கலையும், கலைநெறி மீரல்களும், பாதுகாப்பும்…………
இவர்களிடம் ஏன் பிச்சையெடுக்க வேண்டும்? ஓவியர் எம்.எப்.உசேன்
கொந்தளிப்பு
நவம்பர் 05,2009,00:00 IST
http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18519
புதுடில்லி: “நாடு திரும்புவதற்காக நான் ஏன் பிச்சையெடுக்க வேண் டும்?’
என்று பிரபல ஓவியர் எம்.எப்.உசேன் கொந்தளிப்புடன் கேள்வி
எழுப்பியுள்ளார். இந்துக் கடவுள்களைக் கொச்சைப்படுத்தும் விதத்தில்
படங்களை வரைந்து சர்ச்சைக் குள்ளானவர்தான் இந்த உசேன். இவர் மீது
குஜராத், மகாராஷ்டிராவில் இந்து இயக்கங்களால் மூன்று வழக்குகள்
போடப்பட்டுள்ளன. “உசேன் நாடு திரும்ப அரசு உரிய முயற்சி எடுக்கும்’
என்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.
இதைக் கேள்விப்பட்ட உசேன் கொந்தளிப்புடன் கூறியதாவது: சமீபத்தில் நடந்த
“இந்திய ஓவிய உச்சிமாநாட்’டில் என் ஓவியங்களை காட்சிக்கு வைக்கவில்லை.
ஏன் வைக்கவில்லை என்று நான் கேட்டதற்கு, இந்த விஷயத்தில் நாங்கள்
“ரிஸ்க்’ எடுக்கத் தயாராக இல்லை என்று இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.
என் ஓவியத்தையே காக்க இயலாதவர்கள் என்னை எவ்விதம் காப்பாற்றப்
போகின்றனர்? வழக்குகளுக்குப் பயந்து நான் நாட்டை விட்டு வெளியேறவில்லை.
இந்து இயக்கங்கள் என்மீது தாக்குதல் நடத்தும் என்பதால்தான் நான் போனேன்.
அப்படி நான் நாடு திரும்ப வேண்டும் என்று அவர்கள் விரும்பினால், எனக்கும்
என் ஓவியங்களுக்கும் “புல்லட் புரூப்’ கார் கொடுக்க வேண்டும்.
தருவார்களா? இந்திராவும், ராஜிவும் குறைந்த பாதுகாப்புடனா இருந்தனர்?
நான்தான் இதில் முதல் முறையாகப் பாதிக்கப்பட்டேன் என்றில்லை.
கலிலியோவிலிருந்து பப்லோ நெரூடா வரை தங்கள் படைப்பாக்கங்களுக்காக
எதிர்ப்பைக் கண்டவர்கள்தான். சிலர் என்னை மிகவும்
வேதனைக்குள்ளாக்கிவிட்டனர். நான் இந்தியன். என் தாய்நாடு திரும்புவதற்காக
இவர்களிடம் நான் ஏன் பிச்சையெடுக்க வேண்டும் என்று தான் தோன்றுகிறது.
இவ்வாறு உசேன் தெரிவித்துள்ளார்.
மறுமொழியொன்றை இடுங்கள்