இஸ்லாமிய நாடு உருவாக்கியதும் இந்தியா மீது படையெடுக்க முடிவு

இஸ்லாமிய நாடு உருவாக்கியதும் இந்தியா மீது படையெடுக்க முடிவு
அக்டோபர் 17,2009,00:00  IST

Front page news and headlines today

இஸ்லாமாபாத் : “”பாகிஸ்தானுக்குள் இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்குவோம். அதன் பின், இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை அனுப்புவோம்,” என, பாக்.,கில் உள்ள தலிபான் தளபதி ஹக்கி முல்லா மிரட்டல் விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் தலிபான் தளபதியாக செயல்படுபவர் ஹக்கி முல்லா. அந்நாட்டில் கடந்த சில வாரங்களில் நடந்த தாக்குதலுக்கு இவரே காரணம். இவரின் பேட்டி ஒன்றை பிரிட்டன் செய்தி சேனல் ஒளிபரப்பியது. அதில், அவர் கூறியுள்ளதாவது: பாகிஸ்தானில் இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்க விரும்புகிறோம். அப்படி ஒன்றை உருவாக்கி விட்டால், எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி, அங்கு இந்தியர்களுக்கு எதிராக பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதலுக்கு உதவி செய்வோம். அத் துடன் அங்கு தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளையும் அனுப்புவோம். அமெரிக்காவின் உத்தரவுகளை ஏற்று செயல்படுவதால், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் போலீசாருக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம். அமெரிக்க உத்தரவின்படி செயல்படுவதை பாகிஸ்தான் நிறுத்தினால், நாங்களும் எங்களின் தாக்குதலை நிறுத்துவோம். இவ்வாறு ஹக்கி முல்லா கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் வாசிரிஸ்தான் பகுதியில், அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், தெக்ரிக் -இ- தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் தலைவராக இருந்த பைதுல்லா மெக்சூத் கொல்லப்பட்டதை அடுத்து, அந்த அமைப்பின் புதிய தலைவராக ஹக்கி முல்லா பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எட்டாம் நூற்றாண்டு முதல் 12ம் நூற்றாந்து வரை எப்படி மத்தியத் தரை நாடுகளில் பரவி இருந்த இந்தியர்கள் படிப்படியாக முகமதியர்களால் கொல்லப்பட்டு, கொள்ளையடிக்கப் பட்டு, சித்திரவதைச் செய்யப் பட்டு முடிவாக மதம் மாற்றப் பட்டு கொடுமைப் படுத்தப் பட்டனர் என்பதை முகமதியர் எழுதிவைத்துள்ள சரித்திரமே கூறுகிறது.

அத்தகைய இந்திய-வம்சாவளியில் வந்தவர்களில் தான், இந்த தாலிபான் இயக்கத்தினரும் இருக்க வேண்டும்.

இருப்பினும், தங்களது மூதாதையரை மறந்து, மதம் மாறியதால் தங்களது மூலங்களை-வேர்களை மறந்து, மறுத்து, மறைத்து இன்று இந்தியாவின் மீது படையெடுப்போம் என்று அறிவிக்கின்றனர்!

இந்தியர்கள், இப்பொழுது, “செக்யூலார்-இந்தியர்கள்”  என்ன செய்ய போகின்றனரோ, தெரியவில்லை?

ஜெய்ப்பூரில் ‘ஹூஜி’ பயங்கரவாத இயக்கம் குண்டு வைத்தது அம்பலம்
மே 15,2008,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=785&ncat=&archive=1&showfrom=5/15/2008

Front page news and headlines today

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் குண்டு வைத்தது, வங்கதேசத்தில் இருந்து செயல்படும் ஹர்கத் – உல் – ஜிகாதி இஸ்லாமி (ஹூஜி) என்ற பயங்கரவாத அமைப்பு என தெரியவந்துள்ளது.

குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, சைக்கிள் ரிக்ஷா தொழிலாளி உட்பட எட்டு பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில், சைக்கிள்களில் குண்டு வைக்க பணம் கொடுத்த மர்ம பெண்ணையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், நேற்றுமுன்தினம் எட்டு இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் பலியானதோடு, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அமைதியான நகரம் என அழைக்கப்படும் ஜெய்ப்பூரில் நடந்த இந்த குண்டு வெடிப்பால், மத்திய மாநில அரசுகள் அதிர்ச்சி அடைந்துள்ளதோடு, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதிலும் தீவிரமாக உள்ளன.

தொடர் குண்டு வெடிப்பில், தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் எட்டு பேரை, போலீசார் தங்களின் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணை நடத்தும் எட்டு பேரில், ஒருவர் குண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்; மற்றொருவர் ரிக்ஷா தொழிலாளி. அனைத்து குண்டு வெடிப்புகளும் “டைமர்’கள் மற்றும் சைக்கிள்களின் உதவியுடன் நடத்தப்பட்டுள்ளதால், வங்கதேசத்தை சேர்ந்த ஹர்கத் – உல் -ஜிகாதி இஸ்லாமி (ஹூஜி) என்ற பயங்கரவாத அமைப்பே காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர், ஜெய்ப்பூர் நகரிலேயே மறைமுகமாக செயல்பட்டு, இந்த கொடூர தாக்குதலை, சரியான தருணம் பார்த்து நடத்தியிருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“குண்டு வெடிப்பு நடந்த இடங்களில் போதுமான ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றை தொழில் நுட்ப நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், வெடிக்காத குண்டு ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டு, செயல் இழக்கச் செய்யப்பட்டது. பெரும்பாலான குண்டுகள் கார், சைக்கிள் ரிக்ஷாக்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் சைக்கிள்களில் வைத்து வெடிக்கச் செய்யப்பட்டுள்ளன’ என்றும் ஜெய்ப்பூர் போலீஸ் கண்காணிப்பாளர் ராகவேந்திர சுகசா கூறினார். அதேநேரத்தில், ஜெய்ப்பூரில் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்த, ரிக்ஷா தொழிலாளி ஒருவரிடம் பேரம் பேசிய பெண் பற்றிய புதிய தகவல்களும் வெளியாகியுள்ளன.

குண்டுகளை வைக்க இந்தப் பெண் ஒரு லட்சம் ரூபாய் வரை தருவதாக உறுதி அளித்ததாகவும், விசாரணையில் தெரியவந்துள்ளது. “”குண்டு வைக்க பணம் தருவதாக ரிக்ஷா தொழிலாளி விஜய் என்பவரிடம் மீனா என்ற பெண் பேரம் பேசியுள்ளார். அந்தப் பெண்ணை கண்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மும்பையைச் சேர்ந்தவரான விஜய்யும், குண்டு வெடிப்பில் காயம் அடைந்துள்ளார். அந்தப் பெண் பற்றிய மேலும் விவரங்களை அறியவும், அவரை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்’ என்றும் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும், இந்தத் தொடர் குண்டு வெடிப்புகளுக்கு சைக்கிள்களே பயன்படுத்தப் பட்டுள்ளதால், ஒரே நபருக்கு ஒன்பது சைக்கிள்களை விற்ற சைக்கிள் கடைக்காரரும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு, அவரிடமும் விசாரணை நடக்கிறது. அவர் மூலம் சைக்கிள்களை வாங்கிய நபர் மற்றும் குண்டு வெடிப்பு நடத்திய பயங்கரவாதியின் படத்தை வரைந்து வெளியிடவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹூஜி அமைப்பு செய்த சதி வேலைகள் என்ன?: ஹர்கத் – உல் – ஜிகாதி இஸ்லாமி (ஹூஜி) என அழைக்கப்படும் பயங்கரவாத அமைப்பு 1992ம் ஆண்டில் உருவானது. இந்த அமைப்பினர் 1996ம் ஆண்டு ஜூன் மாதம் வங்க தேசத்தில் தங்களின் சதி வேலையை அரங்கேற்றினர். அதன் பின்னரே இந்த அமைப்பு பற்றி வெளியுலகுக்கு தெரியவந்தது. இந்த அமைப்பிற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல் -குவைதாவுடனும் தொடர்பு உள்ளது. இந்தியாவில் 2002ம் ஆண்டில்தான் இந்த அமைப்பினர் தங்களின் தாக்குதலை நடத்தினர். கோல்கட்டாவில் அமெரிக்க மையத்தில் நடந்த தாக்குதலில் ஐந்து போலீசார் கொல்லப்பட்டனர்.

2005ல் டில்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு மற்றும் பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனத்தில் நடந்த குண்டு வெடிப்பு உட்பட கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த பல குண்டு வெடிப்புகளில் ஹூஜி அமைப்புக்கு தொடர்பிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரணாசியில் 2006 மார்ச்சில் சங்கத் மோச்சன் கோவிலில் நடந்த குண்டு வெடிப்பு, 2007ல் ஐதராபாத் மெக்கா மசூதியில் நடந்த குண்டு வெடிப்பு, 2007 நவம்பரில் உ.பி., மாநிலத்தில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு போன்றவற்றுக்கும், இந்த அமைப்புக்கும் தொடர்புள்ளதாகவும் நம்பப்படுகிறது. ஹூஜி அமைப்பை, அன்னிய நாட்டு பயங்கரவாத அமைப்பாக, இந்தாண்டு மார்ச் 5ம் தேதி அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்தது.

சென்னையில் குண்டு வைக்கப்போவதாக பயங்கரவாதிகள் மிரட்டல்! இ-மெயில் அனுப்பி கொக்கரிப்பு
மே 16,2008,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=793&ncat=&archive=1&showfrom=5/16/2008

Front page news and headlines today

காசியாபாத்: “ஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்புக்கு நாங்களே காரணம்’ என, “இந்தியன் முஜாகிதீன்’ என்ற பயங்கரவாத அமைப்பு, “டிவி’ சேனல்களுக்கு இ-மெயில் அனுப்பியுள்ளது. அத்துடன், ஜெய்ப்பூரில் சைக்கிள் குண்டு எப்படி வைக்கப்பட்டது என்பது தொடர்பான வீடியோ காட்சியையும் அனுப்பி வைத்துள்ளது. சென்னையில் குண்டு வைக்கப் போவதாகவும் அந்த பயங்கரவாத அமைப்பு எச்சரித்துள்ளது.இ-மெயில், உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள “சைபர் கபே’ ஒன்றில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதால், அதன் உரிமையாளரும், அங்கு வேலை பார்த்தவரும் உ.பி., போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“ஹூஜி’ பயங்கரவாத அமைப்பு : ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில், கடந்த செவ்வாயன்று இரவு பயங்கர குண்டுகள் வெடித்ததில், 63க்கும் மேற்பட்டோர் பலியாயினர்; காயமடைந்த 100க்கும் மேற்பட்டவர்கள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர குண்டு வெடிப்புக்கு, வங்க தேசத்திலிருந்து செயல்படும் “ஹூஜி’ பயங்கரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், இந்த தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை.குண்டு வெடிப்பிற்கு சைக்கிள்களே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டதால், ஒன்பது சைக்கிள்களை ஒரே நபருக்கு விற்ற சைக்கிள் கடைக்காரரிடமும், மற்றொரு ரிக்ஷா தொழிலாளியிடமும் தீவிர விசாரணை நடைபெற்றது.

எங்கிருந்து இ-மெயில் : அவர்கள் கொடுத்த தகவல்களின் பேரில், சைக்கிள்களை வாங்கிய பயங்கரவாதியின் வரைபடம் வெளியிடப்பட்டது.இந்நிலையில், உ.பி., மாநிலம் காசியாபாத் மாவட்டம் சாகிபாபாத்தில் இருந்து, சில தொலைக்காட்சி சேனல்களுக்கு நேற்று முன்தினம் இரவு இ-மெயில் வந்தது. அதில், “தாங்களே ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்கு காரணம்’ என, “இந்தியன் முஜாகிதீன்’ என்ற அமைப்பினர் தெரிவித்திருந்தனர். அந்த இ-மெயிலை போலீசாரின் பார்வைக்கு, “டிவி’ சேனல்கள் அனுப்பி வைத்தன. உடன் சுதாரித்த போலீசார், அந்த இ-மெயில் எங்கிருந்து வந்தது என்பதை ஆராய்ந்தனர்.

இ-மெயில் உ.பி., மாநிலம் சாகிபாபாத்தில் உள்ள, “சைபர் கபே’ ஒன்றிலிருந்து அனுப்பப்பட்டது என கண்டு பிடிக்கப்பட்டது. உடன், அந்த “சைபர் கபே’யின் உரிமையாளரையும், அங்கு வேலை பார்த்தவரையும் கைது செய்த உ.பி., போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.”டிவி’ சேனல்களுக்கு அனுப்பப்பட்ட இ-மெயிலில், ஜெய்ப்பூரில் சோட்டி சவுபாட் என்ற இடத்தில் நடந்த குண்டு வெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட சைக்கிள்களின் பிரேம் நம்பரும் (129489) குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பிரேம் நம்பரும், ராஜஸ்தான் போலீசார் குண்டு வெடிப்பு நடந்த இடத்திலிருந்து கைப்பற்றிய சைக்கிள் பிரேம் நம்பரும் ஒன்றாக உள்ளது.

அந்த இ-மெயிலின் “ஐடி’ gurualhindijaipur@yahoo.co.uk

என குறிப்பிடப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் தான் அந்த “ஐடி’ துவக்கப்பட்டுள்ளது. யாகூவின் பிரிட்டன் டொமைனை பயன்படுத்தி, இந்த, “ஐடி’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது.”ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பிற்கு தாங்களே காரணம்’ என தெரிவிக்கப்பட்டுள்ள அந்த இ-மெயிலில், “அமெரிக்காவிற்கு ஆதரவு தருவதை இந்தியா நிறுத்த வேண்டும். ஆதரவு தருவதை தொடர்ந்தால், இது போன்ற தாக்குதல்கள் தொடரும். குறிப்பாக சுற்றுலா தலங்களை குறிவைத்து, இந்தியாவிற்கு வரும் மேலை நாட்டவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவோம். டில்லி, மும்பை, கோல்கட்டா மற்றும் சென்னையில் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டால், அங்கும் பயங்கர தாக்குதல்களை நடத்துவோம்.

மூன்று சிவில் கோர்ட்டுகளில் : தெருக்களில் ரத்த ஆறு ஓடும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த இ-மெயிலுடன் வீடியோ கிளிப்பிங் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், சைக்கிள்கள் ஒன்று, கேரியரில் பையுடன் மார்க்கெட்டில் பார்க்கிங் செய்யப்பட்டுள்ள காட்சி இடம் பெற்றுள்ளது. அந்த பையில்தான் குண்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த “இந்தியன் முஜாகிதீன்’ அமைப்பினர் குண்டு வெடிப்பிற்கு பொறுப்பேற்பது இது இரண்டாவது முறை. கடந்த நவம்பர் மாதத்தில், உ.பி., மாநிலத்தில் மூன்று சிவில் கோர்ட்டுகளில் நடந்த குண்டு வெடிப்பிற்கும் தாங்களே காரணம் என இந்த அமைப்பு தெரிவித்திருந்தது. இருந்தாலும், அப்போது அனுப்பப்பட்ட இ-மெயில், டில்லி சகார்பூர் பகுதியில் இருந்து அனுப்பப்பட்டிருந்தது.

அந்த இ-மெயில் “ஐடி’யும், தற்போதைய “ஐடி’யும் மாறுபட்டதாக உள்ளன.இதற்கிடையில், ஹர்கத்-உல்-ஜிகாதி இஸ்லாமி (ஹூஜி) என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவரான ஷமீம் என்பவரின் வீட்டிலும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். ஷமீமின் வீடு, உ.பி., மாநிலம், பாக்பத் மாவட்டத்தில் உள்ளது. இருந்தாலும், சோதனையின் போது எந்த தடயமும் சிக்கவில்லை. வாரணாசியில் 2006ம் ஆண்டில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில், ஷமீமிற்கு தொடர்பிருக்கலாம் என நம்பப்படுகிறது.

அதேநேரத்தில், குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட சைக்கிள்களில் ஒன்றை வாங்கிய பெண் யார் என்பதை ராஜஸ்தான் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஒரு சைக்கிளை குண்டு வெடிப்பு நிகழ்ந்த அன்று, மதியம் 2.30 மணிக்கு அந்த பெண் வாங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, வங்க தேசத்தை சேர்ந்த 40 பேரையும் ராஜஸ்தான் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

டில்லி, ஆமதாபாத் நகரில் குண்டு வைத்தவர்கள் சுட்டுக் கொலை! : அடுத்த தாக்குதலுக்கு திட்டமிட்ட போது சிக்கினர்

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=1822

Front page news and headlines today

புதுடில்லி : ஆமதாபாத் மற்றும் டில்லி தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான இருவர், டில்லியில் போலீசாருடன் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டனர். ஒருவன் துப்பாக்கிக் குண்டுகாயத்துடன் பிடிபட்டான்; இருவர் தப்பி விட்டனர். ஆமதாபாத் தொடர் குண்டு வெடிப்பில் 77 பேரும், டில்லி தொடர் குண்டு வெடிப்பில் 24 பேரும் கொல்லப்பட்டனர். ஆமதாபாத் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி அபு பஷாரிடம் நடத்திய விசாரணையில், பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியானது. டில்லி தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, விசாரணைக்காக அபு பஷார், டில்லிக்கு கொண்டு வரப்பட்டான்.

“ஹுஜி’ என்று அழைக்கப்படும் ஹர்கத்-உல்-ஜிகாதி இஸ்லாமியா என்ற அமைப்பு மற்றும் இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் பயங்கரவாதிகள் இணைந்து, ஆமதாபாத் மற்றும் டில்லியில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள், தென்டில்லியில் உள்ள ஜமியா நகரில் ஒளிந்திருப்பதை அபு பஷார் தெரிவித்தான்.

போலீஸ் குவிப்பு: இந்த வீட்டில் முகமது உஸ்மான் குரேஷி என்ற தவுகீருடன் தங்கியிருந்ததாக அபு பஷார் தெரிவித்து இருந்தான். அடுத்த தாக்குதலுக்கு திட்டமிட வாய்ப்பு உள்ளது என்ற தகவலும், பிரமுகர்கள் வசிக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், கடந்த வியாழக்கிழமை முதலே அப்பகுதியில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது. குண்டு வெடிப்பு கும்பலின் மூளையாகச் செயல்பட்ட அடிக், ஜமியா நகரில் இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர். பயங்கரவாதிகளைப் பிடிக்க, போலீஸ் சிறப்பு பிரிவுக் குழுவினர் இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் சர்மா தலைமையில் நேற்று காலை 9 மணிக்குச் சென்றனர். தேசிய பாதுகாப்புப் படையினரும் அவர்களுக்கு உதவியாகச் சென்றனர். வீட்டை அடையாளம் காட்டுவதற்காக அபு பஷாரும் அங்கு அழைத்துச் செல்லப்பட்டான். பாதுகாப்புக்காக அப்பகுதியில் 150 சாதாரண உடை போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

துப்பாக்கிச் சண்டை: மசூதி அருகே, பாட்டியா அவுஸ், எண். எல்-18 என்ற முகவரியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் பயங்கரவாதிகள் இருப்பது தெரியவந்தது. அவர்களைப் பிடிக்க வீட்டை உடைத்து உள்ளே புக, போலீசார் முடிவு செய்தனர். இதை அறிந்த பயங்கரவாதிகள், போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரண்டு மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அப்பகுதியில் மக்கள் கூடிவிட்டனர். பயமும் பீதியும் காணப்பட்டது. அந்த வீட்டுக்குள், ஐந்து பேர் இருந்தனர். துப்பாக்கிச் சண்டையில் இருவர் கொல்லப்பட்டனர். காயமடைந்த ஒருவன் தப்பி ஓடும்போது பிடிபட்டான். இரண்டு பேர் தப்பிவிட்டனர். அந்த வீட்டில் ஏ.கே. 47 துப்பாக்கி, இரண்டு கைத்துப்பாக்கிகள், சங்கேத வார்த்தைகளில் எழுதப்பட்ட டைரிகள் கைப்பற்றப்பட்டன. கொல்லப்பட்டவர்களில் ஒருவன், அடிக் என்ற பஷீர் என்றும், அவனுக்கு தடை செய்யப்பட்ட “சிமி’ இயக்கத்துடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்ததுள்ளது. கொல்லப்பட்ட இன்னொருவன் பக்ருதீன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. பிடிபட்டவன் அடையாளம் தெரியாத இடத்துக்கு, விசாரணைக்காக போலீசாரால் கொண்டு செல்லப்பட்டான். துப்பாக்கிச் சண்டையில், இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் சர்மாவுக்கு வயிற்றில் குண்டு துளைத்தது. கவலைக்கிடமான நிலையில் அவருக்கு ஹோலி பேமிலி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. சண்டையில் தலைமை காவலர் ராஜ்குமார் என்பவரும் காயமடைந்தார். இவர் அகில இந்திய மருத்துவக் கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்த போது, மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், போலீஸ் தலைமையகத்தில் இருந்தார். அவரிடம் அனைத்தும் விளக்கப்பட்டது. சிறப்பு போலீஸ் பிரிவினரை சிவராஜ் பாட்டீல் பாராட்டினார். “சிறப்பான காரியத்தை செய்து முடித்துள்ளனர்’ என்று குறிப்பிட்டார்.

ஜமியா நகர் மக்கள் ஆவேசம் : ஜமியா நகரில் போலீசார் நடத்திய ஆபரேஷன் போது, மசூதி சேதப்படுத்தப்பட்டதாக அப்பகுதியில் தகவல் பரவியதை அடுத்து அங்கு பதட்டம் ஏற்பட்டது. குண்டு வைத்திருந்தவர்கள் ஒளிந்திருந்த வீடு, ஒரு மசூதிக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது. துப்பாக்கிச் சண்டை துவங்கியதும், அப்பகுதி மக்கள் அங்கு குவிந்தனர். மத கோஷங்கள் எழுப்பினர். “நாங்கள் பயங்கரவாதத்துக்கு எதிரானவர்கள். அப்படிப்பட்ட நிலையில், எங்கள் மதவழிபாட்டு தலத்தை குறிவைத்தது ஏன்?’ என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். பதிலாக துணைக் கமிஷனர் தாலிவால், “மதவழிபாட்டு இடத்திற்கு அருகில் உள்ள வீட்டில் தான் தாக்குதல் நடத்தப்பட்டது’ என்று விளக்கினார். திடீரென்று பரவிய வதந்தி தான் மக்களின் கோபத்துக்கு காரணம் என்று பின்னர் தெரியவந்ததது. கோபத்தில் இருந்த அப்பகுதி மக்கள், பத்திரிகையாளர்களையும் ஆவேசமாக திட்டினர்.

ஐந்து பேர் கைது : ஜமியா நகரை சேர்ந்த சந்தேகத்துக்குரிய ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவர்களில் தப்பி ஓடியதாக கருதப்பட்ட பயங்கரவாதிகள் இல்லை. குண்டு வைத்தவர்கள் தங்குவதற்காக வீடு கொடுத்த, அதன் உரிமையாளர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மேலும் நான்கு பேரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த வீட்டில் ஒரு மாதத்துக்கு அதிகமாக பலர் தங்கி இருந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தும் விசாரணையில், குண்டு வைத்தவர்கள் பற்றி குறித்த கூடுதல் தகவல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அசாம் குண்டு வெடிப்பிற்கு காரணம் யார்? முதல்வர் கோகை தகவல்
ஜனவரி 03,2009,00:00  IST

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=6111

Latest indian and world political news information

கவுகாத்தி : அசாம் மாநிலத்தில் நேற்று முன்தினம் நடந்த மூன்று தொடர் குண்டு வெடிப்பிற்கு, வங்கதேசத்தில் உள்ள பயங்கரவாத அமைப்புகளே காரணமென அம்மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது. அசாம் மாநிலத்திற்கு நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் செல்வதற்கு சில மணி நேரத்திற்கு முன், அம்மாநிலத்தில் மூன்று தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.

இந்த குண்டு வெடிப்பு பற்றி அசாம் மாநில முதல்வர் தருண் கூறியதாவது: வங்கதேசத்தில் காணப்படும் பயங்கரவாத முகாம்களே, நேற்று முன்தினம் நடந்த குண்டு வெடிப்பிற்கு காரணம். இந்த குண்டு வெடிப்பிற்கு உல்பா அமைப்பின் 709வது பட்டாலியன் தான் காரணமென முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வங்கதேசத்தில் உள்ள உல்பா, போடோலாண்ட் தேசிய ஜனநாயக முன்னணி(என்.டி.எப்.பி.,), ஹுஜி போன்ற அனைத்து பயங்கரவாத இயக்கங்களும் தடை செய்யப்பட வேண்டும். வங்கதேசத்தில் பயங்கரவாத முகாம்கள் இருப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதுதொடர்பாக இந்தியா, வங்கதேசத்திற்கு நெருக்கடி அளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் கேட்டுக் கொண்டுள் ளேன். இவ்வாறு முதல்வர் தருண் கூறினார்.

இதையடுத்து, அசாம் மாநில முதல்வர் தருண் தலைமையிலான ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட பின் பத்திரிகையாளர்கள் பேட்டியில் சிதம்பரம் கூறியதாவது: பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கக்கூடாது. ராணுவம், துணை ராணுவப் படைகள், மாநில போலீசார் ஆகியோர் இணைந்த குழுவினருக்கு விரிவான தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உல்பா மற்றும் போடோலாண்ட் தேசிய ஜனநாயக முன்னணி (என்.டி.எப்.பி.,) ஆகிய இரு தடை செய்யப்பட்ட அமைப்புகளும் வங்க தேசத்தில் புகலிடம் தேடியுள்ளன. வங்கதேச பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா, இந்தியாவிற்கு எதிராக தங்கள் மண்ணில் இருந்து எவ்வித பயங்கரவாத நடவடிக்கையையும் அனுமதிக்க மாட்டோம் என கூறியுள்ளார். இதன் மூலம், பயங்கரவாதிகள் இனி வங்கதேசத்தில் புகலிடம் தேட முடியாது என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

அடையாளம் தெரிந்தது: அசாம் குண்டு வெடிப்பில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளில் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்று தெரிவித்தார். அதே சமயம், குற்றவாளிகள் குறித்த கம்ப்யூட்டர் வரைபடம் நேற்று வெளியிடப்பட்டது.

அசாம் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: அசாம் மாநிலத்தில் நேற்று முன்தினம் மூன்று இடங்களில் தொடர் குண்டு வெடித்தது. இதில், பிருபாரி மற்றும் பான்காகார் ஆகிய இடங்களில் குண்டு வைத்த குற்றவாளிகளை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். போலீசார் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவர்கள் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வர். இவ்வாறு சிதம்பரம் கூறினார். மாநில அரசு மற்றும் போலீசார் உல்பா அமைப்பினர் தான் இந்த குண்டு வெடிப்பிற்கு காரணம் என கூறி வருகின்றனர். இதுகுறித்து கருத்து கூற சிதம்பரம் மறுத்து விட்டார்.

Explore posts in the same categories: ஃபத்வா, அபு ஜிண்டால், அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் முஹம்மதியா, அல்லா, அவமதிக்கும் இஸ்லாம், இணைதள ஜிஹாத், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஒஸாமா பின் லேடன், ஔரங்கசீப், கராச்சி திட்டம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், குரான், சிந்த்-ஹிந்த் ஹிந்த்-சிந்த், ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாத், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: