இஸ்லாத்தில் நாத்திகம் உண்டா? உண்டு என்று விடுதலை ஒரு பெண் நாத்திகவாதியை அறிமுகப் படுத்துகிறது!

நான் எப்படி தினமும் “விடுதலை” படிக்கிறேனோ, அதேபோல, “அவாளும்” என்னுடைய எழுத்துகளைப் படிக்கிறார்கள் என்று முன்னமே குறிப்பிட்டுள்ளேன்.

நேற்று,

http://dravidianatheism2.wordpress.com/2010/01/02/பிள்ளையார்-ஜெயகாந்தன்- ந/

என்ற பதிவில், கீழ் கண்டவாறு கேவிகளை எழுப்பியிருந்தேன்.

—————————————————————————————————————-

பிள்ளையாரை ஜெயகாந்தனுக்குப் பிடிக்கும் அது அவருடைய நம்பிக்கை. திக, திமுக முதலிய போலி, நகலான, நாத்திகர்களுக்கு கடவுளின் பிள்ளையான ஏசுவைப் பிடிக்கிறது,  அல்லாவைப் பிடிக்கிறது. அப்பொழுது எந்த ம்ஆனம், ரோஷம், சூடு, சொரணையுள்ளத் தமிழனும் அதைக் கேட்பதில்லையே? எந்த மயிலாடன், மானாடன், நாயாடன், நரியாடன், பன்னியாடன்,………………..என்று பெயர்வைத்துக் கொண்டு அந்த ஏசுப்பிள்ளைகளையும், அல்லாப்பிச்சைகளையும் பற்றி இவ்வாறு எழுதவில்லையே?

* இப்படி எந்த நாத்திகம் தமிழகத்தில் வேலை செய்கிறது என்று தெரியவில்லை!

* தமிழனுக்கு அந்த அளவிற்கு என்னவாகி விட்டது?

* கிருத்துவத்தில், இஸ்லாத்தில் ஏனிப்படியான பகுத்தறிவுகள் இல்லை என்று ஏன் ஆரய்ச்சி செய்யவில்லை?

* அங்கு பகுத்தறிவுடன் ஏன் நாத்திகம் வேலை செய்வதில்லை?

* இந்த நாத்திகம், பெரியார் நாத்திகம், வீரமணி நாத்திகம் ஏன் மற்ற பிள்ளைகள், பிள்ளைமார்கள், மாப்பிள்ளைகள், மப்பிள்ளைகள், முதலியவர் எப்படி பிறந்தன என்று கேட்பதில்லை!

—————————————————————————————————

உடனே ரோஷம் வந்துவிட்டது போலும்! கீழ் கண்ட கட்டுரையை வெளியிட்டுள்ளார்கள்!

இஸ்லாத்தில் நாத்திகம் உண்டா? உண்டு என்று விடுதலை ஒரு பெண் நாத்திகவாதியை அறிமுகப் படுத்துகிறது!

கதம்பம்
மதவாதிகளே, பதில் சொல்லுங்கள்!-1

சு. அறிவுக்கரசு

http://viduthalai.periyar.org.in/20100103/news09.html

எனக்கு பதில்: நம் நாட்டில் 6 மதங்கள் இருக்-கின்றன என்றாலும் இந்து மதத்தில் உள்ள பகுத்தறிவாளர்களும் நாத்தி-கர்களும் தங்கள் கருத்தை வெளி-யிடுவதைப் போல, பிற மதத்தவர்கள் வெளியிடுவதில்லை. அப்படிப்பட்ட கருத்தை மறை பொருளாக ஒரு சிலர் வெளியிட்டபோது ஊர்க்கட்டுப்பாடு போட்டு மடக்கி, முடக்கிட முயல் கிறார்கள். இம்மாதிரி நிலை வேறு சில மத அடிப்படைவாதம் நிலவும் நாடு களிலும் இருக்கின்றன. அவற்றில் ஒன்று சோமாலியா. வாழ்வதற்கு வழியில்லாமல், பட்டினியால் நாள் தோறும் நூற்றுக்கணக்கில் செத்து விழுந்தவர்களின் தொகை பல பத்து லட்சங்களைத் தொடும் நிலையில், அவர்களுக்கு ஏதும் செய்யாத மதம், தொழுகைக் கட்டுப்பாடுகளை இறுக்கி அவர்கள்மீது இரக்கம் காட்டாத நிலை தான் இன்றும்.

அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் எழுதியவற்றின் சுருக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

சோமாலியாவில் ஒரு இஸ்லாமிய பெண்: நான் குழந்தையாக இருந்தபோதே, தொழுகையின் போது நான் ஏன் என் தம்பிக்குப் பின்னால் நிற்கவேண்டும் என நான் கோபப்பட்டது உண்டு. ஆனாலும் நான் என் பெற்றோருக்கு, என் இனமக்களுக்கு, என்மத குருக்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தேன்; கேள்விகள் கேட்டால் அவர்களை மதிக்காமல் நடக்கிறேன் என்று ஆகிவிடுமோ? என்கிற தயக்கம்தான். இளமைப் பருவத்தில் இசுலாத்திற்கு எதிரான என் கருத்து கூடுதலானது. ஆனால், நான் யார் அல்லாவுக்கு எதிராகப் பேச? குடும்ப கவுரவத்தைப் பெரிதாக நினைக்கும் என் குடும்பம், என் இனம் முக்கியமாகப்பட்டது. மேற்கத்திய நாடுகளிலிருந்து வந்த நூல்களைப் படித்தபோது, பெண்-களுக்கு சுதந்தரம் அளித்திடும் மற்றொரு உலகம் இருக்கிறது என்பதை நான் அறிந்தேன்.

குரானின் நரகத்தைக் கண்டு பயந்த அந்த இஸ்லாமியப் பெண்மணி: ஆனாலும் நான் கருப்பு புர்க்கா அணிந்து தலை முதல் கட்டை விரல் வரை மறைத்துக் கொண்டும் அய்ந்து வேளை தொழுதுகொண்டும் குரானும் மத நூலான ஹிடித்தும் விதித்துள்ள எல்லா கட்டுப் பாட்டுக்குள்ளும் இருந்து வந்தேன். காரணம் நரகம் பற்றிய பயம். நரகத்தைப் பற்றிய வருணனைகளைக் குரான் விஸ்தாரமாகவே செய்கிறது; வலி ஏற்படுத்தும் புண்கள், கொதிக்கும் நீர், தோலை உரித்தல், தசையைச் சுடுதல், குடலை உருவுதல் போன்ற கொடுமைகள். மதப் பிரச்சாரம் செய்பவர்கள் எல்லாருமே நரக வேதனைகளை வருணித்ததைக் கேட்டு நான் குலை நடுக்கம் எடுத்துப் பயந்து கொண்டிருந்தேன்.

திருமணம் என்றதும் பயந்தோடியது!: எனக்குத் திருமணம் செய்து வைக்க இருப்பதாக என் தந்தை தெரிவித்தபோதுதான் என் எதிர்காலம் முழுவதுமே, முன்பின் அறிந்திராத ஒருவனுடன் வாழ வேண்டும் என்கிற அச்சம் ஏற்பட்டது. வீட்டை விட்டு வெளியேறினேன். ஹாலந்து நாட்-டிற்குத் தப்பிச் சென்றேன். அங்குள்ள நல்ல மனது உள்ளவர்களின் உதவியால் படித்தேன். அரசியல் அறிவியல் படிக்கும் போதுதான் முசுலிம் சமுதாயம்- அல்லாவின் இனம்- ஏழையாக, முரடர்களாக இருப்ப-தற்கான காரணம் தெரிந்தது; நாத்-திகர்கள் என்று முசுலிம்களால் கூறப் படும் நாட்டினர் வசதியாகவும் அமைதி-யாகவும் வாழ்கின்றனர் என்பதும் விளங்கியது. ஆனாலும் நான் முசுலி-மா-கவே, அல்லாவின் விருப்பத்தைக் குறை கூற முடியாமலேயே இருந்தேன்.

படுக்கும்போது மனப்போராட்டம்: பல்கலைக் கழகத்தில் படிக்கும்போதுதான் நான் நம்பிக்-கையை இழந்தேன். அங்கே நான் கற்றறிந்த உண்மைகள் வலுவானவை என்றாலும் அது வரை நான் சொல்லி வளர்க்கப்பட்ட கருத்துகளோடு அவை மோதின. ஸ்பினோஸா, ஃபிராய்டு, டார்வின், லாக்கி மற்றும் மில் ஆகியோரின் கருத்துகள் உண்மை; குரானில் சொல்லப்பட்டிருப்பவையும் உண்மைதானே! இருப்பினும் இவை இரண்டுக்குமான வேறுபாடுகளைப் பற்றி ஒரு நாள் சிந்தித்து முடிவுக்கு வரலாம் என முடிவு செய்து அவர்களின் கருத்துகளைத் தொடர்ந்து படித்து வந்தேன். இது சரியா என்பது ஒருபுறம் இருக்க, அறிவு வளர்ச்சிக்கு அல்லா தடையல்லவே என எனக்குள் எண்ணி நான் சமாதானம் அடைந்தேன்.

பர்தாவிலிருந்து விடுதலை, ஜீன்ஸுக்கு மாறினார்: ஆலந்து நாட்டுக்கு வந்தவுடன் என் முசுலிம் உடைகளை விட்டு ஜீன்ஸ் அணியத் தொடங்கினேன். சோமாலியக்காரர்களுடன் பழகுவதைத் தவிர்த்தேன். பிறகு முசுலிம்களுடன் பேசுவதை நிறுத்தினேன். பிறகு ஒரு நாள், என் சிநேகிதனுடன் முதன் முதலாக ஒயினை ருசித்தேன்.

நான் முசுலிமா?: அமெரிக்காவின் இரட்டைக் கட்டடங்கள் ஒசாமா பின் லேடனின் ஆள்களால் தகர்க்கப்பட்ட போது அதனை நியாயப்படுத்திய ஒசாமாவின் செயல் சரிதானா? அவருடைய கருத்தை ஒப்புக்கொள்வதா? இது கடவுளின் கட்டளை என ஏற்க முடியுமா? இவற்றைச் செய்ய இயலாது என்றால் – நான் முசுலிமா?

“நானும் நாத்திகவாதிதான்” என்று கத்தியது: அந்த நேரத்தில் ஹெர்மன் ஃபிலிப்சே எழுதிய நாத்திகப் பிரகடனம் (Atheist Manifesto) நூலைப்படித்தேன். அந்த நூலில் 4 பக்கங்களைப் படித்த உடனே, அல்லாவைப் பல ஆண்டுகளுக்கு முன்பே கைகழுவி விட்டதாக உணர்ந்தேன். நானும் ஒரு நாத்திக-வாதிதான். மதத்தைக் கைகழுவி விட்ட-வள்தான். நம்பிக்கையற்றவள்தான். இது எனக்குப் புரிந்தது. உடனே முகம் பார்க்கும் கண்ணாடி முன்னால் நின்று என்னையே பார்த்து நான் கடவுளை நம்பவில்லை என்று சோமாலிய மொழியில் உரக்கக் கூவினேன்.

நரக பயம் மறைந்தது: அதன் பின் மனதுக்கு இதமாக இருந்தது. வலி ஏதும் இல்லை; தெளிவு பிறந்தது. நான் கொண்டிருந்த நம்பிக்கை களில் இருந்த முரண்பாடு-கள் சுக்கு நூறாக உடைந்து போயின. நரகத் தீயைப் பற்றி நெடு நாள்களாகப் பதிந்திருந்த பயம் நீங்கியது. கடவுள், சைத்தான், தேவதைகள் போன்ற மனிதனின் கற்பனைகள் மறைந்து இவையெல்லாம் எளியோர் மீது தம் கருத்தைத் திணிக்கும் வலியோரின் கற்பனைகள் எனத் தெளிவு பிறந்தது. இதற்குப் பின் உலகில் சுயமரியாதை, காரண காரியம் ஆகியவற்றின் அடிப்-படையில் நான் பயணம் தொடர்வேன் எனும் நம்பிக்கை ஏற்பட்டது. எனக்கு வழிகாட்டி, எனக்குள் இருக்கிறது; புனித நூல்களில் இல்லை என்பதும் புரிந்தது.

இறந்த பிறகு எலும்புக் கூடாவோம்!: அடுத்தடுத்த மாதங்களில் நான் மியூசியங்களுக்குப் போய், பதப்படுத்-தப்-பட்ட மம்மி உடல்கள், இறந்து சிதைந்து—-போன உடல்கள், எலும்புக் குவியல்கள் ஆகியவற்றைப் பார்த்த-போது நாமும் இறந்தபிறகு இப்-படித் தான் எலும்புக் கூடாக இருப்-போம் என நினைப்பு வந்தது.

இசுலாத்தில் நீங்கள் அல்லாவின் அடிமைகள்: கடவுள் பற்றிய நம்பிக்கை இல்லா-மலேயே வாழ முடியும் என உறுதியா-னது. இசுலாத்தில் நீங்கள் அல்லாவின் அடிமைகள், சுயமாக எதையும் செய்-யக் கூடாதவர்கள்; நீங்கள் சுதந்தர-மா-ன–வர் அல்ல; நரகம் பற்றிய அச்சம் ஊட்டப்பட்டிருப்பதால் நீங்கள் நல்ல-வராக நடிக்கிறீர்கள்; உங்களுக்கென்று நல்ல கோட்பாடுகளே கிடையாது.

நாமே நமக்கு வழிகாட்டி: மனிதர்களாகிய நாம் நமக்கு நாமே வழி காட்டிகள்; நல்லவை, கெட்டவை அறியக்கூடியவர்கள்; நம் ஒழுக்கத்-திற்கு நாமே பொறுப்பானவர்கள் என்-கிற முடி-வுக்கு வந்தேன். மதங்களின் நோக்கம் எனச் சொல்லப்படுபவற்றை, எவ்விதமான கட்டுப்-பாடுகளுக்கும் விதிமுறை களுக்கும் பயந்து தலை வணங்கி ஏற்றுக் கொள்ளாமல் – நம் விருப்பத்தை நசுக்காமல் – நாமும் நல்ல-வர்-களாக வாழ்ந்து பிறர்க்கும் நல்ல-வர்-களாக இருக்கலாமே என்கிற முடிவுக்கு வந்தேன். ஏற்கெனவே என் வாழ்வில் பல பொய்-களைச் சொல்லியிருக்கிறேன்; போதுமான அளவுக்குச் சொல்லி-விட்-டேன்; அவை போதும் என என் மன-துக்குள் உறுதி செய்து கொண்டேன்.

நரகம் – இஸ்லாத்திலும், கிருட்துவத்திலும்: இன்ஃபிடல் (Infidel) (நம்பிக்கை அற்றவர்) எனும் நூலை 2007 இல் எழுதி வெளியிட்ட பிறகு அமெரிக்கா போனேன். ஏசு கிறிஸ்துவின் போதனை-களின்பால் ஈர்ப்பு உண்டா என என்னி-டம் கேட்கப்-பட்டது. மத நம்பிக்கை-யற்றவளாக இருப்-பதை விட இசுலாத்தை விட மனிதாபி-மானம் உள்ள கிறித்துவத்-தில் நம்பிக்கை வைக்கலாமே எனக்-கேட்டனர் போலும்! பேசும் பாம்புகள், சொர்க்கலோகத் தோட்டங்கள் பற்றிப் பேசும் மதம்தானே அது? முசுலிம்களை விட நாடகபாணியில் நரக வேதனை-யைக் கிறித்துவம் கூறுகிறது என்றாலும் அந்தக் கதைகள் எல்லாம் என் பாட்டி எனக்குச் சொன்ன தேவதை-கள், ஜின்-கள் பற்றியவை போன்றே எனக்–குத் தோன்றின.

தெளிவானது நாத்திகம் தான்: எதையும் தெளிவாகத் தெரிந்து கொள்ளக் கூடிய ஒலி! நாத்திகமே! அது ஒரு மதக் கோட்பாடல்ல. இறப்பு நிச்சயம். சொர்க்கம் பற்றிய ஆசையோ நரகம் பற்றிய அச்சமோ இல்லாத நிலை. எல்லாவிதமான ரகசியங்கள், துன்பங்கள், அழகு, வலிகள் போன்றவற்றுடன் கூடிய இவ்வுலக வாழ்வில் நாம் தடுமாறு-கிறோம், சமாளித்து எழுகிறோம், துக்கப்படுகிறோம், பாது-காப்பின்மையை உணர்-கிறோம், நம்பிக்கை-யுடன் இருக்கிறோம், தனிமையை உணர்கி-றோம், மகிழ்ச்சி-யு-டன் இருக்கிறோம், அன்பு செலுத்துகி-றோம். இதற்கு மேல் ஒன்றும் இல்லை; இதற்கு மேல் எதுவும் எனக்குத் தேவை-யில்லை.

மாஜி முஸ்லிமின் கட்டுரை இது என்று முடிக்கிறார்கள்: சோமாலிய (மாஜி) முசுலிம் பெண் அயான் ஹர்சி அலி எழுதிய Infidel எனும் நூலின் ஒரு கட்டுரை இது. The Portable Atheists (எடுத்துச் செல்லக்-கூடிய நாத்திகர்கள்) எனும் தலைப்பில் கிறிஸ்டோ-பர் ஹிட்சின்ஸ் தொகுப்பா-சிரி-யராக இருந்து தந்துள்ள 47 கட்டுரை-களில் கடைசிக் கட்டுரை இது).

———————————————————————————————————–

முதல் பத்தியில் நேரிடையாக எனக்கு பதில் அளித்துள்ளார்கள்.

இருப்பினும், இது இஸ்லாம் விஷயமாதலால், அவர்கள் என்ன சொல்வார்கள் என்றுதான் பார்க்கவேண்டும்.

எனது கேள்வி, இஸ்லாத்தில் நாத்திகம் இருக்கமுடியுமா?

நாத்திகவாதிகள் இருக்கமுடியுமா?

மாஜி முஸ்லிம் என்று இருக்கமுடியுமா?
Explore posts in the same categories: அல்லா, ஒசாமா பின் லேடன், ஒஸாமா பின் லேடன், நாத்திக முஸ்லீம்!, பர்தா, பர்தா மத-அடையாளமா?, பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், மத-அடிப்படைவாதம், முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை, Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: