குவைத்தில் சித்ரவதைப்படும் தாயை மீட்டுத் தரக் கோரி மகன், மகள் மனு
குவைத்தில் சித்ரவதைப்படும் தாயை மீட்டுத் தரக் கோரி மகன், மகள் மனு
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38065
வீட்டுவேலை செய்ய குவைத்திற்குச் சென்ற பெண்: திருச்சி – ஜூலை 12, 2010 : “குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு சென்ற இடத்தில், சித்ரவதை செய்யப்படும் தங்களது தாயை மீட்டுத் தர வேண்டும்’ என, மகனும், மகளும் திருச்சி கலெக்டரிடம் மனு அளித்தனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புரத்தாக்குடி புல்லம்பாடி தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி தனலட்சுமி (42). இவர்களுக்கு மலர்கொடி (25), கல்பனா (23), ராசாத்தி (16) என்ற மூன்று மகள்கள், சேகர் (18) என்ற மகனும் உள்ளார். தனலட்சுமியின் கணவர் கிருஷ்ணன் 17 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அதன்பின் தனலட்சுமி கூலிவேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்தார். மூத்த மகள் மலர்கொடிக்கு திருமணம் செய்து வைத்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த காளை மற்றும் தேவேந்திரன் ஆகியோர் உதவியுடன், தனலட்சுமி, 2010 ஜனவரியில் குவைத் நாட்டுக்கு வீட்டு வேலைக்காக சென்றார். அவருக்கு பேசிய படி மாதம் 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படாமல் 6,000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. சில மாதங்கள் கழித்து லால்குடியில் உள்ள குடும்பத்தினரிடம் பேசிய தனலட்சுமி, “நான் வேலைக்கு சென்ற வீட்டில் என்னை அடித்து சித்ரவதை செய்கின்றனர். என்னை எப்படியாவது இந்தியாவுக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என, தெரிவித்துள்ளார்.
சித்திரவதை செய்யப்படுவதாக கடிதம்: தொடர்ந்து, அடுத்தடுத்த சித்ரவரை குறித்து தனலட்சுமி தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன் தனலட்சுமி எழுதிய கடிதத்தில்,”நான் மிகவும் சித்ரவதை அனுபவித்து வருகிறேன். என்னை மீட்க நடவடிக்கை எடுங்கள். இந்த கடிதம் உங்கள் கையில் கிடைப்பதற்குள் நான் இறந்தும் போய்விடலாம்‘ என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், திருச்சி கலெக்டர் (பொ) தட்ஷிணாமூர்த்தியிடம், தனலட்சுமியின் மகள் மலர்கொடி, மகன் சேகர் ஆகியோர், தங்களது தாயை மீட்டுத் தரும்படி மனு அளித்தனர்.
விபசார கும்பலிடம் ஏதும் சிக்கித் தவிக்கிறாரா? அதன்பின், மலர்கொடி நிருபர்களிடம் கூறுகையில், “”குவைத்தில் செலவில்லாமல் வேலை; மாதம் 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று கூறி அழைத்துச் சென்று, எங்கள் அம்மாவை சித்ரவதை செய்கின்றனர். அங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. முதலில் போன் செய்து பேசினார்; தற்போது அதுவும் இல்லை. கலெக்டர் நடவடிக்கை எடுத்து மீட்டுத்தர வேண்டும்,” என்றார். உடன் வந்த மலர்கொடியின் சித்தப்பா காசி கூறுகையில், “”குவைத்தில் தனலட்சுமி விபசார கும்பலிடம் ஏதும் சிக்கித் தவிக்கிறாரா? என்று சந்தேகமாக உள்ளது. இதுகுறித்து தீவிரமாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
Explore posts in the same categories: அடித்து சித்ரவதை, குவைத், குவைத்தில் விபசார கும்பல், குவைத்தில் வீட்டு வேலை, வீட்டு வேலைகுறிச்சொற்கள்: அடித்து சித்ரவதை, குவைத், குவைத்தில் விபசார கும்பல், குவைத்தில் வீட்டு வேலை, செலவில்லாமல் வேலை, வீட்டு வேலை
You can comment below, or link to this permanent URL from your own site.
மார்ச் 30, 2014 இல் 8:53 முப
[…] [13]https://islamindia.wordpress.com/2010/07/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0… […]