20 ஆண்டுகளில் 170 கோவில்கள் சேதம்: ஜம்மு காஷ்மீரில் தான் இந்த சோகம்!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், கடந்த 20 ஆண்டுகளில் பயங்கரவாதிகள் வன்முறை சம்பவத்தில், 170 கோவில்கள் சேதமடைந்துள்ளதாக அம்மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
கடந்த 1990ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
அப்பகுதிகளில் உள்ள பல்வேறு கோவில்களில், மக்கள் வந்து செல்லவும், காஷ்மீர் பண்டிதர்கள் தினசரி பூஜைகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
எனினும், வன்முறைகளின் போது சேதப்பட்ட ஏராளமான கோவில்களை, சீரமைக்கும் பணி திருப்திகரமாக இல்லை; எனவே, அரசு கூடுதல் நிதிகள் ஒதுக்கி, கோவில்களை சீரமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டுமென, காஷ்மீர் பண்டிதர்கள் விரும்புகின்றனர்.
இதுகுறித்து காஷ்மீர் சட்டசபையில் மாநில வருவாய் துறை அமைச்சர் ராமன் பல்லா கூறியதாவது:
காஷ்மீர் பள்ளதாக்கு பகுதி, பயங்கரவாதிகளின் வன்முறைகளுக்கு ஆளாவதற்கு முன், அங்கு 430க்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்தன. அதில், 266 தற்போதும் நல்ல நிலையில் உள்ளன;
170 கோவில்கள் சேதமடைந்து காணப்பட்டன.
அதில் 90 கோவில்கள், 33 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளன.
பதட்டம் நிறைந்த பகுதிகளில் அமைந்துள்ள 17 கோவில்களுக்கு, பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராமன் பல்லா கூறினார்.
Explore posts in the same categories: இந்தியா, இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்கள், இஸ்லாமும் இந்தியாவும், உருவ வழிபாடு, உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கராச்சி திட்டம், கலவரங்கள், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காஷ்மீர் கலாட்டா, காஷ்மீர் சட்டசபை கலாட்டா, சரீயத், சரீயத் சட்டம், சிலை வழிபாடு, ஜம்மு-காஷ்மீர், ஜிஹாத், பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், மதகலவரம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், ரத்தக் காட்டேரிகள், ரத்தத்தினால் ஹோலிகுறிச்சொற்கள்: இந்துக்கள், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீர், கோவிலுக்குச் செல்ல அனுமதி, கோவில் சிலை உடைப்பு, கோவில்கள், கோவில்கள் சேதம், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லிம்கள் சிலை உடைப்பு
You can comment below, or link to this permanent URL from your own site.
ஓகஸ்ட் 13, 2013 இல் 9:59 முப
[…] [8] https://islamindia.wordpress.com/2010/04/10/20-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95… […]