அமெரிக்காவில் நான்கு மசூதிகளின் சொத்துகள் பறிமுதல்!

அமெரிக்காவில் நான்கு மசூதிகளின் சொத்துகள் பறிமுதல்

நியூயார்க், நவ. 18-_ அமெரிக்காவில் உள்ள ஒரு முஸ்லிம் நிறுவனத்-திற்குச் சொந்தமான நான்கு மசூதிகளையும், நியூயார்க் நகரில் உள்ள மிக உயரமான பல அடுக்கு கட்டடம் ஒன்-றையும், அமெரிக்க அர-சாங்கம் கையகப்படுத்த உள்ளது. இந்நிறுவனம் ஈரான் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருவதாக, சந்தேகத்தின் அடிப்படையில் இந்-நடவடிக்கை மேற்-கொள்-ளப்பட்டுள்ளது. இது அமெரிக்க சரித்திரத்-திலேயே தீவிரவாதத்-திற்கு எதிரான மிகப்-பெரும் கையகப்படுத்தும் செயலாக அமையும்.

அலாவி ஃபவுன்-டே-ஷன் என்னும் நிறுவனத்-திற்கு சொந்தமான 500 மில்லியன் டாலர்களுக்-கும் அதிகமான (சுமார் 235 கோடி ரூபாய்) சொத்துகளை முடக்க அரசு வழக்கறிஞர்கள், அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாற்றை சமர்ப்-பித்துள்ளனர். அலாவி ஃபவுன்டேஷன் நிறுவனத்-திற்கு நியூயார்க், மேரிலேன்ட், கலிபோர்-னியா மற்றும் ஹுஸ்ட-னில் இஸ்லாமிய மய்-யங்களும் மசூதிகளும் உள்ளன. தவிர விர்-ஜினீயா மாநிலத்தில் 100 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம் மற்றும் நியூயார்க்-கின் மன்ஹாட்டன் நக-ரில் 36 அடுக்கு கட்டடம் ஆகியனவும் உள்ளன. இவை அனைத்தையும் மற்றும் வங்கிக் கணக்-கில் உள்ள பணத்தையும் பறிமுதல் செய்ய ஏற்பாடு நிகழ்ந்து வருகிறது. இது ஈரானுக்கு மிகப் பெரிய அடியாக அமையும்.

ஈரான் தீவிரவாத செயல்களுக்கு பண உதவி செய்து வருவதாக-வும் அணு ஆயுதம் தயா-ரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமெ-ரிக்கா குற்றச்சாற்றுகளை சுமத்தி வருகிறது. அதற்-கான கடுமையான எதிர்-நடவடிக்கையாக இதனை நிகழ்த்துகிறது.

Explore posts in the same categories: Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: