அல் உம்மா அமைப்பினர் விடுதலை!

கோவை: கோவையில் வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் 10 அல் உம்மா அமைப்பினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 1997, டிச., 1ல், கோவை அரசு மருத்துவமனை எதிரில், கிளாசிக் டவர் அருகே, புதரில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த பார்சலை கண்டுபிடித்து, செயலிழப்பு செய்தனர். இது தொடர்பாக, அல்-உம்மா பொதுச் செயலர் அன்சாரி, மைசூரைச் சேர்ந்த வெடி மருந்து வியாபாரி ரியாசுல் ரகுமான், சாந்து முகமது, ஜஹாங்கீர் உள்ளிட்ட 10 பேர் மீது, குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அவர்களை கைது செய்ய முடியவில்லை. இதையடுத்து, 1998, பிப்., 14ல், கோவையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் குற்றவாளிகளாக மேற்சொன்ன 10 நபர்கள், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கை கோவை தனி நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி கணேசன் தற்போது தீர்ப்பளித்துள்ளார்.

கோவை தொடர் வெடிகுண்டு வழக்கு தீர்ப்பிற்கு பின், இவ்வழக்கு, தனி கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அரசு தரப்பில் 87 சாட்சிகள் சேர்க்கப்பட்டு, 42 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி. ராஜமாணிக்கம் செயல்பட்டார்.

இதில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

யூசுப் ஷாஜகான் என்பவர் மட்டும் கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 13 ஆண்டு தண்டனை காலம் முடிந்து அண்ணா பிறந்தநாளையொட்டி விடுதலை செய்யப்பட்டார். கிளாசிக் டவர் வெடிகுண்டு சம்பவம் நடைபெற்று கடந்த 11 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

Explore posts in the same categories: Uncategorized

2 பின்னூட்டங்கள் மேல் “அல் உம்மா அமைப்பினர் விடுதலை!”

  1. Tamizhchelvan Says:

    It appears that there has been relation between Karunanidhi rule and Al-Umma moment and their activities!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: