மதப்பிரச்னையில் மனமுறிவு: பிரிந்து சென்றது காதல் ஜோடி!
திண்டுக்கல்: ஒன்றரை ஆண்டு காதலித்து திருமணம் செய்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, எந்த மத சம்பிராயப்படி திருமணம் செய்வது என்ற தகராறில் பிரிந்து சென்றனர். திண்டுக்கல் லட்சுமணபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (27). கோவையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது தோழி ஒருவர் மூலம் அறிமுகம் ஆன சென்னை அசோக்நகர் முகமது என்பவர் மகள் ரியாஸ்பாத்துமாவை (19) ஒன்றரை ஆண்டுகளாக காதலித்தார்.
ரியாஸ் பாத்துமாவிற்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்யவே, அவர் வீட்டை விட்டு வெளியேறி காதலன் தங்கியிருந்த கோவைக்கு சென்றார். அங்கிருந்து இந்த ஜோடி திருமணம் செய்ய திண்டுக்கல் வந்தது. இதற்கிடையில் ரியாஸ்பாத்துமாவை காணவில்லை என அசோக்நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதனால் இந்த ஜோடி திண்டுக்கல் மகளிர் போலீஸ் எஸ்.ஐ.,கீதாதேவியிடம், தாங்கள் திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்தனர். ஆனால் இந்து முறைப்படி திருமணம் செய்வதா, முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்வதா என ஸ்டேஷனில் காதல் ஜோடிகளுக்குள் விவாதம் நடந்தது. இது தகராறாக மாறி இருவரும் பிரிந்து தங்களது வீட்டிற்கு திரும்பினர்.
நவம்பர் 18, 2009 இல் 4:44 முப
Is there any connection between “Love-jihad” and this incidence?