ஜமாஅத்-இ-இஸ்லாமி, போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா எதிராக இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் போராட்டம்!

ஜமாஅத்-இ-இஸ்லாமி, போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா எதிராக  இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் போராட்டம்!

ஜமாஅத்-இ-இஸ்லாமி, போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா யூனியன் எதிராக  முஸ்லீம் லீக் போராட்டம்!: இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், ஜமாஅத்-இ-இஸ்லாமி, போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா போன்ற தீவிரவாத இயக்கங்களை எதிர்த்து போராடுவோம் என்று அறிவித்திருக்கிறார்களாம் [அதுசரி, அவர்களை காஃபிர்கள் என்று அறிவிப்பார்களா?]. மக்களிடம் தாங்கள் இழைத்தக் கொடுமைகளை மறைக்க இந்த இயக்கங்கள் முயற்சி செய்கின்றன என்றும் எடுத்துக் காட்டினார்கள் [எந்த மக்களை என்று சொல்லவில்லையே/]. மக்களிடையே அவர்கள் தீவிரவாத சித்தாந்ததைப் பரப்பி வருகிறர்கள், மக்களை தவறான திசைக்கு வழிகாட்டுகிறார்கள் என்றும் குற்றாஞ்சாட்டினர். இனி இந்த தீவிரவாத இயக்கங்களின் கொடுமைகளைப் பற்றிப் பிரச்சாரம் செய்யப்போவதாகவும், அவைகளுடன் எந்த கூட்டும் வைத்துக் கொள்ளப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்கள்.

கோட்டக்கல்லில் நடந்த முஸ்லீம் அமைப்புகளின் கூட்டம்: சனிக்கிழமை (31-07-2010) கோட்டக்கல்லில் (மல்லப்புரம் மாவட்டம்) நடந்த கூட்டத்தில் இவ்வாறு முடிவு எடுத்து இருக்கிறார்களாம். முஸ்லீம் லீக்கைத்தவிர, சுன்னி – இகே மற்றும் ஏபி குழுக்கள் உட்பட (EK and AP sections of Sunni), முஜாஹித் இயக்கங்கள், சமஸ்த கேரளா ஜமாயத்-உல்-உலமா, கேரள முஸ்லீம் சேவை சங்கம் (Muslim Service Society -MSS), முஸ்லீம் கல்வி சங்கம் (Muslim Educational Society -MES).

முஸ்லீம்களில் சிறுபான்மையினர் தாம் இவ்வாறு தீவிரவாத வேலைகளை செய்து வருகிறார்கள்: குன்ஹாலங்குட்டி, “தீவிரவாதத்தை எந்த வகையிலும் அனுமதிக்கமுடியாது. முஸ்லீம்களில் சிறுபான்மையினர் தாம் இவ்வாறு தீவிரவாத வேலைகளை செய்து வருகிறார்கள். நாங்கள் இந்த கொள்கையை கடைப்பிடிப்போம், தீவிரவாதத்திலிருந்து மீண்டு வெற்றிகரமாக வருமோம் என்று நம்புகிறோம்”, என்று பேசினார்[1]. அச்சுதானந்தன் கேரள மக்களை முஸ்லிம்களாக மதம் மற்றுகிறார்கள் என்று சொன்னதிற்காக எதிர்ப்பும் தெரிவித்தனர். கேரளா மற்றும் மேற்கு வங்காளம் முஸ்லீம்களுக்கு எந்த சமூக வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டினர்[2].

கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் முஸ்லீம்களும், கம்யூனிஸ்ட்டுகளும் சேர்ந்து இருப்பது: 60 வருடங்களுக்கு மேலாக, இந்த இரண்டு மாநிலங்களில் முஸ்லீம்களும், கம்யூனிஸ்ட்டுகளும் ஒன்றாகத்தான் அரசியல்-சித்தாந்த ரீதியில் வேலைசெய்து வருகிறர்கள். கடவுள் இல்லை என்கின்ற கூட்டாத்தர்களுடன், குறிப்பாக காஃபிர்களுடன், இந்த மோமின்கள் எப்படி காலந்தள்ளியுள்ளனர் என்பது அவரவர் கடவுளர்களைத்தான் கேட்கவேண்டும். செக்யூலரிஸம் பேசி கத்திக் கொண்டிருக்கும் இந்த கூட்டங்களுக்கு வெட்கமில்லாமல், அவ்வாறு குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதில், நடு-நடுவே காங்கிரஸும் சேர்ந்து கொள்ளும். இந்தக் கூட்டத்தார்களுக்கு, என்ன நாம் இவ்வாறு நடந்து கொள்கிறோமே, மக்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்பட்டதில்லை. ஆனால், இப்பொழுது அவர்களுக்கு வாழ்க்கை கசந்துவிட்டது போலும்!

ஏன் இந்த இரண்டு மாநிலங்களில் மட்டும் அதிகமாக தீவிரவாதம் வளர்ந்திருக்கக்கூடும்? கம்யூனிஸ்ட்டுகளே பயப்படும் அளவிற்கு எப்படி இஸ்லாமியத் தீவிரவாதம் இந்த மாநிலங்களில் வளர்ந்திருக்கமுடியும்? இதை அலசும்போது கூட இம்மாநிலங்களில் தான், ஒருவருடைய கை வெட்டப்பட்டுள்ளது, இன்னொரு முஸ்லீம் பெண்ணே பாடம் எடுக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. எந்த சமூக-பொருளாதார குற்றமாகியிலும், அதன் பின்னணியை ஆய்ந்து பார்த்தால், இம்மாநிலங்களில் ஜிஹாதிகளின் பங்குதான் வெளிப்பருகிறது. ஆகையால்தான், இன்று!: இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் போன்ற முஸ்லீம் அடிப்படைவாதக் கட்சிகளே, ஜமாஅத்-இ-இஸ்லாமி, போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா போன்ற தீவிரவாத இயக்கங்களை எதிர்த்து போராடுவோம் என்று அறிவித்திருக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. நாங்கள், “சிறுபான்மையினர், சிறுபான்மையினர்”, என்று சொல்லிக்கொண்டு, பெரும்பான்மையினரை சிறுபான்மையினரைவிட தாழ்த்தி, அவர்களுக்கு உரிமைகள் இல்லாமால் ஆக்கிவிட்டு, இன்று, “முஸ்லீம்களில் சிறுபான்மையினர் தாம் இவ்வாறு தீவிரவாத வேலைகளை செய்து வருகிறார்கள்”, என்று சொல்லவேண்டிய நிலையில் வந்துவிட்டது வேடிக்கையகத்தான் உள்ளது. இதுவும் கருணாநிதி-ஜெயலலிதா போன்ற அரசியலா, வாய்ஜால-விளையாட்டுகளா, அறிக்கை-வேடிக்கைகளா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


[1] http://www.hindu.com/2010/08/01/stories/2010080157670100.htm

[2] http://ibnlive.in.com/generalnewsfeed/news/iuml-slams-left-govts-in-kerala-wb-for-neglecting-muslims/192444.html

Explore posts in the same categories: குன்ஹாலங்குட்டி, கேரள முஸ்லீம் சேவை சங்கம், சுன்னி – இகே மற்றும் ஏபி குழுக்கள், ஜமாயத்-உல்-உலமா, போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா, மஸ்த கேரளா ஜமாயத்-உல்-உலமா, முஸ்லீம் கல்வி சங்கம், முஸ்லீம்களில் சிறுபான்மையினர்

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

4 பின்னூட்டங்கள் மேல் “ஜமாஅத்-இ-இஸ்லாமி, போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா எதிராக இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் போராட்டம்!”

  1. W. F. Periyardasan Says:

    But,in spite of everything, it is surprising that none of the political parties, secularists and others do not call for banning these extremist and terror organizations.

  2. M. Dhandayuthapani. Says:

    Muslims cannot be changed, as they have been brainwashed with theirt own ideologies.

    Islam has never kept any country in peace and therefore, the full Islamization could bring only “hell on the earth”, as the Islamic countries have been witnessing everywhere.

    Unless, the Muslims themselves understand the truth and leave Islam, the Muslims cannot be protected from the doom!

    • Dawood Ali Miyan Says:

      One way, you have told some truth.

      Yes, these Muslims cannot be changed, as they know only ideologized Islam and not true Islam.

      Yes, full Islamization could bring peace on the earth, but as it is not followed in the true sense, muslims are fighting with each other in the so calleed Islamic countries.

      These people can definitely, leave Islam, so that Islam could be purified.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: