வந்தே மாதரம், மத-அடிப்படைவாதம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்

மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்

சிதமபரமும், கிருஷ்ணாவும் பேசுவது கேட்டு, இந்தியர்கள் என்ன செய்து  கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை!

சிதம்பரம் சொன்னார், “இஸ்லாத்தை அந்நிய மதமாகக் கொள்ளமுடியாது” என்று!
——————————————————————————————————————————————————————–
Saharanpur (UP), Nov 3 (ANI): Home Minister P Chidambaram on Tuesday said that india cannot view Islam as an alien faith.

Speaking at the 30th general session of the Jamiat Ulama-i-Hind here, Chidambaram said: “We cannot view Islam as an alien faith because this is the land of your of your birth. All Indians share a cause to fight communalism.”

“It is a matter of our pride that Islam exists in India along with other major religions,” he added.

About 10,000 clerics, besides five lakh followers of Jamiat, are attending the three-day conference, which commenced on November 1.

The conference is being seen as an attempt by the UPA government to reach out to Islamic scholars. (ANI)
————————————————————————————————————————————————————-

உடனே ஃபத்வா போட்டு விட்டார்கள், “வந்தே மாதரம்” முகமதியர்களுக்கு ஹராம் என்று! வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது

First Published : 04 Nov 2009 01:01:48 AM IST

தேவ்பந்த் (உ.பி), நவ. 3: வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று ஜமியத் உலாமா இ ஹிந்த் என்ற அமைப்பு அறிவித்துள்ளது.

அந்த அமைப்பின் 3 நாள் மாநாடு உத்தரப் பிரதேச மாநிலம் தேவ்பந்தில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதகுருமார்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். யோகா குரு பாபா ராம்தேவ் யோகக் கலை குறித்து செயல் விளக்கம் அளித்தார்.

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது என தாருல் உலூம் 2006-ல் உத்தரவு பிறப்பித்தது. அது சரியானதே. நாங்கள் தாயை நேசிக்கிறோம். மதிக்கிறோம். ஆனால் வழிபட முடியாது.

ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்தே மாதரம் பாடல் அமைந்துள்ளது.

வந்தே மாதரத்தை பாட வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது.

தேசபக்திக்கு வந்தே மாதரம் பாடுவது என்பது தேவையற்றது. வகுப்பு மோதலைத் தூண்டவும், சட்டம்-ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தவும் வந்தே மாதரம் பாடல் பிரச்னையைப் பயன்படுத்தக் கூடாது.

மதரஸôக்களை ஒழுங்குபடுத்துவதாகக் கூறி மத்திய மதரஸô வாரியம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்.

சச்சார் கமிஷன் அறிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தேவையற்ற ஒன்று என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாஜக எதிர்ப்பு: வந்தே மாதரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிய பிறகு மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அந்த மாநாட்டில் பங்கேற்றது தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்பது போலாகும் என பாரதிய ஜனதா
கட்சி துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார் அவர்.
—————————————————————————————————————————————————————–
விட்டாரா, கிருஷ்ணன், “தாலிபானின் தந்தை பாகிஸ்தான்”!
சொல்லவேண்டுமா, “யார் தாய் என்று கேட்க”, பிரச்சினை வந்துவிட்டது!
http://economictimes.indiatimes.com/news/politics/nation/Pak-fathered…
ஞாபகம் இருக்கா, முன்பும் “ஆதித்தனார், தமிழர்களின் தந்தை” என்றபோது,  அத்தகைய பிரச்சினையை, தமிழக அறிவுஜீவிகள் அலசித் தீர்த்தனர்!

————————————————————————————————————————————————-

ஜமியத் உலாமா இ ஹிந்த்,  முகமதியிரிடையே செல்வாக்குள்ள “தாருல் உலூம்”  போட்ட ஃபத்வாவை ஆதரிக்கிறது என்றது  சர்ச்சைக்கு உரியதாகிறது.  இஸ்லாமிய குருமார்களின் மடமான உலூம் “வந்தே மாத்ரம்” பாடுவது, இஸ்லாத்தின் ஒருத்துவத்திற்கு முரணானது என்று அறிவித்தது. நிறைவேற்றப்பட்ட தீர்மானம், “நாங்கள் எங்களது தாய்நாட்டை விரும்புகிறோம், ஆனால், அதை அல்லாவின் நிலைக்கு உயர்த்தி வணங்கமுடியாது. ………………..ஆகையால், “தாருல் உலூம்”  போட்ட ஃபத்வாவை  இந்த மாநாடு ஆதரிக்கிறது. தாய்நாடு தாய் மற்றும் தாய்நாட்டு வணக்கம் “இஸ்லாம்” மதத்திற்கு ஒவ்வானது, எதிரானது. ஆகவே இந்த பிரச்சினையை ஒரு வகுப்புவாத எண்ணத்துடன் எழுப்பக்கூடாது. அதான்னல் சட்டம் மற்றும் ஒழுங்குநிலை பிரச்சினை ஏற்படும் என்ற நிலையையும் உருவாக்கக் கூடாது” எ

 

 

 

Explore posts in the same categories: மத-அடிப்படைவாதம்

7 பின்னூட்டங்கள் மேல் “வந்தே மாதரம், மத-அடிப்படைவாதம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்”

 1. vedaprakash Says:

  வந்தே மாதரம் பிரச்னை சிதம்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக

  First Published : 05 Nov 2009 11:11:00 PM IST
  http://dinamani.com/edition/story.aspx?Title=%u0bb5%u0ba8%u0bcd%u0ba4

  புது தில்லி, நவ. 4: வந்தே மாதரம் பாடலுக்கு எதிராக தீர்மானம்
  நிறைவேற்றப்பட்ட மாநாட்டில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜக வலியுறுத்தியுள்ளது.

  இது தொடர்பாக அவர் அளித்த விளக்கம் திருப்தி அளிப்பதாக இல்லை என்றும் பாஜக கூறியுள்ளது.

  முன்னதாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஜமியத் உலாமா இ ஹிந்த் என்ற அமைப்பின் 3 நாள் மாநாடு நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  இந்த மாநாட்டில் வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது என தாருல் உலூம் 2006-ல் உத்தரவு பிறப்பித்தது. அது சரியானதே. வந்தே மாதரம் பாடல் இஸ்லாம் மதத்துக்கு எதிரானது என்று அறிவிக்கப் பட்டது.

  இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தில்லியில் புதன்கிழமை பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளது:

  பயங்கரவாதிகள், நக்ஸல்கள் மற்றும் பிரிவினைவாதிகளால் நாட்டில்
  தொடர்ந்து பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. இப்பிரச்னைகளைத் தீர்க்க வேண்டிய உள்துறை அமைச்சரே நமது தேசிய பாடலை அவமதிக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டுத் திரும்பியுள்ளார்.

  இது போன்ற தீர்மானம் அங்கு நிறைவேற்றப்படும் என்பதை உளவுத் துறை முன்னதாகவே அறிந்து அவரிடம் கூறவில்லையா? இதுபோன்ற உள்துறை அமைச்சரைப் பெற்றிருப்பதை நாட்டின் தலைவிதி என்றுதான் கூறவேண்டும்.

  மாநாட்டில் உள்துறை அமைச்சர் பங்கேற்பதற்கு முந்தைய நாளில் வந்தே மாதரத்துக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதை அறிந்த பிறகாவது அவர் அங்கு செல்வதைத் தவிர்த்திருக்க வேண்டும். இதற்காக ப. சிதம்பம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார் அவர்.

 2. vedaprakash Says:

  இந்தியர்களாக இருக்கும் முஸ்லீம்கள் அம்பேத்காரின் “பாகிஸ்தான் அல்லது பாகிஸ்தானின் பிரிவினை” என்ற நூலைப் படித்தால், முஸ்லீம்கள் ஒன்று உண்மையினை உணறுவார்கள் அல்லது அம்பேத்காரையும் ஒரு “இந்து மத வெறியர்” என்று சொல்லிவிடுவார்கள்.

  அம்பேத்கர் முஸ்லீம் அடிப்படைவாதம், வகுப்புவாதம், பிரிவினை மனப்பாங்கு முதலியவற்றை மிகவும் ஆழமாக ஆராய்ந்து
  வெளியிட்டுள்ளார்.

  ஆகவே முஸ்லீம் சகோதரர்கள் மதத்தையும், இந்திய நாட்டு அடையாளங்களையும் குழப்பி, அவையெல்லாம், இஸ்லாத்திற்கு எதிரானது என்று பொய் விளக்கம் அளிக்கவேண்டாம்.

  இந்திய மூதாதையரைக் கொண்ட அவர்களுக்கு கடவுள்தான் வேறேயன்றி மற்றவை வேறு என்று நினைப்பது, அவ்வாறு புதிய
  விளக்கம் அளிப்பது, அதனால் பிரிவினைவாதத்தை நியாயப்படுத்துவது என்ற காரியங்களில் இறங்கவேண்டாம்.

  “செக்யூலரிஸம்” என்பது இந்துக்களுக்கு மட்டுமல்ல, எல்லா மதத்தினருக்கும் பொருந்தவேண்டும். இதில் பாரபட்சம்
  காட்டுவதால்தான், இத்தகைய நிகழ்வுகளைப் பார்க்கிறோம்.

  http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=14

 3. vedaprakash Says:

  வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தான் செல்லட்டும்: உத்தவ் தாக்கரே காட்டம்

  First Published : 05 Nov 2009 11:18:00 PM IST

  http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Headlines&artid=

  மும்பை, நவ. 4: தேசிய பாடலான வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் பாகிஸ்தான் செல்லட்டும் என்றும் சிவசேனை செயல் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

  வந்தே மாதரம் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என்று ஜமியத் உலாமா இ ஹிந்த் என்ற அமைப்பு நடத்திய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

  இந்நிலையில் இது குறித்து உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

  நம் தாய் மண்ணை நமது நாட்டு மக்கள் வணங்காமல் வேறு யார் வணங்குவார்கள். பாரதமாதாவை வணங்குவதில் என்ன அவமரியாதை ஏற்பட்டு விடப்போகிறது. பாரதமாதாவை வணங்க மறுப்பவர்கள் பாகிஸ்தானுக்கோ அல்லது வங்கதேசத்துக்கோ செல்லட்டும். இது போன்றவர்களுக்கு இந்திய மண்ணில் இடமில்லை.

  இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொண்டது, சிறுபான்மை இன மக்களை சமாதானப்படுத்தி அவர்களை தங்கள் பக்கம் தக்கவைக்க மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சியே ஆகும். ஓட்டுக்காக மத்திய அரசு இதுபோன்ற செயல்களை அனுமதிக்கிறது.

  மத்திய அமைச்சர் முன்னிலையிலேயே வந்தே மாதரம் பாடலுக்கு எதிராகவே தேச விரோத தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

 4. vedaprakash Says:

  இன்றைய “விடுதலையில்” இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக, வீரமணி வெளியிட்டுள்ளார். ஆனால், “வந்தே மாதரத்தில்”, எங்கே முசுலிம்களைப் பன்றி என்று கூறுகிறது என்று தெரியவில்லை!
  ——————————————————————————–

  முசுலிம்களைப் பன்றி என்று கூறும் வந்தே மாதரம் பாடலை
  எதிர்த்து முசுலிம் மாநாட்டுத் தீர்மானத்திற்கு வரவேற்பு
  கோவையில் நவ. 30, டிச.1, 2 நாள்களில்
  அலை அலையாகக் கழகப் பிரச்சாரப் பணிகள்
  திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் தீர்மானங்கள்

  சென்னை, நவ. 5_ முசுலிம்களைப் பன்றி என்று இழிவுபடுத்தும் வந்தே மாதரம் பாடலை எதிர்த்து உ.பி. முசுலிம்கள் மாநாட்டுத் தீர்மானத்தை வர-வேற்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் திரா-விடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்-தில் நிறைவேற்-றப்பட்-டன.

  ……………………………….

  தீர்மானம் எண் 4: தஞ்சாவூரில் நடை-பெற்ற (10.10.2009) திரா-விடர் கழகப் பொதுக்-குழு-வில் நிறைவேற்றப்-பட்ட தீர்மானங்களை வரவேற்று அவற்றின் அடிப்படையில் செயல்-படவேண்டுமாய் கழகத் தோழர்களை இக்-கூட்-டம் கேட்டுக்-கொள்-கிறது.

  சிறப்பாக திராவிடர் கழகத் தலைமை நிலைய செயலாளராக வீ. அன்புராஜ் தெரிந்-தெடுக்கப்பட்டதை திரா-விடர் கழகத் தலை-மைச் செயற்குழு கூட்-டம் மகிழ்ச்சியுடன் வர-வேற்கிறது. தீர்மானம் எண் 5: உத்தரப்பிரதேச மாநி-லத்தில் நடைபெற்ற முசுலிம்களின் மாநாட்-டில் வந்தே மாதரம் பாடலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது தொடர்-பாக சங் பரிவார் பிரச்-சினையைக் கிளப்பியுள்-ளது. அப்பாடல் முசு-லிம்-களைப் பன்றி என்-றெல்லாம் அவதூறு செய்வதால், நீண்ட காலமாகவே அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்-பட்டு வந்திருக்கிறது என்பதை திராவிடர் கழகத் தலைமைச் செயற்–குழு சுட்டிக்-காட்டி, முசுலிம் மாநாட்-டின் தீர்மானத்தை இக்கூட்-டம் வரவேற்கிறது.

  தமிழக சட்டமன்றத்-தில் அந்தப் பாடலைப் பாட முதலமைச்சராக-விருந்த திரு. சி. ராஜ-கோபாலாச்சாரியார் முனைந்ததையும், அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், (1938 இல்) அத்-திட்-டம் கைவிடப்பட்-டது என்பதையும் இக்-கூட்-டம் நினைவூட்டுகிறது.

  உ.பி. முஸ்லிம் மாநாட்-டுத் தீர்மானத்தை மதச் சார்பற்ற சக்திகள் வர-வேற்கவேண்டும் என்றும் இக்கூட்டம் கேட்டுக்-கொள்கிறது.

 5. vedaprakash Says:

  சல்மா அன்ஸாரி, ஹமித் அன்ஸாரி – துணை ஜனாதிபதியின் மனைவி கேட்கிறார், –

  “எதற்காக இப்படி தேசிய பாடலைப் பற்றி இத்தகைய விவாதம் வரவேண்டும்?
  ஒருவர் அதை பாடினால், மற்றவர் ஏன் அதை விவாதிக்கவேண்டும்?
  இக்பலின் “சாரே ஜஹான் சே அச்சா” பாடலை நாம் அதே பற்றுடன் தானே பாடுகிறோம்.
  ஆகையால் முஸ்லீம் தலைவர்கள் மிஷினரிகளைப் போல குறிக்கோளுடன் வேலை செய்து முஸ்லீம் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபடவேண்டும்”

  V-P’s wife wonders fuss about ‘Vande’
  PTI – STAFF WRITER 20:26 HRS IST
  http://www.ptinews.com/news/366671_V-P-s-wife-wonders-fuss-about–Vande-

  Rampur (UP), Nov 7 (PTI) Days after a Muslim body asked the community not to recite Vande Mataram, Vice President Hamid Ansari’s wife today wondered why the national song had become “a subject of discussion”.

  “If someone recites Vande Mataram why do others make that a subject of discussion? We have also been reciting poet Iqbal’s ‘Saare Jahan Se
  Aacha’ in the same spirit,” Salma Ansari said here.

  Speaking at a school function, Ansari asked the Muslim leaders to work
  with a missionary zeal to bring about its development of the community.

  Jamiat Ulama-e-Hind had on Tuesday asked members of the community not to recite ‘Vande Mataram’ on the ground that some verses of the
  national song were against the tenets of Islam.

 6. vedaprakash Says:

  இதோ ஏதோ அமெரிகாவின் சதி என்று சொல்வதாகத் தெரிகிறது!

  ஜூலையில் மெஹ்முத் மதானியைச் சந்தித்த அமெரிக்கர்கள் யார் என்று தெரியவில்லை!

  பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

  The politics of Vande Mataram
  by Jyoti Punwani 8 November 2009, 06:13am
  IST
  http://timesofindia.indiatimes.com/city/mumbai/The-politics-of-Vande-

  Among the 15 resolutions passed by the Jamiat-e-Ulema-I-Hind (Mehmud
  Madani branch) at its anti-terrorism conference at Dar Ul Uloom
  Deoband last
  week, only one was highlighted by the media: the one which dubbed the
  singing of Vande Mataram as `un-Islamic’. The politics-dogged
  altercation over Vande Mataram is not new and rears its ugly head
  every few years. The question is, what prompted it now when no
  compulsion is being imposed on singing the song?

  According to Maulana Shafiq Ahmed Al Qasmi, an organiser of the
  conference, the provocation occurred two months ago in Saharanpur when
  a new outfit, the Rashtrawadi Maha Sabha, threatened to burn an effigy
  of Dar ul Uloom if the Deoband seminary did not withdraw a fatwa
  asking its students not to sing Vande Mataram. Since the month of
  Ramzan was on, the seminary’s and Jamiat’s response was postponed till
  November 1, when the conference was scheduled, and the resolution was
  passed here.

  However, there are other theories. The rival Jamiat, headed by Maulana
  Arshad Madani (Mehmud Madani’s uncle), alleges that the resolution is
  part of a conspiracy to create communal tension, instigated by
  Americans who had met the Mehmud faction in July.

  “With each one vying to prove himself the better Muslim, both uncle
  and nephew have forgotten the Jamiat’s glorious tradition of
  participation in the freedom movement, of which Vande Mataram was an
  inseparable part,” rues reformist Asghar Ali Engineer. “This
  resolution has eclipsed the very purpose of the conference to condemn
  terrorism.”

  Engineer points out that the nationalistic paean has always been
  politicised (see box)-he recalls that the controversy over it had
  helped both the Muslim League (which refused to sing it) and the Shiv
  Sena (which insisted on it) win seats in the 1974 BMC election. He
  himself finds the song unobjectionable. “Vande Mataram means `I pay my
  respects to the motherland. Even if you translate it as `I bow to my
  motherland, what objection can there be to doing so?” he asks. “The
  Mughals made courtiers bow to them and perform sajda (respectfully
  lowering and then lifting your hand to your forehead repeatedly). Why
  was this not condemned as un-Islamic? Simply because the emperor had
  power! In fact, Islamic scholar Mujaddid Alf Sani had objected to this
  practice in Jehangir’s time, only to be thrown into prison.”

  Writer Sajid Rashid recalls singing Allama Iqbal’s Naya Shivala in his
  Urdu school, a song which contains the lines Patthar ki mooraton mein
  samjhaa hai tu khudaa hai/ Khaak-e-watan ka mujh ko har zarraa devtaa
  hai (You think that God resides in the stone idols/ Each speck of the
  motherland is God to me.) “Ulema of every sect consider Iqbal to be a
  devout Muslim. Why is there no furore against this well-known song?”
  asks Sajid. Interestingly, the Pakistani national anthem has a line
  that says, `Blessed be the sacred land’.

  And then, of course, there’s the devout A R Rahman’s iconic rendition
  of Vande Mataram, which has the words Ma tujhe salaam. “Why is there
  no fatwa against Rahman?” asks activist Feroze Mithiborewala.

  Engineer and Sajid both point to the multiplicity of Islamic beliefs
  in India. “The Deobandis consider even singing salaams to Prophet
  Mohammed’s glory as haraam, says Sajid. “But most Indian Muslims do
  not.” Adds Engineer, “The Deobandis cannot impose their Islam on all
  Indian Muslims.”

  The real problem with Vande Mataram comes with the RSS slogan Is desh
  mein rahna hoga to Vande Mataram kahna hoga. This slogan, used in
  every RSS/Shiv Sena campaign, and part of every communal riot, kept
  cropping up during the Srikrishna Commission hearings into the
  1992-’93 riots. Policemen deposing before the Commission were amazed
  that they should even be asked why they had not taken action against
  those mouthing the belligerent slogan-significantly, so were their
  lawyers as well as the counsel for the government. It was left to
  Justice Srikrishna to point out that laying down conditions of
  residence on any citizen, let alone a community, by another group was
  not just communal but also fascist.

  The point is reiterated by Engineer. “Under compulsion, I won’t sing
  it to prove my patriotism,” he says. And adds, “And if ordered not to
  by any fatwa, I will sing it to assert my freedom of choice.”

 7. vedaprakash Says:

  வந்தே மாதர’ சர்ச்சை: அறிஞர்கள் விளக்கம்
  நவம்பர் 09,2009,00:00 IST
  http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18662

  “லக்னோ: தேசபக்திப் பாடலான வந்தேமாதரத்துக்கு, இஸ்லாமிய மாநாட்டில் எதிர்ப்பு தெரிவித்து நிறைவேற்றப்பட்ட, “பத்வா’ குறித்து, இஸ்லாமிய அறிஞர்கள் விளக்கம் அளித் துள்ளனர்.

  சமீபத்தில், உ.பி., தியோபந்த்தில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் தேசபக்திப் பாடலான, “வந்தே மாதரம்’ பாடலை முஸ்லிம்கள் பாடுவதற்குத் தடை விதித்து, “பத்வா’ பிறப்பிக்கப் பட்டது. இது நாடு முழுவதும் சலசலப்பைக் கிளப்பியது. இந்நிலையில், பத்வா குறித்து தங்கள் நிலைப் பாட்டை இஸ்லாமிய அறிஞர்கள் தெரிவித் துள்ளனர். அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்டக் குழுவின் தலைவர் மவுலானா கல்பே சாதிக், அனைத்திந்திய ஷியா தனிநபர் சட்டக்குழுவின் தலைவர் மிர்ஜா முகமது அத்தர், அனைத்திந்திய முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்டக்குழுவின் தலைவர் ஷாயிஸ்தா அம்பேர் ஆகியோர் கூறியிருப்பதாவது: முஸ்லிம்கள் தாய் நாட்டை நேசிக்கின்றனர்.

  வந்தே மாதரம் பாடலை மவுலானா அபுல்கலாம் ஆசாத் ஏற்றுக் கொண் டார். அதனால் அதை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். சம்ஸ்கிருத, இந்தி, உருது அறிஞர்கள் கூடி, “வந்தே’ எனும் சொல்லுக்கு என்ன பொருள் என்பதைக் கூற வேண்டும்.அச்சொல், “மரியாதை’ என்ற பொருளில் கையாளப்பட்டிருந்தால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். “வழிபாடு’ என்ற பொருளில் இருந்தால் அந்தப் பாடலை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: