தமிழகமும், ஒஸாமா பின் லேடனும்!

தமிழகமும், ஒஸாமா பின் லேடனும்!

தமிழர்களின் ரசனையே தனிதான் எந்தவிஷயம் கிடைத்தாலும் அதை செய்தியாக வெளியிடும்போது பரபரப்பு, விருவிருப்பு, துடிதுடிப்பு ஏற்படுத்துவதில் வல்லவர்கள்! இதோ, இப்படி செய்திகள்!

பின்லேடன் மனைவி, குழந்தைகள் கைது

தினத் தந்தி – ‎1 மணிநேரம் முன்பு‎
பின்லேடனுக்கு பல மனைவிகள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒரு மனைவியும் சில குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் முன்பு ஆப்கானிஸ்தானில் பின்லேடனுடன் வசித்து வந்தனர்.

சவுதி தூதரகத்தில் தஞ்சம் வீட்டு சிறையில் இருந்து பின்லேடன்

தினகரன் – ‎4 மணிநேரம் முன்பு‎
கெய்ரோ : ஒசாமா பின்லேடனின் 17 வயது மகள் ஈரானின் வீட்டுச் சிறையிலிருந்து தப்பி விட்டார். அவளுக்கு டெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகம் தஞ்சம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

பின்லேடனின் காணாமல்போன குடும்பம் ஈரானில் வசிப்பது தெரியவந்தது

தினத் தந்தி – ‎23 டிச., 2009‎
பின்லேடனின் அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தியபோது, பின்லேடனும் அவனது மனைவிகளில் ஒருவரும், குழந்தைகளும் ஆப்கானிஸ்தானில் தான் வசித்து வந்தனர்.

டெக்ரானில் பின்லேடன் மனைவி குழந்தைகள் கைது!

Inneram.com – ‎10 மணிநேரம் முன்பு‎
டெக்ரான்: அல்கொய்தா பின்லேடனுக்கு மனைவிகள் மற்றும் குழந்தைகள், பேரக்குழந்தைகள் உண்டு. இவர்கள் அனைவரும் முன்பு ஆப்கானிஸ்தானில் பின்லேடனுடன் வசித்து வந்தனர்.

சரி, என்னதான் விஷயம் என்று பார்த்தால், எல்லாமே பழைய கதைகள்!

அதுமட்டுமல்ல, இன்னும் பல விஷயங்கள், புகைப்படங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால், இவையெல்லாம் நமக்குத் தேவையா?

இதோ கொஞ்சம்!

படங்கள் – இடமிருந்து வலமாக –

1. ஒஸாமா தன்னுடைய 10 வயது பையன் அலியைக் கொஞ்சுகிறான்

2. ஸாத் பின் லேடன்

3. தன்னுடைய மனைவி ஜைனாவுடன்.

4. சிறுவயதில் ஒஸாமா

5. மொஹம்மது மற்றும் பக்ர் பின் லேடன்

ஃபெலிக்ஸ் பிரௌன் தான் உமர் ஒஸாமாவை எகிப்து நாட்டில் பெரிய பிரமிட் அருகில் குதிரை சவாரி செய்தபோது சந்தித்ததாகவும், உடனே தனது ரோமாஞ்சகம் ஆரம்பித்துவிட்டதாகவும், தனது எதிர்கால கணவரைக் கண்டுகொண்டதாகவும் கூறுகிறார்.

இவர் ஏற்கெனவே ஐந்துமுறை மணமானவர்!

இருப்பினும் இருவரும் திருமணம் செய்துகொண்டு விட்டனராம்!

அதாவது ஃபிலிக்ஸூக்கு இது ஆறாவது கணவன் என்றாகிறது!

எகிப்தில் இஸ்லாமிய முறைப்படி கல்யாணம் செய்து கொண்டாலும், ரியாதிலுள்ள அதிகாரத்திடம் தம்முடைத் திருமணம் அங்கீகாரம் பற்றி எதிர்பார்த்துக் கொண்டிருக்காராராம்!

சரி, ஒஸாமாவின் மனைவி என்று தேடிப் பார்த்தால், இதோ ஒரு முந்தைய மனைவி!

பெயர் – ஸ’ஸாந்த்ரா பின் லேடன்!

ஆமாம், நமது தமிழ் திரைப்படக்காரர்களுக்கு இது தெரிந்தால், உடனே ஸூட்டிங் ஆரம்பித்து விடமாட்டார்களா?

தமிழன் வாழ்க!

Explore posts in the same categories: ஒசாமா பின் லேடன், ஒஸாமா பின் லேடன், பின்லேடனின் குடும்பம், பின்லேடனின் மனைவி, Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: