நள்ளிரவில் நோயாளி சிகிச்சைக்குச் சென்றபோது, ஹிஜாப் பற்றிய விவாதம் ஏன், நோயாளி இறந்தது எப்படி? (2)

இடப்பட்டது மே 30, 2023 by vedaprakash
பிரிவுகள்: கருப்பு, கருப்பு உடை, பர்கா, பர்தா, மாற்றம், முஜாஹித்தீனா, முஜாஹித்தீன், முஸ்லிம், முஸ்லிம் அடிப்படைவாதம், முஸ்லிம் கழகம், முஸ்லிம் பிரச்சினை, முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை, முஸ்லிம் முன்னேற்ற கழகம், முஸ்லிம்கள் ஆர்பாட்டம், முஸ்லிம்கள் முற்றுகை, முஸ்லீம், முஸ்லீம் அல்லாத பெண்கள், முஸ்லீம் சட்டம், முஸ்லீம் தன்மை, முஸ்லீம் பெண்கள் தனியாக இருப்பது, முஸ்லீம் பெண்கள் வேலை, முஸ்லீம் பெண்கள் வேலை செய்வது, ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங், வக்ஃப் போர்ட், வன்முறை, வன்முறையில் ஈடுபடுவது, ஷரியத், ஷியா, ஹிஜாப்

Tags: , , , , , , , , , , , , , , , ,

நள்ளிரவில் நோயாளி சிகிச்சைக்குச் சென்ற போது, ஹிஜாப் பற்றிய விவாதம் ஏன், நோயாளி இறந்தது எப்படி? (2)

மருத்துவர் மீது ஏதாவது நடவடிக்கை உண்டா?: அப்போதுபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புவனேஸ்வர்ராமை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசாரோ அவரை இதுவரை கைது செய்யவில்லை என்றும் மருத்துவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு மருத்துவகுழுமூலம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டக்காரர்கள் சடலத்தை எடுத்து சென்று அடக்கம் செய்தனர். ஆனால், இன்னொரு பக்கம் தலைமறைவாக இருந்தவரை, தேடி பிடித்து கைது செய்தனர் என்றுள்ளது. அதே நேரத்தில் அந்த மருத்துவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்று தெரியவில்லை.  இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அதிகாரிக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார் என்றும் உள்ளது.

முஸ்லிம் தலைவர், முஸ்லிம் போன்றே அறிக்கை விட்டுள்ளது: “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்[1]. இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்[2], ”நாகை மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று இரவு பணியிலிருந்த முஸ்லிம் பெண் மருத்துவர் ஹிஜாப் அணிந்திருந்தார் என்ற காரணத்தால் பாஜகவைச் சேர்ந்த புவனேஸ்வர ராம் என்பவர் முஸ்லிம் பெண் மருத்துவரிடம் தகராற்றில் ஈடுபட்டார் எனச் செய்திகள் மூலம் தெரியவருகிறது. இரவு நேரத்தில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட நோயாளி ஒருவரைப் பரிசோதித்த முஸ்லிம் பெண் மருத்துவர், நோயின் தீவிரத்தை அறிந்து உடனே நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவை சேர்ந்த புவனேஸ்வர ராம் இரவு நேரப் பணியிலிருந்த ஒரு பெண் மருத்துவரிடம் வாக்குவாதம் செய்வது போன்ற காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஜவாஹிருல்லா கூறியது:ஒரு பெண் மருத்துவரிடம் இதுபோன்ற வெறுப்பு பேச்சைப் பேசுவதும், அவர் ஹிஜாப் அணிந்திருந்த காரணத்தால் அவரை மிரட்டுவதும் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தும் செயலாகும். மேலும், மருத்துவர்கள், மருத்துவ சேவைப் பணியாளர்கள் மத்தியில் அமைதியின்மையை உருவாக்கி, அப்பகுதியில் நிலவிவரும் சமூக நல்லிணக்கதை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது. எனவே, பெண் மருத்துவரை மிரட்டிய நபரை தமிழ்நாடு மருத்துவ சேவைப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்கள் (வன்முறை மற்றும் சேதம் அல்லது சொத்து இழப்பு) சட்டம் 48/2008ன் கீழ் மற்றும் மத ரீதியான வெறுப்பு பேச்சுகளைப் பேசி பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்த முயன்ற காரணத்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்[3]. சீமானும் இதே போன்ற கருத்தை வெளியிட்டுள்ளார்[4].

சீமானின் இஸ்லாம் அதரவு அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு மருத்துவர் ஜன்னத்தை ஹிஜாப் விவகாரத்தில் மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். மேலும் திமுக அரசு, ஆர்.எஸ்.எஸ். ஆதரவு போக்குடன் செயல்படுவதாகவும் சீமான் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பான சீமான் அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வரும் அன்புச்சகோதரி ஜன்னத் அவர்களை கடந்த 24 ஆம் நாள் இரவுநேரப் பணியின்போது அப்பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மருத்துவமனையில் ஹிஜாப் அணியக்கூடாது என்று மிரட்டியுள்ளதோடு, ஹிஜாப்பை கழற்ற வேண்டுமென கூறி பணி செய்யவிடாமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நாகை மாவட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறதா? அல்லது உத்தரபிரதேசத்தில் இருக்கிறதா? தமிழ்நாட்டை ஆள்வது திமுகவா? அல்லது பாஜகவா? என்று சந்தேகப்படும் அளவுக்கு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் இந்துத்துவ அமைப்புகளின் மதவெறிச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதவெறியர்களின் மனிதவெறுப்புச் செயல்களை தடுத்து நிறுத்தாமல், அதற்கு துணைபோகும் திமுக அரசின் ஆர்எஸ்எஸ் ஆதரவுப்போக்கு வன்மையான கண்டத்திற்குரியது. உணவு, உடை, வழிபாடு உள்ளிட்டவை அடிப்படை தனிமனித உரிமையாகும். அதில் தலையிடுவதென்வது அருவறுக்கத்தக்க மனித வெறுப்பின் உச்சமாகும். வட இந்தியாவிலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் மட்டுமே நிகழ்ந்த அத்தகைய மதவெறுப்பு கொடுஞ்செயல்கள் தற்போது தமிழ்நாட்டிலும் தொடங்கியிருப்பது வெட்கக்கேடானது.

லிஸ்ட் போட்டு ஆதரவு கொடுக்கும் சீமான்[5]:

  • என்ஐஏ கொடுஞ்சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்தது,
  • நீண்டகால இசுலாமிய சிறைவாசிகள் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது,
  • ஆர்எஸ்எஸ் சாகா வகுப்புகளை அனுமதித்தது,
  • பாஜகவின் கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்த துடிப்பது,
  • இசுலாமியர் மீதான வெறுப்பை விதைக்கும் திரைப்படங்களுக்கு பாதுகாப்பளிப்பது,
  • மாட்டுக்கறி உணவிற்கு தடைவிதிப்பது

என்று இசுலாமியர்களுக்கு எதிராக திமுக அரசு மேற்கொண்டுவரும் பச்சைத் துரோகச்செயல்களின் தொடர்ச்சியே, ஹிஜாப் அணியக்கூடாது என்று மிரட்டும் அளவிற்கு மிக மோசமான நிலையை தமிழ்நாடு எட்டுவதற்கு முக்கிய காரணமாகும். இந்துத்துவத்திற்கு ஆதரவான இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் பாஜகவின் பினாமி அரசாகவே திமுக அரசு செயல்படுவதையே வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி அரசு அலுவலகத்திற்குள் புகுந்து அரசு அலுவலரை கொலை செய்தது, அரசு மருத்துமனைக்குள் புகுந்து அரசு மருத்துவரை மிரட்டுவதென தொடரும் சமூக விரோதிகளின் வன்முறை வெறியாட்டங்கள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதையே காட்டுகிறது. ஆகவே, அடிப்படை மனித உரிமைக்கு எதிராக மதவெறியுடன் இழிசெயலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி புவனேஷ்ராமிற்கு கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்[6].

29-05-2023 ‘மருத்துவ சீருடையில் பணிக்கு வராமல், ‘ஹிஜாப்அணிந்து வந்த பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: 29-05-2023 அன்று, ‘மருத்துவ சீருடையில் பணிக்கு வராமல், ‘ஹிஜாப்’ அணிந்து வந்த பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, பாரத் இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது[7]. அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், தலைமைச் செயலர் இறையன்புவிடம் அளித்துள்ள மனுவில் இதனை வலியுறுத்தியுள்ளார்[8]. மருத்துவ மனை, நொயாளி, நள்ளிரவில் சிகிச்சைக்கு வந்தது, நோயாளி சிகிச்சை பலனின்றி இறந்தது, முதலியவற்றைப் பற்றி எந்த விவரங்களையும் எந்த ஊடகமும் கொடுக்கவில்லை. சிகிச்சை பலனின்றி இறந்தார் என்றுள்ளது. குறிப்பிட்ட மருத்துவர் சண்டை போடுவதிலும், வீடியோ எடுப்பதிலும், அதனை உடனடியாக யாருக்கோ அனுப்புவதிலும் தான் மும்முறமாக இருந்தது தெரிகிறது. பிறகு, ஆவண தோரணையுடன், கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு செல்போனில் பார்த்துக் கொண்டிருக்கிறார். மருத்துவர் போன்றே கணப்படவில்லை.

© வேதபிரகாஷ்

30-05-2023


[1] தமிழ்.இந்து, ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபர் மீது சட்டப்படி நடவடிக்கை: ஜவாஹிருல்லா வலியுறுத்தல், செய்திப்பிரிவு, Published : 26 May 2023 02:44 PM, Last Updated : 26 May 2023 02:44 PM

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/996833-threatening-doctor-wearing-hijab-should-be-punished-according-to-law-jawahirullah.html

[3] தமிழ்.இந்துஸ்தான் டைம்ஸ், Hijab: ஹிஜாப் அணியக்கூடாது என மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல், Pandeeswari Gurusamy, 27 May 2023, 16:55 IST

[4] https://tamil.hindustantimes.com/tamilnadu/seeman-insists-that-the-bjp-executive-who-threatened-the-doctor-not-to-wear-hijab-should-be-severely-punished-131685186096080.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ஹிஜாப் விவகாரம்: ஆர்.எஸ்.எஸ். ஆதரவுப் போக்கில் திமுக அரசு.. 6 பாயிண்டுகளை முன்வைக்கும் சீமான்!, By Mathivanan Maran Updated: Saturday, May 27, 2023, 11:21 [IST]

[6] https://tamil.oneindia.com/news/tamilnadu/hijab-row-seeman-blames-dmk-govt-support-to-rss-513636.html?story=1

[7] தினமலர், பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க மனு, பதிவு செய்த நாள்: மே 30,2023 03:59

[8] https://m.dinamalar.com/detail.php?id=3334072

நள்ளிரவில் நோயாளி சிகிச்சைக்குச் சென்றபோது, ஹிஜாப் பற்றிய விவாதம் ஏன், நோயாளி இறந்தது எப்படி? (1)

இடப்பட்டது மே 30, 2023 by vedaprakash
பிரிவுகள்: அச்சம், அடிப்படைவாதம், அடையாளம், அத்தாட்சி, அனுமதி, அமைதி, அமைதி என்றால் இஸ்லாமா, அழிப்பு, அழிவு, அவமதிக்கும் இஸ்லாம், ஆர்.எஸ்.எஸ், ஆர்பாட்டம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இந்து-முஸ்லிம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இஸ்லாம், உடை, எச்சரிக்கை, எதிர்ப்பு, சட்ட வாரியம், சட்டசபை, சட்டத்துறையினர், சட்டத்தை வளைப்பது!, சட்டமீறல், சட்டம், சட்டம் மீறல், சட்டவிரோதம், சண்டை, சண்டை போடுவது, சரீயத், சரீயத் சட்டம், பர்கா, பர்கா போராட்டம், பர்தா, பர்தா அணிவது, பர்தா காக்கும் உடையா?, பர்தா மத-அடையாளமா?, பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், பாபுலர் பிரென்ட் ஆப் இந்தியா, பாலியல், பாலியல் அடிமை, பாலியல் தொல்லை, பிஜேபி, பிஜேபி-முஸ்லிம், ஹிஜாப்

Tags: , , , , , , , , , , , , , , ,

நள்ளிரவில் நோயாளி சிகிச்சைக்குச் சென்றபோது, ஹிஜாப் பற்றிய விவாதம் ஏன், நோயாளி இறந்தது எப்படி? (1)

24-05-2023 இரவு மருத்துவமனையில் நடந்தது: நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருபவர் ஜன்னத் (29). இவர், மே 24-ம் தேதி அன்று இரவு பணியில் இருந்தார்[1]. அப்போது, இரவு 11.30 மணியளவில் திருப்பூண்டியைச் சேர்ந்த பாஜக மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் புவனேஸ்வர் ராம், தன் உறவினர் சுப்பிரமணியன் என்பவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்தார்[2]பாக, முதலில் சுப்பிரமணியனுக்கு என்ன பிரச்சினை, நடு இரவில் வந்த நோயாளிக்கு என்ன முதல் உதவி செய்ய வேண்டும், சிகிச்சை என்ன அளிக்கப் பட்டது பற்றி ஊடகங்கள் ஏன் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை. அப்போது, அங்கு மருத்துவர் ஜன்னத் ஹிஜாப் அணிந்திருந்ததைப் பார்த்த புவனேஸ்வர் ராம், அரசுப் பணியில் இருக்கும்போது எப்படி ஹிஜாப் அணியலாம்,” அரசுப் பணியின்போது மருத்துவர் ஏன் ஹிஜாப் அணிய வேண்டும்மருத்துவருக்கு என்று சீருடை கிடையாதாஉண்மையிலேயே நீங்கள் மருத்துவர் தானாஎனக்குச் சந்தேகமாக இருக்கிறது?” ”, எனக் கேள்வி எழுப்பியதுடன், மருத்துவர் ஜன்னத்தை செல்போனில் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. அப்படியென்றால், உறவினரின் உடல்நிலையை விட, இது தான் பெரிய பிரச்சினையாக தெரிகிறதா? அவர் வீடியோ எடுப்பதை மருத்துவர் ஜன்னத்தும் தன் செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்தார்[3]. அந்தப் பெண் மருத்துவர், “பெண்கள் பணியில் இருக்கும்போது அசிங்கமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். ஒரு பெண் மருத்துவரை அவரின் அனுமதியில்லாமல் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார்,” எனச் சொல்லி அவரும் வீடியோ எடுத்திருக்கிறார்[4]. இந்த 2 காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.  அப்படியென்றால், ஜன்னத்திற்கும், அதுாான் முக்கியமாகப் பட்டது போலும்..

ஹிஜாபை கழட்டச் சொன்ன பிஜேபி நிர்வாகி[5]: முதலில் சுப்ரமணியனின் உடல்நிலையை மறந்து, இவர் இப்படி, இவ்விசயத்தில் ஈடுபட்டாரா என்பது நோக்கத் தக்கது. மருத்துவமனைக்கு வருபவர், தங்களது உடல்நிலை, சிகிச்சை, எந்த டாக்டரைப் பார்ப்பது, எங்கு செல்வது என்று தான் கவனமாக இருப்பார்களே தவிர மற்றவர்களைக் கவனித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அது மாதிரி பிரச்சினை செய்யத்தான் ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள் என்றால், எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். நோயாளியுடன் தான் வரவேண்டும் என்பதில்லை. நக்கீரன், “பெண் மருத்துவரிடம் ஹிஜாப்பை கழட்டச் சொல்லி வாக்குவாதம்; பாஜக பிரமுகர் கைது” என்றும், தினமணி, “ஹிஜாபை கழற்றச்சொல்லி பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகி” என்றும் தலைப்பிட்டு செய்திகள் போட்டுள்ளன. இரண்டையும் இடதுசாரி-வலதுசாரி, பார்ப்பன எதிர்ப்பு-ஆதரவு, திமுக-அதிமுக, இந்துவிரோதம்-ஆதரவு என்று எப்படியெல்லாம் வகைப் படுத்தினாலும், ஊடகக்காரர்கள் தாங்கள் இதைத்தான் சொல்லவேண்டும் என்று தீர்மானமாக இருக்கிறார்கள். அதாவது, பிஜேபி மத-அரசியல் மூலம் தமிழகத்தில் காலூன்ற முயல்கிறது, அதற்கான வேலைகளை செய்து வருகின்றது என்பதை எடுத்துக் காட்டப் படுகிறது. பிஜேபிகாரர்களுக்கு அந்த அளவுக்கு நெளிவு-சுளிவு எல்லாம் தெரியாது, வெளிப்படையாக இந்துத்துவம், “பாரத் மாதா கி ஜே” என்று கிளம்பி விடுவார்கள். ஒரு சமய வேகும், இன்னொரு சமயத்தில் வேகாது.

25-05-2023 புவனேஸ்வர் ராம் கைது, ஆர்பாட்டம் முதலியன: மருத்துவர் நோயாளி பற்றியோ, சிகிச்சை பற்றியோ கவலைப் படாமல், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு சுவாகவாசமாக செல்போன் பார்த்துக் கொண்டிருப்பதும் தெரிகிறது. ஒரு மருத்துவர் போலவே அவர் நடந்து கொள்ளவில்லை. ஸ்டெதாஸ்கோப் கூட காணப்படவில்லை. அவருக்கு தான் ஒரு முஸ்லிம், ஹிஜாப் அணிந்து கொள்வேன் என்ற தோரணையில் பேசி, கத்தி, ஒருமையில் “போ” என்று கத்துவதும் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, புவனேஸ்வர் ராமை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான மாரிமுத்து தலைமையில் 25-05-2023 அன்று முன்தினம் சாலை மறியல் நடந்தது. இந்நிலையில், மருத்துவர் ஜன்னத் அளித்த புகாரின்பேரில், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மதம் தொடர்பான குற்றம் மற்றும் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் புவனேஸ்வர் ராம் மீது கீழையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்[6]. கம்யூனிஸ்டுகள் அவரை கைது செய்ய வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்தனர்[7]. இந்நிலையில், புவனேஸ்வர் ராம் மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் திருப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் 26-05-2023 அன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அதிகாரிக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்[8]. இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்று தெரியவில்லை. புவனேஸ்வர் ராம் கைது செய்யப் பட்டார், படவில்லை என்று முரண்பட்ட செய்திகளும் வந்துள்ளன[9]. இந்நிலையில் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புவனேஸ்வர்ராம் உறவினரான சுப்ரமணியன் நேற்று காலை உயிரிழந்தார்[10].

25-05-2023 அன்று மருத்துவமனையில் நோயாளி இறப்பு: நோயாளி சுப்ரமணியன் எப்படி, எவ்வாறு, ஏன் உயிரிழந்தார் என்பது பற்றி யாரும் கவலப் பட்டதாகத் தெரியவில்லை. நடு ராத்திரியில் வந்த போது, உரிய சிகிச்சை அளிக்கப் பட்டதா, இல்லையா, யார் சிகிச்சை அளித்தனர் என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், இருவரும் வீடியோ எடுத்தனர், இணைதளத்தில் போட்டனர், பரவியது எனூதான் செய்திகள் போட்டுள்ளனர். இதனிடையே போலீஸாரால் புவனேஸ்வராம் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதை தொடர்ந்து, ஊர்வலத்தில் பங்கேற்ற பாஜகவினர் சடலத்தை சாலையில் வைத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்[11]. மேலும் அரசு மருத்துவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும் பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட புவனேஸ்வர்ராமை உடனடியாக விடுவிக்க கோரியும் வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்[12]. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகுமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்[13].

© வேதபிரகாஷ்

30-05-2023


[1] தமிழ்.இந்து, அரசு பெண் மருத்துவர் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்த பாஜக பிரமுகர் மீது வழக்குப் பதிவு, செய்திப்பிரிவு, Last Updated : 27 May, 2023 06:05 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/997226-government-female-doctor-hijab-issue.html

[3] விகடன், `ஏன் ஹிஜாப் போட்டுருக்கீங்க?’ – அரசு பெண் மருத்துவரிடம் பாஜக பிரமுகர் வாக்குவாதம்; போலீஸ் விசாரணை, Prasanna Venkatesh B  Published: 26 May 2023 1 PM; Updated: 26 May 2023 1 PM.

[4] https://www.vikatan.com/government-and-politics/politics/why-did-the-doctor-wear-hijab-bjp-leaders-controversy

[5] நக்கீரன், பெண் மருத்துவரிடம் ஹிஜாப்பை கழட்டச் சொல்லி வாக்குவாதம்; பாஜக பிரமுகர் கைது, Published on 26/05/2023 (18:56) | Edited on 26/05/2023 (19:04)

https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/argument-female-doctor-asking-her-take-her-hijab-bjp-leader-arrested

தினமணி, ஹிஜாபை கழற்றச்சொல்லி பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகி!

By DIN  |   Published On : 26th May 2023 09:25 AM  |   Last Updated : 26th May 2023 10:31 AM

https://www.dinamani.com/tamilnadu/2023/may/26/bjp-executive-arguing-with-female-doctor-wearing-hijab-4011902.html

[6] இ.டிவி.பாரத், ஹிஜாப் எதற்கு? – பெண் மருத்துவரிடம் ரகளையில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் மீது வழக்கு.., Published: May 26, 2023, 2:48 PM

[7] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/nagapattinam/bjp-worker-threatened-thirupoondi-phc-islamic-woman-doctor-for-wearing-hijab/tamil-nadu20230526144840518518816

[8] இ.டிவி.பாரத், ஹிஜாப் எதற்கு? – பெண் மருத்துவரிடம் ரகளையில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் மீது வழக்கு.., Published: May 26, 2023, 2:48 PM

[9] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/nagapattinam/bjp-worker-threatened-thirupoondi-phc-islamic-woman-doctor-for-wearing-hijab/tamil-nadu20230526144840518518816

[10] தந்தி டிவி, மருத்துவரின் ஹிஜாப் குறித்து கேள்வி கேட்ட பாஜக நிர்வாகிபரிதாபமாக பிரிந்த உயிர்... By தந்தி டிவி 26 மே 2023 8:55 PM

[11] https://www.thanthitv.com/latest-news/bjp-executive-questioned-about-doctors-hijab-tragic-loss-of-life-188742

[12] சமயம்.காம், நாகப்பட்டினம் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்; ஹிஜாப் விவகாரத்தில் பாஜக நிர்வாகி கைது!, Madhumitha M | Samayam Tamil | Updated: 27 May 2023, 11:30 am

[13]  https://tamil.samayam.com/latest-news/nagapattinam/nagapattinam-thirupundi-government-primary-health-center-doctor-wearing-hijab-issue/articleshow/100544706.cms

தி கேரளா ஸ்டோரி – திரைப் படத்திற்கு எதிர்ப்பு-தடை, உச்சநீதி மன்றத்தில் வழக்கு, மாநிலங்களின் பதில், 100 கோடிகளைத் தாண்டிய வசூல்! (4)

இடப்பட்டது மே 17, 2023 by vedaprakash
பிரிவுகள்: 786, ஃபிதாயீன், அசிங்கப்படுத்திய முகமதியர், அடிப்படைவாதம், அடிப்பது, அடிமை, அடிமைத்தனம், அடையாளம், அமைதி என்றால் இஸ்லாமா, அரசாங்கத்தை மிரட்டல், அரசியல்வாதிகள், ஆயுதப்படை, இந்தி ஜிஹாதி, இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியப் பிரச்சினை, இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்து காதலனும் முகமதிய காதலியும், இந்து காதலியும் முகமதிய காதலனும்!, இந்து-முஸ்லிம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமியர்களை கொல்லும் முறை, இஸ்லாமிஸ்ட், இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, எச்சரிக்கை, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐ.டி.தீவிரவாதி, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசில், ஐசிஸ், ஐஸில், கல்யாணம் செய்தல், கல்லடி ஜிஹாத், கள்ளக் காதல், கள்ளக்காதல், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காதல் ஜிஹாத், காதல் புனித போர்!, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு, கேரள ஜிஹாதி, கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், கேரள போலீஸார், கேரள முஸ்லீம் சேவை சங்கம், கேரளா, சகிப்பு, சகிப்புத் தனம்

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , ,

தி கேரளா ஸ்டோரி‘ – திரைப்படத்திற்கு எதிர்ப்புதடை, உச்சநீதிமன்றத்தில் வழக்கு, மாநிலங்களின் பதில், 100 கோடிகளைத் தாண்டிய வசூல்! (4)

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு-தடை: விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘தி கேரளா ஸ்டோரி’. கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது[1]. இந்த எண்ணிக்கை உயர்வு படுத்தி காட்டப் பட்டுள்ளது என்று எதிர்த்ததால், மாற்றப் பட்டது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி திரையுலகில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியது[2], என்கிறது ஊடகங்கள்.  உண்மையில், முஸ்லிம் அமைப்பினர் எதிர்த்து போராட்டம் நடத்தினர். இப்படம் குறித்து வாதம் விவாதங்கள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடந்து வந்தன. அதில் எவ்வாறு இந்திய பெண்கள் ஏமாற்றப் பட்டு, மதம் மாற்றப் பட்டு, ஐசிஸ் தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதனை காட்டுவதால், முஸ்லிம் அமைப்பினர் கடுமையாக எதிர்த்தனர்.

மேற்கு வங்காளம் தடைஉச்சநீதிமன்றத்தில் வழக்கு: முஸ்லிம் ஓட்டுகளை நம்பி அரசியல் செய்யும் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு இருந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்தை தெரியப்படுத்தி வந்தனர். இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் வன்முறை ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடலை உடனடியாக நிறுத்த முதல்வா் மம்தா பானா்ஜி கடந்த மே 8-ஆம் தேதி உத்தரவிட்டார். இதனால், தமக்கு பாதிப்பு ஏற்படும் என்று உணர்ந்த, இத்திரைப்பட தயாரிப்பாளா்கள் வழக்குத் தொடர்ந்தனர். மேற்கு வங்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடலுக்கு அரசு தடை விதித்த நிலையில், தமிழகத்தில் அதிகாரபூா்வமற்ற தடை உள்ளதாக குற்றம்சாட்டி, இத்திரைப்பட தயாரிப்பாளா்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் இரு மாநில அரசும் விளக்கம் அளிக்குமாறு கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியது.

பத்து நாட்களில் 100 கோடிகளைத் தாண்டிய வசூல்: எதிர்ப்புகள் எதுவும் படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் படம் வெளியான நாளிலிருந்து இன்று வரை வசூல் ஏறுமுகமாக தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த பத்து நாட்களில் கேரளா ஸ்டோரி வசூலித்த மொத்த கலெக்சன் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அதாவது 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை 112 கோடிகளை வசூலித்திருக்கிறது. அப்படி பார்த்தால் இது பட்ஜெட்டை தாண்டிய பல மடங்கு வசூல் தான். மேலும் பாலிவுட் திரையுலகில் இந்த வருடம் அதிகபட்சமாக வசூல் பெற்ற படங்களில் இப்படமும் இணைந்து இருக்கிறது. அதாவது 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை 112 கோடிகளை வசூலித்திருக்கிறது. அப்படி பார்த்தால் இது பட்ஜெட்டை தாண்டிய பல மடங்கு வசூல் தான். மேலும் பாலிவுட் திரையுலகில் இந்த வருடம் அதிகபட்சமாக வசூல் பெற்ற படங்களில் இப்படமும் இணைந்து இருக்கிறது[3].

குறைந்த பட்ஜெட்டில் எதிர்த்தாலும் அதிக வசூல் செய்துள்ல படமாக இருக்கிறது: மேலும் அடுத்தடுத்து பல திரைப்படங்களின் தோல்வி ஹிந்தி திரையுலகை கொஞ்சம் அசைத்து தான் பார்த்தது. அதை தூக்கி நிறுத்தும் படியாக இருந்தது ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படம். அந்த வகையில் தி கேரளா ஸ்டோரி நெகட்டிவ் விமர்சனங்களை அடித்து நொறுக்கி வசூலில் மாஸ் காட்டி இருக்கிறது[4]. வெளியான 9 நாட்களில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது[5]. 13-05-2023 அன்று ஒரே நாளில் மட்டும் இப்படம் ரூ.19 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது[6].  வடமாநிலங்களில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு 37க்கும் மேற்பட்ட நாடுகளில் மே 12ஆம் தேதி இப்படம் வெளியானது. இந்த வசூலுக்கு முதல் காரணமே படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்புத்தான் என்கிறார்கள்[7]. படத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆர்வம் ஏற்பட்டு பலரும் பார்த்ததே வசூலுக்கு வழி வகுத்தது[8]. இல்லாவிட்டால் படம் வந்ததே தெரியாமல் போயிருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படியும் சில ஊடகங்களின் வெளிப்பாடு இருக்கிறது.

தமிழகத்தின் பதில்: தமிழ்நாட்டிலும் முதல் நாள் 05-05-2023 வெளியிட்டு மறுநாள் தியேட்டகளில் படம் ஓடவில்லை. ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள நேரடி, மறைமுக தடையை எதிர்த்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, தடை விதித்தது குறித்து மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டார். இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது[9]. அதில், இந்த படத்திற்கு தடை விதிக்கவில்லை என்றும் திரையரங்கிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது[10]. படத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது சென்னை மற்றும் கோவையில் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது[11]. ஆனால், திரைப்படம் எதிர்கொண்ட விமர்சனம் அறிமுகமில்லாதவர்களின் நடிப்பு போதுமான வரவேற்பின்மை ஆகியவற்றால் திரையரங்க உரிமையாளர்களே கடந்த மே 7-ஆம் தேதி முதல் திரையிடுவதை நிறுத்திக் கொண்டதாக தோன்றுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது[12]. பார்வையாளர்கள் குறைவாக இருந்ததால் படத்தை திரையிடுவதை திரையரங்க உரிமையாளர்களே நிறுத்திவிட்டனர்[13]. பிறகு, மற்ற இடங்களில் ஓடி எப்படி ரூ.100 கோடி வசூல் கிடைத்தது என்பது கவனிக்கத் தக்கது. திரையரங்குகளுக்கு பாதுகாப்பு மட்டுமே தர முடியுமே தவிர, பார்வையாளர்களை அதிகரிக்க அரசால் எதுவும் செய்ய முடியாது[14]. அதாவது பார்வையாளர்களைக் கூட்டி வரமுடியாது என்றெல்லாம் விளக்கம் கொடுத்துள்ளதும் விசித்திரமாக உள்ளது. கலாட்டா செய்வார்கள், அடிப்பார்கள், கலவரங்கள் நடக்கும், குண்டுகள் கூட வெடிக்கும் போன்ற அச்சம் தாம் பொது மக்களை தியேட்டர்களுக்குச் செல்ல விடமால் தடுத்தது எனலாம்.

19 திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு 25 டிஎஸ்பிக்கள் தலைமையில் 965 காவலர்கள் பாதுகாப்பு: 19 திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு 25 டிஎஸ்பிக்கள் தலைமையில் 965 காவலர்கள் பாதுகாப்பு அளித்துள்ளனர்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது[15]. அந்த அளவுக்கு பெரிய போலீஸ் அதிகாரிகள் கொடுக்கும் அளவுக்கு முஸ்லிம்கள் மிரட்டிக் கொண்டிருந்தனர் போலும். மேலும், விளம்பரம் தேடும் நோக்கில் மனுதாரர் மனுதாக்கல் செய்துள்ளதால் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது[16]. அப்படியென்றால், இத்தகைய விளம்பரத்திற்கு கூட்டம் வர வேண்டியிருக்குமே, ஆனால், வரவில்லை. இதிலிருந்து, தியேட்டர் முதலாளிகள், தங்களது தியேட்டர்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று நிறுத்தியுள்ளனர் என்று தெரிகிறது. அத்தகைய போலீஸ் பாதுகாப்பு, விளம்பரம், ரூ 100 கோடி வசூல் என்றால், மறுபடியும் தாராளமாக திரையிட ஆரம்பிக்கலாமே?

© வேதபிரகாஷ்

17-05-2023


[1] மாலைமலர், ‘தி கேரளா ஸ்டோரிதிரைப்படத்துக்கு வரவேற்பு இல்லை.. உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில், By Nagalekshmi 16 மே 2023 12:21 PM.

[2] https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-the-kerala-story-case-update-609713?infinitescroll=1

[3] சினிமா.பேட்டை, 10 நாளில் தி கேரளா ஸ்டோரி செய்த சாதனை.. நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் மிரட்டிய வசூல் ரிப்போர்ட்,  By Anamika, Published on May 14, 2023

[4] https://www.cinemapettai.com/the-collection-record-of-the-kerala-story-in-10-days

[5] தமிழ்.இந்து, ரூ.100 கோடி வசூலைக் கடந்ததுதி கேரளா ஸ்டோரி’ – நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.19 கோடி, செய்திப்பிரிவு, Published : 14 May 2023 03:33 PM, Last Updated : 14 May 2023 03:33 PM.

[6] https://www.hindutamil.in/news/cinema/bollywood/989990-the-kerala-story-enters-rs-100-crore-club.html

[7] மாலைமலர், ரூ.100 கோடி வசூல் செய்ததி கேரளா ஸ்டோரிதிரைப்படம்,By Maalaimalar, 15 மே 2023 2:30 PM

[8] https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-the-kerala-story-collected-rs100-crores-609380

[9] தமிழ்.வெப்.துனியா, நாங்க தடை பண்ணல.. படத்தை யாரும் பாக்கவே இல்ல! – The Kerala Story வழக்கில் தமிழக அரசு பதில்!, Written By Prasanth Karthick, Last Modified, செவ்வாய், 16 மே 2023 (12:15 IST).

[10] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/tamilnadu-govt-said-they-not-ban-kerala-story-in-tamilnadu-123051600041_1.html

[11] தினமலர், தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரவேற்பு இல்லை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில், மாற்றம் செய்த நாள்: மே 16,2023 12:23

[12] தமிழ்.ஒன்.இந்தியா, படம் பார்க்க நாங்களா ஆட்களை கூட்டி வர முடியும்.. தி கேரளா ஸ்டோரி வழக்கில் தமிழக அரசு பதில், By Vigneshkumar Updated: Tuesday, May 16, 2023, 17:38 [IST]

[13] https://tamil.oneindia.com/news/delhi/what-tamilnadu-govt-says-about-the-kerala-story-not-being-screened-in-tamilnadu-512056.html

[14]  https://m.dinamalar.com/detail.php?id=3322142

[15] தினமணி, தி கேரளா ஸ்டோரி திரையிடல் நிறுத்தப்பட்டது ஏன்? தமிழக அரசு பதில், By DIN  |   Published On : 16th May 2023 02:50 PM  |   Last Updated : 16th May 2023 02:50 PM

[16] https://www.dinamani.com/india/2023/may/16/why-the-screening-of-the-kerala-story-has-been-stopped-4006736.html

தி கேரளா ஸ்டோரி – நீதிமன்ற அனுமதியுடன், போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு நாட்கள் ஓடியது, மூன்றாம் நாள் தடை விதிக்கப் பட்டது! (3)

இடப்பட்டது மே 7, 2023 by vedaprakash
பிரிவுகள்: 786, ஃபத்வா, ஃபிதாயீன், அடி வைத்தியம், அடி வைத்திய்ம், அடித்து சித்ரவதை, அடிப்படைவாதம், அடிமைத்தனம், அடையாளம், அமைதி, அமைதி என்றால் இஸ்லாமா, அரேபியத்துவம், ஆர்.எஸ்.எஸ், ஆர்பாட்டம், இணைதள ஜிஹாத், இந்தி ஜிஹாதி, இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதம், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியப் பிரச்சினை, இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்து காதலனும் முகமதிய காதலியும், இந்து காதலியும் முகமதிய காதலனும்!, இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்து-முஸ்லிம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐ.டி.தீவிரவாதி, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐக்கிய ஜிஹாத் கவுன்சில், ஐசில், ஐசிஸ், ஐமுமுக, ஐஸில், கம்யூனிசம், கம்யூனிஸம், கருணை, கர்ப்பமாக்கல், கர்ப்பம், கற்பழிப்பாளி, கற்பழிப்பு, கற்பழிப்பு ஜிஹாத், கற்பு, கற்ப்பழிப்பாளி, கல்யாணம், கல்யாணம் செய்தல், கல்லறை, கேரள ஜிஹாதி, கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், கேரள போலீஸார், கேரள முஸ்லீம் சேவை சங்கம், கேரளா, சட்டம், சட்டம் மீறல், சட்டவிரோதம், ஜமாஅத், ஜமாஅத்தார், ஜமாத், ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தமிழக அரசு, தமிழக அரசு வேலை, தமிழகத்து ஜிஹாதி, தமிழகத்து தீவிரவாதி, தமிழ் ஜிஹாதி, தமிழ் முஸ்லிம், தமிழ்நாடு தவ்ஹீத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத், திப்பு, திப்பு சமாதி, திப்பு சுல்தான், திப்பு ஜெயந்தி, திப்புவின் கத்தி, திமுக, தியாகப் பலி, திரி, திரிணமூல், துருக்கன், துருக்கர், துருக்கி, நேபாளம், நேயம், நேரம், பரிசோதனை, பர்கா, பர்கா போராட்டம், பர்தா, பர்தா அணிவது, பர்தா காக்கும் உடையா?, பர்தா மத-அடையாளமா?, மதமா மணமா?, மதமா மனமா மணமா?, மதமாறிய பெண்கள், மதமாற்றம், மதம், மதம் மாற்றம், மதரசா, மதவிரோதி, மதவெறி, முஸ்லீம் தன்மை, முஸ்லீம் பெண்கள் தனியாக இருப்பது, லவ் ஜிஹாதி, லவ் ஜிஹாத், லவ்ஜிஹாத்

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , ,

தி கேரளா ஸ்டோரிநீதிமன்ற அனுமதியுடன், போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு நாட்கள் ஓடியது, மூன்றாம் நாள் தடை விதிக்கப் பட்டது! (3)

கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் எதிர்ப்பு: இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி, கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அரசியல் கூட்டணி இதிலும் வேலை செய்கிறது போலும். இந்நிலையில், இந்த படம் தமிழக திரையரங்குகளில் கடந்த மே5-ந்தேதி வெளியானது. இயக்குநர் சுதீப்தோ சென் இயக்கத்தில், விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் தி கேரளா ஸ்டோரி என்ற பெயரில் உருவான திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது. நடிகைகள் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டோர் முக்கிய வேடமேற்று நடித்து உள்ள இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருந்தன என்று ஊடகங்களே கூறுவது முன்னரே தீர்மானிக்கப் பட்ட விசயம் போல தோன்றுகிறது. கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் அதன்பின் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தங்களை இணைத்து கொண்டனர் என்றும் காட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

05-05-2023 – தமிழக நீதிமன்றத்தில் வழக்கு, தள்ளுபடி, திரைப்படம் வெளியீடு, ஆர்பாட்டம்:  தமிழகத்தில் இந்த படம் திரையிட அனுமதிக்க கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது[1]. ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னையில் அண்ணாநகர், அமைந்தகரை, ராயப்பேட்டை, வேளச்சேரி, வடபழனி ஆகிய இடங்களில் உள்ள வணிக வளாகங்களில் இயங்கும் திரையரங்குகளிலும், மதுரவாயலில் உள்ள ஒரு பிரபல திரையரங்கிலும் என 7 இடங்களில் இந்த படம் வெளியானது[2].  இதில், மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டன[3].  ஏற்கனவே இந்த படத்தின் டீசருக்கு இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின[4]. இதனால், இந்த படத்துக்கு தமிழகத்தில் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று மாநில உளவுத்துறை அரசுக்கு பரிந்துரை வழங்கி இருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடியானதால் இந்த திரைப்படம் திட்டமிட்டப்படி திரைக்கு வந்தது.

06-05-2023 – பாதுகாப்பு காரணங்களுக்காக தென் தமிழகத்தில் இந்த படம் திரையிடப்படவில்லை. இந்த திரைப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்த திரைப்படம் வெளியான திரையரங்குகள் முன்பு போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.  ரசிகர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த திரைப்படத்திற்கு தடை கோரி சென்னையில் பல இடங்களில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று திரையரங்குகள் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

07-05-2023 சென்னையில் சீமான் ஆர்பாட்டம்: சென்னை அமைந்தகரையில் நடைபெறும் போராட்டத்தில் சீமான் பங்கேற்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வரும் என்ற நிலையில், அனுமதி எப்படி கொடுக்கப் பட்டது என்று தெரியவில்லை. சென்னையில் படம் தடை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் 4 திரையரங்குகள் அருகிலும், த.மு.மு.க. சார்பில் 2 திரையரங்குகள் அருகிலும், இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ஒரு திரையரங்கு அருகேயும் என 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  படத்துக்கு எதிராக இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள் போராட்ட அறிவிப்பால் சில தியேட்டர்களில் இந்த திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.  கோவையின் முக்கிய சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானபோது, இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டரை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர்[5]. அதாவது, முஸ்லிம்களும் சேர்ந்து கொண்டனர் என்பது தெரிகிறது. எனவே, இவர்களின் செக்யூலரிஸ வாதம், வேடம் முதலியவை பெரிய மோசடி என்றாகிறது. இருப்பினும் தமிழக மக்கள் பேச்சுக்களால், வசன-பேச்சுகளால் ஏமாந்து விடுகின்றனர்.

சீமான் எதிர்ப்புபோலீஸார் கைது: இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசும்போது, மதம் இருந்தால் போதும் என்று பா.ஜ.க. நினைக்கிறது[6]. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனநிலையை அவர்கள் உருவாக்குகிறார்கள் என குற்றச்சாட்டாக கூறினார்[7]. தொடர்ந்து அவர், ஒவ்வொரு தேர்தலின்போதும் சர்ச்சைகள் நிறைந்த படங்கள் திரையிடப்படுகின்றன[8]. கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தி கேரளா ஸ்டோரி படம் வெளிவந்து உள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்காக திப்பு என்ற படம் தயாராகி கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்[9]. அவரது கட்சியினர் திரையரங்கிற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்[10]. அவர்களை போலீசார் பிடித்து சென்றனர். படம் தடை செய்யப்பட வேண்டும் என கோரி, கொடி பிடித்தபடியும், கோஷம் எழுப்பியபடியும் இருந்தனர்[11]. திரையரங்கு உரிமையாளர்களிடமும் படம் வெளியிட வேண்டாம் என கேட்டு கொண்ட சீமான், மக்களையும் படம் பார்க்க செல்ல வேண்டாம் என கேட்டு கொண்டார்[12].  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படம் வெளியிடப்படாமல், அந்தந்த அரசுகள் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோளாக கேட்டு கொண்டார். சீமானை சூழ்ந்து முஸ்லிம் பெண்கள் நின்று கொண்டு தலையாட்டிக் கொண்டிருப்பதை, செய்தி-செனல்களில் பார்க்கலாம்.

தமிழக அரசு தடை: தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழகம் முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால், தமிழக திரையரங்குகளில் இன்று முதல் அந்த படம் திரையிடப்படாது என முடிவு செய்யப்பட்டு உள்ளதுலதாவது, இத்தகைய நிலைமையை எதிர்பார்த்துக் கொன்டிருந்தது போலும். சீமான் ஆர்பாட்டம் செய்தவுடன், அந்நிலைமை ஏற்பட்டவுடன், தமிழக அரசு அப்படத்தை தடை செய்ய துணிந்து விட்டது போலும். பிறகு, நீதிமன்ற தீர்ப்பு, போலீஸ் அதிகாரி அறிவுரை, பாதுகாப்பு முதலியவவை ஒரே நாளில் என்னவாகும், என்னவாயிற்று என்று தெரியவில்லை. எனினும், பயங்கரவாத சதி திட்டங்களை பற்றிய விசயங்களை வெளிக்கொண்டு வந்ததற்காக, பிரதமர் மோடி இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேவேளையில், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இந்த படத்திற்கு மாநிலத்தில் வரி விலக்கும் அளித்து உள்ளார்.

© வேதபிரகாஷ்

07-05-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், The Kerala Story: தொடர் எதிர்ப்புகள்தமிழ்நாடு முழுவதும்தி கேரளா ஸ்டோரிபடத்தின் காட்சிகள் ரத்து..!, By: ராகேஷ் தாரா | Updated at : 07 May 2023 04:20 PM (IST); Published at : 07 May 2023 04:20 PM (IST)

[2] https://tamil.abplive.com/entertainment/the-kerala-story-movie-shows-cancelled-in-tamilnadu-due-to-several-oppositions-115793

[3] சமயம்.காம், தமிழ்நாட்டில்தி கேரளா ஸ்டோரிபடம் திரையிடப்படாதுபோராட்டம் வலுத்ததால் நடவடிக்கை!, Samayam Tamil | Updated: 7 May 2023, 5:48 pm

[4] https://tamil.samayam.com/latest-news/state-news/live-updates-and-latest-headlines-news-in-tamil-today-7-may-2023/liveblog/100045367.cms

[5] லங்காஶ்ரீ.காம், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழகத்திலுள்ள திரையரங்குகளில் இன்று முதல் தடை, By Sibi, Tamil nadu, May 07, 2023, 5.20 PM.

[6] https://news.lankasri.com/article/the-kerala-story-ban-tamil-nadu-theatre-from-today-1683458088

ஐபிசி.தமிழ், இன்று முதல் தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது ,  By Irumporai, May 7, 2023

https://ibctamilnadu.com/article/kerala-story-will-not-be-screened-from-today-1683427611

[7] தினத்தந்தி, தி கேரளா ஸ்டோரி படம்; தமிழக திரையரங்குகளில் இன்று முதல் தடை, தினத்தந்தி மே 7, 2:57 pm (Updated: மே 7, 3:42 pm).

[8] https://www.dailythanthi.com/News/State/the-kerala-story-movie-ban-in-tamil-nadu-theaters-from-today-959137

[9] தமிழ்.எக்ஸாம், தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரிதிரைப்படத்திற்கு தடைகாட்சிகளை ரத்து செய்த மல்டிப்பிளக்ஸ் திரையரங்குகள்!, By Deepika -May 7, 2023

[10] https://tamil.examsdaily.in/the-kerala-story-movie-banned-in-tamil-nadu-update-on-may-7-2023/

[11] ஐபிசி.தமிழ், இன்று முதல் தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது ,  By Irumporai, May 7, 2023

[12] https://ibctamilnadu.com/article/kerala-story-will-not-be-screened-from-today-1683427611

தி கேரளாஸ் டோரி, லவ்-ஜிஹாத் – காதல் புனிதப் போர் பற்றிய திரைப்படம் – வெளியீடு, எதிர்ப்பு-ஆதரவு ஏன்? (2)

இடப்பட்டது மே 7, 2023 by vedaprakash
பிரிவுகள்: காதலன், காதலி, காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி மதம் மாற்றூவது!, காதலில் போரா காதலன்-காதலி போரா?, காதல், காதல் ஜிஹாத், காதல் புனித போர்!, காதல் மந்திரக் கட்டு, காதல் மந்திரக் கட்டை அவிழ்த்தல், லவ் ஜிஹாதி, லவ் ஜிஹாத், லவ்ஜிஹாத், லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-ஜாங்வி அல்-ஆல்மி, லஸ்கர்-இ-டொய்பா, லீலைகள், வசூல்

தி கேரளா ஸ்டோரிலவ்-ஜிஹாத் – காதல் புனிதப் போர் பற்றிய திரைப்படம்வெளியீடு, எதிர்ப்புஆதரவு ஏன்? (2)

கோயம்புத்தூரில் முஸ்லிம் அமைப்புகள் ஆர்பாட்டம்: ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் கோவையில் வணிக வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர்[1]. போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு – பரபரப்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக கைது செய்த போலீசார்[2]. இதில் மஜகவினரோடு ஜமாத் நிர்வாகிகள், தமுமுக, SDPI நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்[3]. தமிழக அரசின் அறிவிப்பினைத் தொடர்ந்து மஜக ஜனநாயக வழியில் போராட சகல தரப்புக்கும் அழைப்பு விடுத்தது[4]. இதனைத் தொடர்ந்து ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படத்திற்கு எதிரான முதல் கள எதிர்ப்பை மஜக பதிவு செய்துள்ளது.

இப்படத்தில் விவரிக்கப் படும் விசயங்கள் என்ன?: இதன் பின்னணியில், ஒரு இஸ்லாமிய மாணவிக்கு தம்முடன் தங்கியிருப்பவர்களை மூளைச்சலவை செய்யும் ASSIGNMENT கொடுக்கப்படுகிறது. அவரோடு 4 இஸ்லாமிய இளைஞர்களும் இணைந்து கொள்கின்றனர். பிற மதக் கடவுளர்களை இஸ்லாமிய மாணவி விமர்சிக்கும் காட்சிகளும், ஹிஜாப் அணியும் பெண்களுக்கு எந்த ஆபத்தும் வராது என அவர் கூறும் வசனங்களும் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் இஸ்லாத்துக்கு மாறி அந்த மதத்தைச் சேர்ந்த இளைஞர்களை திருமணம் செய்துகொள்வது போன்றும், அதன்பிறகு அவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்கப்படுவது போன்றும் காட்டப்படுகிறது. இதுபோன்ற விவகாரமான உள்ளடக்கத்தைக் கொண்ட இப்படத்தில், ‘பல உண்மைக் கதைகளால் உந்தப்பட்டு எடுக்கப்பட்ட படம்’ என்ற வாசகமும் இருக்கிறது. இது மேலும் அனலைக் கூட்டியுள்ளது.

எதிர்ப்பு தெரிவிக்கும் இஸ்லாமிய அமைப்புகள்!: இஸ்லாமிய அமைப்புகள் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளன. “சங் பரிவார் தொழிற்சாலையின் மிகப்பெரிய பொய் ‘THE கேரளா ஸ்டோரி’ திரைப்படம்” என கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு மேலும், “படத்தில் கூறப்பட்டிருப்பது உண்மை என்றால், கேரளாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பெண்களின் அடையாளத்தை ஆதாரத்துடன் மெய்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஒரு கோடி ரூபாய் பரிசளிக்கிறோம்” என்றும் அறிவித்துள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் இவ்விவகாரத்தில் தலையிட்டு, “இதுபோன்று எதுவும் கேரளாவில் நடக்கவில்லை. மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கேரளாவில் வெறுப்பு, பிரிவினைவாதத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இந்தப் படத்தை எடுத்துள்ளர்” என்று கூறி சங் பரிவாரை கடுமையாக விமர்சித்தார்.

படத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்: . கேரள உயர்நீதிமன்றத்தில் காரசார விவாதம்!’தி கேரளா ஸ்டோரி’ படத்தை வெளியிட தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மத்திய தணிக்கை குழு சான்றிதழ் அளித்திருப்பதால் இந்த படத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறினர் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று வாதம் நடந்தது. இப்படத்துக்கு எதிராக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ”படத்தின் ட்ரெய்லரில் வரும் உரையாடல்கள் வெறுப்புணர்வை தூண்டுவதற்காக சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படம் அப்பாவி மக்களின் மனதை காயப்படுத்தி உள்ளது. இது கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கலாம். இந்தப் படம் எவ்வளவு ஆபத்தானது என்பதை அப்படத்தின்  ட்ரெய்லரே உணர்த்துகிறது” என்றார். ”படம் கற்பனையே தவிர வரலாற்றுப் படம் அல்ல” – நீதிபதி அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ட்ரெய்லரில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கும் எதிராக எந்த கருத்தும் இடம்பெறவில்லை என்றார். அதற்குப் பதிலளித்த துஷ்யந்த் தவே, முழுப் படத்தையும் பார்த்தால் புரியும் என்றார். அதற்கு நீதிபதி, தணிக்கை வாரியம் சர்ச்சைக்குரிய பல காட்சிகளை நீக்கிவிட்டதே என்றும் மேலும் இந்தப் படம் கற்பனையே தவிர வரலாற்றுப் படம் இல்லை எனவும் எடுத்துரைத்தார். அதற்கு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, தணிக்கை வாரியத்தின் முடிவில் தலையிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்றும் புனைகதை என்றாலும் சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவதாக இப்படம் அமைந்துள்ளது எனவும் வாதிட்டார்.

சில மாறுதல்களுடன் நீதிமன்றம் திரையிட அனுமதி: அதற்கு நீதிபதி, இந்து சன்யாசிகளை கடத்தல்காரர்களாகவும் பாலியல் வன்முறை செய்பவர்களாகவும் சித்தரிக்கப்பட்ட பல திரைப்படங்கள் இந்தி மற்றும் மலையாளத்தில் வெளிவந்து உள்ளன. அப்போதெல்லாம் யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை.   ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் மதத்தின் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கப்படவில்லை. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது என்று நீதிபதி குறிப்பிட்டார்.   படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரவி கடம், ‘இது உண்மைக் கதைகளால் ஈர்க்கப்பட்ட புனைகதைஎன்று நாங்கள் டிஸ்கிளைமரில் குறிப்பிட்டுள்ளோம் என்றும் படத்தின் டிரெய்லருக்கு தணிக்கை வாரிய சான்றிதழ் தேவையில்லை,” எனவும் வாதிட்டார். மேலும் அவர், ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள ‘கேரளத்தில் உள்ள 32,000 பெண்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளனர்’ என்ற கருத்து நீக்கப்படும் என படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் உறுதி அளித்தார். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட கேரள உயர்நீதிமன்றம், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என உத்தரவிட்டது.

தேர்தல் பிரச்சாரத்தில் மோடி இப்படத்தைக் குறிப்பிட்டது: ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்து கர்நாடகாவின் பெல்லாரியில் நடைபெற்ற பரப்புரையின் போது பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்[5]. பிரதமர் பேசுகையில்[6], “தீவிரவாதம் எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதை தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளிப்படுத்துகிறது. இந்த திரைப்படத்தைத்தான் தடை செய்யவேண்டும் என காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது,” எனத் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்[7].மேலும், “இந்த திரைப்படம் கேரளாவை சேர்ந்த பெண்கள் எப்படி ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாதங்களில் சேர ஈர்க்கப்படுகிறார்கள்? பின்னர் அவர்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் போன்றவை நடைபெறுகின்றன. இதனால் அவர்கள் வாழ்க்கை எவ்வாறு பாழாகிறது என்பது போன்ற பல்வேறு விஷயங்கள் படத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சி தீவிரவாத ஆதரவாளர்களுக்கு துணைபோகிறது,” என்று பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார்[8].

உண்மையான செக்யூலரிஸ்டுகள்கிறிஸ்துவர்கள்இந்துக்கள் ஒன்று சேர்ந்தால், தேர்தல் கணக்கு மாறுமா?: கவனமாக இப்பிரச்சினையை ஆராய்ந்தால், அரசியலாக்க முயன்ற நிலை, திரைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. கேரள அரசியலைப் பொறுத்த வரையில் கம்யூனிஸ-செக்யூலரிஸ சித்தாந்திகள் இந்துக்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை, ஏனெனில், அவர்களது ஓட்டுகளால் யாரும் ஆட்சிக்கு வந்து விட முடியாது. கிறிஸ்துவ-முஸ்லிம் ஓட்டுகளை வாங்கினால் தான் கனிசமான சீட்டுகள் கிடைக்கும். இவர்கள் பிரியும் நிலையில், மற்ற வகையறாக்கள் கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் கோஷ்டிகளுடன் இணைந்தாக வேண்டும். கம்யூனிஸ-செக்யூலரிஸ சித்தாந்திகள் கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் கோஷ்டிகளுடன் இணைந்துள்ளனர், இணைய தயாராக உள்ளனர். ஆனால், அங்கு இந்துக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கூட செயல்படுவதில்லை. அந்நிலையில், பிஜேபிகாரர்கள் கிறிஸ்வர்களுடன் உரையாடல் வைத்துக் கொள்வது மற்றவர்களை அதிர்வடையச் செய்துள்ளது. ஒருவேளை உண்மையான செக்யூலரிஸ்டுகள்-கிறிஸ்துவர்கள்-இந்துக்கள் ஒன்று சேர்ந்தால், தேர்தல் கணக்கு மாறிவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

  1. தி கேரளா ஸ்டோரி பிரச்சினையை கவனமாக ஆராய்ந்தால், அதை அரசியலாக்க முயன்ற நிலை, திரைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது எனலாம்.
  • கேரள அரசியலைப் பொறுத்த வரையில் கம்யூனிஸ-செக்யூலரிஸ சித்தாந்திகள் இந்துக்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை,
  • ஹிந்துக்கள் 55%, முஸ்லிம் – 27%, கிறிஸ்துவர் – 18% என்றுள்ள நிலையில், யாரும் இந்து ஓட்டுவங்கியை நினைத்துக் கூட பார்க்கமாட்டார்கள்!
  • ஏனெனில், அவர்களது ஓட்டுகளால் யாரும் ஆட்சிக்கு வந்து விட முடியாது. கிறிஸ்துவ-முஸ்லிம்களிடம் தான் கனிசமான சீட்டுகள் கிடைக்கும்.
  • ஹிந்துக்கள்கள் பிரியும் நிலையில், மற்ற வகையறாக்கள் கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் கோஷ்டிகளுடன் இணைந்தாக வேண்டும்.
  • கம்யூனிஸ-செக்யூலரிஸ சித்தாந்திகள் கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் கோஷ்டிகளுடன் இணைந்துள்ளனர், இணைய தயாராக உள்ளனர்.
  • ஆனால், அங்கு ஹிந்துக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கூட செயல்படுவதில்லை. இதனால், ஹிந்துக்கள் ஓரங்கட்டப் பட்டுள்ளனர்!
  • அந்நிலையில், பிஜேபிகாரர்கள் கிறிஸ்வர்களுடன் உரையாடல் வைத்துக் கொள்வது மற்றவர்களை அதிர்வடையச் செய்துள்ளது.
  • ஒருவேளை உண்மையான செக்யூலரிஸ்டுகள்-கிறிஸ்துவர்கள்-இந்துக்கள் ஒன்று சேர்ந்தால், தேர்தல் கணக்கு மாறிவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
  1. இதனால் தான் ஜிஹாத் ஆதரிக்கப் படுகிறது, ஹிந்துக்களுக்கு எதிராக விரோதிகள் சேர்கின்றனர், எல்லைகளும் கடக்கின்றன!

© வேதபிரகாஷ்

05-05-2023


[1] தினத்தந்தி, தி கேரளா ஸ்டோரிதிரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.. கோவையில் பரபரப்பு, By தந்தி டிவி, 5 மே 2023 6:33 PM

[2] https://www.thanthitv.com/latest-news/protest-against-the-movie-the-kerala-story-commotion-in-coimbatore-184433

[3] நக்கீரன், தி கேரளா ஸ்டோரிவலுக்கும் எதிர்ப்புகள்; களத்தில் முதல் போராட்டம், Published on 05/05/2023 (18:21) | Edited on 05/05/2023 (19:32)

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kerala-story-continues-protests-first-struggle-field

[5] புதியதலைமுறை, தி கேரளா ஸ்டோரி‘ : அனல் பறக்கும் விவாதம்.. சூடுபிடிக்கும் போராட்டங்கள்.. களத்தில் இறங்கிய பிரதமர்!, , Justindurai S, Published on : 5 May, 2023, 3:21 pm.

[6] https://www.puthiyathalaimurai.com/india/kerala-high-court-refuses-to-stay-release-of-the-kerala-story

[7] தினமணி, தி கேரளா ஸ்டோரி: பிரதமர் மோடி கருத்து, By DIN  |   Published On : 05th May 2023 03:04 PM  |   Last Updated : 05th May 2023 03:04 PM

[8] https://www.dinamani.com/india/2023/may/05/pm-modi-opinion-about-the-kerala-story-movie-4001039.html

தி கேரளா ஸ்டோரி – லவ்-ஜிஹாத் பற்றிய திரைப்படம் – வெளியீடு, எதிர்ப்பு-ஆதரவு ஏன்? (1)

இடப்பட்டது மே 7, 2023 by vedaprakash
பிரிவுகள்: ஃபத்வா, ஃபிதாயீன், அடிமைத்தனம், அடையாளம், அமைதி, அம்மாவுக்குத் தெரியாதா முஜாஹித்தீன்கள், அல் - உம்மா, அல் ஹதீஸ், அல்-முஜாஹித்தீன், அல்லா பெயர், அல்லாஹூ அக்பர், அல்லாஹ், அழகிய இளம் பெண்கள், ஆப்கானிஸ்தான், ஆயுதப்படை, இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதம், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இந்தியப் பிரச்சினை, இந்தியர்களை ஏமாற்றுதல், இந்து காதலனும் முகமதிய காதலியும், இந்து காதலியும் முகமதிய காதலனும்!, இந்து-முஸ்லிம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, என்ஐஏ அதிகாரி, ஐ.எஸ்.ஐ, ஐ.டி.தீவிரவாதி, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐக்கிய ஜிஹாத் கவுன்சில், ஐசில், ஐசிஸ், ஒருதலை காதல், ஒருவழி இந்து-முஸ்லீம் காதல் கதை!, ஒருவழி இந்து-முஸ்லீம் திருமணங்கள்!, கடத்தல், கன்னிக்கழிப்பு, கன்னித்தன்மை, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, கற்பழிப்பு ஜிஹாத், கற்பு, கற்ப்பழிப்பாளி, கல்யாணம் செய்தல், காதலன், காதலி, காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி மதம் மாற்றூவது!, காதலில் போரா காதலன்-காதலி போரா?, காதல், காதல் ஜிஹாத், காதல் புனித போர்!, காதல் மந்திரக் கட்டு, காதல் மந்திரக் கட்டை அவிழ்த்தல், கேரள ஜிஹாதி, கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், கேரள போலீஸார், கேரள முஸ்லீம் சேவை சங்கம், கேரளா, கொக்கோகப் பேச்சு, கொக்கோகம், ஜிஹாதி, ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, ல ஜிஹாதி, லவ் ஜிஹாதி, லவ் ஜிஹாத்

Tags: , , , , , , , , , , , , , , , , , , , ,

தி கேரளா ஸ்டோரிலவ்-ஜிஹாத் பற்றிய திரைப்படம்வெளியீடு, எதிர்ப்புஆதரவு ஏன்? (1)

கேரளாவில் லவ் ஜிஹாத் தெரிந்த விசயம் தான்: “லவ் ஜிஹாத்” பற்றி கேரளாவில் அரசாங்கம், போலீஸ் துறை, என்.ஐ.ஏ மற்றும் உளவுத்துறை என்று எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினை ஆகும். கிருத்துவ பெண்களும் பாதிக்கப் பட்டதால், பாதிரியார்களும் இதை எதிர்த்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். சிலர், ஐசிஸ் கொடுமைகளிலிருந்து தப்பியும் திரும்ப வந்துள்ளனர். ஆகவே, அதை மையமாக வைத்து வெளிவரும் திரைப்படத்தை எதிர்ப்பதில் என்ன பலன் வந்து விடப் போகிறது என்று தெரியவில்லை. இப்பொழுதெல்லாம், படம் நன்றாக ஓடவேண்டும், விளம்பரம் பெற வேண்டும் என்றால் இவ்வாறு எல்லாம் செய்வது வழக்கமாக உள்ளது. ஒருவேளை, இப்படம் ஓடி பலரின் கவனத்தைக் கவர்ந்தால், யாருக்கு லாபம் என்றும் யோசிக்கத்தக்கது. ஏனெனில், இக்காலத்தில் மறைமுகமாக, எதிர்மறை விளம்பரத்தையும் பெற சிலர் முயல்கின்றனர். அல்லது, அதன் மூலம், எங்களை எதிர்த்தால் இந்த நிலை தான் ஏற்படும் என்று எச்சரிக்கும் தொணியிலும் எதிர்த்து, அமைதியாகும் போக்கையும் கவனிக்கலாம்.

டிரைலருக்குப் பிறகு அமைதியானவர்கள், மறுபதியும் எதிர்ப்பில் ஈடுபட்டது: பலகட்ட எதிர்ப்புகள், சர்ச்சைகளைத் தொடர்ந்து ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மே.05, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நடிகைகள் அதா ஷர்மா, சோனியா பாலானி, யோகிதா பிஹானி, சித்தி இத்னானி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சுதிப்தோ சென் இந்தப் படத்தை  இயக்கியுள்ளார். விரீஷ் ஸ்ரீவல்சா – பிஷாக் ஜோதி இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் கட்டாய இஸ்லாமிய மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்படுவது போன்ற காட்சிகளுடன் இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியாகி கடும் விமர்சனங்களைப் பெறத் தொடங்கியது. இந்தப் படத்தை வெளியிட தடை கோரி கடும் எதிர்ப்புகள் வெளியாகின[1]. கேரள அரசு சார்பில் இந்தப் படத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[2].

மெத்தப் படித்தவர், கடவுளின் தேசத்தில் வாழ்பவர்கள் எதிர்க்கும் படமாக மாறியது: மெத்தப் படித்த கேரளாவில் இவ்வாறு நடப்பது விசித்திரமாக உள்ளது. ஆனால் இந்தப் படத்துக்கு தடை கோரிய வழக்கை விசாரிக்க ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை நாடுமாறும் தெரிவித்திருந்தது[3]. கடந்த 10 ஆண்டுகளில் 30 ஆயிரம் பெண்கள் இதுபோல் மதமாற்றம் செய்யப்பட்டு காணாமல் போனதாக ட்ரெய்லரில் முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்தது[4]. ஆனால் படத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி சரமாரியாக கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், எண்ணிக்கையை 3 என மாற்றினர்[5]. இருப்பினும் உண்மை எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். மார்க்சிஸம், கம்யூனிஸம், செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசும் சித்தாந்திகளிடமிருந்து தான், இத்தகைய எதிர்ப்புகள் கிளம்புவதை கவனிக்கலாம். ஒருபக்கம், கேரளாவில் இஅதைப் பற்றிய வழக்குகளே நிலுவையில் இருக்கும் பொழுது, அரசு எதிர்ப்பதன் காரணம் அறியப் பட வேண்டியதாக உள்ளது. அரசு தரப்பில் அத்தகைய நிலை கேரளாவில் இல்லை என்று உறுதியாக சொல்வதற்குப் பதிலாக, படத்தை எதிர்க்கும் போக்கு எதனைக் காட்டுகிறது என்பதனையும் கவனிக்க வேண்டும்.

தமிழகத்தில் எச்சரிக்கை, திரையரங்களுக்கு பாதுகாப்பு: மேலும், தமிழ்நாட்டில் இந்தப் படத்தை வெளியிட்டால் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சமூகத்திடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பும் என தமிழக உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது[6]. தமிழகத்தில் ஏகபட்ட குற்றங்கள் சமூகத்தை பாதித்து வரும் நிலையில், இது எப்படி அந்த அளவுக்குப் பெரிய முக்கியமான பிரச்சினையாகி,  தமிழக உளவுத்துறை ஆராய்ச்சி செய்யும் அளவுக்குச் சென்றுள்ளது என்று தெரியவில்லை. போலீஸாரும் அதற்கேற்றபடி செயல்பட தயாராக இருக்க டிஜிபி ஆணையிட்டுள்ளார்[7]. இந்நிலையில், திரைத்துறையினர் தொடங்கி பலரது எதிர்ப்புகள், கண்டனங்கள் தாண்டி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது[8]. சென்னையில் எதிர்பார்த்தப் படி, பிரச்சினை எதுவும் எழவில்லை. திரையரங்களிலும் நிலைமை சாதாரணமாகவே இருந்தது.   திரையரங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க, போலீசார் நியமிக்கப் பட்டுள்ளனர்[9]. தமிழ்நாடு டிஜிபி அனைத்து காவல்துறை ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை.அனுப்பியுள்ளார்[10]. அதில் கேரளா ஸ்டோரி படம் திரையாக உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கவும், பதற்றமான இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்[11]. மேலும்  சமூக வலைதளங்களில் சட்டம்  ஒழுங்கை பாதிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஆகியவை ஒட்டப்பட்டால் உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டுள்ளார்[12].

திரைப் படத்தைப் பற்றிய விமர்சனங்கள்: தி கேரளா ஸ்டோரி படத்துக்கு ட்விட்டர்வாசிகள் வைக்கும் விமர்சனங்களைக் கீழே பார்க்கலாம். “மன அமைதியைக் கெடுக்கும், வெறுப்புணர்வு மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் படம் இது . நாட்டில் வன்முறையை பரப்பும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டும் காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. ஜீரோ ஸ்டார் தருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். “இந்தப் படம் முழுக்க முழுக்க பொய்களும் சூழ்ச்சியும் நிறைந்தது. படத்தில் சொல்லப்பட்ட எந்த ஒரு விஷயமும் உண்மைக்கு நெருக்கமாக இல்லை. இது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு பிரச்சாரப் படம். ஒவ்வொரு நடிகரும் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்காக வெட்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். ”சூப்பர். இந்தப் படத்தைப் பாருங்கள் இந்தப் படம் உங்கள் வழக்கமான லாலா லேண்ட் படம் அல்ல. இது சொல்லும் உண்மை வெறுப்பு இல்லை, சிலரது மனநிலையை அம்பலப்படுத்துகிறது. படத்துக்காக இயக்குனர் அற்புதமான ஆய்வு செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் திரைப்படம், யதார்த்தை முகத்தில் அறைந்து சங்கடப்படுத்துகிறது. விபுல் அம்ருத்லால் ஷா & சுதிப்டோசென் இந்தப் படத்தைத் தயாரித்ததற்காக பாராட்டுக்குத் தகுதியானவர்கள். அதா ஷர்மா வாழ்நாள் நடிப்பை வழங்கியுள்ளார்[13]. ”நீங்கள் உணர்ச்சிரீதியாக முட்டாளாக இருந்தால், இந்த பிரச்சாரத் திரைப்படம் சில நாட்களுக்கு உங்கள் கவனத்தை உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும்” எனத் தெரிவித்துள்ளார்[14].

© வேதபிரகாஷ்

05-05-2023


[1] தமிழ்.இந்துஸ்தான்.டைம்ஸ், The Kerala Story Review: எப்படி இருக்குதி கேரளா ஸ்டோரிதிரைப்படம்? ட்விட்டர் விமர்சனம் இதோ!,  HT Tamil Desk, 05 May 2023, 12:07 IST.

[2] https://tamil.hindustantimes.com/entertainment/the-kerala-story-movie-twitter-review-starring-adah-sharma-yogita-bihani-sonia-balani-siddhi-idnani-131683265840879.html

[3] ஈடிவிபாரத்.காம், கேரளாவில் பல்வேறு போராட்டங்கள் மத்தியில் சிறப்புக் காட்சிகளுடன் வெளியானதி கேரளா ஸ்டோரி”!,  Published: 5 May, 2023, 7:21 pm.

[4] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/the-kerala-story-released-with-special-shows-amid-various-protests-in-kerala/tamil-nadu20230505192312275275056

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிட்ட வணிக வளாகம் முற்றுகைபோலீஸார்எஸ்டிபிஐ கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு!!, Narendran S, First Published May 5, 2023, 8:30 PM IST; Last Updated May 5, 2023, 8:31 PM IST..

[6] https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/sdpi-members-arrested-who-tried-to-blockade-the-theater-where-the-kerala-story-was-screened-ru6xp5

[7] விகடன், தி கேரளா ஸ்டோரிதிரைப்படத்துக்கு எதிர்ப்பு ஏன்? – முழுப் பின்னணி என்ன?!,  ஆ.பழனியப்பன், Published:02 May 2023 1 PMUpdated:02 May 2023 1 PM.

[8] https://www.vikatan.com/government-and-politics/politics/why-is-the-kerala-story-movie-opposed

[9] குமுதம், தமிழ்நாடு: ‘தி கேரளா ஸ்டோரிபடம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்புடி.ஜி.பி உத்தரவு, Thiraviaraj Murugan, Kumudam Team, |   Published On : 05th May 2023.

[10] https://www.kumudam.com/news/cinema/security-for-theaters-where-the-kerala-story-is-released-dgp-orders

[11] நியூஸ்.7.தமிழ், தி கேரளா ஸ்டோரி படம்திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழ்நாடு டிஜிபி உத்தரவு,by Web EditorMay 4, 2023.

[12] https://news7tamil.live/the-kerala-story-movie-tamil-nadu-dgp-orders-security-for-theatres.html

[13] தமிழ்.ஏபிபி.லைவ்,   The Kerala Story Twitter Review: வெறுப்பு பிரச்சாரமா? உண்மை சம்பவமா? தி கேரளா ஸ்டோரி படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ! ,  By: பீட்டர் பார்க்கர் | Updated at : 05 May 2023 01:17 PM (IST)  , Published at : 05 May 2023 01:08 PM (IST)

[14] https://tamil.abplive.com/entertainment/movie-review/the-kerala-story-twitter-review-adah-sharma-siddhi-idnani-yogitha-bihani-sudipto-sen-115403

தி கேரளா ஸ்டோரி – பெண்கள் ஐசிஸில் சேரும் விதமாக இந்தியாவிலிருந்து வெளியே அழைத்துச் செல்லும் லவ் ஜிஹாத் பற்றிய படம் என்பதால் எதிர்ப்பு!

இடப்பட்டது ஏப்ரல் 30, 2023 by vedaprakash
பிரிவுகள்: ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐ.டி.தீவிரவாதி, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐக்கிய ஜிஹாத் கவுன்சில், ஐசில், ஐசிஸ், கேரள ஜிஹாதி, கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், கேரள போலீஸார், கேரள முஸ்லீம் சேவை சங்கம், கேரளா, கேவலப்படுத்திய முஸ்லீம்கள், ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, ஜீவானாம்சம், ஜீஹாதிகள்

Tags: , , , , , , , , , , , , , , , , ,

தி கேரளா ஸ்டோரி – பெண்கள் ஐசிஸில் சேரும் விதமாக இந்தியாவிலிருந்து வெளியே அழைத்துச் செல்லும் லவ் ஜிஹாத் பற்றிய படம் என்பதால் எதிர்ப்பு!

நவம்பர் 2022ல் டீசர் வெளியானதிலிருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது: விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுகிப்தோ சென் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ” தி கேரளா ஸ்டோரி”. முன்னர், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் அமோகமான வரவேற்பை பெற்றது[1]. அதன் தொடர்ச்சியாக அதே பணியில் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்கள் கடந்த 2009ம் ஆண்டு முதல் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் போர் மண்டலங்களுக்கு கடத்தி செல்லப்பட்டனர்[2]. அந்த 32,000 பெண்கள் இதுவரையில் வீடு திரும்பவில்லை. அவர்களைப் பற்றியும் அவர்களின் பின்னணியில் நிகழும் சம்பவங்களையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த கேரளாவை உலுக்கிய உண்மை சம்பவத்தை படமாக்கியுள்ளார் சுதிப்தோ சென். இப்படத்தின் டீசர் தற்போது 03-11-2022 அன்று வெளியாகியுள்ளது. டீசர் வெளியானதிலிருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது திகைப்பாக உள்ளது. “லவ் ஜிஹாத்” போர்வையில், கேரளாவிலிருந்து இளம்பெண்கள் பலர் ஐசிஸ் தீவிரவாத கும்பலுக்கு சேர்க்கப் பட்டது, கேரளாவில் உறுதியானது. அரசு ஆவணங்களும் அதை ஆமோதித்தன. அந்நிலையில், எதிர்ப்பு கேள்விக் குறியாகிறது.

நவம்பர் 2022ல் முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்து புகார் கொடுத்தது: ஒரு நர்ஸாக வேண்டும் என்ற கனவோடு இருந்த ஒரு பெண்ணை தனது வீட்டில் இருந்து கடத்தி சென்று ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி என முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷாலினி உன்னிகிருஷ்ணன் எனும் பெண்ணின் உருக்கமான பதிவுடன் இந்த டீசர் துவங்குகிறது. பார்வையாளர்களை உருகவைத்துள்ள இந்த டீசர் மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த டீசரில் பர்தா அணிந்து தோன்றும் அடா சர்மா தான் மதமாற்றம் செய்யப்பட்டு தீவிரவாதியாக மாற்றப்பட்டதாக பொய்யான தகவல்களை உண்மைப் போல் முன்வைத்துள்ளதாகவும் கேரளாவை தவறாக சித்தரிப்பதாக தெரிவித்து இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தணிக்கை குழுவில் புகார் செய்யப்பட்டது. மேலும், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இப்படத்தின் மீதான முதற்கட்ட விசாரணையில் ஒரு பிரிவினரின் மத உணர்வை புண்படுத்துவது மற்றும் கலவரத்திற்கு அழைப்பு விடுப்பது போன்ற மையக்கருத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது[3]. இதனடிப்படையில் கேரளா டி.ஜி.பி. அனில்காந்த் திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனருக்கு வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்[4].

விபுல் அம்ருத்லால் ஷா 2018 முதல் 2022 வரை முறையான ஆரய்ச்சிக்குப் பிறகே படத்தை தயாரித்துள்ளார்: இது போன்ற ஒரு கதையை அடிப்படையாக வைத்து படம் எடுக்க பலரும் அச்சப்படும் நிலையில் மிகவும் துணிச்சலாகவும் தைரியமாகவும் இதில் களம் இறங்கியுள்ளார் தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா. இப்படத்திற்காக கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் முழுமையான ஆராய்ச்சிக்கு பிறகே அதை திரையில் படமாக்க திட்டமிட்டு பணிகள் மேற்கொண்டுள்ளார் “தி கேரளா ஸ்டோரி” படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென். அரேபிய நாடுகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தார் மற்றும் உள்ளூர் வாசிகளிடம் இருந்து சில அதிர்ச்சியான தகவல்களை சேகரித்துள்ளார் இயக்குனர். 2009ம் ஆண்டு முதல் இந்து மற்றும் கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த கேரளா மற்றும் மங்களூருவைச் சேர்ந்த 32000 சிறுமிகள் கடத்தப்பட்டு இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத பகுதிகளில் சேர்க்கப்பட்டனர். இந்த சதி செயலின் பின்னணியில் இருக்கும் உண்மை கதையையும். பெண்களின் வலிமையை பற்றியும் எடுத்துரைக்கும் வகையிலும் “தி கேரளா ஸ்டோரி” படத்தினை படமாக்கியுள்ளனர். டீசர் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்த ஆண்டு 2023 தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

05-05-2023 அன்று வெளியாகவுள்ள படத்திர்கு எதிர்ப்பு: கேரள மாநிலத்துக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் எதிரான கருத்துக்களை பரப்புவதாக, ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு எதிராக கேரளாவில் அதிருப்தி அதிகரித்துள்ளது. கேரளாவில் அந்த திரைப்படத்தை திரையிட அனுமதி வழங்கக்கூடாது என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. ’தி கேரளா ஸ்டோரி’ என்ற பன்மொழித் திரைப்படம் மே 5 அன்று இந்தியா நெடுக, திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அந்த திரைப்படத்தை கேரளாவில் வெளியிடக்கூடாது என்றும், திரையிடுவதற்கு அரசு தடை விதிக்க வலியுறுத்தியும் காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், சிபிஎம்மின் மாணவர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் போராடி வருகின்றன. ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது முதலே அதற்கு எதிராக கேரளாவில் கண்டனம் வலுத்து வருகிறது. கேரளாவை சேர்ந்த 4 பெண்கள் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டு, சர்வதேச பயங்கரவாத அமைப்பான ’ஐஎஸ்ஐஎஸ்’ஸில் செயல்பட்டு வருவதாக அந்த முன்னோட்டம் விவரித்து இருந்தது. மேலும் கேரளாவின் 32 ஆயிரம் பெண்கள் இவ்வாறு மதம் மாற்றப்பட்டு பயங்கரவாத அமைப்பில் சேர்ந்திருப்பதாகவும் அதில் புள்ளிவிவரங்கள் அடுக்கப்பட்டுள்ளன. மேலும் லவ் ஜிகாத் என்ற சர்ச்சைக்குரிய தலைப்பிலும் விவாதங்களை முன்னோட்டம் கிளப்பியுள்ளது.

எப்ரல் 2023ல் காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது: இந்த நிலையில் சங் பரிவார் அமைப்புகளின் குரலை எதிரொலிக்கும் வகையிலான ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்[5]. ’கருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷத்தை கக்கி இருப்பதாகவும், உள்நோக்கத்தோடு கேரள மாநிலம குறித்தும் கேரள மக்கள் குறித்தும் தவறான கருத்துக்களை வழங்கும் திரைப்படத்தை தடை செய்யவும்’ அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்[6]. இதனிடையே பாஜக ஆதரவு அமைப்புகள், ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வரவேற்றுள்ளன[7]. ஆனால், காங்கிரஸ் எதிர்க்கிறது[8]. இப்படம் பொய்யான பிரச்சாரம் செய்கிறது, அதனால் தடை செய்ய வேண்டும் என்று சதீசன் கூறியுள்ளார்[9]. கேரள பிஷப் போன்றோரே அச்சமயத்தில், இளம்பெண்கள் “லவ் ஜிஹாதில்” சிக்க வைக்கப் பட்டு. ஐசிஸ் போருக்கு கூட்டிச் செல்லப் பட்டனர் என்று எடுத்துக் காட்டியுள்ளார். மாநில அரசும் அவ்விவரங்களை மறுக்கவில்லை[10].

29-04-2023 – முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு; இந்நிலையில் முதலமைச்சர் பினராயி விஜயன் தி கேரளா ஸ்டோரி படத்தை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்[11]. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கேரளாவில் தேர்தல் அரசியலில் ஆதாயம் அடைய சங்பரிவார் அமைப்புகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன[12]. அந்த வகையில் அவர்களின் கொள்கைகளை பரப்புரை செய்ய எடுக்கப்பட்ட படம் இது என்பது ட்ரெய்லரை பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது[13]. வகுப்பு பிரிவினை வாதம் மற்றும் கேரளாவிற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பும் நோக்கத்துடன் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளது[14]. விசாரணை அமைப்புகள், நீதிமன்றம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூட நிராகரித்த “லவ் ஜிஹாத்” குற்றச்சாட்டுகளை வடிவமைத்தது திட்டமிட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். ஆனால் சமீபத்தில் லவ் ஜிகாத் என்ற ஒன்று கிடையாது என்று மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான சூழலில் கேரளாவில் மதநல்லிணக்க சூழலை அழித்து வகுப்புவாத விஷ விதைகளை விதைக்க சங்பரிவார் முயற்சித்து வருவதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

© வேதபிரகாஷ்

30-4-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், ‘The Kerala Story’ teaser :மனதை பதைபதைக்கவைக்கும்தி கேரளா ஸ்டோரிடீசர் வெளியீடு, By: லாவண்யா யுவராஜ் | Updated at : 03 Nov 2022 10:36 PM (IST), Published at : 03 Nov 2022 10:36 PM (IST)

[2] https://tamil.abplive.com/entertainment/the-kerala-story-teaser-is-out-now-82794

[3] மாலை மலர், சர்ச்சைகளை கிளப்பியதி கேரளா ஸ்டோரிடீசர்.. வழக்குப்பதிவு செய்ய உத்தரவு.., By மாலை மலர், 9 நவம்பர் 2022 6:08 PM

[4] https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-the-kerala-story-movie-teaser-controversy-534578

[5] காமதேனு, ‘சங் பரிவார் குரலை எதிரொலிக்கும் திரைப்படம்’; ‘தி கேரளா ஸ்டோரிக்கு கேரளாவில் வலுக்கும் எதிர்ப்பு!,காமதேனு, Updated on : 28 Apr, 2023, 6:50 pm. https://kamadenu.hindutamil.in/cinema/ban-the-kerala-story-movie

[6] https://kamadenu.hindutamil.in/cinema/ban-the-kerala-story-movie

[7] Malayala Manorama, False propaganda: VD Satheesan calls for ban on screening ‘The Kerala Story’, Onmanorama Staff, Published: April 28, 2023 03:56 PM IST

[8] https://www.onmanorama.com/news/kerala/2023/04/28/vd-satheesan-against-screening-the-kerala-story-sudipto-sen.html

[9] PTI News, Congress urges state govt not to give permission to screen ‘The Kerala Story’ which makes ‘false claims‘, Updated: Apr 28 2023 3:03PM

[10] https://www.ptinews.com/news/national/congress-urges-state-govt-not-to-give-permission-to-screen-the-kerala-story-which-makes-false-claims/559755.html

[11] தினத்தந்தி, தி கேரளா ஸ்டோரி படத்தின் ட்ரெய்லருக்கு  கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் கண்டனம்!, தினத்தந்தி 30 April 2023 3:16; PM (Updated: 30 April 2023 3:17 PM)

[12] https://www.dailythanthi.com/News/India/kerala-chief-minister-pinarayi-vijayan-condemned-the-trailer-of-the-kerala-story-954112

[13] ஏபிபிலைவ், The Kerala Story: ’பிரிவினைவாதத்தை தூண்டும் ட்ரெய்லர்’ – தி கேரளா ஸ்டோரி  படத்துக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம், By: பேச்சி ஆவுடையப்பன் | Updated at : 30 Apr 2023 02:48 PM (IST), Published at : 30 Apr 2023 02:48 PM (IST).

[14] https://tamil.abplive.com/entertainment/cm-pinarayi-vijayan-slams-film-the-kerala-story-for-spreading-hate-114580

2023, கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல், ஜமேஷா முபீன் கூட்டாள்களின் சதி வெளிப்படுத்தப் பட்டது!

இடப்பட்டது ஏப்ரல் 22, 2023 by vedaprakash
பிரிவுகள்: ஃபத்வா, ஃபிதாயீன், அடிப்படைவாதம், குக்கர் குண்டு, குக்கர் வெடிகுண்டு, குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, கோவை, கோவை கார், கோவை கார் குண்டு, கோவை குண்டுவெடிப்பு, ஜமேசா முபின், ஜமேஷா முபின், ஜமேஷா முபீன், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை

Tags: , , , , , , , , , , , ,

19-04-2023, கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்..., குற்றப்பத்திரிகை தாக்கல், ஜமேஷா முபீன் கூட்டாள்களின் சதி வெளிப்படுத்தப் பட்டது!

கோவை காஸ் சிலின்டர் வெடிப்பு, திட்டமிட்ட குண்டு வெடிப்புதான்: கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்.,23ல் கார் குண்டு வெடிப்பு நடந்தது[1]. இதில், அதே பகுதியை சேர்ந்த, ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபீன், பலியானார்[2]. கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது[3]. கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள “அருள்மிகு கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவில்” என்ற பழமையான கோவிலில் கடந்த ஆண்டு 2022 அக்டோபர் மாதம் வெடிவிபத்து ஏற்பட்டது[4]. ஜமேஷா முபீன் ஓட்டிச் சென்ற மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் சாதனம் (V-IED) கோவிலுக்கு முன்பாக வெடித்துச் சிதறியது. குண்டுவெடிப்பில் முபீன் கொல்லப்பட்டார். முதலில், அது வெறும் குக்கர் தான், ஏதேச்சையாக, தற்செயலாக, விபத்து போல வெடித்தது என்று கூட சில ஊடகங்கள் திரித்து செய்திகள் வெளியிட்டன. திமுக மற்றும் திராவிடத்துவ ஆதரவாளர்கள் அதை திவிரவாத தாக்குதல் என்பதனையே மறுத்துப் பேசினர், வாதிடவும் செய்தனர். ஒரு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியைக் கூட தரக்குறைவாகப் பேசினர்.

11-பேர் கூட்டு சதிகாரர்கள் திட்டமிட்டு செய்தது: போலீஸ் விசாரணையில், இவர், கூட்டாளிகளுடன் சேர்ந்து, பயங்கர சதி திட்டத்துடன் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வந்தனர். விசாரணையில், கார் குண்டு வெடிப்பை நடத்திய ஜமேஷா முபீனுக்கு, கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முகமது அசாருதீன், 23, பெரோஸ் இஸ்மாயில், 27, உமர் பாரூக், 39, உள்ளிட்ட, 11 பேர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது[5]. இவர்களை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர். இவர்களில், ஏழு பேர் மீது, சென்னை பூந்தமல்லியில் உள்ள, சிறப்பு நீதிமன்றத்தில், 20-04-2023 அன்று குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தனர்[6]. மற்றவர்கள் மீது விரைவில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தனர். கைதானவர்களில் ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்கவும், மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு, நீதிபதி இளவழகன்முன், 21-04-2023 அன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் உள்ள ஐந்து பேரை நாலாவது முறையாக போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் மனுதாக்கல் செய்துள்ளனர். 

கார் முதல் கெமிகல்ஸ் வரை எல்லாமே திட்டமிட்டு பெறப்பட்டது, குண்டு தயாரிக்கப் பட்டது: இந்நிலையில் உயிரிழந்த முபின் மற்றும் கைதான 6 பேர் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்­பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறியதாவது, குண்டுவெடிப்புக்குப் பயன் படுத்தப்பட்ட டி.என்.01. எப்.6163 என்ற நம்பருடன் கூடிய மாருதி 800 காரை தல்ஹா என்பவர் ஏற்பாடு செய்துள்ளார்[7]. பைரோஸ், ரியாஸ், நவாஸ் ஆகியோர், கேஸ் சிலிண்டரைக் கொண்டு காரை வெடிகுண்டாக மாற்ற உதவியுள்ளனர்[8]. அசாருதீன், அப்சர் மற்றும் அவரது உறவினர் முபீன் ஆகியோர் வெடிப்பொருட்களை ஆன்லைனில் வாங்க, வேதிப் பொருட்களின் கலவையை பயன்படுத்தி வெடிகுண்டு தயாரித்துள்ளனர்[9]. இவ்வாறு கூறப்பட்டுள்ளது[10]. அதாவது, இதற்கான ஆதாரங்களுடன் இந்த குற்றப் பட்த்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்குதல் செய்யப் பட்டுள்ளது என்பது கவனிக்கத் தக்கது. இன்னும் 5 பேர் மீது குற்றப்­பத்திரிகை தாக்கல் செய்ய போதுமான கால அவகாசம் உள்ளது என்று என்.ஐ.ஏ. த ரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜிஹாதில் ஈர்க்கப் பட்டு தயாரானது: இந்த தாக்குதலை நடத்துவதற்கு முபீன் ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் அதன் சுயமாக அறிவிக்கப்பட்ட கலீஃபா அபு-அல்-ஹசன் அல்-ஹாஷிமி அல்-குராஷிக்கு ‘பயாத்’ அல்லது விசுவாசப் பிரமாணம் எடுத்தார். NIA 27.10.2023 அன்று RC-01/2022/NIA/CHE என வழக்கை மீண்டும் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டது. மேலும் கிடைத்த ஆதாரங்களை ஆய்ந்தபொழுது, அவர்களுக்கு தீவிரவாத இயக்கங்களுடன் இருந்த தொடர்பு தெரிய வந்தது. கூட்டாளிகள் சேர்ந்து வேலை செய்ய, அத்தகைய ஜிஹாத் சித்தாந்தமும் வேலை செய்தது என்பது தெரிகிறது. மனைவி-மகனுக்கு ஏற்பாடு செய்து விட்டு, இந்த “புனித” வேலைக்கு இறங்கியதும் கவனிக்கத் தக்கது. இதெல்லாம் அந்த ஜிஹாதி மாடலில் தான் வருகிறது. இதில், தமிழகத்தவரும் சிக்கிக் கொண்டுள்ளது விபரீதமாக உள்ளது. தொடர்ந்து, முஸ்லிம்களே அதில் ஈடுபடுவதும் ஆபத்தாக உள்ளது. அதிலும், தற்கொலை வெடிகுண்டு ரீதியில் செயல்பட தயாராவது, மிகவும் ஆபத்தானது, பயங்காமானது, தீவிவாதமானது.

அகில-உலக தொடர்புகளும் உள்ளன: முகமது அசாருதீனிடம் இருந்து மீட்கப்பட்ட ஒரு பென் டிரைவில் ஜமேஷா முபீனின் வீடியோ பதிவுகள் இருந்தன, அங்கு அவர் தன்னை தௌலத்-இ-இஸ்லாமியா (அல்லது இஸ்லாமிய அரசு) உறுப்பினராக அடையாளப்படுத்தினார். ‘காஃபிர்களுக்கு’ (நம்பிக்கையற்றவர்கள்) எதிராக தற்கொலைப் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தி, தியாகியாக வேண்டும் என்ற தனது நோக்கத்தைப் பற்றி அவர் விரிவாகப் பேசினார். 2019 இல் ஈஸ்டர் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 260 பேரைக் கொன்ற இலங்கையின் தீவிர இஸ்லாமிய மதகுருவான ஸஹ்ரான் ஹாஷிமின் பயான்களால் (பிரசங்கங்கள்) முபீன் ஈர்க்கப்பட்டார்[11]. முபீன் இந்தியாவில் உள்ள ‘காஃபிர்களுக்கு’ எதிராக இதேபோன்ற தாக்குதலைத் திட்டமிட விரும்பினார்[12]. முபீனின் வீட்டில் இருந்து கையால் எழுதப்பட்ட குறிப்புகள் மீட்கப்பட்டன, அதில் இஸ்லாமிய சட்டங்களுடன் ஒத்துப்போகாத, தற்போதுள்ள ஜனநாயக அமைப்பை விமர்சிப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்க அலுவலக கட்டிடங்கள், மாவட்ட நீதிமன்றம், பூங்காக்கள், இரயில் நிலையம் போன்ற பொது மக்கள் கூடும் இடங்கள் மற்றும் சில உள்ளூர் கோயில்கள் உள்ளிட்ட ‘இலக்குகள்’ குறித்தும் இந்த குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெறிபிடித்த சித்தாந்தத்தைப் பின்பற்றியது: இஸ்லாமிய மாநிலம் கொராசன் மாகாணத்தின் இணைய இதழான ‘வாய்ஸ் ஆஃப் கொராசன்’ இதை உறுதிப்படுத்தியது, ‘பசு மற்றும் எலிகள் வழிபடும் அசுத்தங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் வசிப்பவர்களுக்கு ஒரு செய்தி’ என்ற தலைப்பில், தமிழ்நாட்டின் கோவையில் நடந்த தாக்குதலுக்கு ஐஎஸ்கேபி பொறுப்பேற்றது. . இந்த தாக்குதல் அவர்களின் மதத்தின் மாண்பை நிலைநிறுத்தவும், அல்லாஹ்வின் தீனையும் அவனது சட்டத்தையும் தனது நிலத்தில் நிலைநிறுத்தவும், ‘குஃப்ர்’ மற்றும் அதை பின்பற்றுபவர்களை பயமுறுத்தவும் இது ஒரு ஆரம்பம் என்று அச்சுறுத்தும் பழிவாங்கல் என்று கட்டுரை கூறுகிறது. ஆக, இது இந்துக்களை குறிவைத்து நடந்தப் பட்ட தாக்குதல் தான்,  ஆனால், ஏதோ விதமாக, முன்னரே வெடித்து விட்டதால், ஜமேஷா முபீனே பலியானான்.

பலவித சட்டப் பிரிவுகளில் குற்றப் பத்திரிக்கை தாக்குதல்: முபீனுக்கு அவரது கூட்டாளிகளான முகமது அசாருதீன், முகமது தல்ஹா, ஃபிரோஸ், முகமது ரியாஸ், நவாஸ் மற்றும் அஃப்சர் கான் ஆகியோர் தளவாடங்களை ஏற்பாடு செய்வதில் உதவினர்[13]. TN-01-F-6163 என்ற பதிவு எண் கொண்ட மாருதி 800 நீல நிற காரை தல்ஹா பெற்றுக் கொண்டார், இது வாகனத்தின் IED வெடிப்பில் பயன்படுத்தப்பட்டது[14]. ஃபிரோஸ், ரியாஸ் மற்றும் நவாஸ் ஆகியோர் காரில் வெடிபொருட்கள், எரிவாயு சிலிண்டர்கள் போன்றவற்றை ஏற்றி, அது சக்தி வாய்ந்த ஆயுதமாக மாறியது[15]. முபீனின் உறவினர்களான அசாருதீன் மற்றும் அஃப்சர் இருவரும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட VBIEDஐ தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட ரசாயனக் கூறுகளை கொள்முதல் செய்து, எடைபோட்டு, கலந்து பேக் செய்திருந்தனர். முபீன் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவர் செய்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த நிலையில், முகமது அசாருதீன், முகமது தல்ஹா, ஃபிரோஸ், முகமது ரியாஸ், நவாஸ் மற்றும் அஃப்சர் கான் ஆகியோர் மீது 34, 120பி, 121 ஏ, 122, மற்றும் 153 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. , வெடிபொருட்கள் சட்டத்தின் பிரிவுகள் 3, 4, 5 மற்றும் 6 மற்றும் UA (P) சட்டத்தின் பிரிவுகள் 16, 18, 20, 38 மற்றும் 39. கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

22-04-2023


[1] தினமலர், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்..., குற்றப்பத்திரிகை தாக்கல், பதிவு செய்த நாள்: ஏப் 21,2023 04:35

[2] https://m.dinamalar.com/detail.php?id=3299833

[3] அப்-டேட்-நியூஸ், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்ஐஏ குற்றப் பத்திரிகை தாக்கல்.. அடுத்தகட்டத்திற்கு நகரும் விசாரணை..!!!, Author: Babu Lakshmanan, 21 April 2023, 11:44 am

[4] https://www.updatenews360.com/tamilnadu/coimbatore-bomb-blast-case-nia-submit-fir-210423/

[5]  தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் பிண்ணணி என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்!!, Narendran S, First Published Apr 20, 2023, 7:19 PM IST; Last Updated Apr 20, 2023, 8:11 PM IST.

[6] https://tamil.asianetnews.com/tamilnadu/shocking-information-released-about-covai-car-blast-rtf2eg

[7] தினமலர், கோவையில் வெடித்தது அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டு: என்..., குற்றப்பத்திரிகையில் தகவல், Added : ஏப் 22, 2023  06:50; https://www.dinamalar.com/news_detail.asp?id=3301028

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=3301028

[9] மாலைமுரசு, கோவை கார் குண்டு வெடிப்புமுதல் குற்ற பத்திரிகை தாக்கல்…!, webteam-webteam, Apr 21, 2023 – 07:32

[10] https://www.malaimurasu.com/posts/crime/Arudra-Gold-Scam-Recovery-of-Bank-Accounts-Worth-100-Crores

[11] தந்தி டிவி, இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பும், கோவை கார் சிலிண்டர் வெடிப்பிற்கும் தொடர்பா? வெளியான அதிர்ச்சி தகவல் , By தந்தி டிவி 21 ஏப்ரல் 2023 9:50 AM.

[12] https://www.thanthitv.com/latest-news/sri-lanka-easter-bombing-and-coimbatore-car-cylinder-explosion-related-181410

[13] தமிழ்.ஏபிபி.லைவ், Crime: கோவை கார் வெடிப்பு வழக்கில் 6 பேர் மீது என்... குற்றப்பத்திரிகை தாக்கல்வெளியான அதிர்ச்சி தகவல்கள், By: பிரசாந்த் | Updated at : 21 Apr 2023 12:02 PM (IST); Published at : 21 Apr 2023 12:02 PM (IST)

[14] https://tamil.abplive.com/news/coimbatore/nia-filed-charge-sheet-against-6-people-in-coimbatore-car-blast-case-tnn-112879

[15] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் பிண்ணணி என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்!!, Narendran S, First Published Apr 20, 2023, 7:19 PM IST; Last Updated Apr 20, 2023, 8:11 PM IST

https://tamil.asianetnews.com/tamilnadu/shocking-information-released-about-covai-car-blast-rtf2eg

கேரளாவில் ஓடும் ரயிலுக்கு தீவைத்த ஷாருக் செய்பி – கோத்ரா போன்ற சம்பவம் தவிர்ப்பு- தீவிரவாத தொடர்பு உறுதி – தொடரும் விசாரணை!

இடப்பட்டது ஏப்ரல் 18, 2023 by vedaprakash
பிரிவுகள்: அமைதி, அமைதி என்றால் இஸ்லாமா, அமைதி டிவி, அல்லா, ஆதாரம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியப் பிரச்சினை, இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்து-முஸ்லிம், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய பிரச்சினை, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமியர்களை கொல்லும் முறை, இஸ்லாமிஸ்ட், இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, என்ஐஏ, என்ஐஏ அதிகாரி, எரித்தல், எரிப்பு, எரியூட்டல், எரியூட்டு, கேரள ஜிஹாதி, கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், கேரள போலீஸார், கேரள முஸ்லீம் சேவை சங்கம், கேரளா, கொலை வெறி, கொலைவெறி, கொல், ஜாகிர் நாயக், ஜாகீர், ஜிஹாதி, ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தீவிரவாத திட்டம், தீவிரவாதத்திற்கு துணை போவது, தீவிரவாதம், தீவிரவாதி, தீவிரவாதிகள், தீவைப்பு, ஷாருக் செய்பி

Tags: , , , , , , , , , , , , , , ,

கேரளாவில் ஓடும் ரயிலுக்கு தீ வைத்த  ஷாருக் செய்பி – கோத்ரா போன்ற சம்பவம் தவிர்ப்பு- தீவிரவாத தொடர்பு உறுதி – தொடரும் விசாரணை!

02-04-2023 – கேரள ரயிலுக்கு தீ வைத்தது: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ரயில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஷாருக் செய்பி மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கடந்த 2ம் தேதி 02-04-2023 கண்ணூருக்கு எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது[1]. அப்போது பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது[2]. எலத்தூர் அருகே சென்ற போது மர்மநபர் ஒருவர் டி 1 / D1  பெட்டியில் இருந்த பயணிகள் மீது திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.   இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. தீ பற்றிக் கொண்டதால், பயணியர் அலறி அடித்துக் கொண்டு தப்பிக்க முயன்றனர். இந்த சமயத்தில் உயிருக்கு பயந்து ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்ததில் 2 வயது பெண் குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் ரஹ்மத் (42). அவளது இரண்டு வயது குழந்தை ஜஹ்ரா மற்றும் கே.பி. நௌபிக் (39) என்று தெரிய வந்தது. ஆக மொத்தம், இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரு குழந்தை மற்றும் பெண் உள்பட 3 பேர் பலியானார்கள். இதற்குள் பிரயாணிகள் அடுத்த பெட்டிகளுக்கு ஓடினர். செயின் இழுக்கப் பட்டு, ரெயிலும் நிறுத்தப் பட்டது. அனால், அதற்குள் தீ வைத்தவன் தப்பித்து ஓடிவிட்டான்.

தீ வைத்தவனின் பேக் கிடைத்தது: இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீசாரும் கேரள அதிரடி படையினரும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் தீயில் எரிந்து பலியானவர்கள் பற்றிய விபரம் தெரிந்தது. மேலும் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றிய நபர், ரெயிலில் இருந்து தப்பி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் ரெயில் பெட்டியில் கிடந்த மர்மநபரின் உடமைகளை போலீசார் கைப்பற்றினர். அதில் ஒரு செல்போன், ஒரு டைரி மற்றும் பெட்ரோலுடன் கூடிய பாட்டில் ஆகியவை கிடைத்தது. அந்த டைரியில் கேரளாவின் முக்கிய நகரங்களான திருவனந்தபுரம், கழக்கூட்டம் மற்றும் குமரி மாவட்டத்தின் குளச்சல், கன்னியாகுமரி ஆகிய ஊர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. போலீசார் கைப்பற்றிய செல்போனில் சிம் கார்டு எதுவும் இல்லை. ஒருவேளை உஷாராக அந்த நபர் எடுத்திருக்கக் கூடும். மேலும் அந்த செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து அதில் இருந்து யார்-யாருடன் பேசப்பட்டது என்ற தகவலை போலீசார் கண்டுபிடித்தனர்.

தனிப்பட்ட முறையில் பெண் மீது தாக்குதல் நடத்தி கொலை முயற்சியா இல்லை ரயிலில் விபத்து ஏற்படுத்த சதி திட்டமா?: சம்பவ இடத்திற்கு கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர், ADGP கோழிக்கோடு மேயர் உட்பட அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்[3]. தனிப்பட்ட முறையில் பெண் மீது தாக்குதல் நடத்தி கொலை முயற்சியா இல்லை ரயிலில் விபத்து ஏற்படுத்த சதி திட்டமா என பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[4]. அதாவது, முதலில் அவர்கள் எல்லோரும் முஸ்லிம்கள் என்பதால், இவ்வாறு யூகங்கள் வெளியிடப் பட்டன. தீவிரவாத கோணம் தவிர்க்கப் பட்டது. ஆனால், அவனது பையில் கிடைத்த ஆதாரங்கள் மற்றும் செல்போன் தொடர்புகள் அவ்வகையில் தான் இருந்தன. இது இன்னொரு “கோத்ரா” சம்பவம் போன்று ஆகாமல் தடுக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது. அப்பெட்டியில் முஸ்லிம்கள் இருந்தது ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. ஏனெனில், ரயிலில் கணிசமாக முஸ்லிம்கள் பயணித்து வருவது ஒன்றும் ஆச்சரியமான விசயமும் இல்லை.

உத்தரபிரதேசம் நொய்டாவை சேர்ந்த ஷாருக் செய்பி தான் தீ வைத்த நபர்: இதில் உத்தரபிரதேசம் நொய்டாவை சேர்ந்த ஷாருக் செய்பி என்ற வாலிபர் பற்றிய தகவல் தெரியவந்தது. கேரள முதலமைச்சர் மத்திய ரெயில்வே அமைச்சரை தொடர்பு கொண்டு பேசினார். அவர் எல்லா உதவிகளையும் கொடுக்க உறுதி அளித்தார். இவரது உருவத்தை ரெயிலில் இருந்த பயணிகள் உதவியுடன் போலீசார் புகைப்படமாக வரைந்தனர். அந்த படம் மூலம் ரெயிலில் 3 பேரை எரித்து கொன்ற நபரை பிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இதில் அந்த நபர், கோழிக்கோட்டில் இருந்து உத்தரபிரதேசத்தின் நொய்டாவுக்கு தப்பி சென்றது தெரியவந்தது. உடனே கேரள போலீசார், உத்தரபிரதேச போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் காசியாபாத் அதிரடி படையினரின் உதவியுடன் அந்த நபரை பிடிக்க சென்றனர். அவர் ஒரு தச்சு தொழிலாளி என தெரியவந்தது. அவரது பெயரும் ஷாருக் செய்பி என கூறப்பட்டது. இதையடுத்து காசியாபூர் அதிரடி படையினர் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கடந்த 2 மாதங்களாக ஊரை விட்டு எங்கும் சென்றதில்லை என தெரியவந்தது. மேலும் அவரது தந்தை தனது மகன் ஊரை விட்டு எங்குமே சென்றதில்லை எனவும் கூறினார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை விடுவித்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் வைத்து டெல்லியை சேர்ந்த ஷாருக் செய்பி (27) என்பவர் கைது: இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் வைத்து டெல்லியை சேர்ந்த ஷாருக் செய்பி (27) என்பவர் கைது செய்யப்பட்டார்[5]. ஷாருக் செய்பி கேரள போலீசின் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்ற போதிலும், மத்திய ஏஜென்சிகளும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன[6]. இதனிடையே சந்தேகப்படும் நபரை கைது செய்ய உதவிய மகாராஷ்டிரா அரசுக்கும், போலீஸாருக்கும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நன்றி தெரிவித்துள்ளார்[7]. தீ வைப்பு சம்பவத்திற்கு தீவிரவாத இயக்கத்திற்கு தொடர்பு இருக்கலாம்? என்ற சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து தான் மத்திய ஏஜென்சிகள் விசாரணையை தொடங்கின[8]. இதில், சிறையில் அடைக்கப்பட்ட ஷாருக் சைஃபியை போலீஸ் காவலில் எடுத்துள்ள போலீசார், கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும், கேரள ரயிலில் தீ வைத்த சம்பவத்திற்கும் தொடர்புள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்[9]. தொடர்ந்து கேரள ரயில் விபத்து சம்பவத்தின் போது ஷாருக் சைஃபியின் நடவடிக்கைகளை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[10]. இந்தநிலையில் ஷாருக் செய்பி மீது கேரள போலீசார் தீவிரவாத செயல்பாடுகள் தடுப்பு சட்டமான உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கு விரைவில் என்ஐஏவுக்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.

தீ வைக்கும் திட்டத்துடன் தான் கேரளா வந்தார்: கேரள சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அஜித்குமார் கூறியதாவது: “செய்பியிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு முக்கிய விவரங்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் தான் அவர் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தீ வைத்தது தான் தான் என்று வாக்குமூலம் கொடுக்கும் பொழுது ஷாருக் செய்பி ஒப்புக்கொண்டுள்ளார்[11]. அதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளது. பயணியரை தீ வைத்து எரிக்க பயன்படுத்திய பெட்ரோலை, சம்பவத்தன்று அதிகாலை ஷொர்ணுார் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் இருந்து ஷாரூக் சைபி வாங்கி உள்ளார்[12]. இதற்கு அவருக்கு யாரோ உதவி செய்துள்ளனர். அவர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகிறோம்[13]. இவர் தீவிரவாத எண்ணம் கொண்டவர். ஜாகீர் நாயக், இஸ்ரா அகமது போன்றோரின் வீடியோக்களை அடிக்கடி பார்த்து வந்துள்ளார். ரயிலில் தீ வைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் தான் இவர் கேரள வந்துள்ளார். இவருக்கு வேறு யாருடைய அல்லது அமைப்புகளின் உதவி கிடைத்துள்ளதா என்று விசாரணை நடந்து வருகிறது. இவர் தற்போது தான் முதன் முறையாக கேரளா வந்துள்ளார்…..,”.இவ்வாறு அவர் கூறினார்.

© வேதபிரகாஷ்

18-04-2023


[1] தினகரன், கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகளை கொளுத்திய ஷாருக் செய்பி மீது உபா சட்டம் பாய்ந்தது: என்ஐஏவுக்கு வழக்கு மாற்றப்படுகிறது?, April 18, 2023, 12:36 am.

[2] https://www.dinakaran.com/kerala-running-train-passenger-shahrukh-seybi-fire-upa-act-flown-nia-case-being-transferred/

[3] தமிழ்.நியூஸ்.18, ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைப்பு.. 3 பேர் பலிகேரளாவில் பயங்கரம், NEWS18 TAMIL, First published: April 03, 2023, 08:18 IST, LAST UPDATED : APRIL 03, 2023, 08:20 IST.

[4] https://tamil.news18.com/national/man-sets-co-passenger-on-fire-in-kerala-train-3-dead-8-injured-925276.html

[5] மாலைமலர், கேரளாவில் ஓடும் ரெயிலில் 3 பயணிகள் எரித்து கொலைமுக்கிய குற்றவாளி மராட்டியத்தில் சிக்கினார், By மாலை மலர், 5 ஏப்ரல் 2023 6:18 PM

[6] https://www.maalaimalar.com/news/national/tamil-news-maharashtra-man-arrested-for-passengers-murder-case-in-kerala-592844

[7] தமிழ்.இந்து, கேரள ரயிலில் தீவைத்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது, செய்திப்பிரிவு, Published : 06 Apr 2023 06:54 AM, Last Updated : 06 Apr 2023 06:54 AM

[8] https://www.hindutamil.in/news/india/971699-main-culprit-arrested-in-kerala-train-arson-case.html

[9] தந்திடிவி, ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த சம்பவம்கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்பா?, By தந்தி டிவி 14 ஏப்ரல் 2023 3:16 PM.

[10] https://www.thanthitv.com/latest-news/incident-of-setting-fire-to-passengers-in-a-moving-train-is-it-related-to-the-coimbatore-blast-179963

[11] தந்திடிவி/தினத்தந்தி, நாட்டையே உலுக்கிய கேரள ரயில்தீ‘ – பின்னணியில் யார்..? கைதான ஷாருக் பரபரப்பு வாக்குமூலம், By தந்தி டிவி 17 ஏப்ரல் 2023 9:08 PM

https://www.thanthitv.com/latest-news/kerala-train-fire-that-rocked-the-country-who-is-behind-it-shahrukh-khans-sensational-confession-180645

[12] தினமலர், ஓடும் ரயிலில் தீ விசாரணையில் திடுக் தகவல், பதிவு செய்த நாள்: ஏப் 09,2023 01:07…

[13] https://m.dinamalar.com/detail.php?id=3288915

பங்களாதேசத்தவர் / வங்கதேசத்தவர் தொடர்ந்து தமிழகத்திற்குள் லட்சக் கணக்கில் வருவது, வேலை செய்வது, தங்கி விடுவது எப்படி? (2)

இடப்பட்டது ஏப்ரல் 8, 2023 by vedaprakash
பிரிவுகள்: 24 பர்கானாஸ், நிதி, நிதிநிறுவனம், நிதியுதவி, பங்களா தேசத்தவர், பங்களா ஹுஜி, பங்களாதேச தீவிரவாதம், பங்களாதேசத்தவர், பங்காள தேசம், பங்காளதேசம், பங்காஸ் குடியினர், பயிற்சி, பரிசோதனை, ரேசன் கார்டு, ரோஹிங்க, ரோஹிங்கர், ரோஹிங்கா, ரோஹிங்கிய, ரோஹிங்கியா, ரோஹிங்ய, ரோஹிங்யா, ரோஹிஞ்ச, ரோஹின்ய, ரோஹின்யா, ரோஹிப்க்கியா, வக்ப் வாரியம், வங்க தேசத்தவர், வங்காள தேசம், வங்காள மொழி, வங்காளதேசம், வங்காளப் பிரிவினை, வங்காளம், விசாரணை, ஹூஜி

Tags: , , , , , , , , , , , , , , , , ,

பங்களாதேசத்தவர் / வங்கதேசத்தவர் தொடர்ந்து தமிழகத்திற்குள் லட்சக்கணக்கில் வருவது, வேலை செய்வது, தங்கி விடுவது எப்படி? (2)

ஜூன் 2021ல் திருப்பூரில் மூவர் கைது: திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி, முறைகேடாக தங்கிய வங்க தேசத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்[1]. திருப்பூர், அம்மாபாளையம் ராக்கியா பாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்; நகல் எடுக்கும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான ஒரு வீட்டை, ஏப்., மாதம் ஷிமுல் காஜி, 30, என்பவருக்கு வாடகைக்கு விட்டார். ஆதார் கார்டில் ஈரோடு மாவட்ட முகவரி இருந்தது.அவர், வங்க தேசத்தவர் என பின் தெரிந்தது.இது குறித்து, ஷிமுல் காஜியிடம் கேட்டபோது, அவருடன் சேர்ந்து, அவரது நண்பர்கள் சைபுல் இஸ்லாம், 40, மன்னன் மோலல், 31, ஆகியோரும் சேர்ந்து, மணிகண்டனிடம் வாக்குவாதம் செய்தனர். அவரை தாக்கி மிரட்டல் விடுத்தனர்.அவர் அளித்த புகார்படி, திருமுருகன்பூண்டி போலீசார் மூவரையும் பிடித்து விசாரித்தனர். வங்க தேசத்தைச் சேர்ந்த மூவரும், உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பது தெரிந்தது. கொலை மிரட்டல், சட்டவிரோதமாக தங்கியது உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்[2]. இவர்கள் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டனரா, குடும்பத்தினருடன் தங்கியிருந்தனரா என விசாரணை நடக்கிறது.

ஊன் 2019 பிரச்சினைதிருப்பூர் இச்செயல்களுக்கு மையமாகிறதா?: திருப்பூர், ஜூன் 1 –திருப்பூர் மாநகரில் சட்டவிரோதமாக அடைக்கலமாகும் வங்கதேசத்தவர் உள்ளிட்ட வெளிநாட்டினர் பிரச்சனை குறித்து காவல் துறை சார்பில் சம்பிரதாயத்துக்கு கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட சிறுபூலுவபட்டி அத்திமரத்தோட்டம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கதேசத்தைச் சேர்ந்த 19 பேர் முறையான ஆவணங்கள் இல்லாமல் இங்கு தங்கியிருந்து பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப் பட்டனர்[3]. இதற்கு முன்பு வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளில் தொடர்புடையவர்கள் இங்கு தங்கியிருந்ததும், நக்சல் அமைப்புடன் தொடர்புடையவர்கள் இங்கு தங்கியிருந்ததும், நைஜீரியா நாட்டில் இருந்து வந்தவர்கள் முறையான பாஸ்போர்ட், விசா இல்லாமல் இங்கு வந்து ஆண்டுக்கணக்கில் தங்கியிருந்ததும் அவ்வப்போது கண்டறியப்பட்டுள்ளது[4]. இது தவிர திருப்பூர் போன்ற ஏற்றுமதி நகரத்தில், நைஜீரியர்கள், வங்கதேசத்தவர் போன்ற வெளிநாட்டினர் மட்டுமின்றி வெளி மாநிலத்தவர்கள் அதிகளவு வருகை தருவதை குறுகிய அடையாள அரசியலைப் பின்பற்றும் அரசியல் சக்திகள் பயன்படுத்தி பதற்றத்தை ஏற்படுத்த முயல்வதும் அதிகரிக்கிறது.

வங்க தேசத்தில் இருந்து பலர் மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவிற்குள் வந்து, பல்வேறு பகுதியில் சட்டவிரோதமாக குடியேறி வருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்திலும் இதுபோன்று குடியேறுபவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். அந்த வகையில் கடலூர் அடுத்த பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் இருந்து வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அடிக்கடி தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது, தொழில்நுட்ப உதவியுடன் இன்டர்நெட் வழியாக மேற்கொள்ளப்பட்ட இந்த தொடர்பு குறித்து ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் மத்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் மத்திய உளவுத் துறை மற்றும் சென்னை கடலூர் கண்காணிப்பு பிரிவு போலீசார் வங்கதேசத்தவரை தேடிவந்துள்ளனர். விசாரணையில் தெரியவந்தது[5]. மேலும் விசாரணையில், நாஜ்மூர் ஷித்தர் (வயது 35), அவரது மனைவி பரீதாபீவி (25), 3 வயது சிறுவன் மற்றும் ஷக்தர் முல்லா (50), பாபுஷேக் (22) பாத்திமா பீவி (25) என்பதும், முறையான ஆவணங்கள் இல்லாமல் அங்கு குடியேறியதும் தெரியவந்தது[6]

பல கேள்விகள் எழுப்பினாலும் வஙகதேசத்திலிருந்து வருவது நிதர்சனமாக உள்ளது:

  • வங்கதேசத்தில் இருந்து இவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவியது எப்படி,
  • ரெட்டிச்சாவடி பகுதிக்கு இவர்களை அழைத்து வந்தவர்கள் யார்?,
  • அங்கு குடியேறியதற்கான காரணம் என்ன?,
  • இவர்களை போன்று வேறு யாரேனும் கடலூர் மாவட்டத்தில் குடியேறி இருக்கிறார்களா?

என்று பல்வேறு கோணங்களில் மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதே வேளையில், இங்கு வசித்து வந்தவர்களுக்கு தீவிரவாதிகளுடன் ஏதேனும் தொடர்புகள் இருக்கிறதா என்றும் கியூ பிரிவு போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுபோல் அடையாளம் தெரியாத நபர்கள் வங்கதேசத்தினர் போன்றவர்கள் இருப்பதாக தெரிந்தால் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் மட்டும் 73,000 வங்காள தேசத்தவர்கள் இருக்கிறார்கள்: சென்னையில் மட்டும் 73,000 வங்காள தேசத்தவர்கள். உரிய அனுமதி இன்றி ஊடுருவியர்கள். என தெரிய வந்துள்ளது[7]. கட்டிடத் தொழிலில் பெரும்பாலோர் இவர்களாகத் தான் இருக்கிறார்கள். வேலையைப் பொறுத்த வரையில் இவர்கள் குறைந்த கூலி வாங்கிக் கொண்டு கடின வேலைகளை செய்து வருகின்றனர். இது கொரானாவால் வெளி வரும் உண்மைகள்.சென்னையில் மட்டுமே இவ்வளவு பேர் என்றால் தமிழகம் முழுக்க,நாடு முழுக்க எவ்வளவு பேர் இருப்பார்கள். ஏன் CAA வை எதிர்க்கிறார்கள் என்பது இப்போது நன்கு புரியும்[8]. வன்முறையில் ஈடுபட்டவர்களை விசாரிக்கும் போது அவர்கள் மேற்கு வங்கத்தில் இருந்து வந்தவர்கள் என தெரிவித்துள்ளார்கள். அவர்களின் ஆவணங்களை கேட்கும் போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து உள்ளார்கள். பின் தீவிர விசாரணையில் அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் மேற்கு வங்கம் வந்து பின் தமிழகம் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

பங்களாதேசத்தவர், முஸ்லிம்கள் என்றாலும் தெரிவிக்கப் பட வேண்டும்: பங்களாதேசத்தவர், அவர்கள் முஸ்லிம்களாகத் தான் இருக்கின்றனர், ஆனால், தங்களது அடையாளங்களை மறைத்து, ஏன் “இந்துக்கள்” போர்வையிலும் வேலை செய்து வருகின்றனர். பங்களாதேசத்திலிருந்து, எவ்வாறு, இத்தனை தூரம் வரமுடிகிறது, அவர்களை எவ்வாறு  யார் எப்படி வேலைகளுக்கு வைக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்பது இல்லை. பெரும்பாலான கட்டிட வேலை நடக்கும் இடங்களில் இவர்கள் தான், ஆயிரக் கணக்கில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அங்கு வேலை செய்யும் மேஸ்திரிகளுக்கு, மேற்பார்வையாளர்களுக்கு, இஞ்சினியர்களுக்கு, பில்டர்களுக்கும் தெரிந்து தான் உள்ளது. ஆனால், யாரும் கண்டுகொள்வதில்லை என்றே தெரிகிறது. ஏற்கெனவே, கோவையில் “காஸ்-குண்டு வெடிப்பு,” முயற்சி நடந்திருக்கிறது. அது மங்களூரு “ஆட்டோ-குண்டு வெடிப்பு,”டன் தொடர்பு படுத்தி செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. தமிழக-கர்நாடக இணைப்புகள் வெளிப்படுகின்றன. பிறகு, பங்களாதேச இணைப்பு என்ன என்று ஆராய வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

08-04-2023


[1] தினமலர், வங்கதேசத்தவர் மூவர் கைது, Added : ஜூன் 25, 2021  01:46.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2790752

[3] தீக்கதிர், சட்டவிரோதமாக அடைக்கலமாகும் வெளிநாட்டினர் பிரச்சனை திருப்பூரில் சம்பிரதாயத்துக்கு நடத்தப்பட்ட கலந்தாய்வுக் கூட்டம், நமது நிருபர் ஜூன் 2, 2019.

[4]https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/illegal-refuge-is-the-issue-of-aliens-conference-meeting-held-in-tirupur

[5] தமிழ்.ஏபிபி.லைவ், கடலூரில் சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேச குடும்பம் கைதுBy: சிவரஞ்சித் | Published at : 03 Jul 2021 12:08 PM (IST); Updated at : 03 Jul 2021 12:08 PM (IST).ச்

[6] https://tamil.abplive.com/crime/illegal-immigrants-from-bangladesh-were-trapped-with-their-families-8203

[7] ஒரே தேசம், வெளிமாநிலத்தவர் என்ற போர்வையில் வங்கதேசத்தவர்கள் ஊடுருவல்! வெளிவரும் அதிர்ச்சி தகவல்!, Oredesam BY OREDESAM  May 18, 2020

[8] https://oredesam.in/bangladeshis-under-the-guise-of-being-outspoken/