தலாக் செய்யப் பட்ட பெண், தப்பான தீர்ப்பு என்று மௌலானாவை அடித்தாளாம்!
தலாக் செய்யப் பட்ட பெண், தப்பான தீர்ப்பு என்று மௌலானாவை அடித்தாளாம்!
“தலாக், தலாக், தலாக்”: முஸ்லீம் வழக்கப்படி, கணவன் தனக்கு தன் மனைவியைப் பிடிக்கவில்லை என்றால், “தலாக், தலாக், தலாக்” என்று மூன்றுமுறைக் கூறி, விவாக ரத்து செய்து விடலாம். இதைப்பற்றி பலதரமான கருத்துகள் நிலவி வருகின்றன[1]. முஸ்லீம்கள் பெரும்பாலும் இதை துஷ்பிரயோகம் செய்கின்றனர் என்பது பரவலான கருத்து. குறிப்பாக படிக்காத பெண்களை ஏமாற்ற இம்முறைக் கையாளப்படுவதாக, பலமுறை புகார்கள் வந்துள்ளன[2]. அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியமும், இதைப் பற்றி பலமுறை விவாதித்துள்ளது. இருப்பினும், அடிப்படைவாத முஸ்லீம்கள், இம்முறையைத் தொடர்ந்து கையாண்டு வருகின்றனர்.
ஒரு மத்ரஸாவைச் சேந்த ஒரு மௌலானாவும், ஊழியர்களும் பெண்களால் அடித்து நொறுக்கப்பட்டார்களாம்: ஒரு மத்ரஸாவைச் சேந்த ஒரு மௌலானாவும், ஊழியர்களும் பெண்களால் அடித்து நொறுக்கப்பட்டார்களாம்[3]. லக்னௌவில் சுல்தான்-அன்னுவல் மத்ராஸி என்ற முஸ்லீம் மடம் இருக்கிறது. மௌலானா அஸ்கர் அலி என்பவர் அங்கு இஸ்லாமிய முறைப்படி தீர்ப்பு வழங்கி வந்தார். கடந்த புதகிழமையன்று (23-06-2010), மும்தாஜ் ஃபாத்திமா என்கின்ற ஹீனா மற்றும் அலி இம்ரான் என்பவர்களுக்கிடையேயுள்ள ஒரு விவாக ரத்து வழக்கில் / தலாக்கில் தீர்ப்பு வழங்கி தலாக்-நாமா என்ற விடுதலைப் பத்திரத்தையும் வழங்கி விட்டார்.
சரியாக ஆராயாமல் ஒருதலைப் பட்சமாகத் தீர்ப்பு வழங்கிவிட்டார் என்று கோபம் கொண்ட பெண்கள் மௌலானவை அடித்தனர்: பாதிக்கப்பட்ட மும்தாஜ் ஃபாத்திமா என்கின்ற ஹீனா மற்ற பெண்களிடம் சொன்னதாகத் தெரிகிறது. உடனே, ஒருதலைப் பட்சமாகத் தீர்ப்பு வழங்கிவிட்டார் என்பதனால், கோபம் கொண்ட பெண்கள் – ஹீனா, நிஷாத் ஃபாதிமா, அர்ஷி முதலியோர், மத்ரஸாவிற்குச் சென்று, அந்த மௌலானாவை- இவ்வாறு அதிரடியாகத் தாக்கி அடித்தனர். போலீஸ் இதனை அறிவித்துள்ளனர். அடிவாங்கிய மௌலானா வாஸிர் கஞ்ச் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்[4]. பதிலுக்கு பெண்களும், சரியாக விசாரிக்காமல் உண்மைக்குப் புரம்பாக மற்றும் இருதரப்பினரது ஒப்புதலை வாங்காமல் தீர்ப்பு வழங்கியுள்ளர் என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்[5].
இந்திய முஸ்லீம்கள் அந்த பெண்ணைப் பாராட்டுவார்களா, குறைகூறுவார்களா? ஏற்கெனவே, அந்த பெண்கள் இஸ்லாமிய அமைப்பிற்கு செட்ட பெயரை ஏற்படுத்தி விட்டார்கள் என்று, உள்ளூரில் பேச ஆரம்பித்து விட்டார்கள். பெண்களோ, தாங்கள் மதத்தை மதிப்பதாகவும், ஆனால், ஆண்கள் இம்முறையால் தங்களது வாழ்க்கையினைக் கெடுத்து விடுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.
[1] http://www.indianexpress.com/news/triple-talaq-dowry-to-top-agenda-at-aimplb/579755/
[2] http://timesofindia.indiatimes.com/articleshow/757515.cms
[3] http://www.hindu.com/2010/07/01/stories/2010070162670700.htm
[4] http://www.ndtv.com/article/cities/women-thrash-maulana-for-endorsing-one-sided-talaq-34763
[5] http://www.mid-day.com/news/2010/jun/300610-women-thrash-maulana-endorsing-one-sided-talaq-UP.htm?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+mdnews%2Fnational+%28Mid+Day+National+News%29
Explore posts in the same categories: அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம், தப்பான தீர்ப்பு, தலாக்-தலாக்-தலாக், மத்ரஸா, மௌலானாவை பெண்கள் அடித்தது, விவாக ரத்துகுறிச்சொற்கள்: அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம், தப்பான தீர்ப்பு, தலாக், தலாக்-தலாக்-தலாக், மத்ரஸா, மௌலானாவை பெண்கள் அடித்தது, விவாக ரத்து
You can comment below, or link to this permanent URL from your own site.
ஓகஸ்ட் 25, 2014 இல் 11:13 முப
முதல் தலாக் சிறிது கால அவகாசம் இரண்டாவது தலாக் சிறிது கால அவகாசம் மூன்றாவது தலாக் இறுதியானது அவகாசம் இருவரும் மனமுவந்து சேர்வதற்காக கொடுக்க பட்டுள்ளது மனைவியும் தலாக் விடலாம் கணவன் பிடிக்கவில்லயென்றால் பெண்களும் தலாக் விடலாம் அதற்க்கு அரபியில் குலா என சொல்வார்கள்
தலாக் தலாக் தலாக் ஒரே முறையில் கொடுக்க முடியாது
செப்ரெம்பர் 9, 2014 இல் 3:15 முப
நல்லது.
முகமதியர் அவ்வாறு நடந்து கொள்கிறார்களா இல்லையா என்பதை எடுத்துக் காட்டுங்கள்.
நன்றி!