முத்துப்பேட்டையில் மதக் கலவரம்: கடைகளுக்கு தீ வைப்பு

முத்துப்பேட்டையில் மதக் கலவரம்: கடைகளுக்கு தீ வைப்பு
ஜனவரி 30,2010,00:00 IST
http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15813

திருவாரூர் : முத்துப்பேட்டையில் இந்து – முஸ்லிம் இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்துள்ளது. இந்துக்களின் கடைகள் சூறையாடப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. பதட்டம் தொடர்வதால், ஐ.ஜி., கரண் சிங்கா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துபேட்டை அடுத்த பேட்டையைச் சேர்ந்தவர் சிவா (எ) சிவகுமார்(39). பா.ஜ., மாவட்டச் செயலரான இவர், நேற்று முன்தினம் மாலை தனது டாடா சுமோவில் முத்துப்பேட்டை கடைவீதி வழியாக வீட்டிற்கு சென்றார். தெற்கு வீதி சந்திப்பில் அவரது கார் மீது, மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். கார் கண்ணாடி உடைந்தது.
ஆதரவாளர்கள் 50 பேருடன் முத்துப்பேட்டை போலீசில் சிவா புகார் கொடுத்தார். நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, சிவா ஆதரவாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை கைது செய்வதாக போலீசார் கூறியதையடுத்து சமாதானம் அடைந்தனர்.
இந்நிலையில், முஸ்லிம்கள் வசிக்கும் தெற்கு வீதியில் நடந்து சென்ற பேட்டையைச் சேர்ந்த டைலர் தங்கராசு(57), நடராஜன் ஆகியோரை வழி மறித்து, இளைஞர்கள் சரமாரியாக தாக்கினர். இது குறித்தும் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. தாக்குதலில் படுகாயம் அடைந்த இருவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவங்களால் ஆத்திரமடைந்த பேட்டை பகுதி மக்கள், சிவா தலைமையில் திரண்டனர். பேட்டை பகுதிக்குள் முஸ்லிம்கள் நுழையக்கூடாது என்று தடுத்தனர். இதனால், இந்து – முஸ்லிம்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
மனித நேய பாசறையைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், புறவழிச் சாலையில் இருந்த இந்துக்களின் கடை, பஸ் நிலையத்தில் உள்ள காய்கறிக் கடை உள்ளிட்ட ஐந்து கடைகளை சூறையாடியதோடு, திருத்துறைப்பூண்டி சென்ற அரசு பஸ்சை தாக்கி சேதப்படுத்தினர்; கடைகளை தீ வைத்து எரித்தனர். இதை பார்த்த மக்கள் அச்சமடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இதை போலீசார் கட்டுப்படுத்தாமல் அனைவரும் போலீஸ் நிலையத்திலேயே இருந்தனர்.
இந்துக்களின் கடைகளை தீயிட்டு கொளுத்தியதால் ஆத்திரமடைந்த இந்துக்கள், பேட்டை பகுதியில் முஸ்லிம்கள் நுழைய தடை செய்தனர். இதனால், மீண்டும் நள்ளிரவில் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் இரும்பு பைப், உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். சையது அபுதாகீர் உட்பட இரு தரப்பிலும் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது. எஸ்.பி., பிரவீன்குமார் அபிநபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். நேற்று காலை முதல் நகரில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
ஐ.ஜி., கரண் சிங்கா நேற்று நேரில் வந்து விசாரணை செய்தார். அவரது தலைமையில் எஸ்.பி.,க்கள் திருவாரூர் பிரவீன்குமார் அபிநபு, தஞ்சாவூர் செந்தில்வேலன், நாகை மகேஷ்வர் தயாள், புதுக்கோட்டை மூர்த்தி, அரியலூர் நஜ்மல் கோடா, 20 டி.எஸ்.பி.,க்கள் மற்றும் 400 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புகார் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததே, மதக் கலவரம் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

Explore posts in the same categories: இந்துக்கள், இஸ்லாமியத் தமிழன், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், தமிழ் முஸ்லீம், நம்பிக்கையில்லாதோர் மீதான போர், நாத்திக இந்து, நாத்திக முஸ்லீம்!, நாத்திகத் தமிழன், மதகலவரம், Uncategorized

குறிச்சொற்கள்: , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

7 பின்னூட்டங்கள் மேல் “முத்துப்பேட்டையில் மதக் கலவரம்: கடைகளுக்கு தீ வைப்பு”

 1. vedaprakash Says:

  முத்துப்பேட்டையில் மதகலவரம் என்ற செய்தி படித்தபோது, எனக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்காக மதகலவரம், அதுவும் இந்துக்கள்-முஸ்லிம்களிடையே என்று வியப்பாக இருந்தது.

  கூகுள் தேடலில் பார்த்தேன். எல்லாம் முஸ்லிம் மயமாக இருந்தது. ஆயிரக்கணக்கில் இப்படி இருந்தன:

  “முத்துப்பேட்டை” க்கான ஏறக்குறைய 135,000 இல் 1 – 10 முடிவுகள். (0.10 வினாடிகள்)

  “முத்துப்பேட்டையில்” க்கான ஏறக்குறைய 7,240 இல் 1 – 10 முடிவுகள். (0.11 வினாடிகள்)

  “முத்துப்பேட்டையில் இந்துக்கள்” க்கான ஏறக்குறைய 13,900 இல் 1 – 10 முடிவுகள். (0.55 வினாடிகள்)

  “முத்துப்பேட்டையில் முஸ்லிம்கள்” க்கான ஏறக்குறைய 44,300 இல் 1 – 10 முடிவுகள். (0.47 வினாடிகள்)

  அதற்கான இடுகைகளும் / blogs, அதிகமாக “முஸ்லிம்களாகவே” இருந்தன!

  முத்துப்பேட்டை சார்ந்த தளங்கள்
  * முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம்.
  * முத்துப்பேட்டை நண்பர்கள்
  * முத்துப்பேட்டை–சமுதாய உரிமை
  * முத்துப்பேட்டை-weblog
  * முத்துப்பேட்டை-ஜாகிர்
  * முத்துப்பேட்டை.com
  * முத்துப்பேட்டை.net
  * முத்துப்பேட்டை.org

  முஸ்லிம்கள் வாழும் முத்துப்பேட்டை என்றதும் நினைவுக்கு வருவது மத கலவரங்களும் தர்காக்களும்…………இப்படி சொல்கிறது ஒன்று!

  அட ஆண்டவா, பிரச்சினை இருக்கும் போல இருக்கிறது. நன்றாக ஆராய்ச்சி செய்யவேண்டும்.

 2. Karthik Says:

  itharku nadavaikai edukapadthu. ithai ethirthu hindukal ethavathu seyahtal matha veriyargal endra mutthirai summathapadhum.

  • vedaprakash Says:

   நன்றி.

   முதலில், தாங்கள் பதிவு செய்ததை, தமிழில் மாற்றுகிறேன்:

   ———————————————————————–
   இதற்கு நடவடிக்கை எடுக்கப்படாது. இதை எதிர்த்து இந்துக்கள் ஏதாவது செய்தால், மதவெறியர்கள் என்ற முத்திரை சுமத்தப்படும்.
   ———————————————————————-

   நீங்கள் “இந்து” என்ற நிலையில், நான் சொல்லுவது என்னவென்றால், இந்த அளவிற்கு உங்களது கருத்தைச் சொன்னதற்கு பெருமைப் படவேண்டும்.

   “செக்யூலரிஸம்’ பேசும் நம் நாட்டில் இத்தகைய கருத்துகள் தொடர்ந்து பதிவானாலே, அது உரிமைகள் மறுக்கப்படும் இந்துக்களுக்கு பலத்தைச் சேர்க்கும்.

   தொடர்ந்து, உங்களது கருத்துகளைப் பதிவு செய்து கொண்டே இருங்கள்.

  • Kuppusamy Says:

   இத்தகைய எண்ணம் இந்துக்களுக்கு ஏன் வருகின்றது எனத் தெரியவில்லை.

   இந்துக்கள் தங்கள் உரிமைகளை அப்படி கேட்கும்போது, அவ்வாறு முதிரைக் குத்துகிறார்கள் என்றால், அந்த மனிதர்களை, கூட்டத்தை அடையாளங்கொள்ளவேண்டும்.

   இங்கு பிரச்சினையை ஆரம்பித்தவர்கள் யார் என்று பார்த்து தண்டிக்கப் படவேண்டும்.

   மேலும், இங்கிருக்கும் முஸ்லிம்கள் எல்லாம், என்கிருந்தோ வந்துவிடவில்லை. அவர்கள் எல்லொருமே இந்துக்கள்தாம். அத்தகைய நிலையில், இந்துக்களை அவர்கள் மதிக்க வேண்டும்.

   ஏதோ, எப்பொழுதுமே வெறி புடித்தால் போல நடந்து கொள்வது, கலாட்ட செய்வது, மனித்த் தச்ன்மையும் ஆகாது, மனித நேயமும் ஆகாது!

 3. Abdulrahman Says:

  This could be a local problem, that’s all.

 4. Dr.A.Anburaj Says:

  இந்துக்கள் காபீர்கள்என்ற கருத்து சிறுவயது முதல் முஸ்லீம்கள் மனதில் உருவேற்றப்பட்டு இந்துக்களை வெறுக்க கற்றுக் கொடுக்கப்படுகின்றது.அகமதியா அல்லது காதியானி முஸ்லீம்கள் இந்தியாவில் நிம்மதியாக வாழந்து வருகினறனர். பாக்கிஸ்தானில் காதியானி முஸ்லீம்கள் திடீரென்று முஸ்லீம்அல்லாத காபீர்கள் என்று அரசு அறிவித்தது. அதன் பின் அக்மக்களுக்கு ஏதிரான பெரும் காலித்தனங்களை பாக்கிஸ்தானிய முஸலீம்கள் செய்தனர். பெரும் கலவரம் செய்து அகமதியா முஸ்லீம்களை காபீர் என்று குற்றம் சுமத்திக் கொன்று குவித்தது.new age islam என்ற வலைதளத்தில் Munir commission report உள்ளது. அகமதியா முஸ்லீம்களுக்கு பிற முஸ்லீம்கள் செய்த கொடுமை தெரியவரும். காபீர் என்றால் இழிவு செய்ய வேண்டும் என்ற கருத்து அரேபிய -இஸ்லாமிய வரலாற்றைப்படித்து நம்பும் அனைவருக்கும் உண்டாகிவிடும்.4வது கலிபா பதவிக்கு போட்டி வந்தபோது ஆயிசா தன்னை எதிர்த்த முகம்மதுவின் மருமகனை -அலீயை காபீர் என்று திட்டியதாக வரலாறு சொல்கிறது. பின்தான் ஒட்டகப்போர் நடைபெற்று முஸ்லீம்கள் தங்களுக்குள் நடத்திய முதல்யுத்தம்நடைபெற்றது. யுத்தத்தில் பங்கேற்ற அனைவரும் மற்றவர்களை ”காபீர்”கள் என்று குறைசொல்லி போரை நடத்தினாா்கள்.அதைத் தடுக்கும் சக்தி எப்போது நமக்கு இந்துக்களுக்கு எப்போது உண்டாகின்றதோ அப்போதுதான் நாம் அரேபியபயங்கரவாத்ததை எதிர்க்கும் நடவடிக்கை துவங்கியதாக கருதுகின்றேன். காபீர் என்ற வார்த்தையை தீண்டாமை தடுப்பு சட்டம் போன்ற சட்டத்தின் அடிப்படையில் தடை செய்ய வேண்டும். யாராவது யாரையாவது காபீர் என்று இழிவு செய்தால் 5 ஆணடுகள்கடும் சிறைத்ண்டனை அளிக்க வேண்டும் என்று கிரிமினல் சட்டம் இயற்ற வேண்டும். முகம்மது தன்னை ஏற்காத அனைவரையும் ” காபீர் ” என்று இழிவு படுத்தி போர் பிரகடனம் செய்து கொல்ல முயன்றார். முகம்மதுவான் காபீர்கள் என்று குறிப்பிடப்பட்டவர்கள்விட முகம்மதுவும் அவரது கூட்டத்தினரும் எந்த வகையிலும் யோக்கியவர்கள் அல்ல.தன்னை ஏற்காதவன் என்ற ஒரு அல்பமான கருத்தின் அபடிப்படையில் மரணதண்டனை அளிக்கின்றார் தனது வாள்படையிலன் பலத்தால். காபீர் என்ற சொல் கடுமையானது.அரேபிய வல்லாதிக்கத்தின் இசுலாமிக பயங்கரவாதத்தின் அடிப்படைத்தத்துவனம் காபீர்என்றது. காபீர்என்று முத்திரையிடு கொல் என்பதுதான் அரேபிய வல்லாதிக்க இசுலாமிய பயங்கரவாதம். காபீர் என்ற வார்த்தையை தடைசெய்ய நாம் தயங்கினால் அரேபிய காடையர்களுக்கு நாம் அடிபணிகின்றோம் என்று அா்த்தம்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: