பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை!
பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை!
“பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை! “பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை! கரைக்காலில் நடந்த கொடுமை”, என்ற தலைப்பில் ஒரு முஸ்லீம் எழுதியுள்ளது இவ்வாறு உள்ளது[1]:
“ஒரு சகோதரர் காரைக்காலில் பள்ளிவாசல் கட்டுவதற்காக பூஜை நடத்தப்பட்டதை புகைப்பட ஆதாரத்துடன் அனுப்பி வைத்துள்ளார். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது குறித்து காரைக்கால் மக்களுக்கு மிகப்பெரும் கடமை உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.
காரைக்காலில் ஹில்ரு பள்ளிவாசல் கட்டுவதற்கான துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தாடியும் தொப்பியும் வைத்துக் கொண்டு இந்து மதத்தைப் பின்பற்றி பூஜை செய்துள்ளனர். அல்லாஹ்வின் பள்ளிவாசல் சிறப்பாகக்கட்ட பூமிக்கு பூஜை செய்தால் நல்லபடியாக முடியும் என்று நம்பும் இவர்களுக்கு பள்ளிவாசல் எதற்கு? பேசாமல் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய வேண்டியது தான ? இஸ்லாத்தின் பெயரை ஏன் கெடுக்க வேண்டும். காரைக்கால் மக்களுக்கு இஸ்லாத்தில் நம்பிக்கை இருந்தால் இது போன்ற முர்தத்களை பள்ளிவாசல் நிர்வாகத்தில் இருந்து நீக்க வேண்டும். இது அவர்கள் மீதுள்ள மார்க்கக் கடமையாகும். ………………………………குரானைக் குறிப்பிட்டு…………….. மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் இவர்கள் பள்ளியை நிர்வாகம் செய்ய தகுதியற்றவர்களாகி விட்டனர். இவர்களைத் தூக்கி எறிவது காரைக்காலைச் சேர்ந்த ஒவ்வொரு முஸ்லிமின் மார்க்கக் கடமையாகும். முடியாவிட்டால் இதைப் பள்ளிவாசலாக அங்கீகரித்து உதவிகள் செய்வதை உடனே நிறுத்த வேண்டும். ஏனெனில் இது போல் இணை வைப்பின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்டவை பள்ளிவாசலே அல்ல என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தின் மூலம் தெளிவுபடுத்துகிறான். இதை காரைக்கால் சகோதரர்கள் பிரசுரமாக வெளியிட்டு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். |
உடனே மற்ற முஸ்லீம்கள், இதனைப் பரப்ப ஆரம்பித்து விட்டனர்[2]. முஸ்லிம்களுக்குள் இஸ்லாத்தைப் பின்பற்றுவதில் ஒரு சீரான அமைப்பு, பின்பற்றுதல்கள், பழக்க-வழக்கங்கள் இல்லையென்றால், அது அவர்கள் பிரச்சினை, ஆனால், அத்தகைய அவர்களது உள்-விவகாரங்களை, முரண்பாடுகளை சாக்காக வைத்துக் கொண்டு, இந்து மதத்தினை இழிவு படுத்த அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.
பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை! தமிழகத்தில், இந்தியாவில் இருந்து கொண்டு, இந்திய மூதாதையருக்குப் பிறந்து, இப்படி பேசுவது, எழுதுவது மிகவும் துன்மார்க்கச் செயலாகும். இந்திய தெய்வங்கள் அல்லது இந்து தெய்வங்கள் “போலி தெய்வங்கள்” என்று சொல்ல, இந்த முஸ்லீம்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அது மட்டுமல்ல, பதிலுக்கு ஒரு இந்துவும், நம்பிக்கையாளனாக, இதே மாதிரி முஸ்லீம் தெய்வங்கள் அல்லது மற்ற தெய்வங்கள் “போலி தெய்வங்கள்” என்று தாராளமாகச் சொல்லலாம், சொல்லுவான். இந்திய முஸ்லீம்கள் பெரும்பாலும் இந்துக்கள்தாம், அவர்கள் மதம் மாறியிருக்கலாம், ஆனால், பெற்றோரை, தாத்தா-பாட்டிகளை, மூதாதையரை மாற்றமுடியாது. அதே மாதிரி கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் முதலியவற்றையும் மாற முடியாது. ஆக, அவ்வாறு அவர்கள் விரும்பினால், தாராளமாக அவ்வாறு எங்கு கடைப் பிடிக்கிறர்களோ, அங்கு சென்று சந்தோஷமாக இருக்கலாம். இங்கு இந்தியாவில் இருந்து கொண்டு, மற்ற முஸ்லீம்களின் மனங்களில் நஞ்சையூற்றி துவேஷத்தை வளர்க்கவேண்டாம். இப்பொழுதைக்கு, இதனை விளக்காமல் இப்படியே விட்டுவிடுகிறேன்.
காரைக்காலில் உள்ள மசூதிகள் இந்து கலாச்சாரத்தைத்தான் வெளிப்படுதுகின்றன: முக்கியமான காரைக்காலின் மசூதிகளின் உள்ளமைப்பு, இந்து வழிபாட்டு ஸ்தல அமைப்பாகத்தான் இருக்கின்றன. உண்மையைச் சொல்லப் போனால், கோவில்களை இடித்து மற்றும் கோவிகளின் வெளிப்புறங்களை இடித்து மாற்றிக் கட்டிவிட்டு, உள்ளமைப்பை அப்படியே வைத்துக் கொண்டுள்ளதால் தான், அவ்வாறான, “இஸ்லாம் அல்லாத அமைப்பு” இருக்கிறது. சிற்பங்களை உடைத்து விட்டு, தூண்களை வைத்துக் கொண்டால் தெரியாதா? முன்பிருந்த செம்பு, பஞ்சலோக பூஜை பாத்திரங்கள் முதலியவற்றை வைத்துக் கொண்டிருப்பது தெரியாதா? அப்படியானால், அந்த மசூதிகளையெல்லாம் விட்டுவிட்டு போய்விட வேண்டியதுதானே? இந்தியாவிலேயே, பெரும்பாலான மசூதிகள் அவ்வாறுத்தான் கட்டப் பட்டுள்ளன, அமைந்துள்ளன, இன்றும் தொடர்ந்து வருகின்றன. அப்படியென்றால், அவையெல்லாம் மசுதிகள் இல்லையா?
இந்த முஸ்லீம்கள் முஸ்லீம்களா, அல்லது அந்த முஸ்லீம்கள் முஸ்லீம்களா? முஸ்லீம்களுக்குள் எந்த விஷயத்திலாவது, பிரச்சினையிலாவது, உள்-விவகாரங்களில் முரண்பாடுகள், வேறுபாடுகள் முதலிவை இருந்தால், அவற்றை சரி செய்து கொள்ளவேண்டியது அவர்களுடைய வேலையே அன்றி, அடுத்தவர்களை வம்பிற்குள் இழுக்கக் கூடாது. இந்த முஸ்லீம்கள் முஸ்லீம்களா, அல்லது அந்த முஸ்லீம்கள் முஸ்லீம்களா என்ற ஆராய்ச்சிகளை அவர்கள் தாம் வைத்துக் கொள்ளவேண்டும். “இஸ்லாம் கடவுள்கள்” உண்மையானவை, சொக்கத்தங்கம் போன்றவை, “ஒரிஜினல்”, “டூப்ளிகேட்டேயில்லை” என்றெல்லாம் சொல்லிக் கொள்வதானால், அது அவர்களுடைய விருப்பம், ஆனால், அதற்காக, மற்றவற்றை “போலி தெய்வங்கள்” என்று கூற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அவ்வாறு செய்துள்ளதால், அது கண்டிக்கப்படுகிறது. மற்ற உண்மையான முஸ்லீம்களும், இதை அறிந்து அத்தகைய நஞ்சூட்டும் முஸ்லீம்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும், இல்லையென்றால், தேவையில்லாமல் பிரச்சினைதான் வளரும்! ஏனெனில், பிறகு உரசிப்பார்க்க வேண்டியிருக்கும், சோதனை செய்ய வேண்டியிருக்கும்.
மற்ற முஸ்லீம்களின் மனங்களில் நஞ்சையூற்றி துவேஷத்தை வளர்க்கவேண்டாம்: தமிழகத்தில், இந்தியாவில் பொதுவாக இந்துக்கள், முஸ்லீம்கள் அமைதியாக, நட்புடன் தான் வாழ்ந்து வருகிறார்கள். அத்தகைய அமைதியை, நட்பை சீர்குலைக்க, இப்படிப்பட்ட சில முஸ்லீம்கள் வேலை செய்யவேண்டாம். முகமது நபியே சொல்லியபடியே, “உங்கள் கடவுள், உங்களுக்கு, எங்கள் கடவுள் எங்களுக்கு”, என்று மரியாதையாக இருக்கவேண்டுமே தவிர, அடுத்த கடவுளைப் பற்றி குறைவாக பேசுவது, தூஷிப்பது என்ற நீசசெயல்களுக்கு உட்பட்டால், அதற்கான விளைவுகளுக்கு தயாராக இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
[1] http://onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/karaikalil_nadantha_kodumai/
[2] http://markaspost.wordpress.com/2010/08/30/காரைக்காலில்-நடந்த-கொடும/
Explore posts in the same categories: அமர்நாத் யாத்திரை, அவமதிக்கும் இஸ்லாம், ஆப்கானிஸ்தான், இந்து காதலனும் முகமதிய காதலியும், இருக்கும் தெய்வங்கள், இல்லாத தெய்வங்கள், காரைக்கால், நிஜ தெய்வங்கள், பள்ளி வாசல், பள்ளிவாசல், பூமி பூஜைகுறிச்சொற்கள்: அவமதிக்கும் இஸ்லாம், இருக்கும் தெய்வங்கள், இல்லாத தெய்வங்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காரைக்கால், ஜிஹாதி தீவிரவாதம், நிஜ தெய்வங்கள், பள்ளிவாசல், புனிதப்போர், பூமி பூஜை, போலி தெய்வங்கள், மசூதி, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், முஸ்லிம்கள் சிலை உடைப்பு, முஸ்லீம்கள்
You can comment below, or link to this permanent URL from your own site.
ஓகஸ்ட் 30, 2010 இல் 9:16 முப
Most of the Mosques constructed stand on Precious Hindu Worship places, taken over by force.
If these cries comes then only way is to restore atleast important ones back to Hindus.
ஓகஸ்ட் 30, 2010 இல் 2:59 பிப
நிச்சயமாக, அப்படி ஆயிரக்கணக்கான கோவில்களை இடித்தது கொடுமையாக இவர்களுக்குத் தெரியவில்லை.
இப்பொழுது கூட, காஷ்மீரத்தில், ஒரு ஜெயினர் கோவிலை எரித்துள்ளனர்.
அது கொடுமையா, இல்லை இனிமையா?
செப்ரெம்பர் 3, 2010 இல் 9:59 முப
When Hindu temples were destroyed and mosques built using temple pillrs and other construction materials, or maiontaining the building, but restructuring the outer, demolishing the Gopurams and sculptures, but constructing dome and other embelishments outside on the existing structures, they appear as Hindu temples only, when people visit inside.
As it has been a fact that the fanatic Muslims destroyed Hindu temples and constructed mosques, they have no guts to claim any exclusive status for their religion.
செப்ரெம்பர் 1, 2010 இல் 7:51 முப
It is evident that these fanatic fellows have been not only religiously arrogant, but also psychopathic to the core in threatening others in disturbing the peace and harmony.
After all, Islam came to India much later and these Muslims have been people of this country.
But unfortunately, as their brains have been totally imbibed with imported theology, they have lost their historic perspective and logical thinking.
In fact, they should research and find out what exactly is Islamic distinguishable to them from others, as most of them have been borrowed, copied and appropriated from others.
Thus, most of their material evidences do not belong to them. When Mecca, Kaba and others have been forcefully snatched from others there, and the Hindu temples desytoyed and converted here, nothing is their own.
If they really want to be 100% Muslims, as they imagine, then, then may have to go to Araboa and follow there.
செப்ரெம்பர் 12, 2010 இல் 1:01 முப
Yes, historical approach of study of Islam is required for the Muslims to understand themselves in the historical perspective, instead of always going dogmatic.
செப்ரெம்பர் 2, 2010 இல் 9:43 முப
These Muslims have no right to call Hindu Gods as “dupicate / false” etc., in their own theological terminology.
After all, their religion appeared only 1300 years ago and therefore, the founders of Islam must have copied, incorporated and accommodated many things from others.
I do not think that they have 100% oure, original and patrented things from the beginning.
Under such circumstances, such exclusive claims being made in current century have been against all democratic, secular and humanitarian norms and standards.
செப்ரெம்பர் 11, 2010 இல் 9:30 முப
im feeling it
செப்ரெம்பர் 12, 2010 இல் 12:58 முப
Good that you are feeling it.
That is how perhaps, the Muslims also would have felt it.
But the fundamentalist and fanatic Muslims oppose such “feeling”!
ஒக்ரோபர் 13, 2010 இல் 11:46 முப
இஸ்லாம் ஒன்றும் ஆகாசத்தில் வந்து குதித்துவிடவில்லை.
இன்று கூட மறைமுகமாக, உருவ வழிப்பாட்டை அதிகமாகவே முஸ்லீம்கள் செய்து வருகின்றனர்.
வெளியில் வேண்டுமானால், இல்லை என்று நடிக்கலாம்.
மனத்தளவில் இவரிவர் / அவரவர் இப்படித்தான் / அப்படித்தான் இருப்பார்கள் என்றறியாமல் எப்படித்தான் அவர்கள் தொழுவார்களோ அல்லாவிற்குத்தான் வெளிச்சம்.