முகத்திரையால் பெண்ணுக்குப் பிரச்சினை என்றால், தாடியால் ஆணுக்குப் பிரச்சினை போலும்!
முகத்திரையால் பெண்ணுக்குப் பிரச்சினை என்றால், தாடியால் ஆணுக்குப் பிரச்சினை போலும்!
தாடி வைத்த ஆணும், அரபு நாட்டிலிருந்து வந்த பெண்ணும்: நூருல் ஹூடா என்ற தியோபந்த் இஸ்லாமிய பண்டிதர் இங்கிலாந்தில் ஒரு கருத்தரங்கத்தில் பங்கு கொள்ள விமானத்தில் உட்கார்ந்து கொண்டராம். செல்-தொலைப்பேசியில் யாருடனோ பேசினாராம். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தவருக்கு, இத்தனைக்கும் அவர் எமிரைட்டிலிருந்து வந்துள்ள ஒரு பயணி, அதுவும் பெண், அவர் பேசியதிலிருந்து சில வார்த்தைகளும் [ஜிஹாத், முஜாஹித்தீன், மதரஸா…………], அவரது உருவத்தையும் கண்டு பயந்து போய், விமானத்தில் உள்ளவர்களிடம் ரகசியமாக விஷயத்தைச் சொல்ல, அவர்கள் போலீஸாரிடம் புகார் செய்து விட்டாராம்.
மௌலானா பெண்ணின் பக்கத்தில் உட்காரலாமா? பெண்கள் வேலைக்குப் போகக் கூடாது என்றுதானே இந்த மௌலானாக்கள் ஃபத்வா விடுகிறார்கள்? பிறகு, எப்படி பெண்கள் பக்கத்தில் ஜாலியாக உட்கார்ந்து கொண்டார்? அத்தகைய ஆசாரம் கடைபிடிக்கும் போது, வேறு இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருக்கலாமே? உட்கார்ந்துவிட்டு, ஏன் ஜிஹாதைப் பற்றியெல்லாம் செல் போனில் (suspicious cell phone call) பேச வேண்டும்? அதுவும் அந்த அமீரகப் பெண்ணிற்கே சந்தேகம் வரும் வகையில், அதுவும், இந்த ஆள் நிச்சயமாக ஒரு தீவிரவாதியாக இருக்கக் கூடிய நிலையில் உள்ளார் (potential terrorist) என்ற அளவில், ஏன் நினைக்க வைக்க வேண்டும்?
A fellow passenger on the flight felt Huda, who is bearded and was wearing a skull cap was a potential terrorist after he made, what she felt was a suspicious cell phone call.
போலீஸாரிடம் சரியாக சொல்லியிருக்க வேண்டியதுதானே? போலீஸார் விசாரித்த போதும் அவர் அவ்வாறே ஏதோ கூறியதால், சந்தேகப் பட்டு, விசாரித்து, வழக்குப் போட்டு திஹார் ஜெயிலில் அடைத்து விட்டார்களாம். ஜாமீனில் வெளியில் விட முடியாதபடி வழக்கு பதிவும் செய்து விட்டார்களாம்.
இது ஏதோ செக்யுலார் பிரச்சினை என்று நினைத்தால், இப்பொழுது இதை மதரீதியிலான விளக்கத்தைக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த பிடிபட்ட மௌலானாவே சொல்வது,
“தாடி வைத்துக் கொண்டு, முஸ்லிம் தொப்பிப் போட்டுக் கொண்டாலே சந்தேகம் படுகிறார்கள். நான் மதரஸாவில் பணி புரிகிறேன், மதரஸா வைத்துள்ளேன்……………..என்றால் போச்சு……………….உடனே தீவிரவாதி என்று முத்திரைக் குத்தி விடுகிறார்கள்“!
உடனே ஊடகக்காரர்கள் சொல்லிவைத்தால் போல, ஒரு ஓய்வு பெற்ற ஒரு துணைவேந்தரைப் பிடித்துக் கொண்டு வந்து, அவரது கருத்தைக் கேட்கிறர்கள். ரூப்ரேகா வர்மா என்றவர் சொல்கிறார். ஏன் ஸபானா ஆஸ்மியிடமோ, அந்த செதல்வாதிடமோ கேட்வில்லை என்று தெரியவில்லை:
“மத-உணர்வுகள் மற்றும் “இப்படித்தான் இருப்பார்கள்” (stereotypes) என்ற எண்ணமும் மனங்களில் பதிந்திருக்கும்போது, அத்தகைய சின்னங்களுடன் வரும் நபரைப் பார்த்தால், அவ்வாறே எண்ணத் தோன்றுவது (தோன்றாதது) அந்த நபருடைய எதிர்கால அதிருஷ்டத்தைப் பொறுத்துதான் உள்ளது. ஒருவேளை நீங்கள் கைது செய்யப் படலாம், அவ்வாறே நடத்தப் படலாம்” என்றெல்லாம் விளக்கமும் அளித்தார்!
கம்யூனிஸ்ட்காரர்களும் சேர்ந்து வக்காலத்து வாங்க வந்து விட்டார்கள். “இந்த கைதானது சட்டங்களை அமூல் படுத்தும் அதிகார வர்க்கத்தினரிடம், சிறுபான்மையினற்கு மீதான தப்பெண்ணம் உள்ளதை எடுத்துக் காட்டுகிறது“, இன்று விளக்கம் அளித்துள்ளனர்!
குல்லா போட்டவர்களை எல்லாம் சந்தேகப் பட்டதில்லையே? சரிதான், ஆனால், ஏன் அந்த ‘அல்லா-குல்லா” போட்டவர்களையெல்லாம், தீவிரவாதி என்று கருத வேண்டும்? இந்தியாவில் பெரும்பாலான அரசியல்வாதிகள், அத்தகைய குல்லா போட்டுக் கொண்டு தான் கஞ்சி குடித்து வருகின்றனர். அப்பொழுது எந்த பெண்ணும் சந்தேகப் பட்டதாகத் தெரியவில்லையே?ஏன் அவர்களது மனைவிமார்களே வேறுவிதமாக நினைத்ததில்லையே? இந்த தடவை அன்பழனுக்காக, அந்த கிருத்துவ பாதிரி, விஷேஷமாக ஒரு குல்லா வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தாரே, அதைத்தானே “இனமான பேராசிசியர்” போட்டுக் கொண்டு கஞ்சி குடித்து, ஆனால் போட்டொ எடுக்கும் போது எடுத்துவிட்டார் [அப்பொழுது பயந்து விட்டார் போலும்]
குல்லா போட்ட கருணாநிதியின் படங்கள் மறையும் ரகசியம் இதுதானோ: சாதாரணமாக, குல்லா போட்ட அரசியல்வாதிகளின் படங்கள், இணைதளங்களினின்று எடுத்துவிடலாம், ஆனால், கருணாநிதி குல்லா போட்ட படங்கள் எல்லாம் மறைந்து விட்டன? இதன் ரகசியம் என்ன என்று புரியவில்லை! உண்மையில் கருணநிதியின் “குல்லா போட்ட” படங்கள்தான் நிறைய இருந்தன. ஆனால் இன்று ஒன்றுகூட கிடைப்பதில்லை.
குல்லா போட்டு கஞ்சி குடித்தால் பிரச்சினை இல்லை, ஜிஹாத் பேசினால் தான் பிரச்சினை: ஏனெனில், குல்லா போட்டு, கஞ்சி குடித்து, இந்து மதத்தைப் பற்றி அவதூறு பேசி சென்று விடுவதால், முஸ்லீம்களுக்கு பிரச்சினையே இல்லை போலும், ஊடகக் காரர்களுக்கும் செமத்தியான விருந்துதான், ஆகையால், அவர்களும் இதுவரைக் கண்டு கொள்ளவில்லை போலும். அப்பொழுது அந்த “ஸ்ட்ரியோ-டைப்” வசனங்கள் எல்லாம் வரவில்லை, எந்த துணைவேந்தரும் வந்து இத்தகைய விளக்கம் கொடுக்கவில்லை! ஆகவே, இங்கே அந்த மௌலானா, ஜிஹாத் பேசியதால் தான் அந்த பிரச்சினையே வந்தது. அந்த உண்மையைப் புரிந்து கொள்ளவேண்டும்.
எல்லோரும் சிதம்பரங்கள் அல்ல, ஜிஹாதிற்கு விளங்கங்கள் பெற்று கருத்தை மாற்றிக் கொள்ள: முன்பு முஸ்லீம்கள் மிரட்டியவுடன், உள்துறை அமைச்சு-சிதம்பரம் பயந்து போய், ஓஹோ அப்படியா, ஜிஹாதிற்கு, அப்படியொரு விளாக்கம் உள்ளதா, எனக்க்குத் தெரியவில்லையே, அதையும் தெரிந்து கொள்கிறேன் என்றது, இங்கு நினைவு படுத்துப் பார்க்க வேண்டும். அரபு நாட்டிலிருந்து வரும் பெண்ணிற்கு ஜிஹாத் என்றால் என்ன என்று தெரிந்திருக்கிறது, ஆனால் சிதம்பரத்திற்குத் தெரியவில்லை. இதுதான் இந்திய செக்யூலரிஸம், இங்குதான் அந்த ஜிஹாதி-தீவிரவாதம் வளர்க்கப் படுகிறது.
Explore posts in the same categories: 786, ஃபத்வா, அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?, அமாவாசையும் அப்துல்காருக்கும், அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், இந்தியர்களை ஏமாற்றுதல், இமாம், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கம்யூனிஸ-காங்கிரஸின் “செக்யூலரிஸக் கூட்டுத் விளையாடல்கள், கருணாநிதி, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், குரான், சரீயத், நூருல் ஹூடா, பர்கா, பர்தா, பர்தா அணிவது, பர்தா காக்கும் உடையா?, பர்தா மத-அடையாளமா?, புனிதப் போர், மினாரெட், வந்தே மாதரம், ஹிஜாப்குறிச்சொற்கள்: ஃபத்வா, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், கருணாநிதி, குல்லா, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், தாடி, நூருல் ஹூடா, முகத்திரை, முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லீம்கள், லவ் ஜிஹாத், ஹிஜாப்
You can comment below, or link to this permanent URL from your own site.
மே 16, 2010 இல் 6:46 முப
I think media has been planting such news to balance out something else.
While the Indian cricketeers are blamed for drinking, dancing and enjoying with girls at pubs, one TV channel is going on carrying out news, as if peoplke of the PUBs in Bangalore is deciding the fate of India.
I do not know how the PUB BRAWLS would differ for these TV channels.
Incidentally, how many of these guys from the media do not drink, date with girls…………………………..to talk about others?
மே 16, 2010 இல் 11:34 பிப
Is it having any bearing on the issue here?
மே 16, 2010 இல் 6:38 பிப
சும்மா கிழிச்சுருக்கிங்க போல
மே 16, 2010 இல் 11:34 பிப
புரியவில்லையே?
மே 17, 2010 இல் 11:49 பிப
Now it is clear, why in India, Indians say many times, that these fanatics should be sent to Pakistan.
But, mow, it is clear that they should be sent to Afghanistan.