காஷ்மீரத்தில் தொடர்ந்து கலாட்டா செய்யும் மெஹ்பூபா!
காஷ்மீரத்தில் தொடர்ந்து கலாட்டா செய்யும் மெஹ்பூபா!
இந்த மெஹ்பூபா பற்றி ஏற்கெனவே சொல்லியாகிவிட்டது!
ஜிஹாதிகளுக்கு கூட்டிக் கொடுத்து, தன்னுடைய மற்றொரு பெண்ணிற்கு பிரியாணி கொடுத்து, இப்பொழுது, இந்த பெண்ணை காஷ்மீர சட்டசபைக்கு அனுப்பி உதவியுள்ள முஃப்டி முஹம்மது சயைது தான்!
ஸ்ரீநகர் : ஜம்முகாஷ்மீர் சட்டசபையில் எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். பணி நியமன ஆணை தொடர்பான சட்டத்திற்கு விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி மறுத்ததால் பி.டி.பி., கட்சியினர் சட்டசபையில் ரகளையில் ஈடுபட்டனர். காஷ்மீர் என்றவுடன் குளிர் என்பது நினைவுக்கு வந்த காலம் இப்போது இல்லாமல் போனது என்பதுதான் உண்மை. இந்த மாநிலத்தை பொறுத்தவரை ஊடுருவல், குண்டு வெடிப்பு. பந்த் என சூடான தகவல்கள் மட்டுமே காதில் விழுந்த படி இருக்கிறது. இந்நிலையில் மக்கள் பிரதிநிதிகளும் தங்கள் பங்கிற்கு அவ்வப்போது களேபரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய மாநாட்டுக்கட்சியை சேர்ந்த உமர் அப்துல்லா தலைமையில் காஷ்மீரில் ஆட்சி நடந்து வருகிறது.
![]() |
( பி.டிபி., ) எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு : இன்று வழக்கம் போல் சட்டசபை கூடியது. இன்று பணி நியமனம் தொடர்பான சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் படி பணி நியமனம் அந்தந்த மாவட்டத்தில் வசிப்போருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். இதனால் மாவட்ட எல்லையோர இளைஞர்கள் பாதிக்கப்படுவர். எனவே இந்த சட்டம் தொடர்பாக விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மக்கள் ஜனநாயக கட்சி ( பி.டிபி., ) எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் காரசாரமான வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். சபாநாயகர் இருக்கை நோக்கி பாய்ந்து சென்று கோஷமிட்டனர். தொடர்ந்து நாற்காலி, மேஜை தூக்கி வீசப்பட்டன. மைக்குகள் நொறுக்கி வீசப்பட்டது. இதனால் சபையில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. பின்னர் எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். முடிவில் சட்ட திருத்த மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக பி.டி.பி., யின் தலைவர் மெகபூபா முப்தி கூறுகையில் ; இந்த சட்டம் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இது குறித்து விவாதிக்க அனுமதி தராமல் சபாநாயகர் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறார். விவாதம் என்பது எங்களின் அடிப்படை உரிமை இதைத்தான் கேட்கிறோம் என்றார். இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் கடை அடைப்புக்கு பா.ஜ., இன்று அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வன்முறையில் குழந்தை கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் ரகளை ஏற்பட்டது நினைவிருக்கலாம். காஷ்மீர் ( சட்டசபை ) என்றால் சூடாகத்தான் இருக்கும் !
Explore posts in the same categories: காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, காஷ்மீர் சட்டசபை கலாட்டா, சட்டத்தை வளைப்பது!, சரீயத், சரீயத் சட்டம், ஜம்மு-காஷ்மீர், ஜிஹாத், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், மதமாறிய பெண்கள், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், முஃப்டி முஹம்மது சையத், முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமைகுறிச்சொற்கள்: உமர் அப்துல்லா, கற்பழிப்பு, காஷ்மீரம், காஷ்மீர், ஜம்மு-காஷ்மீர், ஜிஹாதி தீவிரவாதம், தேசிய மாநாட்டுக்கட்சி, பாகிஸ்தான், மக்கள் ஜனநாயக கட்சி, முஃப்டி முஹம்மது, முஃப்டி முஹம்மது சயைது, மெஹ்பூபா
You can comment below, or link to this permanent URL from your own site.
மார்ச் 1, 2013 இல் 3:45 பிப
[…] [5] https://islamindia.wordpress.com/2010/04/09/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0… […]