அப்துல் ரஹீம் மூன்று, முஹமது இலியாஸ் நான்கு பெண்களை திருமணம் செய்ததால் கைது!

நான்கு பெண்களுடன் திருமணம் : “ஜாலி’ கல்யாண மன்னன் கைது!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=51030

தினமலர், ஜூலை 30,2010, கோவை : நான்கு பெண்களை திருமணம் செய்து, வரதட்சணை பணத்தில் ஜாலியாக உல்லாச வாழ்க்கை அனுபவித்த நபர் கைது செய்யப்பட்டார்.

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இலியாஸ்(36); டிரைவர்.

  1. சாம்லா: இவர் சில ஆண்டுகளுக்கு முன், கேரளாவைச் சேர்ந்த சாம்லா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
  2. ரம்லத் நிஷா: இந்த தகவலை மறைத்து இரண்டாவதாக செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ரம்லத் நிஷா(27) என்பவரை 2005ல் திருமணம் செய்து கொண்டார்.
  3. சோபியா: தெரிந்து ஒருவருடனும், தெரியாமல் மற்றொருவருடனும் குடும்பம் நடத்தி வந்த இலியாஸ்,  மூன்றாவதாக சோபியா என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார்.
  4. மற்றொரு ரம்லத் நிஷா: நான்காவதாக கேரளாவைச் சேர்ந்த மற்றொரு ரம்லத் நிஷாவையும் திருமணம் செய்துள்ளார்.

சமீபத்தில் இவரது நிஜ முகம் பற்றி அறிந்த இரண்டாவது மனைவி ரம்லத் நிஷா, முகமது இலியாசிடம் கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து, வரதட்சணை கேட்டு முகமது இலியாஸ் துன்புறுத்தினார். செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ரம்லத் நிஷா புகார் அளித்ததையடுத்து, முகமது இலியாஸ் கைது செய்யப்பட்டார்.

அப்துல் ரஹீம் மூன்று பெண்களை திருமணம் செய்ததால் கைது!

முதல் மனைவி – ரஹமத் (13-07-2010): கோவை, ஜூலை 12: கோவையில் 3 பெண்களை திருமணம் செய்த பப்ஸ் வியாபாரி கைது செய்யப்பட்டார்[1]. விருதுநகர், வீரசீலம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (32). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன், கோவை வந்த இவர், பப்ஸ் வியாபாரம் செய்து வந்தார்.  ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரகமத் (22) என்பவரை முதலில் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சம்சுன் நபியாவை இரண்டாவதாக நிக்காஹ் செய்து கொண்டார்: இந் நிலையில், முதல் மனைவிக்கு தெரியாமல், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், சம்சுன் நபியா (27) என்பவரை திருமணம் செய்தார்.

மூன்றவதாக பசீலா: மகப்பேறுக்காக அவர் தாயார் வீட்டு சென்றபோது, ரத்தினபுரியை சேர்ந்த பசீலா (24) என்பவருடன் அப்துல் ரஹீம் குடும்பம் நடத்தினாராம்.

முதல் மனைவி புகார்: நீண்ட நாள்களாக அவர் வீட்டுக்கு திரும்பாததால், சம்சுன் நபியாவிற்கு சந்தேகம் ஏற்பட்டது. இந் நிலையில், தனது கணவர் இரு திருமணங்களைச் செய்து ஏமாற்றியது அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நபியா புகார் தெரிவித்தார். வழக்குப் பதிவு செய்த போலீஸார், அப்துல் ரஹீமை கைது செய்தனர்[2].

இது மாதிரி ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளன: இஸ்லாத்தில், சட்டரீதியாக (அதாவது அவர்களது ஹதீஸ் / ஷரீயத்படி) ஒரு ஆண்மகன் ஒரே நேரத்தில் நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ளலாம் என்றுள்ளபோது, இங்கு என்ன பிரச்சினை வருகிறது என்று தெரியவில்லை. இதுமாதிரி, ஏற்கெனவே பல வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், அவை என்னவாயின என்று ஊடகங்கள் வெளியிடுவதில்லை.


[1]தினமணி, மூன்று திருமணம் செய்த பப்ஸ் வியாபாரி கைது,  First Published : 13 Jul 2010 08:35:35 AM IST; http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Coimbatore&artid=271233&SectionID=136&MainSectionID=136&SEO=&Title=3………….81

[2] http://www.dailythanthi.com/article.asp?NewsID=579784&disdate=7/13/2010&advt=2

Explore posts in the same categories: ஃபத்வா, இரண்டாம் பெண்டாட்டி, இரண்டாம்மனைவி, இஸ்லாம், சரீயத், சரீயத் சட்டம், ஜீவானாம்சம், தலாக், தலாக்-தலாக்-தலாக், நான்காம் பெண்டாட்டி, நான்காம் மனைவி, நான்கு பெண்டாட்டிகள், நிக்கா, பல திருமணம் ஏன்?, பலமணம், பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், மனைவி, முதல் பெண்டாட்டி, முதல் மனைவி, முலை, முலைப்பால், முலைப்பால் ஊட்டுவது, முலைப்பால் பந்தம், முஸ்லிம் பெண்கள், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், மூன்றாம் பெண்டாட்டி, மூன்றாம் மனைவி, லவ் ஜிஹாத், விவாக ரத்து

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

5 பின்னூட்டங்கள் மேல் “அப்துல் ரஹீம் மூன்று, முஹமது இலியாஸ் நான்கு பெண்களை திருமணம் செய்ததால் கைது!”

  1. R. Jyotilingam Says:

    ஆமாம், நான்கு மனைவிகளை ஒரே நேரத்தில் வைத்திருக்கலாம், இன்று இஸ்லாம் முறைப்படி வாதித்தால், அதற்கேற்றபடி அந்த பெண்களும் ஒப்புக்கொண்டால், வழக்கு உடைந்துவிடுமே?

  2. M. Dhandayuthapani. Says:

    Yes, when Hindus get converted to have more wives, why not Muslims?

    It is all media blitz, and gymmicks to divert the real issues.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: