இஸ்லாம் பெயரில் இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாமைத் தாக்குகிறார்கள் என்பதனை இஸ்லாமியர்கள் விளக்கவேண்டும்-1

இஸ்லாம் பெயரில் இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாமைத் தாக்குகிறார்கள் என்பதனை இஸ்லாமியர்கள் விளக்கவேண்டும்

அல்லாவைப் பற்றி பிரமாதமாக பேசுகிறார்கள் விளக்கம் கொடுக்கிறார்கள், ஆனால் அல்லாவை நம்புகிறவர்களையே, முஸ்லீம்கள் எதிர்ப்பது, தாக்குவது, கொன்றுக் குவிப்பதை முஸ்லீம்கள் விளக்குவதில்லை.

சுன்னிகள் ஷியாக்களை, போர்ஹாக்களை, அஹமதியாக்களை அவ்வாறு முஸ்லீம்கள் எதிர்ப்பது, தாக்குவது, கொன்றுக் குவிப்பதை – அந்த சூட்சுமத்தை – முஸ்லீம்கள் விளக்குவதில்லை.

முஸ்லீம்களுக்குள்ளேயே நிகழும் இந்த புனித ஜிஹாதின் மகத்துவம் என்ன என்று மற்றாவர்களுக்குப் புரியவைப்பதில்லை.

இஸ்லாமாபாத் 28-05-2010: பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மசூதிக்குள் நுழைந்து சுமார் 2 ஆயிரம் பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். துப்பாக்கி சூடும் நடந்தது. பல இடங்களில் கையெறி குண்டுகள் வீசப்பட்டன. இதில் பலர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வழக்கமான வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்ததால் பலர் பயங்கரவாதிகளிடம் சிக்கினர். லாகூரில் உள்ள இரண்டு மசூதிகளில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசியபடி நுழைந்தனர். துப்பாக்கியால் சுட்டப்படி வந்தனர். இந்நேரத்தில் என்னசெய்வதென்று அறியாத மசூதியிலேயே பதறியபடி நின்றனர். இந்நேரத்தில் உள்ளே நுழைந்த சுமார் 2 ஆயிரம் பேர் வரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இது வரை 20 பேர் இறந்து விட்டதாக தெரிகிறது. அதிரடி மற்றும் ராணுவத்தினர் மசூதி முன்பாக குவிந்துள்ளனர். தொழுகையில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த தாக்குதலுக்கு தாங்களே பொறுப்பு என திக்ரிக் இ தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. மசூதியில் இருப்பவர்களை மீட்க ராணுவம் போராடி வருகின்றனர். இன்னும் துப்பாக்கி சூடு நீடித்து வருகிறது.

பாகிஸ்தான் மசூதிகளில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்: 80 பேர் பலி
First Published : 29 May 2010 12:00:00 AM IST
Last Updated :
பயங்கரவாதிகள் சுட்டதில் காயமடைந்தவரைக் காப்பாற்ற தூக்கி வரும் பாகிஸ்தானிய கமாண்டோ படை வீரர்.

80 பேர் கொல்லப்பட்டனர், 100 காயம்: லாகூர், மே 28: பாகிஸ்தானிலுள்ள 2 மசூதிகளில் புகுந்து பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில் 80 பேர் பலியாயினர்; 100 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் லாகூரிலுள்ள மாடல் டவுன் மசூதி மற்றும் கார்ஹி சாஹு மசூதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தொழுகை நடந்துகொண்டிருந்தது. இரு மசூதிகளிலும் தலா 1,500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். இதில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர்.

ஜிஹாதிகள் தொழுகை புரியும் முஸ்லீம்களைத் தாக்குதல்: பாகிஸ்தான் நேரப்படி பிற்பகல் 1.45 மணியளவில் இரு மசூதிகளுக்குள்ளும் பயங்கரவாதிகள் புகுந்தனர். மசூதிகளின் வாயிலில் நின்றுகொண்டிருந்த போலீஸார், பாதுகாப்பு அதிகாரிகளை சுட்டுத் தள்ளிவிட்டு உள்ளே புகுந்த பயங்கரவாதிகள், தங்களிடமிருந்த அதிநவீன துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளினர். மேலும் தங்களிடமிருந்த கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதனால் இரு மசூதிகளிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயங்கரவாதிகள் தாக்குதலையடுத்து தொழுகை நடத்திக் கொண்டிருந்த முஸ்லிம்கள் அங்கிருந்த அறைகளுக்குள் சென்று தாளிட்டுக் கொண்டனர். ஆனால் சிலரை பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர்.

முஸ்லீம் போலீஸாரே ஜிஹாதிகளுடம் சண்டையிடுவது: சம்பவம் அறிந்ததும் லாகூர் போலீஸôரும், பாகிஸ்தான் துணை ராணுவப் படையினரும் மசூதிகளை சுற்றி வளைத்தனர். பயங்கரவாதிகளுக்கும், போலீஸôருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த துப்பாக்கிச் சண்டை பிற்பகல் 4 மணிக்கு முடிவுக்கு வந்தது. பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களையும் போலீஸார் மீட்டனர். சுமார் 8 முதல் 10 பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

ஜிஹாதிகள் கொல்லப் படுவது, தொழுகை புரிந்த முஸ்லீம்களும் கொல்லப்படுவது: இதில் 3 பயங்கரவாதிகள் கார்ஹி சாஹு மசூதிக்கு வந்தபோது தங்களது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் ஏராளமானோர் பலியாயினர். அந்த பயங்கரவாதிகளின் தலைகள், உடல்கள் சம்பவ இடத்தில் சிதறிக் கிடந்ததாக போலீஸார் தெரிவித்தனர். போலீஸாருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையின் முடிவில் 2 பயங்கரவாதிகளை போலீஸார் கைது செய்தனர். இதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் ஜின்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மசூதிகளுக்குள் நுழைந்த மற்ற பயங்கரவாதிகளின் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்கள் போலீஸ் தாக்குதலில் இறந்தார்களா அல்லது தப்பியோடி விட்டார்களா என்பது உடனடியாகத் தெரிய வரவில்லை. பயங்கரவாதிகளின் தாக்குதலில் மொத்தம் 80 பேர் பலியாயினர். மேலும் 100 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் இறந்தவர்களில் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல், லாகூரைச் சேர்ந்த டி.வி. சேனலில் பணியாற்றும் பத்திரிகையாளர் ஒருவரும் அடங்குவர்.

தற்கொலைப் படையினர்: மசூதிகளுக்குள் புகுந்த அனைவரும் தெஹ்ரிக்-இ-தலிபான் எனப்படும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அனைவருமே உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு மசூதியில் நுழைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அந்த அமைப்பின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இப்படி இறக்கும் முஸ்லீம்களில் யார் அல்லாவை மகிழ்வித்ததால் சொர்க்கத்திற்குச் செல்லப் போகிறர்கள்

Explore posts in the same categories: அவமதிக்கும் இஸ்லாம், அஹமதியா, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஃபிர், காஃபிர்கள், காபா, குரான், சரீயத், சரீயத் சட்டம், சுன்னி, ஜிஹாத், புனிதப் போர், போர்ஹா, மசூதி, மசூதி சாவு, மத-அடிப்படைவாதம், மதகலவரம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், மினாரெட், மினாரெட் விழுதல், ஷியா

குறிச்சொற்கள்: ,

You can comment below, or link to this permanent URL from your own site.

3 பின்னூட்டங்கள் மேல் “இஸ்லாம் பெயரில் இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாமைத் தாக்குகிறார்கள் என்பதனை இஸ்லாமியர்கள் விளக்கவேண்டும்-1”

  1. அப்துல்லா Says:

    பாகிஸ்தான் கூட, இந்தியாவைப்போல தீவிரவாத்ததால் பாதிக்கப் படுகிறது, என்று இந்த உதாரணங்களை எடுத்துக் கொண்டாலும், இத்தகைய ஒன்றுசேர்ந்திருக்கும் முரண்பாட்டு நிலைமையை இஸ்லாம் / பாகிஸ்தான் தான் விளக்கவேண்டும். இஸ்லாத்தில் உள்ள ஜிஹாதிற்க்கும், வெளீயில் நடக்கும் ஜிஹாதிற்கும் வேறுபாடு உள்ளது.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: