வஞ்சிநாடு எக்ஸ்பிரசில் வெடிகுண்டு பொருட்கள் கம்ப்யூட்டரில் படம் வரைந்து குற்றவாளியை தேடல்
வஞ்சிநாடு எக்ஸ்பிரசில் வெடிகுண்டு பொருட்கள் கம்ப்யூட்டரில் படம் வரைந்து குற்றவாளியை தேடல்
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=45135

வஞ்சிநாடு எக்ஸ்பிரசில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு பொருட்கள் அனாதையாகக் கிடந்தது.கோட்டயம், ஜூலை 22,2010 : வஞ்சிநாடு எக்ஸ்பிரசின் பொதுப் பயணிகள் பெட்டியில், சக்தி வாய்ந்த வெடிகுண்டு பொருட்கள் அனாதையாகக் கிடந்தது. சம்பந்தப்பட்டதாகக் கருதும் நபரின் படத்தை, போலீசார் வெளியிட்டு தேடி வருகின்றனர். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இயக்கப்படும் வஞ்சிநாடு எக்ஸ்பிரஸ், கடந்த 8ம் தேதி சென்று கொண்டிருந்தது. மாவேலிக்கரா ரயில் நிலையத்தில் நின்றபோது, பொதுப் பெட்டி (பெட்டி எண்: 02633) இருக்கை எண்: 68ல், அனாதையாக கவர் ஒன்று கிடப்பதை, ரயில்வே போலீசார் கண்டெடுத்தனர்.
பயணிகள் சொல்லிய அடையாளங்கள்: அதில், ஜெலட்டின் குச்சிகள், இரு டெட்டனேட்டர்கள், பியூஸ் ஒயர் ஆகியவை இருந்தன. இதுகுறித்து, அப்பெட்டியில் இருந்த பயணிகளிடம் ரயில்வே போலீசார் விசாரித்தனர். ஆறாயிரம் பேரை விசாரித்துள்ள நிலையில், எர்ணாகுளம் – மாவேலிக்கரா இடையே, அந்த ரயிலில் தினமும் பயணம் செய்பவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு விசாரணை நடந்தது. விசாரணையில், அந்த கவரை ரயிலில் போட்டு விட்டு சென்ற நபர் 35 வயது தோற்றமுடையவர் என்பதும், 170 செ.மீ., உயரமும், சிவப்பு நிறம், சுமாரான உடல்வாகு கொண்டவர் என்பதும் தெரிந்தது.
நபரை பிடிப்பதற்குள் தப்பி ஓடிவிட்டானாம்! “தோற்றத்தை வைத்து பார்த்தால், அவர் வியாபாரம் செய்பவர் போல் தென்பட்டார்’ என, அப்பெட்டியில் அவரருகே பயணித்த பயணிகள் தெரிவித்தனர். தினமும் அந்தரயிலில் பொதுப் பெட்டியில், மேற்கண்ட இருக்கைகளில் பயணிப்பவர்களில், இரு அரசு அலுவலர்கள் குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மர்ம நபரிடமிருந்த கவரில் இருப்பது, வெடிகுண்டு பொருட்கள் தான் என்பது பயணிகளுக்கு தெரிந்து, அனைவரும் ஒன்று கூடி, அந்த நபரை போலீசிடம் ஒப்படைக்க தயாராயினர். அதற்குள் அந்த நபர், செங்கன்னூரில் ரயில் நின்றதும் தப்பி ஓடி விட்டார். போலீசார் சந்தேகிக்கும் நபர், பயணிகள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், கம்ப்யூட்டர் உதவியுடன் வரையப்பட்டது. அப்படத்தை வெளியிட்ட போலீசார், தீவிரமாக தேடி வருகின்றனர்
Explore posts in the same categories: செங்கன்னூர், ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள், பியூஸ் ஒயர், மாவேலிக்கரா, வஞ்சிநாடு எக்ஸ்பிரஸ், வெடிகுண்டு பொருட்கள்குறிச்சொற்கள்: எர்ணாகுளம், செங்கன்னூர், ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள், திருவனந்தபுரம், பியூஸ் ஒயர், மாவேலிக்கரா, வஞ்சிநாடு எக்ஸ்பிரஸ், வெடிகுண்டு பொருட்கள்
You can comment below, or link to this permanent URL from your own site.
ஜூலை 26, 2010 இல் 9:29 முப
Kerala has significant Muslim population who have links with gulf countries and as well as operators in Iran, Afganisthan and Pakistan and of course, the non-state players from the POK.
As China helps logistically, India cannot match for those trainers, operators and handlers.
Here only, Kerala plays a major role.
Therefore, if explosives are traded and taken to places like vegetables, the security status of India has been in a ridiculous state.