சோயிப்மாலிக் – ஆயிஷா ஓட்டலில் தங்கியிருந்ததை அசாருதீன் பார்த்தார்!

சோயிப்மாலிக் – ஆயிஷா ஓட்டலில் தங்கியிருந்ததை அசாருதீன் பார்த்தார்: ஆயிஷா தந்தை தகவல்

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=29941

நல்லவேளை, லெனின் குருப் பார்க்கவில்லை!

மேல்தட்டு / படித்த / பணக்கார / முன்னேற்றமடைந்த குடும்பங்களில் இதெல்லாம் சகஜமான விஷயம்தான். ஆகவே, இதில் சானிய விருப்பதுடன் இருப்பதுதான், ஆச்சரியமாக உள்ளது. “ஒருவனுக்கு ஒருத்தி”, உண்மையான / தூய்மையான / தெய்வீகமான காதல்……………….இவையெல்லாம் இல்லை-அதில் நம்பிக்கையில்லை……………என்றால், யார்-யாருடனாவது, எப்படியாகிலும் இருக்கலாம் (அருந்ததி ராய் இருந்தது போல). அந்நிலையில், இதைப் பிரச்சினையாக்க வேண்டிய அவசியமும் இல்லை.

ராஹுல் காந்தி கூட யாரோ போதைக் கடத்தல் மன்னனின் பெண்ணை மணந்து கொண்டார், அயல்நாட்டில் சுற்றுகிறார், என்றெல்லாம் செய்திகள்,……………………….புகைப்படங்கள் வந்துள்ளன. ஆனால், அதைப் பற்றி ராஹுல் காந்தி கவலைப் பட்டதாகட் தெரியவில்லை. இதே மாதிரியான வழக்குகள் கூட உபியில் பதிவாகியுள்ளன. ஆனால், அமுக்கி வாசிக்கப்பட்டுள்ளன.

சோயிப் மாலிக்கும் என் மகள் ஆயிஷாவும் துபாய் ஓட்டலில் ஒரே அறையில் தங்கி இருந்ததை கிரிக்கெட் வீரர் அசாருதீனும், அவரது மனைவி சங்கீதா பிஜ்வானியும் பார்த்துள்ளனர். இதைவிட வேறு நல்ல சாட்சி தேவை இல்லை என்று ஆயிஷாவின் தந்தை அகமது சித்திக் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் ஐதராபாத்தை சேர்ந்த ஆயிஷாவை டெலிபோன் மூலம் திருமணம் செய்ததாக அவரது குடும்பத்தினர் கூறி வருகிறார்கள். ஆனால் இதை சோயிப் மாலிக் மறுத்து வருகிறார்.

இதனால் வரும் 15ஆம் தேதி நடக்க இருக்கும் சோயிப் மாலிக் – டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா திருமணம் நடக்குமா நடக்காதா என்று இந்திய – பாகிஸ்தான் மக்களிடையே பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஐதராபாத்தில் ஆயிஷாவின் தந்தை அகமது சித்திக் கூறியதாவது,

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப்மாலிக் எனது மகள் ஆயிஷாவை ஏமாற்றி திருமணம் செய்தார். பின்னர் அவர் குண்டாகிவிட்டதாக கூறி சித்ரவதை செய்தார். தற்போது என் மகளை விவாகரத்து செய்யாமலேயே சானியா மிர்சாவை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். என் மகளை அவர் முறைப்படி விவாகரத்து செய்தால்தான் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடியும்.

மாலிக்கின் விபரீத திருமண விளையாட்டால் என் மகளின் வாழ்க்கை கேள்விக் குறியாக மாறிவிட்டது.

கடந்த சில நாட்களாக சோயிப்மாலிக் பத்திரிகை நிருபர்களிடம் ஆயிஷாவை நான் ஒரு முறை கூட நேரில் பார்த்ததே இல்லை. ஆயிஷா யார் என்றே தெரியாது என்றெல்லாம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளார். இதை கேட்ட போது எங்கள் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனோம். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல அவரது பேச்சு அமைந்துள்ளது.

சோயிப்மாலிக்கும் என் மகள் ஆயிஷாவும் துபாய் ஓட்டலில் 2 தடவை தங்கி உள்ளனர். அவர்கள் ஒரே அறையில் தங்கி இருந்ததை கிரிக்கெட் வீரர் அசாருதீனும், அவரது மனைவி சங்கீதா பிஜ்வானியும் பார்த்துள்ளனர். இதுபற்றி அசாருதீனிடம் கேட்டால் துபாய் ஓட்டலில் நடந்த சம்பங்களை கூறுவார். இதைவிட வேறு நல்ல சாட்சி தேவை இல்லை.

என் மகளின் வாழ்க்கையில் விளையாடிய சோயிப் மாலிக்குக்கு தண்டனை கிடைக்கும் வரை ஓய மாட்டோம் மாலிக் ஆயிஷாவை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்தது போல மற்ற பெண் களின் வாழ்க்கையையும் சீரழித்து விடக் கூடாது. இதற்காகத்தான் நாங்கள் அவர் மீது போலீசில் புகார் செய்துள்ளோம். அவர் ஆயிஷாவை எளிதில் ஏமாற்றி விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டுள்ளார். அவருக்கு சட்டப்படி உரிய தண்டனை கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

மாலிக்-ஆயிஷா இருவரும் குற்றவாளிகள்-முஸ்லிம் சட்ட வாரியம்   [திங்கள், 5 ஏப்ரல் 2010( 21:02 IST )]: ஷோயப் மாலிக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதால், சானியா மிர்சாவுடன் 15-ந் தேதி நடத்த இருக்கும் திருமணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆயிஷா தரப்பு வக்கீல் கோர்ட்டை நாடியுள்ளார். மேலும் பாகிஸ்தானிலும் ஷோய்ப மாலிக் மீது வழக்கு தொடர ஆயிஷா தரப்பினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.இதனால் சானியா மிர்சா, ஷோயப் மாலிக் திருமணத்துக்கு கோர்ட் இடைக்கால தடை விதிக்கலாம் என்ற பேச்சு நிலவுகிறது. இது சானியா மிர்சாவுக்கும், அவர் குடும்பத்தினருக்கும் கடும் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. ஷோயப் மாலிக் கைது செய்யப்படுவதை தடுக்கும் முயற்சிகளில் சானியா மிர்சா ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. ஷோயப் மாலிக், ஆயிஷா இருவரும் தங்கள் திருமண விஷயத்தில் தவறு செய்து விட்டனர். இருவரும் குற்றவாளிகள் என்று இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் அறிவித்துள்ளது. டெலிபோன் திருமணத்தை முஸ்லிம் சட்ட வாரியம் ஏற்றுக் கொள்கிறது. அதே சமயத்தில் அதில் பிரச்சினை எழுந்ததும் உடனடியாக முஸ்லிம் பெரியவர்களை நாடி, பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆயிஷா மிகவும் காலதாமதம் செய்து விட்டார் என்று முஸ்லிம் சட்ட வாரியம் கூறியுள்ளது.

Explore posts in the same categories: ஆயிஷா சித்திக், சானியா மிர்சா, சோயப் மாலிக், தூய்மையான கற்பு

குறிச்சொற்கள்: , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

3 பின்னூட்டங்கள் மேல் “சோயிப்மாலிக் – ஆயிஷா ஓட்டலில் தங்கியிருந்ததை அசாருதீன் பார்த்தார்!”

  1. K. Venkatraman Says:

    These cricket players play balls on the ground and with other balls, wherever, they land in India or aboard.

    almost in every city, they have girls and women to take care f.

    Unfortunately, the youngsters of India have been mad after these rougues which have morality, decency etc……………………


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: