மீலாதுநபி: முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்து!
மீலாதுநபி: முதல்வர் வாழ்த்து!
கருணாநிதி வாழ்த்து: நபிகள் நாயகம் பிறந்த மீலாது நபி திருநாளில் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் மு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நபிகள் நாயகத்தின் பல்வேறு சிறப்புகள்: இது தொடர்பாக அவர் இன்று (பிப்.26) விடுத்துள்ள செய்தியில், நபிகள் நாயகத்தின் பல்வேறு சிறப்புக்களை அவர் குறிப்பிட்டுள்ளார். மீலாது நபி திருநாளை இஸ்லாமிய சகோதரர்கள் மகிழ்ந்து கொண்டாட வேண்டும் என்பதற்காக அந்த நாளை அரசு விடுமுறை நாளாக தாம் அறிவித்ததையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
நபிகள் நாயகம் வாழ்ந்து காட்டிய அறநெறிப்படி வாழ!: தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய சமுதாய மக்களின் நலன் காத்துவரும் அரசின் சார்பில் இஸ்லாமிய மக்கள் அனைவரும் நபிகள் நாயகம் வாழ்ந்து காட்டிய அறநெறிப்படி வாழ்ந்து வளமும்-நலமும் பெற தமது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் கருணாநிதி அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Explore posts in the same categories: கருணாநிதி, பிறந்த நாள், மீலாதுநபிகுறிச்சொற்கள்: கருணாநிதி, பிறந்த நாள், மீலாதுநபி, முதல்வர், வாழ்த்து
You can comment below, or link to this permanent URL from your own site.
மார்ச் 3, 2010 இல் 9:15 முப
வயதாகியும் பண்பற்ற, நெறியற்ற, சமதர்மற்ற இந்த ஆளின் பேச்சும் வியப்பாகத்தான் உள்ளது.
ஏதோ இஸ்லாம் மற்றும் கிருத்துவம் புனிதம், இந்து மதம் என்றால் வேறுவிதம் என்று இந்த போலிப் பித்தரை நம்பி மக்கள் இருந்தால் அல்லது அத்தகைய பிர்சாரத்தை ஊடகங்களில் தொடர்ந்து கொண்டிருந்தால், நிச்சயமாக சரித்திரத்தில் தண்டனை இருக்கும்.