முகத்தை பார்த்து விடக்கூடாது என்ற மதநம்பிக்கையிருந்தால் வாக்களிக்கவே தேவையில்லை!

முகத்தை பார்த்து விடக்கூடாது என்ற மதநம்பிக்கையிருந்தால் வாக்களிக்கவே தேவையில்லை!

பர்தா அணிந்து ஒளிப்படம் வாக்காளர் அட்டை வழங்கக் கூடாது: உச்ச நீதிமன்றம் வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படம் இருப்பது மத சம்பிரதாயத்துக்கு எதிரானதாக கருதும் முஸ்லிம் பெண்கள், ஓட்டு போடாமலே கூட விட்டுவிடலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த அஜ்மல்கான் என்பவர், தமிழக தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.  அதில், ‘முஸ்லிம் சமுதாயத்தில் பெண்கள் பர்தா அணிவதும், முகத்தை மறைக்க ஹிஜாப் அணிவதும் மத சம்பிரதாயம். பர்தா, ஹிஜாப் அணியாத பெண்களை அவர்களின் கணவன் மற்றும் உறவினர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்பது ஐதீகம். ஆனால், ஹிஜாப் அணியாமல் முஸ்லிம் பெண்கள் வாக்காளர் அடையாள அட்டைக்காக எடுத்த புகைப்படங்களை தேர்தல் ஆணையம் பட்டியலிட்டு ஊர் முழுவதும் காட்டுகிறது.  இந்திய பிரஜைகளுக்கு விருப்பமான மத வழிபாட்டு முறைகளை சுதந்திரமாக பின்பற்ற வழி செய்யும், அரசியல் சட்டப்பிரிவு 25ன் படி தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை தவறானது.  எனவே முஸ்லிம் பெண்களுக்கு விதிவிலக்கு அளிக்கவேண்டும். முஸ்லிம் பெண் வாக்காளர்களை முகத்தை மூடியபடி புகைப்படம் எடுக்கவேண்டும் அல்லது ஹிஜாப் இல்லாமல் எடுக்கும் படத்தை பொது பார்வைக்கு வைக்கக் கூடாது’ என குறிப்பிட்டிருந்தார்.

இம்மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதி தீபக்வர்மா ஆகியார் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.  மனுதாரரின் வாதத்தை கேட்ட நீதிபதிகள், ‘வாக்காளர் அட்டைக்கே இவ்வாறு வருத்தப்படுகிறீர்களே, தேர்தலில் போட்டியிட்டால் என்னவாகும் என புரியவில்லை?   தேர்தலில் தொகுதி முழுக்க வேட்பாளர்களின் புகைப்படத்தை வீதி வீதியாக ஒட்டுவார்கள். அப்போது என்ன செய்வீர்கள்?  வாக்காளர் பட்டியலிலோ, அடையாள அட்டையிலோ தங்கள் புகைப்படம் இருப்பது மத சம்பிரதாயத்தை மீறயது என அந்த பெண்கள் கருதினால், ஓட்டு போடலாமா வேண்டாமா என்பது குறித்து அவர்களே முடிவு செய்து கொள்ளலாம்.  அந்தளவுக்கு அவர்கள் மத உணர்வோடு இருக்கிற பட்சத்தில், ஓட்டு போட வேண்டாம்’ என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

முன்னதாக மனுதாரருக்கு எதிராக தமிழக தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான பாலாஜி ஸ்ரீநிவாசன், ‘மனுதாரர் அடிப்படையையே குழப்பப் பார்க்கிறார். புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா என எல்லா மாநிலத்திலும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அனைத்து மாநிலத்திலும் இதேபோலத் தான் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.  ஆனால் எங்கேயும் இதுபோன்ற ஒரு பிரச்னையை யாரும் எழுப்பவில்லை. முஸ்லிம் பெண்கள் பாஸ்போர்ட் எடுக்கும் போது புகைப்படம் எடுப்பது மத உணர்வை புண்படுத்துவதாக இல்லையா’ என வாதிட்டார்.  ஏற்கனவே 2006ம் ஆண்டில் அஜ்மல்கான் இதே விவகாரத்துடன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி, ஜன. 23_2010- பர்தா அணிந்து புகை/ஒளிப்படம் எடுக்கும் பெண்களுக்கு வாக்காளர் அட்டை வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இசுலாமிய மதத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட பெண்கள் தங்கள் முகத்தை வெளியில் காட்டக் கூடாது என்பதற்காக பர்தா அணிகின்றனர். இதேபோல் வாக்காளர் அட்டைக்கு ஒளிப்படம் எடுக்கும் போதும் தங்கள் பர்தாவினை அகற்ற முடியாது என்றும், இது மத உணர்வு சம்பந்தப்பட்ட ஒன்று என்பதால் இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் அஜாம் கான் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதி தீபக் வர்மா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:-

தங்கள் முகத்தை வெளி நபர்கள் யாரும் பார்த்து விடக் கூடாது என்ற மத நம்பிக்கையில் மிகுந்த பற்றுக் கொண்டிருந்தால் அவர்கள் வாக்-களிக்கவே தேவை இல்லை. வாக்களிக்கச் செல்லும் போது பர்தா அணிந்து செல்லக் கூடாது. அவ்வாறு பெண்கள் பர்தா அணிந்து சென்றால் அவர்களை அடையாளம் காண்பது வாக்குச் சாவடியில் உள்ள அதிகாரிளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். வாக்காளர்களை அடை-யாளம் காண்பதற்காகத்தான் ஒளிப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், இப்படி பர்தா அணிந்து வந்தால் அவர்களை எப்படி அடையாளம் காணமுடியும்? தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது வாக்களிக்கும் உரிமையின் ஒரு நீட்டிப்பே. தன்னு-டைய முகத்தை ஒளிப்படத்தில் காட்டாம-லேயே தேர்தலில் போட்டியிட முடியும் என்று யாரும் கூறமுடியுமா? பர்தா அணிந்து எடுக்கப்பட்ட ஒளிப்படத்துடன் ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியுமா? என்று நீதிபதிகள் விசாரணையின் போது தெரிவித்தனர். இம்மனு மீதான இறுதித் தீர்ப்பு மற்-றொரு நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

File photo of Muslim women flashing their their voter ID cards before casting votes for the 14th Lok Sabha Election in Kolkata. Photo: Sushanta Patronobish

File photo of Muslim women flashing their their voter ID cards before casting votes for the 14th Lok Sabha Election in Kolkata. Photo: Sushanta Patronobish {Photo courtesy: The Hindu}

பல முஸ்லிம் அமைப்புகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. “சுப்ரீம் கோர்டுடைய திர்ப்பிற்கு நான் முழுவதுமாக திருப்தியடைந்துள்ளேன். ஹஜ் செல்லும்போது பாஸ்போர்ட்டுகளில் ப்டம் இருப்பதை எதிர்க்காமல் இருக்கும்போது, இதை ஏன் எதிர்க்கவேண்டும். இதை ஒரு உணர்ச்சிப்பூர்வமன பிரச்சினையாக்கக்கூடாது“,  அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட ஆணையத்தின் அங்கத்தினர் மற்றும் தில்லியின் சிறுபான்மையினர் கமிஷனின் தலைவருமான கமல் ஃப்ரூக்கி கூறியுள்ளார்.

வாக்காளர் அட்டைக்கு ஒளிப்படம் எடுக்-கும்போது பெண்கள் பர்தா அணியக் கூடாது என்று தேர்தல் ஆணை-யம் வலியுறுத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் 2006ஆம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. ஆனால் மத சம்பிரதாயங்களை நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் இதுதொடர்பாக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பிரான்சு நாட்டில் பர்தா அணிவது தடை செய்யப்பட்டு உள்ளது. பொது இடத்தில் பர்தா அணிந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. இதற்கு உலக அளவில் இசுலாமிய மதத் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்-நிலையில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Explore posts in the same categories: பர்தா அணிவது, பர்தா மத-அடையாளமா?, மத-அடிப்படைவாதம், முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை, ஹிஜாப்

குறிச்சொற்கள்: , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

6 பின்னூட்டங்கள் மேல் “முகத்தை பார்த்து விடக்கூடாது என்ற மதநம்பிக்கையிருந்தால் வாக்களிக்கவே தேவையில்லை!”

 1. vedaprakash Says:

  Lift veil for voter ID, SC tells burqa-clad women
  Dhananjay Mahapatra , TNN, 23 January 2010, 12:33am IST
  http://timesofindia.indiatimes.com/india/Lift-veil-for-voter-ID-SC-tells-burqa-clad-women/articleshow/5489631.cms

  NEW DELHI: The Supreme Court has said that burqa-clad women cannot be issued voter identity cards, rejecting the argument that religion prohibits them from lifting their veils.

  Counsel for petitioner M Ajam Khan had contended that asking `purdah-nashin’ women to lift their veil for being photographed would amount to sacrilege as their photographs would be seen by many men working as polling agents and electoral officials.

  “It will hurt their religious sentiments and the Election Commission must not insist on `purdah-nashin’ women to be photographed for inclusion of their name in the electoral rolls,” said the counsel arguing before a Bench comprising Chief Justice K G Balakrishnan and Justice Deepak Verma.

  The order comes at a time when a controversy triggered by the ban on full-length burqas has roiled France, attracting protests from clerics.

  The argument put forward on behalf of petitioners failed to impress the court. The Bench said: “If you have such strong religious sentiments, and do not want to be seen by members of public, then do not go to vote. You cannot go with burqa to vote. It will create complications in identification of voters.”

  Referring to the Madras High Court order upholding the EC’s insistence for a photograph without veils, the Bench said that the elections have been conducted without staying the HC order and that those who do not comply with rules on voter identification not be allowed to vote.

  Appearing for the EC, counsel Meenakshi Arora said though electoral rolls were being prepared as per the judgment of the HC, it would be better if the SC gave a verdict that would help reach a closure on the issue.

  When the petitioners again insisted on protection of religious sentiments, the Bench said: “The photograph is for identification of a voter. If someone comes to vote in a burqa and the photograph was also taken with veil covering the face, how would anyone identify the voter?”

  Explaining that right to vote was only a statutory right and not a fundamental right, the Bench said: “Right to contest an election is an extension of the right to vote. Can anyone contest an election saying photograph of her face be not taken? Can she be photographed in a burqa with a veil and yet contest an election?”

  Though the Bench made its mind absolutely clear, it agreed to a detailed hearing on the issue at a later date.

  The Madras High Court had in a 2006 verdict held that faith and practice were on two different planes, saying there was nothing wrong on the part of the EC to insist on a photograph of the face of a `purdah-nashin’ woman for the purpose of preparing electoral rolls.

  dhananjay.mahapatra@timesgroup.com

 2. vedaprakash Says:

  Muslim groups support Court’s observation on burqa
  PTI
  http://beta.thehindu.com/news/national/article93731.ece

  A number of Muslim groups on Saturday backed the Supreme Court’s rejection of the argument that women cannot be asked to lift face-covering veils for voter ID photographs, and said Islamic law gives permission for them to be clicked under special needs.

  “I am totally with the Supreme Court order. When we have no objection to photos for passport for going to Haj, why should we object to the same for this. This should not be made an emotional issue,” Delhi Minority Commission Chairman and All India Muslim Personal Law Board member Kamal Faruqui said.

  When it was pointed out that some Muslim clerics are opposing the observation, Mr. Faruqui said he will convince the community about the need for photo voter IDs adding, “I am sure they will understand the importance of having them.”

  The Supreme Court on Friday said religious sentiments should not be exploited to oppose the making of electoral rolls with photographs. It was hearing a petition which argued that asking women observing ‘purdah’ to lift their veil for being photographed for voter IDs would be sacrilegious.

  “Though purdah is compulsory for women under the Shariat, Islamic law gives conditional permission under special circumstances,” senior member of the All India Muslim Personal law board and Naib Imam of Idgah, Lucknow, Khalid Rasheed Forangimahal told PTI.

  Jamiat-Ulema-e-Hind secretary and spokesperson Abdul Hamid Nomani also said Islam allows Muslim women to show their face if there is specific need.

  “What will be the relevance of a photo I-card with burqa. This is not a general situation in which purdah is essential.

  “Some people mix up the special situations with the general ones. Religion gives permission for it in need. This should not be projected as a religious issue,” Mr. Nomani said.

  Jamaat-e-Islami secretary Mujtaba Farooqi said, “I think what the Supreme Court said is correct. Documents of the country’s citizens should be prepared and the provision of photos should be there for making of such basic documents.”

  Mr. Farooqi maintained that even those who support purdah relax it for such necessary documents and Muslim seminaries have issued fatwa that photos of Muslim women can be taken if they are “need-based.”

  Shahi Imam of Fatehpuri Masjid Mufti Mukarram Ahmed said he does not find anything wrong with the Supreme Court observation.

  “There is nothing wrong in what the SC said. Shariyat, though, makes purdah essential for Muslim women, it permits showing their face if there is any need or compulsion. If a woman is seriously ill, she can not observe purdah from her doctor. Getting photographed for election I-card or any such necessary documents is permitted,” he said.

  Citing the case of Haj, Firangimahali said in Lucknow that women do get themselves clicked for their passports and getting photographed for ensuring that they get their right to vote also falls in the same category of special circumstances.

  He, however, had reservations over reported stern views of the apex court that “if religious sentiments are so strong then do not go to vote.” Comments on religious issues should be in keeping with the sensitivity of the matter, he said.

  Keywords: burqa, purdah, veil, muslim women, election, voting, voter ID cards, Supreme Court

 3. குப்புசாமி Says:

  திருமாவளவனிடத்தில் கருத்து கேட்டால் அவர் சரியாகச் சொல்லியிருப்பார்!

  பேசாமல், அவரை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பிவிடலாம்.

  ஒருவேளை சரியாக தீர்ப்பு சொல்லாவிட்டால், உடனே போராட்டத்தைத் துடங்கி விடுவார்!

 4. Brahmallachrist Says:

  I think you are wasting time.

  This Supreme Court judges do not have any principles.

  They talk one thing today and change tomorrow!

  Do not you know what happened in the case of Hussian, the “nude painter”?

 5. vedaprakash Says:

  “மயிலாடன்” பத்து நாட்கள் கழித்து இன்றுதான் “விடுதலை”யில் இவ்வாறு தனது பதிலை பதிவு செய்துள்ளார். ஒருவேளை நண்பர்களுடன் பேசி தீர்மானம் செய்து, தனது கருத்தை வெளியிட்டுள்ளார் போலும்:

  மதம் (விடுதலை 02-02-2010, முதல் பக்கம், ஒற்றைப்பத்தியின் கீழ் காண்க)
  http://viduthalai.periyar.org.in/20100202/news07.html

  வாக்காளர் அடை-யாளப் பட்டியலில் ஒளிப்-படம் (Photo) இடம்பெற்றி-ருப்பதில்கூட மத சாயம் பூசப்படுவது வேடிக்கை-தான்.

  தமிழ்நாட்டைச் சேர்ந்த அஜ்மல்கான் என்பவர் தமிழகத் தேர்தல் ஆணை-யத்துக்கு எதிராக உச்சநீதி-மன்றத்தில் வழக்கு ஒன்-றைத் தாக்கல் செய்துள்-ளார்.

  முசுலிம் சமூகத்தில் பெண்கள் பர்தா அணி-வதும், முகத்தை மறைக்க ஹிஜாப் அணிவதும் மத சம்பிரதாயமாம். பெண்-களை அவர்களின் கண-வன் மற்றும் உறவினர்கள் மட்டுமே பார்க்கவேண்-டும் என்பது அய்தீகமாம்.

  ஆனால், முசுலிம் பெண்கள் பர்தா அணியா-மலும், ஹிஜாப் அணியா-மலும் உள்ள ஒளிப்படங்-கள் வாக்காளர் பட்டிய-லில் அச்சிடப்பட்டுள்ள-தாம்! இது அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்-றுள்ள சட்டப் பிரிவு 25 இன்படி மதப் பாதுகாப்புப் பிரிவுக்கு எதிரானது என்பதுதான் வழக்கு.

  இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்-ணன் மற்றும் நீதிபதி தீபக்வர்மா ஆகியோர் வாக்காளர் அட்டையில் படம் வெளிவந்ததற்கே இப்படி வருத்தப்படுகிறீர்-களே, தேர்தலில் போட்டி-யிட்டால் என்ன ஆகும்? வேட்பாளர்களின் படத்தை வீதிக்கு வீதி ஒட்டுவார்களே, அப்-பொழுது என்ன செய்வீர்-கள் என்ற பொருள் பொதிந்த வினாக்களை எழுப்பியுள்ளனர். வேண்-டு-மானால், வாக்களிப்பதா, வேண்டாமா? என்பதை சம்பந்தப்பட்டவர்கள் முடிவு செய்துகொள்-ளட்-டும் என்று பந்தை அவர்-கள் பக்கமே தள்ளிவிட்-டனர் நீதியரசர்கள்.

  சென்னை உயர்நீதி-மன்-றத்தில் இதே மனுதாரர் 2006 இல் இதே வழக்-கைத் தொடுத்தபோது, அது தள்ளுபடி செய்யப்-பட்டு விட்டது.

  இந்தியா முழுமையும் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது; அங்-கெல்லாம் இதுபோல ஒளிப்படங்கள் அச்சிடப்-பட்டுதான் உள்ளன. இங்கு மட்டும் இப்படி ஒரு வினோத வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதை நீதிமன்றத்தில் தமிழகத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் எடுத்துக் கூறவும் பட்டது.

  வாக்காளர் உண்மை-யானவரா, போலியா என்று அறிந்து கொள்ளத்-தான் ஒளிப்படம். அதிலும் முகத்தையும், கண்களை-யும் மறைத்துள்ள படத்தை வெளியிட்டால் எப்படி உண்மையை அறிய முடியும்?

  மத நம்பிக்கைகள் உலகம் முழுவதும் மாறி வருகின்றன. முசுலிம் மதத்தைச் சேர்ந்த பெண்-களிலும் பல மாற்றங்கள் பல நாடுகளிலும் ஏற்-பட்டே வருகின்றன.

  மாறுதல் என்பதுதான் மாறாதது என்பது இன்-னும் ஒரு சிலருக்குப் புரிய-வில்லையே! –

  மயிலாடன்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: