உலமாக்கள் வாரிய உறுப்பினராக 7,726 பேர் விண்ணப்பம்!

உலமாக்கள் வாரிய உறுப்பினராக 7,726 பேர் விண்ணப்பம்
நவம்பர் 11,2009,00:00  IST

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=14926

சென்னை: தமிழ்நாடு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இதுவரை 7,726 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் முதல் கூட்டம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மைதீன்கான் தலைமையில் நேற்று நடந்தது. இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை செயலர் ராமநாதன், சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் அண்ணாமலை மற்றும் வாரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நல வாரியம் அமைத்து உத்தரவிட்ட முதல்வர் கருணாநிதிக்கு, நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நல வாரியத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகியவற்றின் முன்னேற்றம் மற்றும் உலமாக்கள், உறுப்பினர்கள் தெரிவித்த ஆலோசனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

நேற்று (10.11.2009) நடைபெற்ற உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய முதல் கூட்டத்தில், உலமாக்கள் நல வாரியம் அமைத்ததற்காக தமிழக முதலமைச்சர் கலைஞருக்கும், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையொட்டி, துணை முதலமைச்சரை சந்தித்து உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.இவ்வாரியத்தில் உறுப்பினர்களாக சேர இதுவரை 7,726 பேர் விண்ணப்பித்துள்ளனர். 4,808 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதர விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இதுவரை உறுப்பினர்களாக பதிவு செய்யாமலிருக்கும் அனைத்து உலமாக்கள் மற்றும் பணியாளர்களையும் விரைவில் உறுப்பினர்களாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க, கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கூட்டம் முடிந்ததும் வாரியத்தின் உறுப்பினர்கள், துணை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Explore posts in the same categories: உலமா வாரியம், உலமாக்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: