பெண்களுக்கான ‘சுன்னத்’ உகாண்டாவில் தடை!

பெண்களுக்கான ‘சுன்னத்’ உகாண்டாவில் தடை

இன்றைய விடுதலை மற்றும் தினமலர் செய்திகள்

http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4490

Female circumcion

கம்பாலா (ஆப்பிரிக்கா), டிச. 28, 2009_ பெண்களுக்கு செய்யப்-படும் சுன்னத் சடங்குக்கு, உகாண்டா அரசு தடை விதித்துள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் உள்ள பழங்-குடி முஸ்லிம் பெண்-களுக்கு, சுன்னத் செய்யும் வழக்கம் உள்ளது. பெண்-களின் பிறப்புறுப்பை சிதைக்கும் இந்த சடங்-குக்கு, பல நாடுகள் தடை விதித்துள்ளன. உடலுற-வின் போது ஏற்படும் இன்பத்தை, சுன்னத் செய்து கொண்ட பெண்-களால் அனுபவிக்க முடி-யாது. அதுமட்டுமல்-லாது, குழந்தை பிறப்பின் போதும் இதனால் சிக்கல் ஏற்படும். பெண்களுக்கு எதிரான இந்த சடங்கை தடை செய்யும் விதத்தில், உகாண்டா நாடாளு-மன்-றத்தில் சட்ட முன்-வரைவு கொண்டு வரப்பட்டு உள்ளது. உகாண்டாவில் ஒவ்வொரு டிசம்பர் மாத-மும் நடக்கும் சடங்கில் 3 ஆயிரம் பெண்களுக்கு சுன்-னத் செய்யப்படும். நாடா-ளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டமுன்வரைவு மூலம், இந்த சடங்குக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.

A girl cries as she is circumcisedஆணின் உறுப்பின் நுனிப்பகுதியின் சதையை வெட்டியெடுப்பது இஸ்லாத்தில் ஒரு முக்கிய சடங்காகும். அதேபோல பெண்களின் உறுப்பின் பகுதியை அறுத்தெடுக்கும் முறைக்கு கிளைடோரிடெக்டோமி (clitoridectomy), லேபியாபிளாஸ்டி (labiaplasty), வெஜினோபிளாஸ்டி (vaginoplasty) எனப்பல பெயர்களில் அந்த அறுவைச்சிகிச்சை முறைப்படி அழைக்கப்படுகிறது. சுருக்கமாக இது “பெண்-சுன்னத்” எனப்படுகிறது. இதில் மூன்று முறைகள் உள்ளன. சரித்திர ரீதியாக இது எகிப்தில் தோன்றி மற்ற இடங்களுக்குப் பரவியதாகத் தெரிகிறது. இஸ்லாத்தில் இப்பழக்கம் இல்லையென்று வாதித்தாலும், ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாகவும் இந்தோனேசியா, லெபனான், யேமன், பங்களாதேசம் முதலிய நாடுகளிலும், மற்றும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் ககறைந்த அளவிலும் முஸ்லீம்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.

A girl is soothed by an attendant before her circumcisionகிளைடோரிஸ் (Clitoris) என்பது பெண்ணுருப்பின் மேல்பகுதியில் இருக்கும் ஒரு சதை (படத்தில் கருப்பாகக் காட்டப்பட்டுள்ளது).

File:FGC Types.jpg

1. (A). “பிரிப்யூஸ்” (Prepuce) என்ற முறையில் கிளைடோரிஸைச் சுற்றியுள்ள சதையினை வெட்டியெடுப்பது.

1 (B). “பிரிப்யூஸ்” என்ற முறையில் கிளைடோரிஸைச் சுற்றியுள்ள சதை மற்றும் கிளைடோரிஸின் பகுதி அல்லது முழுவதுமாக எடுக்கப்படும் முறை

2. கிளைடோரிஸ் மற்றும் அதன் கீழிருக்கும் லேபியா மைனோரியா (Labia minoria) என்ற சதையின் பகுதியினையோ அல்லது முழுவதுமாகவோ சேர்த்து வெட்டியெடுப்பது.

3. மேல் – லேபியா மைனோரியா (Labia minoria), மற்றும் கீழ் – லேபியா மேஜோரா (Labia majora) லேபியா சதையை முழுவதுகாக வெட்டி, சிறுநீர் போகும் பகுதி (Urethra) மற்றும் பெண்ணின் பிரதான மைய உறுப்பு (Vagina) இரண்டையும் மறைக்கும் வகையில் உள்ள சதையைச் சேர்த்துத் தைத்து விடுவது. பிறகு சிறுநீர் மற்றும் மாதவிடாய் திரவம் வெளியேறுவதற்காக ஒரு ஓட்டைப் போடப்படும்.

Female circumcisers and their attendants waiting in an elementary-school classroom, where they do their work.உலக ஆரோக்கியக் கழகத்தின் அறிக்கையின்படி, எந்தெந்த நாடுகள் / நாகரிங்கள் அரேபிய முஸ்லிம்களால் படையெடுக்கப்பட்டுத் தாக்கப்பட்டனவோ, அந்தந்த நாடுகளில் இப்பழக்கம் காணப்படுகிறது. உதாரணமாக ஆப்பிரிக்கா – வடக்காப்பிரிக்க நாடுகளில் பெருமளவில், மத்தியத் தரைக்கடல் நாடுகளில் – குறிப்பாக அரேபிய தீபகற்பம், பாரசீக வளைகுடா நாடுகள் – யேமன், பஹ்ரின், சௌதி அரேபியா, ஐக்கிய அரேபிய எமிரைட்), ஆசியாவில் – மலேசியா, இந்தோனேசியா, இந்தியா (தௌபி போஹ்ரா முஸ்லிம்கள்) முதலிய நாடுகளில் இந்த வழக்கம் உள்ளது.Girl-being-circumcised

COUNTRY PREVALENCE (%) TYPE PERFORMED
Benin 16.8 II
Burkina Faso 76.6 II – Performed throughout the country in all but a few provinces.
Cameroon 1 I, II
Central African Republic 35.9 I, II
Chad 44.9 II – Widely practiced in all parts of Chad.III – Confined to areas bordering Sudan in the eastern part of the country.
Cote d’Ivoire
(Ivory Coast)
44.5 II
Djibouti 90-98 II – Performed on girls of Yemeni origin.III – Most common among the Issa and Afar.
DRC (Congo) Unknown II
Egypt 97.3% I, II, III
Eritrea 88.7 I, II, III
Ethiopia 79.9 I – Commonly practiced among Amharas, Tigrayans and the Jeberti Muslims living in Tigray.II – Most commonly practiced form.  The Gurages, some Tigrayans, Oromos and the Shankilas practice this form.

III – Practiced in the eastern Muslim regions bordering Sudan and Somalia.

IV – Referred to as “Mariam Girz” in Ethiopia, it is practiced mainly in Gojam in the Amhara region.

Gambia 60-90 I – The Sarahulis perform this on girls one week after birth.  The Bambaras perform the procedure on girls between 10-15 years of age.II – Nearly all Mandinkas, Jolas and Hausas practice this form on girls 10-15 years old.

III – The Fulas perform a procedure similar to Type III that is described as “vaginal sealing” on girls from one week old to 18 years old.

IV – The Fulas perform this type on girls from one week old to 18 years old.

Ghana 5.4 I, II, III
Guinea 98.6 I, II, III, IV
Indonesia 100 I, IV
Kenya 32.2 I and II most common.III – found in the far eastern areas bordering Somalia.
Liberia 50 II
Mali 91.6 I, II, III(Type III practiced in southern areas of country)
Mauritania 71.5 I, II
Niger 4.5 II
Nigeria 19 I, II, III, IV(Type I and II more prominent in the south; Type III more prominent in north)
Senegal 28.2 II, III(Type II is most common)
Sierra Leone 80-90 II
Somalia 90-98 I – practiced mainly in the coastal towns of Mogadishu, Brava, Merca, and Kismayu.III – Approximately 80% of the circumcisions are this type.
Sudan 90 I, II, III(Type III is most common)
Tanzania 17.7 II, III
Togo 12 II
Uganda 5 No information available.
Yemen 22.6 II, III

INDONESIA_-_femalecircumcisionஉலகம் முழுவதும் இப்பழக்கம் இருப்பினும், ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளில் இது அதிகமாக பின்பற்றப்பட்டு வருகிறது. உலக சுகாதர நிறுவனம் இதைத் தடுக்க, முடிவிற்குக் கொண்டு வர முயற்ச்சி செய்து வருகிறது. பிப்ரவரி மாதம் 6ம் தேதி “அனைத்துலக பெண் உறுப்புச் சிதைவு எதிர்ப்பு தினம்” என்று ஐக்கிய நாடுகள் சங்கம் அறிவித்துள்ளது. ஆனால், இந்தியாவில் இதைப் பற்றி மூச்சுக் கூட விடுவது கிடையாது.

Advertisements
Explore posts in the same categories: கிளைடோரிடெக்டோமி, கிளைடோரிஸ், சுன்னத், பிரிப்யூஸ், பெண்களின் சுன்னத், பெண்கள் சுன்னத், முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை, லேபியாபிளாஸ்டி, வெஜினோபிளாஸ்டி, clitoridectomy, Clitoris, Labia majora), Labia minoria, labiaplasty, Prepuce, Uncategorized, Urethra, Vagina, vaginoplasty

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

16 பின்னூட்டங்கள் மேல் “பெண்களுக்கான ‘சுன்னத்’ உகாண்டாவில் தடை!”


  1. indha kodumaikkellam iniyaavadhu thadai vidhikkavendum.

  2. Bali Says:

    ithu kekave ivlo kastama iruntha, atha anupavikra ponu evlo kasta paduva,

    • vedaprakash Says:

      “இது கேட்கவே இவ்வளவு கஷ்டமா இருந்தா, அதை அனுபவிக்கின்ற பெண் எவ்வளவு கஷ்டப்படுவாள்” என்று தனது கருத்தை பலி வெளியிட்டுள்ளார்.

  3. j.k.megala Says:

    government should punish severely those people who are doing it and girls should appose strongly with the help of police

  4. fahim Says:

    If u know about Islam completely ur not ask the question

  5. arivu india Says:

    டே உனக்கு அறிக்குதுன்னா சொரிஞஜிக்கோ பொய்யால் புகழ் பெற நினைக்காதே

    • vedaprakash Says:

      அறிவுள்ளவரே, “அறிவு” என்ற பெயரைக் கொண்டவரே, “மிகப் பெரிய இறைவன்” உமக்கு அமைதியையும், சந்தோஷத்தையும், நிண்ட ஆயுளையும் கொடுப்பாராக.

      அன்பரே எனக்கு பொய் சொல்லி எழுத வேண்டும் மென்ற அவசியம் இல்லை.

      அவ்வாறிருந்தால், மணிக்கணக்கில் தட்டெச்சு செய்து, வாரக்கணக்கில் மூலங்களை பரிசோதித்து, மாதக் கணக்கில் தேர்ந்தெடுத்த புத்தகங்களுடன் ஆதாரங்களை, அத்தாட்சிகளை அடிக்குறிப்புகளில் கொடுத்து எழுத வேண்டிய அவசியமும் எனக்கு இருக்காது.

      இப்பொழுது இணைத்தள எழ்த்தாளர்களைப் போல “கட் அண்ட் பேஸ்ட்” செய்து அல்லது அடுத்தவர்களின் பதிவை அப்படியே தமது என்று போட்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கலாம். கேட்டால் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியரிடமிருந்தே நேராகக் கேட்டு வாங்கிப் போடுகிறேன் அன்று புளுகி ஜம்பம் அடித்துக் கொள்ளலாம்.

      சொரிந்து விட்டதற்கும், சொரிந்து கொள்ளச் சொன்னதற்கும் நன்றி.

  6. W. X. Jose Verghese Says:

    I remember that there was a lot of corresponddence going on in Indian Express during 1980s about this andf other connected issues.

  7. MOHAN Says:

    “இது கேட்கவே இவ்வளவு கஷ்டமா இருந்தா, அதை அனுபவிக்கின்ற பெண் எவ்வளவு கஷ்டப்படுவாள்”

  8. Josef Balan Says:

    பென்களுக்கான ” சுன்னத் ”
    !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: