“அல்லாவின் பெயர்” பிரச்சினை: மலேசியாவில் சர்ச்சுகள் தாக்கப் பட்டன!
கடவுள் பெயர் பிரச்சினை: மலேசியாவில் கிறித்துவ தேவாலயங்கள் மீது தாக்குதல்
சரவாக், பேராக், மலாக்காவிலும் தேவாலயங்கள் தாக்கப்பட்டன
January 10, 2010, 8:44 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி
http://www.malaysiaindru.com/?p=30683
சரவாக், பேராக் மற்றும் மலாக்கா ஆகிய மாநிலங்களிலும் தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சரவாக், மிரியிலுள்ள ஒரு தேவாலயம் தீயிடப்படும் முயற்சியின் இலக்காக இருந்ததாக உள்துறை அமைச்சர் ஹிசாமுடின் ஹுசேன் கூறியதாக பெர்னாமா கூறுகிறது. ஆனால், நிலமை கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் கூறினார். “பொது மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை. எஸ்எம்எஸ் வழியாக பரப்பப்படும் ஊகங்களைப் பொருட்படுத்த வேண்டாம் என்று அவர்
கேட்டுக்கொண்டார். தைப்பிங்கில் மோலொடோவ் தீப்பந்துகள் இரண்டு தேவாலயங்கள் மீதும் எஸ்எம் கான்வெண்ட் பள்ளியின் பாதுகாவலர் குடில் மீதும் வீசப்பட்டன. நாட்டின் மிகப் பழமையான ஆல் செயிண்ட்ஸ் தேவாலயத்திற்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் பள்ளியின் பாதுகாவலர் குடிலுக்குச் சிறிது சேதம் ஏற்பட்டுள்ளது என்று பேராக் போலீஸ் தலைவர் ஜுல்கிப்லி அப்துல்லா கூறினார்.
மலாக்கா தேவாலயத்தில் கருப்பு பெயிண்ட் வாரியடிக்கப்பட்டது: மலாக்காவில், நான்யாங் சியாங் பாவ் செய்திப்படி டுரியான் டாவுனிலுள்ள மலாக்கா பேப்டிஸ்ட் தேவாலயத்தின் மீது கருப்புச் சாயம் வாரியடிக்கப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடவுள் பெயர் பிரச்சினை: மலேசியாவில் கிறித்துவ தேவாலயங்கள் மீது தாக்குதல்
கோலாலும்பூர், ஜன.9-_ முஸ்லிம் அல்லாதவர்-களும் கடவுளை குறிப்பதற்கு அல்லா என்கிற சொல்லை பயன்படுத்தலாம் என்கிற சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் குழுக்கள் சில மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஆர்ப்-பாட்டங்கள் நடத்துவதற்கு முன்னர் மூன்று கிறித்துவ தேவாலயங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
சாராயம் நிரப்பிய குண்டுகளை வீசினர்.
இந்த தேவாலயங்களில் ஒன்றின் அலுவலகம் மிகவும் மோசமாக தீக்கிரையானது. மற்ற கட்டடங்கள் குறைந்த அளவில் பாதிக்கப்பட்டன.
Fourth church attacked in Malaysia as Allah row deepens
அல்லாப் பிரச்சினை தீவிரமடைவதால் நான்காவது சர்ச் தாக்கப்பட்டது! முதலில் மூன்று சர்ச்சுகள் தாக்கப்பட்டன!
Three churches attacked in Kuala Lumpur – PTI

தீக்குண்டுகள் வீசப்பட்டது இறுதி ஆட்டம் என்று சபா அரசியல்வாதி கருதுகிறார்
January 09, 2010, 4:32 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி
கோலாலம்பூரிலும் பெட்டாலிங் ஜெயாவிலும் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தீ வைப்புத் தாக்குதல்களைத் தொடர்ந்து சபாவிலும் சரவாக்கிலும் உள்ள நிரந்தர கிறிஸ்துவ வாக்கு வங்கிகளை கூட்டரசு அரசாங்கம் இனிமேலும் முழுமையாக நம்ப முடியாது. “அந்தத் தேவாலயத் தாக்குதல்களுக்கும் 2008 தீவகற்ப மலேசியாவில் ஏற்பட்ட அரசியல் சுனாமிக்கு முந்திய கோவில் உடைப்புக்களுக்கும் ஒற்றுமை இருக்கிறது”, என்று அவ்விரு மாநிலங்களுக்குமான பிகேஆர் தலைவர் ஜெப்ரி கிட்டிங்கான் கூறினார்.
அவர் கோத்தா கினாபாலுவில் மலேசியாகினிக்குச் சிறப்புப் பேட்டி அளித்தார். கிறிஸ்துவர்கள் மட்டுமின்றி சீன வாக்காளர்களும் இறைவனுக்கு அஞ்சும் முஸ்லிம்களில் பலரும் கூட கிழக்கு மலேசிய மக்களுடன் அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோவைக் கைவிடுவர் என்று அவர் நம்புகிறார். “அல்லாஹ் என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்காக எங்களுடைய பாஹாசா இந்தோனிசியா பைபிள்களை சுங்கத்துறை தேக்கி வைத்திருப்பதே கடுமையான விஷயம்”, என்று கூறிய ஜெப்ரி, இப்போது அந்த தீ வைப்புச் சம்பவங்கள் சமூகத்தில் இன்னும் காணப்படும் எல்லா சந்தேகங்களையும் முற்றாக நீக்கி விடும் என்றார். அல்லாஹ் என்ற சொல் மீதான நீதிமன்ற விவாதங்கள் கூட கிராமப்புற மக்களை அம்னோவின் பிடியிலிருந்து விடுவிக்க முடியவில்லை என்று பிகேஆர் தேசிய உதவித் தலைவருமான அவர் சொன்னார். “நான் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் அறிவுப்பூர்வமாக விஷயங்களை அணுகுகின்றவன்.” – “ஆனால் தீவகற்ப மலேசியாவில் தேவாலய தீக்குண்டு வீச்சு படங்களைப் பார்த்ததும் நானே உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்குப் பின்னர் முதன் முறையாக என் கண்கள் குளமாகின.”
கிழக்கு மலேசியாவுக்கு ஹிண்ட்ராப் முன்னுதாரணம்: அந்த படங்கள் கிழக்கு மலேசியாவில் கிராமப்புறப் பகுதிகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அந்த சபா அரசியவாதி கருதுகிறார். உள்ளூர் அரசியல்வாதிகள் அந்தச் சம்பவங்கள் மீது தங்களது சொந்த கருத்துக்களையும் வெளியிடுவர் என்பதை ஜெப்ரி மறுக்கவில்லை. கோவில் உடைப்புக்களைத் தொடர்ந்து ஹிண்ட்ராப் போராளிகளிடையே அதுதான் நிகழ்ந்தது. ” இந்திய வாக்காளர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ள 67 நாடாளுமன்றத் தொகுதிகளில் அவர்களுடைய உணர்வுகள் தூண்டப்பட்டன”, என்றார் அவர். அந்தத் தீ வைப்பு சம்பவங்கள் “சில கோழைகள் அல்லது தீவிரவாதிகளினால்” மேற்கொள்ளப்பட்ட தனிப்பட்ட சம்பவங்கள் என்று ஜெப்ரி கருதவில்லை. அல்லாஹ் விவகாரத்தை அம்னோ கையாளும் முறை “நாட்டில் உருவாகி வரும் புதிய அரசியல் பாணிக்கு அந்தக் கட்சி நல்லதைச் செய்யாது” என்பதை தெளிவாக உணர்த்துவதாகவும் அவர் சொன்னார்.
“அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்கு அவசியமானால் வலிமையையும் பயன்படுத்த வேண்டும் என்று விரும்பும் சில சக்திகள் அம்னோவில் இருப்பதாக நான் கருதுகிறேன்”, என்றும் அவர் குறிப்பிட்டார். “மற்றவர்களைப் பணிய வைப்பதற்கு அவர்களை வேண்டுமென்றே மிரட்டி, அச்சத்தை ஏற்படுத்துவது தான் அதுவாகும்.” …“வெகு தொலைவில் சபா, சரவாக்கில் உள்ள நாங்கள் எங்களுடைய பைபிளிலும் பிரார்த்தனைகளிலும் கடவுளுக்கு அல்லாஹ் என்னும் சொல்லை பயன்படுத்துவது மீது தீவகற்ப மலேசியா உள்ள மக்கள் ஆர்ப்பாட்டம் செய்வது வினோதமாக இருகிறது”, என்றும் ஜெப்ரி குறிப்பிட்டார்.
கடவுள் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேல் அமைதியாகத் தான் இருந்தார்: “அல்லாஹ் என்ற சொல் தீவகற்ப மலேசியாவில் உள்ள கிறிஸ்துவ சமூகத்திற்கு பிரச்னையே இல்லை. ஆனால் தென் சீனக் கடலுக்கு இந்தப் பக்கம் உள்ளவர்களுக்குத்தான் அது பிரச்னை. 300 ஆண்டுகளுக்குப் பின்னர் நாங்கள் எங்கள் கடவுளை எப்படி அழைக்க வேண்டும் என்று முடிவு செய்வதற்கு தீவகற்ப மலேசியாவில் இருப்பவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?” தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டது அரசியல் நோக்கம் கொண்டது. நன்கு திட்டமிடப்பட்டது என்று ஜெப்ரி மீண்டும் வலியுறுத்தினார். “சபா சரவாக் மக்களை முழுமையாக அடிபணிய வைப்பது அதன் நோக்கம் ஆகும்”, என்றார் அவர். பிரதமர் நஜிப்பும் அவரது நெருங்கிய உறவினருமான உள்துறை அமைச்சர் ஹிஷாமுடினும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஊக்கமூட்டி வந்துள்ளனர் என்றும் ஜெப்ரி கூறினார்.
ஏமாற்றப்பட்ட உணர்வு வலுவடைந்து வருகிறது: “மலேசியா தோற்றுவிக்கப்பட்டதில் சபாவுக்கும் சரவாக்கிற்கும் நன்மை இல்லை என்பது ஆண்டுக்கு ஆண்டு தெளிவாகி வருகிறது”, என்று அவர் கூறினார். “அல்லாஹ் விவகாரத்தில் மட்டும் தீவகற்ப மலேசியா எங்களை அச்சுறுத்தவில்லை. புதிய காலனித்துவ சுரண்டலுக்கும் நாங்கள் பலியாகி வருகிறோம்.” பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து அதிகாரத்தை எடுத்துக் கொண்ட அம்னோ இன்னும் மாறவில்லை என்று மாநில உரிமைகளுக்கும் சுயாட்சிக்கும் போராடி வரும் அந்த சபா அரசியல்வாதி கூறினார். “பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களைப் போன்று உள்ள ஒரு கட்சி நமக்கு இன்னும் தேவை தானா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். நமது சுதந்திரம் எங்கே?” என்று ஜெப்ரி வினவினார். “அவர்கள் பிரிட்டிஷ்காரர்களைப் போன்று பிரித்து ஆளும் தந்திரங்களைப் பின்பற்றுகின்றனர். எங்களை அடிமைகளைப் போன்று நடத்துகின்றனர். மலாயாவைப் போன்று இன ரீதியாக வேறுபடுத்த முயற்சிக்கின்றனர். எங்கள் மாநிலங்களை மேம்படுத்தாமல் எங்கள் வளங்களை சுரண்டுகின்றனர்.” “என்னுடைய வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தான் பல ஆண்டுகளாகத் தோண்டிய குழியிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இந்த நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அம்னோ முயன்று வருகிறது”, என்று ஜெப்ரி எச்சரித்தார். “நஜிப்பின் ஒரே மலேசியா என்று அழைக்கப்படும் கோட்பாட்டில் உள்ள வெறுமையை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். ஆனால் அது தான் உண்மை.”
குறிச்சொற்கள்: அல்லா, அல்லா வார்த்தை, அல்லா வார்த்தை உபயோகம், தாக்குதல், முச்லிம்கலின் தாக்குதல்
You can comment below, or link to this permanent URL from your own site.
ஜனவரி 9, 2010 இல் 1:47 பிப
தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன: “இந்த நாள் என்றும் நினைவில் இருக்கும்”
January 09, 2010, 12:16 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி
“நடந்த விஷயங்களை படிக்கும் போது கண்ணீர் கொட்டுகிறது. என்னால் பேச முடியவில்லை. இன்று மலேசியாவுக்கு சோகமான நாள்.”
மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன
அனலெத் நவீதா மாரப்பன்: அண்புள்ள பிரதமர் அவர்களே, ஜனவரி 8, 2010 என்ற இந்த நாளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரே மலேசியாவுக்கு எரியூட்டப்பட்ட நாள் அந்தத் தேதி ஆகும். அந்த நாளுக்குப் பின்னர் நாம், அமைதியான ஒரு நாட்டில் வசிக்கிறோம் என்று வருணிக்க முடியாது.
நம்மைப் பாதுகாக்க வேண்டிய மக்கள் வெட்கத்தைத் தரும் அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கு அனுமதித்த நாளும் அது தான்.
பள்ளிவாசல்களில் ஆர்ப்பாட்டங்களில் அனுமதிக்கப்படும் என்று கூறியதும் நீங்கள்தான், பிரதமர் அவர்களே.
அனைத்து சமய மையங்களும் சகிப்புத்தன்மை ஒன்றிணையும் இடங்களாக இருக்க வேண்டும். அந்த சகிப்புத் தன்மையை சீர்குலைப்பதற்கான நெருப்பைத் தூண்டி விடும் இடங்களாக அவை இருக்கக் கூடாது. மெழுகுவர்த்தி விழிப்பு நிலைகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இனங்களை அவமானப்படுத்தும் ஆர்ப்பாட்டங்கள் சகித்திக் கொள்ளப்படுகின்றன.
இதுதான் ஒரே மலேசியாவா அல்லது ஒரு பிரிவுக்கும் மட்டும்தான் இந்த மலேசியாவா?
எல்விபாலா: நடந்த விஷயங்களை படிக்கும் போது கண்ணீர் கொட்டுகிறது. என்னால் பேச முடியவில்லை. இன்று மலேசியாவுக்கு சோகமான நாள்.
மைதாட்ஸ்: அனைத்து மலேசியர்களுக்கும், நமக்கு சோகமான நாள் இதுவாகும். சமய சகிப்புத் தன்மை சீர்குலைந்து தீவிரவாதம் தலைதூக்கிய நாள். நாம் நமது நாட்டுக்காக பிரார்த்தனை செய்வோம். அந்த மனிதர்கள் செய்யும் தீய காரியங்களுக்கு இறைவன் கேலிப் பொருளாகக் கூடாது. அவர்கள் விலை கொடுப்பார்கள் என்பது நிச்சயம்.
அந்தப் பிரச்னை அமைதியான முறையில் தீர்க்கப்படும் என்று நாம் இப்போதைக்கு பிரார்த்தனை செய்வோம். சமயத்தை பயன்படுத்தும் போது நெருப்புடன் அரசியல்வாதிகள் விளையாடுகின்றனர். அது வெகு விரைவில் கட்டு மீறிச் சென்று விடும். வரலாற்றில் அது நடந்திருப்பதை நாம் கண்டுள்ளோம்.
நாம் அனைவரும் அமைதியாக வாழ வேண்டும் என்று போதிக்கும் கடவுளை நம்புகிறோம். கடவுள் நமக்குப் பகுத்தறிவைக் கொடுத்திருக்கிறார். நாம் அதனை நல்ல முறையில் பயன்படுத்துவோம்.
யாங்: நடப்பதை எல்லாம் பார்த்தால் வினோதமாக இருக்கிறது. தீவகற்ப மலேசியாவில் பதற்றம் காணப்படும் போது கிழக்கு மலேசியர்கள் தொடர்ந்து “அல்லாஹ்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர்.
மலேசிய வம்சாவளி: ஓர் இனம் அல்லது சமயத்திற்குள் உள்ள அனைவரையும் தீயவர்கள் என்றோ கொடுமையானவர்கள் என்றோ வகைப்படுத்தி விட வேண்டாம். எல்லா இனங்களிலும் சமயங்களிலும் கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் வரும் காலத்திலும் தீயவர்கள் இருப்பர். இருக்கத்தான் செய்வர்.
அவர்கள் எந்த இனத்தை அல்லது சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் நாம் அவர்களை ஒதுக்க வேண்டும்.
மூன்டைம்: அந்தத் தீவிரவாத நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்களை மலேசியர்கள் என்று கூறவே கூடாது. நியாயமும் அமைதியும் நிலவ வேண்டும்.
இல்லை என்றால் நமது முன்னோர்கள் உருவாக்கிய அனைத்தும் அழிந்து விடும். நெருப்பைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று உங்களுக்குத் தெரியாவிட்டால் அதனோடு விளையாட வேண்டாம். இன்னொரு மே 13 சம்பவம் நிகழ வேண்டும் என்று உங்களுக்கு அரிக்கிறதா? உங்களுக்கு ஒரு செய்தி. அது நடக்கப் போவது இல்லை.
ஹோவிட்: தயவு செய்து மலேசிய முஸ்லிம்களைக் குறை கூற வேண்டாம். மக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் தீய நோக்கம் கொண்ட சிறிய எண்ணிக்கையிலான தீவிரவாதிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் அவை. நமது முஸ்லிம் நண்பர்கள் பற்றி இணையத்தில் எதிர்மறையான கருத்துக்களை எழுதுவதை நாம் தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் நாம் அந்த தீவிரவாதிகளின் வலையில் விழுந்து விடுவோம்.
ஆர்ப்பாட்டங்களில் அதிகமான மக்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பதை அறிந்து அவர்கள் அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம்.
பெர்னார்ட் சான்: இஸ்லாம் சகிப்புத்தன்மை இல்லாத சமயம் அல்ல. நாம் இப்போது காண்கின்ற வன்முறைகளை எந்த சமயமும் போதிக்கவில்லை. தார்மீகப் பண்புகள் இல்லாதவர்கள் அந்த வேலையைச் செய்திருக்கின்றனர். சமய வேறுபாடின்றி எல்லா நல்ல விஷயங்களையும் எதிர்க்கும் தீய சக்திகளின் வேலை அது. பாசத்துக்குரிய நமது நாட்டில் நிலவும் அமைதிக்கு எதிரானது அவை.
ஹப்சா இப்ராஹிம்: முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவியின் மாமனார் மாத்தியூ டாங்கர் வழிபாடுகளில் கலந்து கொண்ட தேவாலயம் தான் அந்த அஷம்ப்சன் தேவாலயம். அண்மையில் அவரது நல்லடக்கச் சடங்குகள் அங்கு நடைபெற்றன. அதில் அப்துல்லாவும் கலந்து கொண்டார். பாக் லா பெரிதும் வருத்தமடைந்திருக்க வேண்டும்.
அபு அரீப்: நான் மிகவும் வெட்கப்படுகிறேன். நான் கிட்டத்தட்ட அழும் கட்டத்திற்குச் சென்று விட்டேன். நான் வருந்துகிறேன், சக மலேசியர்களே. நான் அமைதிக்கும் சாந்தத்திற்கும் பிரார்த்திக்கிறேன்
ஜனவரி 11, 2010 இல் 9:07 முப
யா அல்லா!
இதற்குமா சண்டை?
ஜனவரி 12, 2010 இல் 2:33 பிப
சகிப்புத்தன்மை யாருக்கு(ம்) வேண்டும்.
ஜனவரி 13, 2010 இல் 1:39 முப
இம்மாதிரி விஷயங்களில் நேராக “விஷயத்திற்கு” வரவேண்டும்.
கிருத்துவ சர்ச்சுகளை முஸ்லிம்கள் தாக்குகின்றனர் என்பது உண்மை.
நல்ல முஸ்லிம்கள் அதனை எதிர்க்கலாம், கண்டிக்கலாம், அந்நிலை தொடரவேண்டும்.
ஆனால், இனி தாக்குதல்கள் இருக்கக் கூடாது.
ஜனவரி 27, 2010 இல் 11:37 முப
முஸ்லிம்கள் பிறயோகப்படுத்தும் வார்த்தையான ‘அல்லாஹ்” வை கிறிஸ்தவர்கள் புதிதாக உபயோகப் படுத்துவதால் தான் இந்த சர்ச்சை வந்தது.
“அல்லாஹ்” யாரையும் பெறவும் இல்லை யாராலும் பெறப்படவும் இல்லை. இது முஸ்லீம்களின் உறுதியான நம்பிக்கை மற்றும் சித்தாந்தமும் கூட.
ஆனால் மரியம் என்ற ஒரு அன்னையால் பெறப்பட்ட ஏசு நாதரை எப்படி அல்லாஹ் என்று அழைக்க முடியும்? அமைதியாக வாழும் இரு சமூகத்திற்க்கு மத்தியில் குழப்பம் உறுவாக்குமா இல்லையா?
ஆகவே, கிறிஸ்தவர்கள் இவ்வளவு காலமும் ஏசுவை எந்த பெயரைச் சொல்லி அழைத்தார்களோ அப்படியே அழைக்கட்டும்.
முஸ்லீம்களிடம் எவ்வித்தமான சகிப்புத் தன்மையை மற்ற சமூகத்தினர்கள் எதிற்பார்க்கிறார்களோ அதை முஸ்லீம்களும் எதிற்பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது?
ஜனவரி 28, 2010 இல் 1:05 முப
ஜனாப் சஜருத்தீன் நண்பரே,
மிகவும் அருமையாக பதில் கொடுத்திருக்கிறீர்!
நன்றி!
இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் “உள்கலாச்சாரமயமாக்கல்’ (Inculturation) என்ற முறையினை கிருத்துவர்களும், முஸ்லிம்களும் பின்பற்றிவருகிறார்கள்.
ஆதாவது ஒரு நம்பிக்கையாளர்களின் புத்தகத்தை (காஃபிர்களுக்கு அத்தகைய வெளிப்படுத்திய புத்தகங்கள் இல்லை என்ற வாதமெல்லம் வரும்) கிருத்துவர்கள் / முஸ்லீம்கள் படித்துவிட்டி, “அதிலில் உள்ள, சொல்லப்பட்டுள்ள, ஏன் நீங்கள் வழிபடுகின்ற கடவுளே ஜேஹோவாதான், ஏசுகிருஸ்துதான், அல்லாதான்” என்று பிரசாரம் செய்யும் கூட்டங்கள் நிறையவே உண்டு!
முஸ்லிம்களைப் பொறுத்தவரைக்கும் ஜாகிர் நாயக் அந்த வேலையைத்தான் செய்துவருகிறார், இதைத் தவிர இங்கும்–அங்குமாக நான்கைந்து பேர்கள் உள்ளனர் (ஸ்ரீரங்கத்து ஐய்யங்கார் உள்பட).
இதைப்பற்றி, தங்கள் கருத்து என்னவோ?
தெரிந்துகொள்ளலாமா?