குண்டு வெடிப்பு கைதி மீண்டும் கைது : மாநில உள்துறை உத்தரவு எதிரொலி!

குண்டு வெடிப்பு கைதி மீண்டும் கைது : மாநில உள்துறை உத்தரவு எதிரொலி,

ஜூலை 19,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=42967

குண்டு வெடிப்பு கைதி மீண்டும் கைது : மாநில உள்துறை உத்தரவு எதிரொலி: கோவை : நன்னடத்தை உத்தரவாதத்தை மீறி குற்றத்தில் ஈடுபட்ட குண்டு வெடிப்பு வழக்கின் முன்னாள் கைதி, மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கான உத்தரவை, மாநில உள்துறை செயலகம் பிறப்பித்திருந்தது.

கோவை நகரில் உள்ள கரும்புக்கடை, சாரமேடு பகுதியைச் சேர்ந்தவர் அஷ்ரப்(40). கடந்த 1998ல் கோவை நகரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 13 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த ஆண்டில், அண்ணாதுரை பிறந்த நாளில் தண்டனை குறைப்புக்கான தமிழக அரசின் சிறப்பு உத்தரவு மூலம் விடுதலை பெற்றார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் எவ்வித குற்றத்திலும் ஈடுபடக்கூடாது என்ற நன்னடத்தை நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இவர், திருட்டு “சிடி’ பதுக்கிய வழக்கில் கடந்த 5ம் தேதி மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், 10ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை குறைப்பு பெற்று விடுதலையாகும் போது அளித்த உத்தரவாதத்தை இவர் மீறிவிட்டதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும், தமிழக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., அலுவலகம், மாநில உள்துறைக்கு பரிந்துரைத்தது. உள்துறை பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்ட கோவை சி.பி.சி.ஐ.டி., (எஸ்.ஐ.டி.,) போலீசார், அஷ்ரப்பை மீண்டும் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “நன்னடத்தை நிபந்தனையை மீறி குற்றத்தில் ஈடுபட்டு மீண்டும் கைதாகியுள்ள நபர், குண்டு வெடிப்பு வழக்கில் முன்னர் விதிக்கப்பட்ட தண்டனை காலம் முடியும் வரை சிறையில் இருப்பார். இவருக்கு மீண்டும் தண்டனை குறைப்பு வழங்கப்பட மாட்டாது’ என்றார்.

Explore posts in the same categories: குண்டு வெடிப்பு வழக்கு, தண்டனை குறைப்பு, திருட்டு சிடி பதுக்கல், நன்னடத்தை நிபந்தனை

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

3 பின்னூட்டங்கள் மேல் “குண்டு வெடிப்பு கைதி மீண்டும் கைது : மாநில உள்துறை உத்தரவு எதிரொலி!”

  1. vedaprakash Says:

    கைதிகள் விடுதலையில் பாரபட்சம் : அல்-உம்மா பாஷா புகார்
    செப்டம்பர் 16,2008,00:00 IST
    http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=4766

    கோவை : “”ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை பாரபட்சமானது; எங்களையும் விடுதலை செய்ய வேண்டும்,” என அல்-உம்மா நிறுவனர் பாஷா, சிறை அதிகாரிகளிடம் நேற்று வலியுறுத்தினார். அண்ணாதுரை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 296 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களில் ஏழு முஸ்லிம்கள், ஆறு கிறிஸ்தவர்கள் மற்றும் 12 பேர் சீனியர் சிட்டிசன்கள் உள்ளனர். இதற்கான விழா நேற்று காலை சிறை வளாகத்தில், போலீஸ் கமிஷனர் மஹாலி தலைமையில் நடந்தது.

    அதே நேரத்தில், சிறை வளாகத்துக்கு வெளியே, தனிக்கோர்ட் அருகே, சிறுபான்மை அறக்கட்டளை செயலர் உம்மர்ஷா தலைமையில், 100 ஆண்கள், பெண்கள் திடீரென மறியலில் ஈடுபட முயன்றனர். இதை தடுத்து நிறுத்திய போலீஸ் அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தினர். “கோவை மத்திய சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு வழங்கும் சலுகையை எங்கள் குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும்’ என, தொடர் கோஷம் எழுப்பினர்.

    மறியல் நடந்த இடத்துக்கு விரைந்து வந்த ஆர்.டி.ஓ., பாலச்சந்திரன், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தி, கோரிக்கைகளை எழுதி பெற்றுக் கொண்ட பிறகே, மறியலை கைவிட்டனர்.

    அல்-உம்மா நிறுவனர் பாஷா, சிறை கண்காணிப்பாளரை சந்தித்து, “தமிழக அரசு எடுத்துள்ள இந்த விடுதலை முடிவு பாரபட்சம் கொண்டது. எங்களையும் விடுதலை செய்ய வேண்டும்’ என, வலியுறுத்தினார். சிறை கண்காணிப்பாளர்(பொறுப்பு) கோவிந்தராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், பாஷாவை சமாதானப்படுத்தினர்.

  2. M. R. Pannerselvam Says:

    First of all, releasing terrorists has been a great blunder in Tamilnadu.

    The second thing is their incoorigible characer and attitude.

    Third, the way in which they commit offences, as perhaps, their advocates and councels would have taught that no criminal could be charged twice for the sme offence; or no murderer could be anged twice for the same murder and so on.

    In fact, the government should compund the offences and punish them suitably.

    As Tilaks and Savarkars have been deported to Andamans and punished severely, Bagat Singh, Har Dayal and others have been hanged, ………law enforcing authorities ned not wait for them to commit another offence to arrest and put in jail.

    Karunanidhi should learn his criminally appeasing tactics with the terrorists and change himself.

  3. Nazir Hussain Says:

    Again, you see the local politics has been dirty in India.

    It is unimaginable in any country to release the terrorists on any account.

    So if they are get released like ordinary and other offenders and criminals, they would again indulge in the same or similar activities and the government cannot do anything.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: