இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடும், சபாபதி மோகனின் இந்து விரோத பேச்சும்!

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடும், சபாபதி  மோகனின் இந்து விரோத பேச்சும்!

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநில மாநாடு: இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநில மாநாடு சோழிங்க நல்லூரில் உள்ள முகமது சதக் கலை அறிவியல் கல்லூரியில் 13-12-2009 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இஸ்லாத்தின் பல பரிமாணங்கள் ஆய்வுக் கட்டுரைகள் மூலம் விவாதிக்கப் பட்டது. அவை அடங்கிய – 89 ஆய்வுக் கட்டுரைகள் – ஆய்வுத் தொகுப்பும் வெளியிடப் பட்டது.

இந்துவிரோத பேச்சு: அதில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சபாபதி மோகன் பேசிய பேச்சு இந்து விரோதமாக இருந்தது கண்டு சிலர் வியந்தனர். தான் ஒரு நாத்திகன் என்று சொல்லிக் கொண்டு அவர் பேசியவிதம் சரியாகயில்லை. வேடிக்கை என்னவென்றால் அத்தகைய நாத்திகம் பேசுபவர்கள் எப்படி முஸ்லீம்களுடன் ஒத்துப் போகின்றார்கள் என்பதுதான்? அத்தகைய முரண்பாடுகளைக் கவனிப்பவர்கள் நிச்சயமாகப் புரிந்து கொள்வார்கள், அத்தகைய நாத்திகவாதிகள் இந்து-விரோதிகளாக இருப்பதனால் தான் முஸ்லீம்கள் அவர்களை தங்களது மேடைகளில் இடம் கொடுத்துப் பாராட்டுகின்றனர். கிருத்துவர்களின் போக்கும் இதுமாதிரியே உள்ளது.

லுங்கி கட்டிய முஸ்லீம், சிலுவை போட்ட கிருத்துவன்: தனது தலைவர்கள் லுங்கி கட்டிய முஸ்லீமாக, சிலுவை போட்ட கிருத்துவனாக இருந்தனர் என்று சொல்லி இந்துக்களைத் தாக்கிப் பேசுவது பண்பற்ற முறையாகத் தோன்றியது. பிறகு எதற்கு “இந்து” என்று பல விண்ணப்பங்களில், ஆவணங்களில் தங்களைப் பதிவு செய்து கொள்ளவேண்டும்? இத்தகைய போலி நாத்திகர்கள் கோடிக்கணக்காக உள்ள இந்துக்களின் நம்பிக்கையை எடைபோடவும் தகுதியில்லை, விமர்சனிக்கவும் யோக்கியதை இல்லை.

இந்துக்களின் மூடநம்பிக்கை மற்றும் தீவிரவாதம்: திராவிட நாத்திகம் தமிழகத்தில் இருப்பதனால்தான் இந்துக்கள் இங்கு ஒன்றும் செய்யமுடியவில்லை. அப்படி அவர்கள் யாதாவது செய்தால், திராவிட சம்மட்டி அவர்களை அடக்கிவிடும், இந்துக்கள் ஏதோ மூடநம்பிக்கை உள்ளவர்கள் போலவும், அவர்களது தீவிரவாதம் அடக்கப்படவேண்டுமானால், அத்தகைய இஸ்லாமிய மாநாடுகள் எல்லா நகரங்களிலும் நடத்தப் படவேண்டும் என்றெல்லாம் பேசியது வியப்பாக இருந்தது.

“மதத்தால் முஸ்லீம், மொழியால் தமிழன்” என்றால் தமிழர்களில் இந்துக்கள் இல்லையா, அல்லது இந்துக்கள் தமிழர்களாக இல்லையா?: இவ்வாறு முஸ்லீம்கள் பேசி பெருமைக் கொள்ளும்போது, இவர்கள் மட்டும் எப்படி, நாங்கள் நாத்திகர்கள், தமிழர்கள் என்று கூறிக் கொள்ளமுடியும்? மதத்தால் இந்துக்கள், மொழியால் இந்துக்கள் என்றுள்ளவர்கள் என்ன இத்தகைய கூட்டாளிகளைவிட தாழ்ந்தவர்களா? யாரை ஏமாற்ற இத்தகைய வாசகங்கள்? இந்துக்கள் தமிழராக அல்லது தமிழர் இந்துக்களாக இருக்கமுடியாது என்று இப்படி மறைமுகமாக உணர்த்த இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? இப்படி பேசுவதற்கு ஒரு பல்கலைகழகத்திற்கு துணைவேந்தர் என்றிருக்கும் இவருக்கு வெட்கமாக இல்லை? ஏன் அவர் பல்கலையில் படிக்கும் மாணவர்கள் என்ன நினைப்பார்கள்?

உயர்ந்தவர் / தாழ்ந்தவர்: தேவையில்லாமல், இந்துக்கள் நடத்தும் விழாக்களில் அவர் கீழே உட்காரவேண்டும், ஆனால் இங்கு மற்றவர்களுடன் மேடையில் உட்கார சந்தர்ப்பம் கிடைத்தது என்று பேசியதில் பொருளே இல்லை. மேலே மேடையில் அன்று உட்கார்ந்திருந்தவர் எல்லோரும் பெரியவர்கள் / உயர்ந்தவர் இல்லை. கீழே பிளாஸ்டிக் நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தவர் எல்லோரும் சிறியவர் / தாழ்ந்தவர் இல்லை. சந்தர்ப்பம் கிடைத்ததால், மேடையில் உட்கார்ந்திருக்கின்றனர்!

பேசியதையே திரும்ப பேசுதல்: பேச்சின் முடிவில் 90 மலர்களின் பெயரைச் சொல்லி வாழ்த்தியதும் செயற்கையாக இருந்தது, ஏனெனில், அவர் எல்லா இடங்களிலும் அவ்வாறே பேசுவது சிலருக்குத் தான் தெரியும். அப்படியே “டப்பா அடுத்து வைத்ததினால்” அவ்வாறு கூறுகிறார்! உதாரணத்திற்கு, பாரதியார் பல்கலையில் அண்ணாதுரை நூற்றாண்டு நிறைவு விழா 07-10-2009 அன்று நடந்தபோது, அவ்விழாவில் 90 விதமான மலர்களின் பெயரை கூறி மாணவர்களை சபாபதி மோகன் வாழ்த்தினார்! இங்கும்  இன்று 13-12-2009, அதே பாட்டு பாடி பேச்சை முடித்துக் கொண்டார்!

யார் இந்த நபர்? “நான் உங்களில் (திமுக) ஒருவனாக இருப்பேன்” : சபாபதி மோகன் பேச்சு, பரபரப்பு (10-05-2008): பாளையங்கோட்டையில் திருநெல்வேலி மாவட்ட திமுக அவைத் தலைவர் சுப. சீதாராமன் எழுதிய “அதியமான் நெஞ்சமும் -அன்புத் தலைவர் உள்ளமும்’ நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் நூலை வெளியிட்டார். விழாவில் சட்டப் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் உள்ளிட்ட திமுகவைச் சேர்ந்த மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

திமுக கொடுத்த பதவி: வெளியீட்டு விழாவில், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சபாபதி மோகன் கலந்து கொண்டு பேசினார். “ இந்த விழாவில் நான் கலந்து கொண்டதன் மூலம் என்றும் உங்களோடுதான் இருப்பேன் என்று கூறிக் கொள்கிறேன். கறுப்புசிவப்பு கரை வேட்டி கட்டியவனாக இல்லாவிட்டாலும் உங்களில் ஒருவனாக இருப்பேன்….இங்கு நான் துணைவேந்தராக பொறுப்பேற்ற பிறகு எனக்கு வீடு பார்ப்பது முதல் எல்லா பணிகளையும் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். தலைவர் உள்ளம் எப்படிப்பட்டது என்பதற்கு நான் உட்கார்ந்திருக்கும் நாற்காலியை பார்த்தாலே தெரியும். அது எத்தனை பெரிய நாற்காலி என்பது எல்லோருக்கும் தெரியும். எனக்கு அந்த வாய்ப்பைத் தந்த தலைவரை வணங்குகிறேன்”.
அப்பதவியே சர்சைக்குரியது: சபாபதி மோகனுக்கு திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி கொடுத்ததற்கு பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் இந்த பேச்சு குறிப்பிடத்தக்கது. கட்சிமாறிகளுக்குப் பதவி கிடைத்ததால், விசுவாசம் பொங்க பேசி தனது பதவியைத் தக்கவைக்க வேலை செய்து வருகிறார். அதனால் கீழ்கண்டவாறு கருணாநிதி புராணம் பாடுகிறார்!

.ம.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வுக்குத் தாவி பின்னர், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தரான சபாபதி மோகன் பேச்சு: “தனது 14ம் வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டம், 16ம் வயதில் தமிழ் மாணவர்கள் சங்கம், 17ம் வயதில் அன்பழகனை அழைத்து சங்கம் சார்பில் மாநாடு, 29ம் வயதில் கல்லக்குடி ரயில் மறியல். மேலும், பல போராட்டங்களிலும் கருணாநிதி பங்கு பெற்றார். கடந்த 1958ம் ஆண்டில் சட்டசபையில் சேது சமுத்திரத் திட்டம் பற்றி பேசினார். 50 ஆண்டுகளுக்கு முன்னர் தனது பாட்டு மூலம் நதிகளை இணைத்தார்; தற்போது தனது 84ம் வயதில் நாட்டு நதிகளை இணைப்பது பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்”, என்றேல்லாம் பேசுகிறார்!

இந்துக்களுக்கு அடையாளம் இல்லையா? லுங்கி கட்டியவன் முஸ்லீம், சிலுவை போட்டவன் கிருத்துவன் என்றால் இந்து யார்? அவனது அடையாளம் என்ன என்பதுதானே கேட்கப்படுககறது? அதனால்தானே நெற்றியில் குங்குமம், விபூதி, திருமண், பொட்டு என வைத்தால் கேலியும் கிண்டலும் பேசப்படுகிறது? அதற்காகத் தானே கருணாநிதி தமது தொண்டர்களயும் பெயர்சொல்லி என்ன நெற்றியில் ரத்தமா என்று நக்கலாகக் கேட்கிறார்? அதுவே குல்லா போட்டு கஞ்சிக் குடிக்கும்போது அத்தகைய நக்கலும், கிண்டலும், கேலியும் வருவதில்லையே? வந்தாலும் அது இந்துக்களுக்கு எதிராகத் தானேத் திரும்புகின்றன?.

சமய நல்லிணக்க உணர்வு: “இம்மாநாடுகளால் சமய நல்லுணர்வு மலர்ந்திருக்கிறது”, என்று கூறுகிறார்கள்! எப்படி, இங்கு “சமயம்” என்றால் “சந்தர்ப்பம்” என்று பொருள் கொண்டு, இவ்வாறு முஸ்லிம்கள் மற்றும் இந்து-விரோதி திராவிட நாத்திகர்களின் “கூட்டு சமய” உணர்வு, பனப்பாங்கு, அவ்வாறானப் பேச்சுகள் நன்றாக மலர்ந்திருக்கிறது என்கிறார்களா? ஆகவே முஸ்லிம்கள் எந்த சமய, யாருடைய சமய நல்லுணர்வு மலரச் செய்கிறர்ர்கள் என்பதனைத் தெளீவு படுத்த வேண்டும்.

இலக்கியத்தால் மட்டுமே இதயங்களை இணைக்க முடியும்: இத்தகைய இந்து-விரோத பேச்சுகளால் எப்படி இதயங்களை இணைக்கப் போகிறர்கள்? திராவிட நாத்திகம் எப்படி இதற்கு உடன் போகும்? இப்பொழுது கூட இஸ்லாம் இல்லாத இலக்கியத்தை வெறுத்து, தூஷிக்கிறதே? அதாவது குறிப்பாக இந்து இலக்கியங்களை அவமதிப்புச் செய்கிறதே? பிறகென்ன இணக்கம்? புதிய முழக்கம்?

முஸ்லீம்களின் கவனத்திற்கு: ஏற்கெனவே ரம்ஜான் கஞ்சி விழாக்களை அரசியலாக்கி, இந்து விரோத விழாக்களாக மாற்றி உள்ளது அனைவரும் அறிவர். இந்துக்களுக்கும் அத்தகைய உண்ணாநோன்புகள் உண்டு ஆனால், அவர்கள் அப்பெயரில் நிறைய பட்சணங்கள் செய்து சாப்பிடுவர், ஆனால் முஸ்லீம்கள்தான் உண்மையாக 40 நாட்களும் உண்ணாநோன்பு கடைப் பிடிக்கின்றர் என்றெல்லாம் குல்லாப் போட்டுக் கொண்டு கஞ்சி குடித்துக் கொண்டே கருணாநிதி கேலி பேசியது அனைவருக்கும் ஞபகம் இருக்கிறது. இன்றைய வருடம் அந்த கேகிக்கூத்தை பேராசிரியர் என்று சொல்லிக் கொள்ளும் அன்பழகன் செய்தார்!

இதுப்போலத்தான், இந்த சபாபதி மோகனின் பேச்சு. ரம்ஜான் கஞ்சி குடிக்கும் விழாக்கள் மாதிரி இப்படி எல்லா முஸ்லிம் மேடைகளையும் “நான் நாத்திகன்” என்று சொல்லிக் கொண்டு இந்துக்களை விமர்சனிக்க தொடர்ந்து உபயோகிக்கப் பட்டால், பிறகு இதில் முஸ்லிம்களுக்கும் அத்தகைய நாத்திகர்களுக்கும் தொடர்பு உள்ளது மற்றும் அவர்கள் திட்டமிட்டே அவ்வாறான பேச்சுகளைப் பேசுகிறார்கள் என்று கொள்ளவேண்டியதாக உள்ளது.

நிச்சயமாக இப்போக்கு முஸ்லீம்களின் இந்து-விரோத மனப்பாங்கைத் தான் காட்டுகிறது. இப்படி வெறுப்பை, காழ்ப்பை, பகைமையை வளர்ப்பது நல்லதா என்று அவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

Explore posts in the same categories: இந்து தமிழன், இஸ்லாமியத் தமிழன், தமிழ் இந்து, தமிழ் நாத்திகன், தமிழ் முஸ்லீம், நாத்திக இந்து, நாத்திக முஸ்லீம்!, நாத்திகத் தமிழன், Uncategorized

குறிச்சொற்கள்: , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

2 பின்னூட்டங்கள் மேல் “இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடும், சபாபதி மோகனின் இந்து விரோத பேச்சும்!”

  1. குப்புசாமி Says:

    ஆங்லிலத்தில் “ஹிஸ் மாஸ்டர்’ச் வாய்ஸ்” என்று முன்பு இசைத் தட்டு விளம்பரத்தில், ஒரு நாய் ஒன்று விசுவாசத்துடன், தனது எசமானனின் குரல் ஒரு இசைத் தட்டிலிருந்து வருவதைக் கேட்டு, அடக்கவொடுக்கமாக உட்கார்ந்ட்து கொண்டு கேட்டுக் கொண்டிருப்பதாகச் சித்தரிக்கப் பட்டிருக்கும்.

    அதைப்போல, இவர்கள்.

    கட்சிமாறிகளுக்கு பதவிகள் கொடுக்கப் பட்டன.

    பிறகென்ன, இதுகள் என்ன வேண்டுமானாலும் செய்யும்.

    அதுமட்டுமா, கொழுப்பைப் பாருங்களேன், .”………இங்கு நான் துணைவேந்தராக பொறுப்பேற்ற பிறகு எனக்கு வீடு பார்ப்பது முதல் எல்லா பணிகளையும் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்……”.

    அப்படி என்ன துணைவேந்தர் பதவிக்கு அவ்வளவு காசு கிடைக்கிறதா?

    கட்சி நிர்வாகிகளே வீடு பார்ப்பது முதல் எல்லா பணிகளையும் செய்து வர, இவர் வாரி வழங்க, அப்படிக் கொட்டுகிறதா?

    ஐயோ, பிறகு படிப்பென்ன?

    பரீட்சை என்ன?

    மார்க் என்ன?

    எல்லாவற்றிற்கும் ரேட் போட்டு வாங்கி விடுவார்களே?

  2. Tamizhselvan Says:

    This man is just a slave, that is all.

    Though he talks “self-respect” and all, he does not have anything, as is evident from his sychophantic talk.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: