செக்யூலரிஸம் வெளுக்கிறதா, சிவக்கிறதா?

தயாரிப்பாளர் மகனுக்கு பயங்கரவாதியுடன் தொடர்பு விசாரணை தீவிரம்
நவம்பர் 16,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14076

புதுடில்லி:அமெரிக்காவில் கைதான டேவிட் ஹெட்லி விவகாரத்தில், பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகன் ராகுல் உட்பட, யாருக்கும் நற்சான்றிதழ் வழங்கப் படவில்லை. விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது,” என மத்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை கூறியுள்ளார்.டில்லியில் நிருபர்களிடம் பேசிய பிள்ளை கூறியதாவது:

லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் தூண்டுதலின் பேரில், இந்தியாவில் தாக்குதல் நடத்த, சதித் திட்டம் தீட்டிய டேவிட் ஹெட்லி என்பவனை, அமெரிக்காவின் பெடரல் புலனாய்வு நிறுவனத்தினர் (எப்.பி.ஐ.,) கைது செய்தனர். ஹெட்லிக்கும் பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ்பட்டின் மகன் ராகுலுக்கும் தொடர்பு உள்ளது என்றும் செய்திகள் வெளியாயின.

அது தொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. யாருக்கும் இதுவரை நற்சான்றிதழ் வழங்கப்படவில்லை.அமெரிக்காவில் கைதான ஹெட்லியும், ராணா என்பவனும், மும்பையில் தாக்குதல் நடப்பதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்னர்தான் அங்கு வந்துள்ளனர். அதனால், மும்பை போலீசார் அவர்களின் சதியைப் பற்றி அறிந்து கொள்ள தவறி விட்டனர் எனக் கூறுவது சரியாக இருக்காது.இவ்வாறு பிள்ளை கூறினார்.

மேலும், ஹெட்லியின் டில்லி விஜயத்தில், பாகர்கஞ்ச் பகுதியில் தங்கியதாக கூறப்படும் ஓட்டல்கள் மற்றும் சைபர் கபேக்களில், போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதற்கிடையில், மும்பைத் தாக்குதல் சம்பவத்தின் போது பலியான, பயங்கரவாத எதிர்ப்புப் படை தலைவர் ஹேமந்த் கார்கரேயின் புல்லட் புரூப் உடை காணாமல் போனது குறித்து விசாரணை நடத்த, மகாராஷ்டிர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, அம்மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் மேலும் கூறியதாவது: கார்கரே மரணம் அடைந்த போது, அவரின் உடலில் புல்லட் புரூப் உடை இல்லை. மருத்துவமனையிலும் அந்த உடை கிடைக்கவில்லை. சில மாதங்களுக்கு முன், தகவல் உரிமைச் சட்டம் மூலம் இதுபற்றி விசாரித்தபோது, அது காணாமல் போய் விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது’ என, அவரின் மனைவி குறிப்பிட்டுள்ளார். அதனால், கார்கரேயின் புல்லட் புரூப் உடை காணாமல் போனது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப் பட்டுள்ளது. விசாரணை அறிக்கை கிடைத்த பின்னரே, அது என்னவானது என்பது தெரியவரும்.இவ்வாறு பாட்டீல் கூறினார்.

Explore posts in the same categories: Uncategorized

One Comment மேல் “செக்யூலரிஸம் வெளுக்கிறதா, சிவக்கிறதா?”

  1. Tamizhchelvan Says:

    Sanjay Dutt’s connection has been there, but covered up!

    Mahesh Butt’s connection is quite obvious, the way the Bhatt’s family react with the Islamic fundamentalism and connected issues thereof in the media.

    That Manthakini is Dwaood’s wife and other actresses have been having contacts with him and the groups, they have been flying to Dubai and other places participating in the “shows” etc, have to tell the “:real” storoies!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: