரணையில், தனது மகளுடன் தொடர்புள்ள சிலர் மீது சந்தேகிப்பதாக தெரிவித்திருந்தார் – அந்த “தொடர்புள்ள சிலர்” யார்?

*          எதிர்ப்பு தெரிவித்தனர் சாத்தான்குளத்தினர் யார்?

*         இப்பொழுது ஏன் அவர்கள் மௌனமாக இருக்கிறார்ள்?

*         மேற்குறிப்பிடப்பட்ட – ராமநாதபுரத்தில் உள்ள “பல முக்கிய நபர்கள்”, “சிலர்” “பலர்”,…………………………..அவர்களில் இவர்களும் இருக்கிறார்களா?

 

வேதபிரகாஷ்

© 15-11-2010


[1] தினமலர், பெண் கொலை வழக்கு குற்றவாளிகள் மலேசியாவுக்கு தப்பி ஓட்டம், நவம்பர் 15, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=126450

[2] தினமலர், கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் யார்?, நவம்பர் 13,2010; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=125685

[4] Police in India have detained two farmers in connection with the death of a Malaysian woman and her two children who had earlier gone missing in South India last Monday (08-11-2010). http://thestar.com.my/news/story.asp?file=/2010/11/14/nation/7427381&sec=nation

[5] ராமநாதபுரத்தின்  “பல முக்கிய நபர்கள்” என்பதனால் அவர்களை கண்ட்கொள்ளாமல் இருக்கபோகிறாற்களா? இது முந்தைய கற்பழிப்பு, நிர்வாண வீடியோ வழக்குப் போலத்தான் உள்ளது.

[6] தினமலர், இறந்த பெண்ணின் மொபைலில் நிரம்பி வழிந்த எஸ்.எம்.எஸ்.,கள் : “க்ளூகிடைப்பதில் பின்னடைவு, பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2010,23:17 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=125110

 

[7] மாலைமலர், மலேசியாவில் இருந்து திரும்பிய தாய்மகன்மகள் கடத்தல்; கேணிக்கரை போலீசில் புகார், Ramanathapuram புதன்கிழமை, நவம்பர் 10, 5:21 PM IST http://www.maalaimalar.com/2010/11/10172123/malaysia-return-mother-daughte.html

[9] Meanwhile, Chennai-based Malaysian Consul-General Anuar Kasman told Bernama that he had sent Malaysian officers to Madurai to obtain more details on the killings. “Our officers visited the woman’s family today but they were not cooperative. It is a complicated case, it is beyond our jurisdiction, we leave it to the police,” said Anuar.

http://www.freemalaysiatoday.com/fmt-english/news/general/12850-two-detained-in-malaysian-triple-murder-mastermind-still-free

 

Explore posts in the same categories: அன்வர் கஸ்மன், எஸ்.எம்.எஸ், கவுன்சிலர்-ஜெனரல், சுந்தரி, ஜெயக்குமார், மலேசியன் தூதரகம்

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

6 பின்னூட்டங்கள் மேல் “அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு மற்றும் குழந்தைகளின் பிணங்கள் கிடந்தன: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா – தொடரும் மர்மங்கள் (2)”

 1. M. Nachiappan Says:

  In Tamil Nadu town, fundamentalists play moral cops, even kill to have way- —–Jaya Menon
  http://www.indianexpress.com/news/in-tamil-nadu-town-fundamentalists-play-moral-cops-even-kill-to-have-way/26668/0
  Posted: Mon Mar 26 2007, 00:00 hrs
  Melapalayam (Tirunelveli), March 25 :— Over a fortnight ago, 35-year-old Mumtaz was killed by a group of young men in Melapalayam in south Tamil Nadu.
  They murdered her when she was returning from a local beedi company after collecting leaves and tobacco. They accosted her on the road, warned her against a affair she was allegedly having with a married man and the local manager of a beedi company.

  She just told them to mind their own business.

  They first threw stones at her. Then, some of them came closer and stabbed her. Mumtaz died on the spot.

  In Melapalayam, which the police say has been a hotbed of fundamentalism with a strong presence of Al Umma, there has been little outrage.

  “Many in the town believe that Mumtaz deserved it,” said Abdul Subahan (18), the district secretary of the student wing of Tamil Nadu Muslim Munnetra Kazham, a political outfit which police think is linked to Al Umma. ————- Residents of the town say Mumtaz had been given “sufficient warning” to keep away from her “paramour.” But she had not.

  Her sister Nabeena said: “People in the town are saying she deserved it. We don’t know what to think.”

  Her mother, Zubeida Hussein, who had left her daughter a few months ago after she began receiving threats, said: “Our heads bow in shame.”

  The mob murder on March 9 by the self-styled ‘moral police’ was not the first honour killing in this small town. Mumtaz is just the first woman victim.

  In August 1997, Selvakumar, a homeopath doctor, was killed for having “relationships” with Muslim women. The same day, 16 Al Umma sympathizers hacked to death two RSS workers who were karsevaks in the Babri Masjid demolition.

  • In 2001, Sathyaseelan was murdered by nine Al Umma members for “having contacts with a Muslim woman.”

  • Two months ago, three youths, all Al Umma sympathizers, were arrested after they threatened another single woman in the town “on suspicion” that she was having an “illicit” relationship with a married man. “They snatched her mobile phone and extorted Rs. 1,000 from her and told her to behave herself,” says Inspector Stanley Jones, the investigating officer in the Mumtaz murder case.

  The Melapalayam town chief, Khaludeen, felt the youths should have brought the case before the local Jamaat. “Only a year back we threw a woman out of the town with her seven-month-old baby boy whom she begot through an illicit relationship,” he said.

  According to him, the married man accused of getting her pregnant, had “sworn” on Allah that he was not responsible. “Once a man swears on Allah, we believe him,” said Khaludeen. But the woman had to leave the town.

  Said Dr Bhagat Singh, the TMMK’s district secretary: “The youths (accused of killing Mumtaz) should not have taken law into their hands. They read the Quran and make their own interpretations. To prevent such incidents, the Government should introduce the practice of stoning immoral women to death. Many Middle-East countries follow this practice and keep women under check. That’s the only way to handle such issues.”

  Two days after Mumtaz’s murder, the police arrested S Rasool Moideen (22), Shahul Hameed (21), his brother K Noushad Ali (19), K Imran (19), Mohamed Hussain alias Allappa (23) and Mohamed Moideen, all from Melapalayam. Two of them are college students. The police are searching for Shahul Hameed (27), who is said to be the mastermind.

  Police say Al Umma, the fundamentalist outfit which had become weak after the arrest of more than 100 of its members in the Coimbatore case, has been rejuvenated and is trying to enforce edicts on the Muslim community in Melapalayam.

  “We believe there are some agencies trying to lay down stiff rules for the society. They don’t represent the larger community and behave like outlaws,” said N K Senthamarai Kannan, the Tirunelveli District Superintendent of Police.

  “Unless someone comes forward with a complaint, we cannot do anything. They (the town residents) don’t have the courage to initiate the legal process as they feel they have to co-exist with the community,” he said.

  • K. Venkatraman Says:

   This resembles the earlier case, sometime back reported, where a DMK man was involved.

   At that time, the police had to wait and get clearance from CM – Karunanidhi arrest that peson.

   Here, also, it appears big people are involved.

   Ironically or incidentally, as the persons involved have been Muslims, the authorities are soft-pedalling the legal processes.

   That they did not co-operate with the Malaysian consulate officers prove only such connection.

 2. vedaprakash Says:

  மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.
  கள்ளக்காதலில் ஈடுபட்டதால் 2 குழந்தைகளுடன் பெண் கொலை; வாடிப்பட்டி கொலையில் துப்பு துலங்கியது
  Ramanathapuram வெள்ளிக்கிழமை, நவம்பர் 12, 5:57 PM IST
  http://www.maalaimalar.com/2010/11/12175714/lady-murder.html

  மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே இளம்பெண் மற்றும் 2 குழந்தைகள் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். இது பற்றி அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் வாடிப்பட்டி போலீசார் விரைந்து வந்து உடல் களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பிணமாக கிடந்தவர்கள் ராமநாதபுரம் பாரதி நகரை சேர்ந்த ஆதீலாபானு (வயது24), அவரது மகள் ஹாஜீராபானு(7), மகன் முகமது அஸ்லம் (5) என தெரியவந்தது.

  இதையடுத்து புகார் கொடுத்திருந்த ராமநாதபுரம் பாரதி நகரை சேர்ந்த சைபுநிஷா என்பவரை போலீசார் வாடிப்பட்டி அழைத்து வந்தனர். பிணமாக கிடந்தவர்களின் உடல்களை பார்த்த சைபுநிஷா அது தனது மகள் ஆதீலாபானு, பேரன் முகமது அஸ்லம், பேத்தி ஹாஜீராபானு என அடையாளம் காட்டினார்.

  தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்தன. அதன் விபரம் வருமாறு:-

  ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சைபுநிஷா மகள் ஆதீலாபானு (வயது24). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குப்பான் வலசை பகுதியை சேர்ந்த முத்து மகன் முத்துச்சாமி என்பவரை காலித்து திரு மணம் செய்து கொண்டார். இதற்கு சாத்தான் குளம் கிராமத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த ஊரை காலி செய்த ஆதீலாபானு காதல் கணவருடன் குப்பான் வலசையில் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு ஹாஜீரா பானு என்ற மகளும், முகமது அஸ்லம் என்ற மகனும் இருந்தனர்.

  திருமணத்திற்கு பிறகு முத்துச்சாமி தனது பெயரை முகமது என்று மாற்றி கொண்டுள்ளார். பின்னர் அவருக்கு மலேசியா நாட்டில் வேலை கிடைத்து அங்கு சென்று விட்டார்.

  இதற்கிடையே குப்பான் வலசையில் தனியாக வசித்து வந்த ஆதீலாபானுவுக்கு பல்வேறு ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. கண்டிக்க ஆளில்லாத தைரியத்தில் பலரை தனது வீட்டிற்கே வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போதுதான் முத்துச் சாமி தனது மனைவி மற்றும் பிள்ளைகளை மலேசியாவுக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் அங்கு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது குழந்தைகளை அழைத்து கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆதீலாபானு ராமநாதபுரம் வந்துள்ளார்.

  தொடர்ந்து தனது கள்ளக்காதலுடன் ஊர் சுற்றியும் வந்துள்ளார். 3 செல்போன் இணைப்புகளை அவர் வைத்திருந்தார். கொலை செய்யப்படுவதற்கு முன்பாக 4 நாட்களில் 3 ஆயிரம் செல்போன் அழைப்புகள் அவருக்கு வந்துள்ளன. மிஸ்டு கால் மூலம் தனது கள்ளக்காதலர் களை செல்போனில் அழைத்து மணிக்கணக்கில் அவர் பேசி இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  கடந்த 8-ந்தேதி தனது குழந்தைகளை அழைத்து கொண்டு வெளியே சென்றவர் வீடு திரும்ப வில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் ஆதீலா பானுவின் தாய் சைபுநிஷா கேணிக்கரை போலீசில் புகார் அளித்திருக்கிறார். மாயமான அவர்கள் வாடிப்பட்டி அருகே பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். எனவே கள்ளக்காதலில் ஈடுபட்டதால் அவர் குழந்தைகளுடன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதனடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 3. K. Venkatraman Says:

  This சாத்தான்குளம் / Sattankulam appears to be intriguing.

  Perhaps, it is a Muslim dominated / infested area, where, they could only rule to the roost.

  Now, as pointed out by you, those people have been keeping quite.

  Perhaps, as happened in the case of Mumtaj etc., she might have been finished off and the killers flied away.


 4. […] இஸ்லாம்-இந்தியா Just another WordPress.com weblog « அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு மற்ற… […]


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: