லஸ்கர் தாவூத் ஜிலானிற்கு, $28,000 தீவிர-தாக்குதலுக்குக் கொடுத்தது!
லஸ்கர் தாவூத் ஜிலானிற்கு, $28,000 தீவிர-தாக்குதலுக்குக் கொடுத்தது!
லஸ்கர்-இ-தொய்பா (LeT) தாவூத் ஜிலானிக்கு $ 28,000 ( $ 3000 இந்திய ரூபாய்களில்) ஏப்ரல் மற்றும் ஜூலை 2008ல் இந்தியாவிற்கு சென்று வரவும், பல இடங்களில் நோட்டமிடவும், செலவிற்க்காக் கொடுத்தது. அதுமட்டுமல்லாது, தாஜ் ஹோட்டல் போன்று மாதிரியுடன் எப்படி அங்கு தக்குதல்கள் நடத்தவேண்டும் மற்றும் பூமியின் மீது நிலை நிறுத்தி இடத்தை அறியும் கருவிகளை உபயோகப் படுத்தவேண்டும் முதலியவற்றிலும் பயிற்ச்சி கொடுத்தது. இவ்விவரங்கள் எல்லாம் சிகாகோவில் சீல் வைக்கப்பட்ட ஆவணங்களைத் திறந்தபோது ஜுரிக்களுக்கு (Federal Grand Jury indictment) தெரியவந்ததாம்.

வியாபாரியான தஹவ்வூர் ஹுஸைன் ரானா எப்படி தனது ராணுவப்பள்ளி நண்பனான தாவூத் ஜிலானிக்கு உதவினான் என்ற விவரங்களும் தெரியவருகின்றன. அதாவது பாகிஸ்தானில் தான், இருவரும் உட்கார்ந்து கொண்டு இந்த சதிதிட்டத்தை – 26/11 மும்பை மற்றும் டென்மார்க் பத்திரிக்கை தாகுதல்கள் பற்றித் தீட்டினர்.

புதியதாக கிடைத்துள்ள ஆதாரங்கள் மூலம், இல்யாஸ் காஷ்மீரி என்ற பாகிஸ்தானின் முந்தைய சிறப்புப்படை கமாண்டோவின் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அப்துல் ரெஹ்மான் ஹாஸிம் என்ற பாகிஸ்தானின் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மற்றும் அல்-குவைதா தொடர்பாளி இவர்களுடன் கூடிய தொடர்பும் வெளிப்பட்டது. ஜிலானியின் தீவிரவாத தொடர்பு 2002லிருந்தே இருந்து வந்துள்ளது. அங்கத்தினர்-A (unnamed Lashkar Member A) இவனுக்கும் LeTக்கும் கூட்டாளியாக-தொடர்பாளியாக இருந்துள்ளான். 2005 இந்திய பயணத்திற்கு இவன் தான் ஏற்பாடு செய்தான், உதவினான். தாவூத் ஜிலானி என்ற பெயரை பிப்ரவரி 15, 2006ல்தான் டேவிட் ஹெட்லி கோல்மென் என்று மாற்றிக்கொண்டான். ஏனெனில் அப்பொழுதுதான் இந்தியர்கள் தன்னை ஒரு முஸ்லிம் அல்லது பாகிஸ்தானி என்று இல்லாமல் அமெரிக்கன் என்று நினைத்துக் கொள்வார்கள் என்று, அவ்வாறு அடையாளத்தை மறைத்தான்.

மும்பைக்கு செப்டம்பர் 2006, பிப்ரவரி மற்றும் செப்டம்பர் 2007, ஏப்ரல் மற்றும் ஜூலை 2008 என ஐந்து தடவை வந்து, தாங்கள் தாக்கவேண்டிய இடங்கள், அவற்றின் புகைப் படங்கள், வீடியோக்கள் அனைத்து விவரங்களையும் சேகரித்துக் கொண்டுச் சென்றான். ஓவ்வொரு “டிர்ப்பிற்கு”ப் பிறகும் பாகிஸ்தானிற்குச் சென்று LeTயிடம் தனது வேலையைப் பற்றிய அறிக்கையைக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளான்.
Explore posts in the same categories: இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமும் இந்தியாவும், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கராச்சி திட்டம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், சிதம்பர ரகசியங்கள், தக்காண முஜாஹித்தீன், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாவூத் ஜிலானி, புனிதப் போர், மத-அடிப்படைவாதம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன்
ஜனவரி 15, 2010 இல் 9:55 முப
அது சரி,
இவர்கள் இப்படி உல்லாச பயணம் செய்து கொண்டிருந்தபோது, இந்திய உளவுப்படை முதலியோர் என்ன செய்து கொண்டிருந்தனர்?
அவர்களுக்கு என்ன அறிவே இல்லையா?
ஜனவரி 15, 2010 இல் 10:05 முப
இந்திய ராணுவம், எல்லைக்காவல் படை, போலிஸ், உளவுத்துறை எல்லாமே அரசியல்வாதிகளின் சொற்படித்தான் நடக்க வேண்டும்.
அதிலும், இருப்பதோ சிதம்பரம் போன்ற உள்துறை அமைசர்கள். என்ன நடந்தாலும், அவருக்கு ஒன்றுமே தெரியாது. இம்மாதிரி கைதுகள் நடந்தாலும், ஒன்றுமே தெரியாத மாதிரி, எங்கேயாவது, திறப்புவிழாவில் ஜாலியாக இருப்பார்!
அந்தோணி போன்ற ராணுவ மந்திரி!
இப்படி இருக்கும்போது, எப்படி வேலை நடக்கும்?
ஜனவரி 25, 2010 இல் 10:13 முப
ஆமாம், இப்பொழுதுகூட, ஆயுதங்கள் ஒருபக்கம் பறிமுதல் என்றால், மறுபக்கம் ஆர்பாட்டம் நடதுகின்றார்களே?
எப்படித்தான், இல்லை அப்படித்தான், தினமும் பொழுது போகிறது போலும்!
ஜனவரி 25, 2010 இல் 12:44 பிப
Can any country sit and watch such type of idiotic acts of terrorists?