தேங்காயும், தீவிரவாதிகளும்!

தேங்காயும், தீவிரவாதிகளும்!

மீனாட்சி கோவிலில் தேங்காய்க்கு தடை டிசம்பர் 15க்குள் கருத்து தெரிவிக்கலாம்
டிசம்பர் 07,2009,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=19561

General India news in detail

// <![CDATA[//
// <![CDATA[//

மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு காரணங்களுக்காக தேங்காய் உடைக்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, பக்தர்கள் டிச.,15க்குள் நேரிலோ, தபாலிலோ கருத்து தெரிவிக்கலாம்.இக்கோவிலுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல்களும், பயங்கரவாத அச்சுறுத்தலும் வருவது உண்டு. மத்திய உளவுத்துறை அறிவுரையின்படி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது ஐந்து கோபுரங்களிலும் டோர் மெட்டல் டிடெக்டர்’ மூலம் பக்தர்களும், அவர்களது உடைமைகளும் பரிசோதிக்கப்பட்டு கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அதேசமயம் பூஜை, அர்ச்சனைக்காக பக்தர்கள் வெளியிலிருந்து தேங்காய் வாங்கி வருகின்றனர். அதை மேலோட்டமாக பரிசோதித்து, கருவறை வரை அனுப்புகின்றனர். எப்படியாவது தாக்குதல் நடத்த வேண்டும் என்று, பயங்கரவாதிகள் நினைத்து, தேங்காய்க்குள் வெடிகுண்டுகளை வைக்கக்கூடும் என்பதால், அதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று, போலீஸ் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

அவர்கள் கூறுகையில்,தேங்காய் உடைப்பதை தொடர்ந்து கண்காணிப்பது என்பது சிரமம். அசம்பாவிதம் நடக்காமல் இருக்கவே தேங்காய்க்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினோம். பாதுகாப்பு காரணங்களுக்காக இதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்,” என்றனர்.

தேங்காய் உடைப்பு அவசியமா’ என்று கோவில் பட்டர்களிடம் கேட்டபோது,தேங்காய் எப்படி உடைகிறது என்பதை பொறுத்து பலன் கிடைக்கிறது. கோவில் சார்பில் நடக்கும் விழாக்கள், பூஜைகளில் தேங்காய் பயன்படுத்துவது அவசியம். காரணம் தேங்காயில் உள்ள மூன்று கண்கள் சிவபெருமானை குறிப்பதாக ஐதீகம். கும்பங்களுக்கு தலையாக இருப்பதும் தேங்காய்தான், என்றனர்.

கோவில் நிர்வாக அதிகாரி ராஜநாயகம் கூறுகையில், தேங்காய்க்கு பதில் பூக்களை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிச.,15க்குள் கருத்து தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேங்காய் உடைக்க தடை விதிப்பதா, வேண்டாமா என முடிவு செய்யப்படும். அதுவரை தேங்காய் உடைக்க தடை இல்லை, என்றார்.

Explore posts in the same categories: Uncategorized

One Comment மேல் “தேங்காயும், தீவிரவாதிகளும்!”

  1. குப்புசாமி Says:

    இதெல்லாம், சும்மா இந்த நாத்திகவாதிகள் செய்ய்ம் கூத்து.

    அமீனா புகுந்த வீடும், ஆமை புகுந்த வீடும் உருப்படாது என்பார்கள்.

    அதேமாதிரிதான், இங்கு இந்து அறநிலையத்துறையினரும், நாத்திகர்கKஉல் புகுந்த கோவில்களும் உருப்படாது போலும்!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: